Tuesday, March 8, 2011

விஜய்காந்து தமிழக முதல்வராக அரிதான வாய்ப்பு ?!

விஜய்காந்து எதுக்கு அரசியலுக்கு வந்தாரு? விருத்தாச்சலத்தில் எம் எல் ஏ ஆகி விஜய்காந்து எம் எல் ஏ னு சாகும்போது எம் எல் ஏ பட்டத்தோட சாகவா? கெடையவே கெடையாது! நம்மளும் ஒரு நாளு கருப்பு எம் சி ஆர் அது இதுனு சொல்லி எப்படியாவது முதல்வராகிப்புடனும்ங்கிற ஆசையில்தான் அரசியலுக்கு வந்தாரு.

இன்னைக்குவரை இவரு அரசியலில் சாதிச்சது? இப்போதைக்கு மூனாவது கட்சியா இவர் தனியா நின்றால் இவருக்கு ஒரு 10% ஓட்டுவிழுது. இந்த முறை பத்து குறைந்து எட்டாகுதா? இல்லை பதினைந்து ஆக உயருதா? னு பார்க்க நமக்கெல்லாம் வாய்ப்புக் கெடைக்கவில்லை!

வரும் சட்டமன்ற தேர்தலில், இந்தா எனக்கு 10% ஓட்டு இருக்குனு காட்டி இப்போ 41 இடங்கள் பெற்றுள்ளார். இதே 10% அப்படியே அ தி மு க கூட்டணிக்கு விழும்னு சொன்னால் நீங்க அரசியல் கணக்கில் மக்கு! ஏன் இப்படி திடீர்னு கூட்டணியில் சேர்ந்தார்? தனியா நின்னா கட்சிக்காரன் எல்லாம் கழண்டு ஓடிவிடுவார்கள் என்கிற பயம்தான்! இந்த முறை தேர்தலில் தனியா நின்னா நாங்க எல்லாம் வேற கட்சி பார்க்க வேண்டியதுதான்னு தொண்டர்கள் எல்லாம் மிரட்டியவுடன்தான், நம்ம கேப்பிட்டனு இந்த முடிவுக்கு வந்தாரு என்பதே உண்மை. இது அரசியலில் இவருக்கு முதல் சறுக்கல்!


photo: Thanks, The Hindu! :)

தன்னை குடிகாரன்னு சொல்லிக் கேவலப்படுத்திய அம்மாட்டப்போயி நிக்க வேண்டிய நிலை? இது அரசியலில் இவருக்கு ரெண்டாவது சறுக்கல்!

மேலே உள்ள படத்தில், "கொஞ்சம் புன்னகைத்தால் என்ன மிஸ்டர் விசயகாந்து?"னு கேக்கத் தோணலையா உங்களுக்கு?

இப்போ விஜயகாந்துக்கு வயசு 58 ஆகுது. திமுக -காங்கிரஸ் கூட்டணி விழுந்தால் இவர்கள் கூட்டணியின் தலைவி அம்மாதான் அடுத்த முதல்வராவார். ஆக வருகிற தேர்தலில் 41 இடங்களுமே வெற்றியடைந்தாலும் இவர் முதல்வராக வாய்ப்பில்லை! அதாவது 63 வயது வரை நம்ம கேப்பிட்டனு தமிழக முதல்வராக முடியாது. ஒரு வேளை அ தி மு க மைனாரிட்டி கவண்மெண்ட் ஆகி, இவர் சப்போர்ட் வாங்கி அம்மா ஆட்சியமைத்தால்? இவருக்கு மந்திரி பதவி கொடுப்பாரா? இல்லைனா அம்மா முதல்வராகி இவரை துணை முதல்வராக்குவாரா? இல்லை அ தி மு க அமோக வெற்றி பெற்றால் மறுபடியும் குடிகாரன்னு சொல்லி இவரை இன்னொரு முறை கேவலப்படுத்துவாரா? அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே?

அப்போ 2016 ல வர்ற தேர்தலில் இவருக்கு முதல்வராக வாய்ப்பு இருக்கா?னு பார்த்தாலும் அப்படி ஒண்ணும் பெருசா சாண்ஸ் இருக்க மாரித் தெரியலை. பா ம க போன்ற சாதிக் கட்சிகள் வளரவும் செய்யாது, அழியவும் செய்யாது. அந்த சாதி மக்கள் இருக்கவரைக்கும் என்னைக்குமே இதேபோல் தொடர்ந்து இருக்கும்! ஆனால் விஜய்காந்துடைய தேசிய முற்போக்கு திராவிட கழகம்? ஒண்ணு மேன்மேலும் வேகமாக வளர்ந்தே ஆகனும். இல்லனா இருக்கிற இடம் தெரியாமல் போயிடும்!

விஜய்காந்தின் தமிழக முதல்வர் பதவி ஆசை பகல்கனவாகத்தான் முடியும் போலயிருக்கு! :(

6 comments:

பழமைபேசி said...

தளப்தி அவர் இடத்தைப் பிடிக்கலாம்!

குடுகுடுப்பை said...

கணக்கு வேற மாதிரி தேர்தலுக்கு பின்னர் விஜயகாந்த் 41, காங்கிரஸ் 63 பாமக 30 சேந்து கூட்டணி ஆச்சிதான்.

Chitra said...

மேலே உள்ள படத்தில், "கொஞ்சம் புன்னகைத்தால் என்ன மிஸ்டர் விசயகாந்து?"னு கேக்கத் தோணலையா உங்களுக்கு?


....அவர் டென்ஷன் அவருக்கு. .... ஹி,ஹி,ஹி...

வருண் said...

***பழமைபேசி said...

தளப்தி அவர் இடத்தைப் பிடிக்கலாம்!

8 March 2011 1:14 PM***

நம்ம தளபதியா? :)

வருண் said...

***குடுகுடுப்பை said...

கணக்கு வேற மாதிரி தேர்தலுக்கு பின்னர் விஜயகாந்த் 41, காங்கிரஸ் 63 பாமக 30 சேந்து கூட்டணி ஆச்சிதான்.

8 March 2011 1:25 PM***

20 (41), 30 (63), 20 (30) தேறுவதற்கு வேணா சாண்ஸ் இருக்கு!:)

வருண் said...

***Chitra said...

மேலே உள்ள படத்தில், "கொஞ்சம் புன்னகைத்தால் என்ன மிஸ்டர் விசயகாந்து?"னு கேக்கத் தோணலையா உங்களுக்கு?


....அவர் டென்ஷன் அவருக்கு. .... ஹி,ஹி,ஹி...

8 March 2011 4:09 PM***

வாங்க சித்ரா!

இவரு அரசியல்ல இறங்யதால் கருணாநிதி இவரோட எதிரியானாரு. அவரை இறக்க இவர் அரசியலில் போராடுறாராம். எதிரியை உருவாக்கியதே இவர்தான். :)