Wednesday, March 30, 2011

வினவு! ஸ்ரீலங்கா வெல்லட்டும்னு வாழ்த்திப்புடாதீங்க பாவம்!

நல்லா விளையாடிக்கொண்டு இருந்த பாகிஸ்தான் அணியை ஒப்பேத்திப்புட்டாங்க நம்ம வினவும், ரவிசங்கரும், தரித்திரமாப் பேசி (எழுதி)! க்ரிக்கெட்டே பிடிக்காத பதிவர்களையும் உசுப்பி விட்டு, க்ரிக்கட்டை இன்னும் வளர்த்த பெருமை நம்ம வினவுக்குத்தான் சேரும்!

ஆனால், வினவு குழு பெரிய ஆமையா இருப்பாங்க போல இருக்கு! யாரையாவது வாழ்த்தினால் அவங்க நாசமாப்போயிடுவானுக போல! பாவம் பாகிஸ்தான் அணி இந்த அரவிசங்கர் வாயில விழுந்து தோத்துப்போயிடாங்க. ஏன்ப்பா வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களா?

என்னவோ தேசப்பற்றை வளக்கிறாங்களாம்! தமிழகர்களை இழிவுபடுத்திய ஜெயராமுக்கு அன்னைக்கு வக்காலத்து! இது தமிழ்ப் பற்றை வளர்க்கிற லட்சணம்! இன்னைக்கு இந்த தேசதுரோகிகள், நல்லா ஆடிக்கிட்டு இருந்த பாகிஸ்தானை வெல்லுங்கள் னு வாழ்த்தி நல்ல ஒரு அணியை தோல்விடைய வச்சுட்டானுக!

ஒரு போட்டினா வெற்றி தோல்வி சாதாரணம்னு எல்லாருக்கும் தெரியும். க்ரிக்கெட்டோ, கோழிச்சண்டையோ தன் நாடு ஜெயிக்கனும்னு நெனைக்கிறவந்தான் உண்மையான தேசபக்தன்.

வினவு! தயவு செய்து, ஸ்ரீலங்காவை வெல்லட்டும்னு மட்டும் வாழ்த்திப் புடாதீங்க! அவங்க அணியும் தோத்துப் போயிடும்! உங்க எண்ணங்கள் கேவலமாக இருந்தால் இப்படித்தான் ஆகும்!


20 comments:

ராஜ நடராஜன் said...

வினவு ஆட்டத்தை வினவு ஆடட்டும்.கிரிக்கெட் ஆட்டத்தை மக்கள் ஆடட்டும்.நீங்க ஏன் இடையில உச் கொட்டிகிட்டே இருக்கீங்க வருண்:)

வருண் said...

***Blogger சீனு said...

:)

30 March 2011 11:51 AM***

வாங்க சீனு! :)

வருண் said...

***ராஜ நடராஜன் said...

வினவு ஆட்டத்தை வினவு ஆடட்டும்.கிரிக்கெட் ஆட்டத்தை மக்கள் ஆடட்டும்.நீங்க ஏன் இடையில உச் கொட்டிகிட்டே இருக்கீங்க வருண்:)

30 March 2011 12:33 PM***

நான் என் ஆட்டத்தை ஆடுறேன். நீங்க உங்க ஆட்டத்தை ஆடுறீங்க! இதிலே என்ன புரியலை உங்களுக்கு? :-E

Anonymous said...

//க்ரிக்கெட்டே பிடிக்காத பதிவர்களையும் உசுப்பி விட்டு, க்ரிக்கட்டை இன்னும் வளர்த்த பெருமை நம்ம வினவுக்குத்தான் சேரும்! //

செம பஞ்ச் ............ வினவு சில நேரங்களில் தேவை இல்லாதவற்றை எழுதி ஹிட்ஸ் வாங்குவதாக நான் நினைக்கிறேன் ..

Robin said...

//இன்னைக்கு இந்த தேசதுரோகிகள், நல்லா ஆடிக்கிட்டு இருந்த பாகிஸ்தானை வெல்லுங்கள் னு வாழ்த்தி நல்ல ஒரு அணியை தோல்விடைய வச்சுட்டானுக!// :)

ராஜ நடராஜன் said...

