Friday, March 4, 2011

பெண்களை இழிவுபடுத்தும் "பெண்கள் நாட்டின் கண்கள்"!

"பெண்கள் நாட்டின் கண்கள்" னு பதிவுலகில் யாரோ ஒரு புண்ணியவான் பெண்கள் சம்மந்தப்பட்டப் பதிவுகள் எழுதுறாரு. "பெண்கள் நாட்டின் கண்கள்" னா என்னை மாதிரி அப்பாவிகள் என்ன நினைப்போம்? பெண்களை மதிப்பவர், பெண்கள் பிரச்சினைகளுக்காக போராடுபவர், பெண்ணியவாதி என்றுதான் எனக்குத் தோனுச்சு.

அவர் தளத்தில் தலைப்பில் சொல்லியிருக்கிற மேட்டர் இங்கே!

பெண்கள் நாட்டின் கண்கள்!!

பாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம்! பெண்கள் நாட்டின் கண்கள்!!

முதலில் அப்பாவியான நான் இது வஞ்சப் புகழ்ச்சி என்றோ நக்கல் என்றோ நினைக்கவில்லை. ஆனால் இந்ததளத்தில் வருகிற பதிவுகள்/தலைப்புகள் எல்லாம் "ஒரு மாதிரி"யா இருந்தது. பொதுவா "comment moderation enable" செய்து இருப்பதாலோ என்னவோ பதிவுகளுக்கு அதிகமாகப் பின்னூட்டமும் வருவதில்லை!

"ஒரு மாதிரி" யானா?

அத்தைக்கு வந்த விபரீத ஆசை!

பணத்திற்காக சவத்தைப் புணர்ந்த பெண்!

இதுபோல தலைப்பு! பெண்களை இழிவுபடுத்தும் தலைப்புகள்! இதுபோல் பல உண்மை சம்பவங்களை (செய்தியாக வந்தவைகள்) கொண்டுவந்து இவர் தளத்தில் கொட்டுவது!

ஒருமுறை இல்லை, பலமுறை இவர் பதிவுகளைப் பார்த்து (பதிவுத் தலைப்புக்கும், "பெண்கள் நாட்டின் கண்கள்" க்கும் எதிர்மறையா இருக்கே?) நான் புரியாமல் குழம்பிப்போயிருக்கேன். ஆமா, நான் கொஞ்சம் ட்யூப் லைட் தான். :)

இன்னைக்கு ஒரு பதிவு வந்திருக்கு!

"இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி"னு தலைப்பு! யாரு எழுதுறா? "பெண்கள் நாட்டின் கண்கள்" னு சொல்லிக்கொண்டு திரிகிற ஒரு பதிவரா என்ன எழவோ!

பதிவில் இவர் முடிவுரை!

பெண் கொஞ்சம் நன்றாக சம்பாதிக்கும் நிலையில் இருந்தால் இன்னும் ஒருபடி மேலே சென்று அவளது திருமண வாழ்வில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகளை தூண்டிவிட்டு பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்ய வைத்து அதில் நாலு காசு பார்க்கும் நிலைவரை இப்போது உயர்ந்துவிட்டார்கள் பெண்ணை பெற்றவர்கள்! இதுதான் “பெண்களுக்கு சம சொத்துரிமை” என்ற சட்டம் “வரதட்சணை தடுப்புச் சட்டமாக” உருமாற்றப்பட்டு இப்போது பெண்ணைப் பெற்றவர்களும், பெண்ணின் சகோதரர்களும் அடித்துக்கொண்டிருக்கும் லூட்டி. பெண்ணைப் பெற்றவர்களால் சீரழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் விவாகரத்து வழக்கில் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பில் இந்த நிலையை வெட்டவெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறார். படித்துப் பாருங்கள்.

பெண்களுக்கு உள்ள எழவு போதாதுனு இப்படி "பெண்கள் நாட்டின் கண்கள்' னு ஒரு பேரை வச்சுக்கிட்டு , இதுபோல ஏதாவது ஒரு வீணாப்போன "கேஸை" எடுத்துக்கிட்டு வந்து பதிவு எழுதுறேன்னு பெண்களை, பெண்களை பெற்றவர்கள், அவர்கள் சகோதரர்கள், மற்றும் எல்லாரையும் இரக்கமே இல்லாமல் கேவலப்படுத்தும் பதிவா போட்டுக்கிட்டு திரிகிறார் இவர்.

