Monday, March 7, 2011
ஹாசன்களிலே இவர் இனிய ஹாசன்!
ஸ்ரீநிவாசன் அய்யங்கார் சந்ததிகள் எல்லோருக்குமே அவர்கள் லாஸ்ட் நேம் (குடும்பப்பெயர்) மாறிவிட்டது! என்ன காரணம்னு தெரியவில்லை அவர் சந்ததிகளெல்லாம் "ஹாசன்" என்கிற ஃபேமிலி நேம் வைத்துக்கொண்டு தொடர்கிறார்கள்.
ஹாசன் என்கிற பெயர் பிரசித்திபெற்றதற்கு காரணம் மூனுமுறை நேஷனல் அவர்ர்ட் வாங்கிய திரு கமலஹாசந்தான் என்பதில் யாருக்கும் கடுகளவும் சந்தேகம் இல்லை!
ஹாசன் ஃபேமிலியில் இப்போதுள்ள பிரபலங்கள்
* கமல் ஹாசன்
* சாரு ஹாசன்
* சுஹாஷினி ஹாசன் (மணிரத்னம்?)
* ஸ்ருதி ஹாசன்
மற்றும்
* அனு ஹாசன்
இந்து ஹாசன் களை எல்லாம் கொஞ்சம் கவனித்தால்,
* சாரு ஹாசன் ஒரு சில "சைட் ரோல்" களில் நடித்துவிட்டு ஒதுங்கிவிட்டார். புகழ் ஏணியில் ரொம்ப ஏறவில்லை என்பதே உண்மை.
* சுருதி ஹாசன் இப்போத்தான் திரையுலகில் காலெடுத்து வைத்துள்ளார். இன்னும் அப்பாவின் புகழால்தான் வளர்ந்து கொண்டிருக்கிறார். தன் காலால் இன்னும் நிலைத்து நிற்கவில்லை.
* சுஹாஷினி ஹாசன், கமலக்கு அடுத்து திரையுலகில் மின்னியவர். இன்னைக்கு சின்னத்திரையிலும் பிரகாசிக்கிறார். ஆனால் சுஹாஷினியின் மேதாவித்தனத்தால் இவர் பலருடைய வெறுப்புக்குள்ளானவர்னு சொல்லலாம். கற்பு மேட்டர் பெரிதான போது "தமிழன் என்றால் கொம்பா முளைத்து இருக்கிறது?" என்று இவர் பேசியது இன்னும் எரிச்சலை கிளப்புகிறது. இவர் நிச்சயம் அழகான புன்னகைக்கு சொந்தக்காரராக இருந்தாலும் இனியஹாசன் அல்ல!
* கமல், பார்ப்பணராக பிறந்து, நாத்திகவாதியாக வாழ்பவர். இரண்டு விவாகரத்து! இன்று கல்யாணம் என்பதில் இன்னொரு முறை மாட்டி அவஸ்தைப்பட இஷ்டமில்லாமல் "சேர்ந்து வாழ்வதே" நல்ல வாழ்க்கை முறை என சொல்லாமல் சொல்பவர்னுகூட சொல்லலாம். இதனால் கடவுள்நம்பிக்கை உள்ளவர்கள், மற்றும் கல்யாணம் என்பதை பெரிதாக மதிப்பவர்கள், கலாச்சாரக்காவலர்கள் பலருக்கு கமல் இனியவர் அல்ல!
* அனுஹாசன்.. கமலின் மூத்த அண்ணா சந்திரஹாசனின் புதல்வி! முதல் கலயாணம் விவாகரத்தில் முடிந்துள்ளது. ரெண்டாவதாக ஒரு பிரிட்டிஷ் காரரை மணந்துள்ளார். இருந்தாலும் இவர் அணுகுமுறை தொழிலிலும், தனிப்பட்ட கருத்துக்களை பரிமாறும்போதும், மிகவும் நாகரிகமாகவும், தெளிவாகவும், யாரையும் புண்படுத்தும் வைகையில் இல்லாமலும் இருக்கிறது. இவர் நடத்தும் காஃபி வித் அணு மற்றும் கண்ணாடி போன்றவைகள் எல்லோரும் ரசிக்கத்தக்கவும், பாராட்டத்தக்கவும் அமைகிறது. நான் பார்த்த வரைக்கும் இவரை வெறுப்பவர்கள் மிக மிக கம்மி! அதனால் ஹாசன் களில் இனிய ஹாசன் பட்டத்தை தற்போது அனுஹாசன் தட்டிப்போகிறார்! :)
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
தந்தை வழியில் குடும்பப் பெயர்...அது சரியாக உள்ளது.
குலவழக்கப்படியும் சரியாக உள்ளதே.
இன்னும் என்ன சந்தேகம்?
ஏதாவது டோமர் அய்யங்காரிடம் கேட்டுத் தெளிவுபெறுங்கள்.
ராவணன்,
ஹாசன் என்கிற பெயர் ஸ்ரீநிவாசன் ஐயங்கார் தந்தை பெயரில் இருந்ததா?