//நான் என் ஆட்டத்தை ஆடுறேன். நீங்க உங்க ஆட்டத்தை ஆடுறீங்க! இதிலே என்ன புரியலை உங்களுக்கு? :-E//

Disappointed eh?

வினவு சொல்வதால் யாரும் கிரிக்கெட் பார்க்காமல் இருப்பதில்லையென்று சொல்ல வந்தேன்.

இனி நீங்களாச்சு!வினவு ஆச்சு!

கோவி.கண்ணன் said...

//வினவு! தயவு செய்து, ஸ்ரீலங்காவை வெல்லட்டும்னு மட்டும் வாழ்த்திப் புடாதீங்க! அவங்க அணியும் தோத்துப் போயிடும்! உங்க எண்ணங்கள் கேவலமாக இருந்தால் இப்படித்தான் ஆகும்!//

வினவு ஆசைன்னு நீங்க எழுதி இருக்கிறதப் படித்தால், உங்கள் ஆசைப்படி இலங்கை வெல்லனுமா ?

என்ன கொடுமை சார்.

BreakThru said...

"க்ரிக்கெட்டோ, கோழிச்சண்டையோ தன் நாடு ஜெயிக்கனும்னு நெனைக்கிறவந்தான் உண்மையான தேசபக்தன்."

தங்கள் தேசபக்தி வியக்க வைக்கிறது..

Jayadev Das said...

வினவு அவர்கள் வாழ்த்தும் அணி தோற்கும் எனத் தெரிந்தும் அவர்கள் இலங்கை அணியை வாழ்த்தி அதைத் தோல்வியடையச் செய்து இந்தியா கோப்பையை வெல்லட்டும் என்று நினைக்காமல், "வினவு! ஸ்ரீலங்கா வெல்லட்டும்னு வாழ்த்திப்புடாதீங்க பாவம்!" என்று கொஞ்சம் கூட தேச பக்தி இல்லாமல் பதிவு போட்ட வருண் ஒழிக. [ஹி..ஹி...ஹி... எப்படி இருக்கு நம்ம தேசபக்தி!!]

வருண் said...

***இக்பால் செல்வன் said...

//க்ரிக்கெட்டே பிடிக்காத பதிவர்களையும் உசுப்பி விட்டு, க்ரிக்கட்டை இன்னும் வளர்த்த பெருமை நம்ம வினவுக்குத்தான் சேரும்! //

செம பஞ்ச் ............ வினவு சில நேரங்களில் தேவை இல்லாதவற்றை எழுதி ஹிட்ஸ் வாங்குவதாக நான் நினைக்கிறேன் ..

30 March 2011 7:20 PM***

தேசப்பற்றை வளர்க்கிறதாக சொல்றாங்க! எனக்கென்னவோ இது தேசப்பற்றை வளர்க்கும்னு தோனலை!

வருண் said...

***Robin said...

//இன்னைக்கு இந்த தேசதுரோகிகள், நல்லா ஆடிக்கிட்டு இருந்த பாகிஸ்தானை வெல்லுங்கள் னு வாழ்த்தி நல்ல ஒரு அணியை தோல்விடைய வச்சுட்டானுக!// :)

30 March 2011 8:25 PM***

வாங்க, ராபின் :)

வருண் said...

***கோவி.கண்ணன் said...

//வினவு! தயவு செய்து, ஸ்ரீலங்காவை வெல்லட்டும்னு மட்டும் வாழ்த்திப் புடாதீங்க! அவங்க அணியும் தோத்துப் போயிடும்! உங்க எண்ணங்கள் கேவலமாக இருந்தால் இப்படித்தான் ஆகும்!//

வினவு ஆசைன்னு நீங்க எழுதி இருக்கிறதப் படித்தால், உங்கள் ஆசைப்படி இலங்கை வெல்லனுமா ?

என்ன கொடுமை சார்.

31 March 2011 2:14 AM***

என் ஆசையை விடுங்க. நான் இந்தியாவெல்லனுமோ, பாகிஸ்தான் வெல்லம்னும்னோ வாழ்த்துசோல்லி பதிவு எழுதவில்லை!