இதாவது பரவாயில்லை, ஒரு சில தலைப்பு, பிரச்சினைகள் எல்லாம் படு மோசமாக இருக்கும். பெண்களில் மோசமானவங்க இல்லைனு யாரும் சொல்லவில்லை! நாட்டின் கண்களாக உள்ள பெண்களில் இடம்பெற தகுதியில்லாத பெண்களை தேடி கண்டு பிடிச்சு வந்து அதை விமர்சிப்பதுதான் இந்த "பெண்கள் நாட்டின் கண்கள்" செய்யும் சாகசங்கள்!

சரி, இது அவர் உரிமை! பேச்சுரிமை! பதிவுகல உரிமை! தன்னை தன் தளத்தை எப்படி வேணா அவர் சொல்லிக் கொள்ளலாம்தான். நான் யாரு இதைப்பத்தி சொல்ல?னு கேக்குறீங்களா?

நல்ல கேள்விதான்! இல்லைங்க, நான் சொல்ல வர்றது என்னை மாதிரி இவரை "தவறுதலாக" புரிந்து கொண்டு அந்தத் தளத்திற்குப் போய் பெண்களை கேவலப்படுத்தும் பதிவை வாசிச்சு எரிச்சலுடனும், கோபமகவும் திரும்பி வரப்போற "அப்பாவி" பதிவர்களை/வாசகர்களை எச்சரிக்கலாமே, காப்பாற்றலாமேனு என்கிற ஒரு நல்ல எண்ணம்! அதான் இந்தப் பதிவு!

இப்போலாம் "பெண்கள் நாட்டின் கண்கள்"னு இந்த அழகான வாக்கியத்தை வாசிக்கும்போது, எனக்கு நல்லாத்தான் வாயில வருது!

"ரிலாக்ஸ் ப்ளீஸ்" னு சொல்லிட்டு ஏன்யா டென்ஷனாக்கிற பதிவை எல்லாம் எழுதுறனு கேட்டால் எனக்கு ஒழுங்கா தெளிவான பதில் சொல்ல முடியாதுதான். வலைபதிவு பேருக்கும் அதிலே எழுதுற பதிவுகளுக்கும் சம்மந்தா சம்மந்தம் இல்லாமலிருக்கிறது ஒண்ணும் பெரிய விசயமில்லை. இருந்தாலும் என் டென்ஷன் பதிவுகள் வருண் என்கிற பெயரில்தான் வருது. "ரிலாக்ஸ் ப்ளீஸ்"னு வருவதில்லைனு நியாயப்படுத்த நான் முயலலாம்தான்.

* இந்தப் "பெண்கள் நாட்டின் கண்களை" பார்த்து எரிச்சலும் கோபமும் அடைந்த முதல் ஆள் நான் தானா?

* In every fucking issue (crime or incident) he was bringing up with the intention of INSULTING WOMEN, not only a "bad woman" but also several "SICK MEN" involved committing the CRIME! But he focuses ONLY on the BAD WOMA(E)N leaving the "HOLY MEN"!

* இந்தத் தளம் நிச்சயமாக கண்டனத்துக்குரிய ஒண்ணு! விமர்சிப்பது, கடுமையாக விமர்சிப்பது, கோபமும் எரிச்சலும் அடைவது எல்லாமே மனித இயல்புதான். ஆனால் இந்த தளம் நடத்துவதே பெண்களை கேவலப்படுத்தனும்கிற ஒரே முயற்சிதான் என்பதுதான் பிரச்சினை!

* எனக்கு இந்த பதிவரைப் பத்தி எந்தவிதமான விபரங்களும் தெரியாது. ஆனால் என் பார்வையில் நிச்சயமாக ஒரு "sadistic person" பெண்களை அவமானப்படுத்துவது என்கிற ஒரே காரணத்துக்காகவே இந்தத்தளம் அமைத்து அதற்கு "பெண்கள் நாட்டின் கண்கள்" என்கிற தளம்/பதிவர் பெயரை வைத்துக்கொண்டு இதுபோல் மோசமான பெண்கள் சமம்ந்தப்பட்ட பிரச்சினையை மட்டும் தேடி தேடி சேகரிச்சு கொடுப்பதற்காக ஒரு வெறியுடன் அலைவதைத்தான் என்னால் பார்க்க முடியுது.

* It is really sad such a "sadistic blog" is sincerely aggregated by TamilmaNam! :(

16 comments:

DrPKandaswamyPhD said...

இத்தகைய பதிவுகளை "தமிழ்மணம்" நிச்சயம் தடை செய்ய வேண்டும்.

பழமைபேசி said...

தளபதி,

பையங்கூடவே கொஞ்சிகிட்டு இருக்காம, பதிவுலகக் காவலர் பட்டத்தை ஏன் தரக்கூடாது அப்படிங்ற பட்டிமண்டபத்தை நீங்க ஏன் நடத்தக் கூடாது அப்படின்னு நான் ஏன் கேட்கக் கூடாது?

