"என்ன ஆச்சு?"
"அம்மாட்ட 50 சீட்டாவது வாங்கிடுவதுனு நிக்கிறாராமில்லை ஒத்தக்காலிலே!'"
"50 சீட்டா? இவ்வளவு நாளா ஒத்தக்காலிலேயா? கால் வலிக்காதா பாவம்?"
"அம்மா பயங்கர கோவமா இருக்காராம் இவரு மேலே. அதனால் அப்படியே நில்லுனு நிக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறாராம்!"
"என்ன கோவமாம்?"
"பின்ன என்னங்க, சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13 தேதியாம்! 13 மோசமான நம்பராம்! அதனால இவரு.. "
"இரு இரு, 13 யாருக்கு மோசமான நம்பராம்?"
"எல்லாருக்கும் இல்லையாம்! கருணாநிதிக்கு மட்டும்தானாம்?!"
"அதனால?"
"அதனால் ஏப்ரல் 13லயே எலக்சன் நடத்தியே ஆகனும்னு விசயகாந்து சொல்லிக்கிட்டு திரிகிறாராம். சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதும் 13 தேதியாம்! அதனால விசயகாந்து கூட்டணி வெற்றியடைஞ்சிடுமாம்! கட்டாயம் எலக்ஷன் ஏப்ரல் 13 லதான் நடத்தனும்னு நம்புறாராம்"
In a lighter vein, but striking a serious note, Vijayakanth remarked that the election and counting dates of April 13 and May 13 indicated the "play of the Devil" as 13 is considered an inauspicious and unlucky number. "So this is an opportunity to get rid of the evil government," he quipped attacking the ruling DMK.
"ஆனா.."
"என்ன ஆனால்?"
"அம்மாவும் வைகோவும் இந்த ஆளோட மூடநம்பிக்கைய நெனச்சு தலையில் அடிச்சிக்கிறாங்களாம். என்ன இந்த ஆளு லூசா இருக்கான்? ஏப்ரல் 13 ல நடத்தினால் நமக்கு ஆப்புதான். ஏன் இப்படி 13 அது இதுனு உளறுகிறாரு இந்த ஆளுனு சொல்லி வைக்கோவும் அம்மாவும் நிச்சயம் ஏப்ரல் 13 ல எலக்சான் நடத்தலைனாத்தான் நமக்கு வெற்றினு தேதிய மாத்த சொல்றாங்களாம்!"
AIADMK, MDMK seek postponement of elections
CHENNAI: The All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) and the Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) have sought postponement of the Assembly elections scheduled for April 13 saying the poll process will cause inconvenience to school students taking their public exams.
"அப்போ விசயகாந்து வடை போச்சேனு அழுகிறாராமா?"
"ஆமா, ஏப்ரல் 13 ல எலக்சன் நடத்தலைனா, நான் கூட்டணில இருக்க மாட்டேன்னு சொல்றாராம்!'"
"என்னவோ போங்க! ஒத்தக்காலிலேயே நின்னுக்கிட்டா?"
"ஹா ஹா ஹா"
4 comments:
நீங்களுமா ஓளருறீங்க... நல்ல நக்கல் பதிவு
சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ
வாங்க பிரகாஷ்! :)
13 ம் தேதி "கெட்டவங்க" எல்லாம் பதிவு போடக்கூடாதுனு விசயகாந்து நம்புறாராம்! அப்படிப் பதிவு அவங்களுக்கு அழிவுகாலம்தானாம்! :)))நீங்க கெட்ட்வரா இருந்தால் கவனமா இருங்க!!
இவருக்கு யாரு இந்த "13 அறிவை"க் கொடுத்ததுனு தெரியலை. அமெரிக்காவில்தான் சில லூசுகள் சொல்லிக்கிட்டுத் தெரியும் friday the 13th அது இதுனு. இவரு மதுரைக் காரர்தானே? :)
ok ok
http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_6489.html - ஷோபா சக்திக்கு சில 'அ' கலாச்சார கேள்விகள்
படித்துப் பார்த்து பதில் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
Post a Comment