வினவின் ஆசை, பாகிஸ்தான் வெல்லனும் என்பது. அதாவது இந்தியா தோக்கனும்!

இப்போ ஸ்ரீலங்கா வெல்லனும்னு மனதுக்குள் வாழ்த்துவாங்கனு நம்புறேன். :)

வருண் said...

***WJE said...

"க்ரிக்கெட்டோ, கோழிச்சண்டையோ தன் நாடு ஜெயிக்கனும்னு நெனைக்கிறவந்தான் உண்மையான தேசபக்தன்."

தங்கள் தேசபக்தி வியக்க வைக்கிறது..***

அப்படியா? நன்றி ;)

வருண் said...

***Jayadev Das said...

வினவு அவர்கள் வாழ்த்தும் அணி தோற்கும் எனத் தெரிந்தும் அவர்கள் இலங்கை அணியை வாழ்த்தி அதைத் தோல்வியடையச் செய்து இந்தியா கோப்பையை வெல்லட்டும் என்று நினைக்காமல், "வினவு! ஸ்ரீலங்கா வெல்லட்டும்னு வாழ்த்திப்புடாதீங்க பாவம்!" என்று கொஞ்சம் கூட தேச பக்தி இல்லாமல் பதிவு போட்ட வருண் ஒழிக. [ஹி..ஹி...ஹி... எப்படி இருக்கு நம்ம தேசபக்தி!!]
31 March 2011 4:03 AM ***

:-)

ஊரான் said...

உடல் நலத்தைப் பேணவே விளையாட்டு.

கிரிக்கெட் போட்டி ஒன்றுதான் விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் தேசபக்தியோடு இணைத்துப் பார்க்கும் ஒரு மனநிலைக்கு மக்களை தள்ளிவிட்டிருக்கிறது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடக்கும் பிற விளையாட்டுகளின் போது இத்தகைய மனநிலை நம்மிடம் இல்லையே அது ஏன்? இதற்கு விடை தேடுங்கள். நாம் எந்த அளவுக்கு இந்த போலியான தேச பக்திக்கு ஆளாகியிருக்கிறோம் என்பது புரியும்.

சிறப்பான அல்லது நேர்த்தியான விளையாட்டை பாராட்டுங்கள். ஊக்கப்படுத்துங்கள்.

விளையாட்டைப் பொருத்தவரை நம்மில் பலரும் பார்வையாளர்கள்தான். ஒரு பார்வையாளன் விளையாட்டை எப்படிப் பார்க்க வேண்டும்? விளையாட்டில் அரசியல், ஊழல், தேசபக்தி போன்றவை ஆக்கிரமிக்கும் போது அதில் தலையிடுவது நமது கடமையுமாகும்.

ஆனால் நாமோ விளையாட்டை வெறும் இரசனைக்குகானதாக மட்டுமே பார்க்கும் மனநிலைக்கு மாற்றப்பட்டிருக்கிறோம். இது சரிதானா?

விளையாட்டு இரசனைக்கானதல்ல. இரசனைக்கானதாக விளையாட்டை பார்ப்பது ஒரு வித பிறழ்ன்ற மனநிலை.

விளையாட்டு இரசனைக்கானதா?
http://hooraan.blogspot.com/2010/10/blog-post.html

வருண் said...

***ஊரான் said...

உடல் நலத்தைப் பேணவே விளையாட்டு.

கிரிக்கெட் போட்டி ஒன்றுதான் விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் தேசபக்தியோடு இணைத்துப் பார்க்கும் ஒரு மனநிலைக்கு மக்களை தள்ளிவிட்டிருக்கிறது.***

இப்போ, கால்பந்து அல்லது கூடைப்பந்து அல்லது ஹாக்கியிலும் இந்தியா தலை சிறந்து விளங்கி இதுபோல் உலககோப்பை அரையிறுதி வந்தால், மக்கள் நிச்சயம் இதேபோல் தேசபக்தியுடந்தான் பார்ப்பார்கள்!

அப்போ ஒண்ணும் சொல்ல மாட்டீங்களா???

Jayadev Das said...