இல்லை ஸ்ரீநிவாசனுக்கும் அந்தக் குடும்பப்பெயர் இருந்ததா என்பதை விளக்கவும்!
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்ற மிகப் பெரிய சந்தேகத்துக்கு சமமான சந்தேகத்தைத் தீர்த்து வைத்த டென்ஷன் ப்ளீஸ்க்கு நன்றி.
அருமையான பதிவு.இப்படிப்பட்ட பதிவுகளைத்தான் அண்ணன் பழமைபேசி எதிர்பார்க்கிறார்.
***ramalingam said...
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்ற மிகப் பெரிய சந்தேகத்துக்கு சமமான சந்தேகத்தைத் தீர்த்து வைத்த டென்ஷன் ப்ளீஸ்க்கு நன்றி.
7 March 2011 9:51 AM ***
ஏங்க, ரிலாக்ஸ் ப்ளீஸ் னு ஒரு அழகான மொக்கைப் பதிவு போட்டால் டென்ஷன் ப்ளீஸ்னு சொல்றீங்களே! இது நியாயமா?
***குடுகுடுப்பை said...
அருமையான பதிவு.இப்படிப்பட்ட பதிவுகளைத்தான் அண்ணன் பழமைபேசி எதிர்பார்க்கிறார்.
7 March 2011 10:15 AM***
வாங்க கு கு!
மணியண்ணா இதுக்கு என்ன சொல்றாராம்? :)))
கமல்ஹசன் ஆகிட்டாரே. அதனாலேயே அமெரிக்க immigrationல நிறுத்தி வெச்சதை மறந்துட்டீங்களா?
கமலஹாஸனின் தந்தையும் ஹஸன் முகமது என்ற முஸ்லிமும் சுதந்திரப் போராட்டக் காலத்தில் சிறையில் ஒன்றாக இருந்ததிருக்கின்றனர். சிறை வாழ்க்கை இருவரையும் சிறந்த நண்பர்களாக்கியது. அந்த நண்பரின் நினைவாகவே தனது குழந்தைகளின் பெயருக்கு பின்னால் ஹஸன் என்று போடும் வழக்கத்தை கொண்டு வந்ததாக முன்பு பத்திரிக்கையில் படித்த ஞாபகம்.
//கமலின் மூத்த அண்ணா சந்திரஹாசனின் //
ரெண்டாவது அண்ணா
"ஹாசன்களிலே இவர் இனிய ஹாசன்!"
லைட்டா
***ILA(@)இளா said...
கமல்ஹசன் ஆகிட்டாரே. அதனாலேயே அமெரிக்க immigrationல நிறுத்தி வெச்சதை மறந்துட்டீங்களா?
7 March 2011 2:07 PM ***
அதை எபப்டிங்க மறக்க முடியும்? மிடில் ஈஸ்ட்லதான் இப்படி லாஸ்ட் நேம் இருக்கும் இல்லையா? :)
***சுவனப்பிரியன் said...
கமலஹாஸனின் தந்தையும் ஹஸன் முகமது என்ற முஸ்லிமும் சுதந்திரப் போராட்டக் காலத்தில் சிறையில் ஒன்றாக இருந்ததிருக்கின்றனர். சிறை வாழ்க்கை இருவரையும் சிறந்த நண்பர்களாக்கியது. அந்த நண்பரின் நினைவாகவே தனது குழந்தைகளின் பெயருக்கு பின்னால் ஹஸன் என்று போடும் வழக்கத்தை கொண்டு வந்ததாக முன்பு பத்திரிக்கையில் படித்த ஞாபகம்.
7 March 2011 3:07 PM***
உண்மைதான், முதலில் கமலஹாசன் ஸ்ரீநிவாசனாகத்தான் இருந்தார். பின்னாலதான் "கமல் ஹாசன்" ஆகி ஹாசன் கடைசிப் பெயர் ஆனது! நியுமராலஜியோ என்ன எழவோ!
***Indian said...
//கமலின் மூத்த அண்ணா சந்திரஹாசனின் //
ரெண்டாவது அண்ணா
7 March 2011 5:08 PM***
அப்படியா? என்னையும் என் பதிவையும் திருக்கொள்கிறேன். நன்றி இந்தியன் :)
***THOPPITHOPPI said...
"ஹாசன்களிலே இவர் இனிய ஹாசன்!"
லைட்டா
7 March 2011 10:20 PM***
லைட்டாவா? சரி, லைட்டா இனிய ஹாசன்னு வச்சுக்குவோம் :)
ஹாசம் அன்பதற்கு சிரிப்பு என்பது பொருள். கமல்/ல ஹாசன் அன்பது தாமரை போன்ற சிரிப்பு, சந்திரனின் குளிர்ச்சி போன்ற சிரிப்பு சந்திரஹாசன், சுஹாசினி = நன்மை பயக்கும் சிரிப்பு என்பது என் அறிவுக்கு எட்டியது.
@@குடுகுடுப்பை
சாலேசுவரக் கண்ணாடி வாங்கப் போனீரே, வாங்கியாச்சா??
Post a Comment