\\
இப்போ, கால்பந்து அல்லது கூடைப்பந்து அல்லது ஹாக்கியிலும் இந்தியா தலை சிறந்து விளங்கி இதுபோல் உலககோப்பை அரையிறுதி வந்தால், மக்கள் நிச்சயம் இதேபோல் தேசபக்தியுடந்தான் பார்ப்பார்கள்!\\சும்மா தமாஷ் பண்ணாதீங்க வருண், போன தடவை ஆசியா கோப்பையை ஜெயிச்ச ஹாக்கி ஆட்டத்தை எத்தனை பேர் பார்த்திருப்பாங்க? அவங்களுக்கு கிடைத்த பரிசு எவ்வளவு தெரியுமா? ஆளுக்கு மூணு லட்சம் ரூபாய், அதுக்கு அவங்க கெஞ்சி கூத்தாடி கொஞ்சம் சேர்த்து தரச் சொல்லி வாங்கினாங்க. [இன்னும் ஒன்னோ ரெண்டோ போட்டு குடுத்திருப்பாங்க]. ஆனா, கிரிக்கெட்டில் எந்த மொக்கையான ஆட்டத்தையும், மொக்கையாக விளையாண்டாலும் பார்க்கிறார்கள், பங்களாதேஷ் கிட்ட தோத்தாலும், அதை அப்படியே மறந்திட்டு, அடுத்த மட்சுக்கு நம்ம ஆளுங்களை உச்சி முகர்ந்து அனுப்ப தயாராயிடுறாங்க!!. 20-20 உலகக் கோப்பை பாகிஸ்தான் காரன்போட்ட பிச்சை. அதுல ஜெயிச்சதுக்கு, அவங்க கொடுத்த பரிசுத் தொகையோட இங்க வந்து ஆளாளுக்கு கோடிக் கணக்கில் வாங்கினானுங்க. கிரிக்கெட்டுக்கு நாம் கொடுக்கும் ஓவர் முக்கியத் துவமே இதற்க்குக் காரணம். மக்கள் பார்ப்பதை நிறுத்தினால் கிரிகெட் ஆட்டக் காரனுங்களை நாய் கூட சீண்டாது. பிரதமர் சோனியா வந்து உட்கார்ந்து மேட்ச் பார்க்க மாட்டார்கள், பிரியங்கா பாகிஸ்தான் போயி உப்பு பெறாத அஞ்சு நாள் மேட்ச் பார்க்க மாட்டார். இதுதான் உண்மை.

சதீஷ் செல்லதுரை said...

hits venumna kettu vaangunga...vinavu perai sollgthan hits vanganuma? ithellam oru polaippa?

வருண் said...

***கிரிக்கெட்டுக்கு நாம் கொடுக்கும் ஓவர் முக்கியத் துவமே இதற்க்குக் காரணம். மக்கள் பார்ப்பதை நிறுத்தினால் கிரிகெட் ஆட்டக் காரனுங்களை நாய் கூட சீண்டாது. ***

நம்ம ஊரில் இந்த ஒரு ஸ்போர்ட்ஸ் மட்டும் எப்படியோ வளர்ந்துவிட்டதுங்க. ஆண்கள் பெண்கள் எல்லாருமே டி வி முன்னல் உக்காந்து பார்க்கிறாங்க. எல்லாரும் பார்க்கிறாங்கனு தெரிந்தவுடன் "கமெர்சியலாக்கி"டாங்க. வியூவர்ஸ் அதிகமானதாலே அதிகப்பணம், வியாரமாயிடுச்சு. இது எல்லா ஊர்லயும் நடக்கிறதுதான்!

எனக்கென்னவோ இப்போதைக்குள்ளே மக்களை இந்த கிரிக்கட் அடிக்சனிலிருந்து மாற்ற முடியும்னு தோனலை!

வருண் said...

** Che said...

hits venumna kettu vaangunga...vinavu perai sollgthan hits vanganuma? ithellam oru polaippa?

31 March 2011 9:55 AM***

ஆமா நான் லட்சக்கணக்கில் ஹிட்ஸ் வாங்கி என் தளத்தில் நெறையா கூகுள் மற்றும் பல அட்வெர்டைஸ்மெண்ட் பண்ணி கோடி கோடியா சம்பாரிக்கிறேன்!

ஏங்க நீங்க வேற!