வருண் said...

***DrPKandaswamyPhD said...

இத்தகைய பதிவுகளை "தமிழ்மணம்" நிச்சயம் தடை செய்ய வேண்டும்.

4 March 2011 2:56 PM***

தங்கள் கருத்துக்கு நன்றிங்க, டாக்டர் கந்தசாமி! :)

வருண் said...

Blogger பழமைபேசி said...

*** தளபதி,

பையங்கூடவே கொஞ்சிகிட்டு இருக்காம, பதிவுலகக் காவலர் பட்டத்தை ஏன் தரக்கூடாது அப்படிங்ற பட்டிமண்டபத்தை நீங்க ஏன் நடத்தக் கூடாது அப்படின்னு நான் ஏன் கேட்கக் கூடாது?

4 March 2011 3:07 PM***

சின்னத் தளபதி நியூயார்க்ல பொறந்தால் "அம்ரிக்கன்" ஆயிடுவாரே. இல்லையா? :)

guna said...

இத்தகைய பதிவுகளை "தமிழ்மணம்" நிச்சயம் தடை செய்ய வேண்டும். no no no

Suresh Ram said...

When somebody tries to exposes the real character of women the society deemands banning of the BLOG!!

While Men and boys are always expected to be and conditioned to become protectors and providers, they are routinely portrayed as

"Oppressors, aggressors, wife-beaters, dowry-seekers, bride-burners, sexual perverts, pimps, cheats, criminals, murderers, rapists, drug-peddlers, terrorists, etc. who ought to be restrained through inhuman, draconian laws;
Idiots, pathetic, uncouth and inferior creatures who are constantly in need of rescue by their “superior” wives, girlfriends or female relatives who are set to overhaul them;"

The society considers kicking, punching and slapping men as acceptable and even laudable behaviour on the part of women and girls.

The society characterizes men as reckless, irresponsible and incapable of taking care of even themselves or their children.

The society is rapidly replacing men with women, machines and sperm banks and treating men as a disposable species.

Sexual arousal is discernible in men, whereas it is not obvious in women. As a result, men constantly face the allegation of being obsessed with sex.

It is believed that men always indulge in sex voluntarily, whereas women are thought to take part in sex either to fulfil the sexual or emotional needs of men or because they are forced to do so by men against their will.

Sexual exploitation and rape of men and boys by women is not acknowledged as an offence, and in fact it is considered as a non-existent problem.

Boys and men are coerced or enticed into having sex both within and outside marriage.
Boys and men are blackmailed into having sex within and outside marriage.

Boys and men face allegations of rape or threats by women who indulge in consensual sex only with the intention of forcing men into marrying them, to extort money and other ulterior motives.

Married men also face abuse from wives who withhold sex as a means to blackmail, take revenge, or to attain other ulterior objectives.

No legal provisions exist to protect men and boys from molestation, rape or any of the above mentioned forms of sexual exploitation.

Be gender neutral !!!

வருண் said...

***Suresh Ram said...

When somebody tries to exposes the real character of women the society deemands banning of the BLOG!!***

It was not a demand!

So, what is being done is exposing the real character of our mothers and sisters?

What he is exposing is NOT real character of women in general. It is real character of some women!

--------------

***Be gender neutral !!!***

Yeah, I am also telling the same fucking thing! Get that. Why is that blog ONLY criticizes women? Never MEN? Thatis NOT gender neutral!

naveen said...

மன்னிக்கவும் வருண் சார் சட்டம் பெண்களை தவறான பாதைக்கு எடுத்து சென்று விட்டது என்பது உண்மைதான். உண்மை கசப்பானது . மனைவி என்ற பெண்ணால் ஏற்படும் பிரச்னையில் நீங்கள் உங்கள் தாய் சகோதரிகளை காப்பாற்றுவது கடினம் என்று இந்திய சட்டம் சொல்லுகிறது. உங்கள் கடின உழைப்பு பணமும் பறிக்கப்படும். கள்ள தொடர்பு கொள்ளும் கணவனை மட்டுமே சட்டம் தண்டிக்கும் . கள்ள தொடர்பு கொள்ளும் மனைவி மேல் வழக்கே போட முடியாது. இது போல் பல ........ அனுபவபடும் போது அறிந்து கொள்வீர்கள் நன்றி

செந்தழல் ரவி said...

அந்த பதிவை எழுதும் தோழரைப்போல உங்களையும் லாக்கப்பில் வைத்து கும்மியிருந்தால் தெரிந்திருக்கும் சேதி ...

வருண் said...

**guna said...

இத்தகைய பதிவுகளை "தமிழ்மணம்" நிச்சயம் தடை செய்ய வேண்டும். no no no

4 March 2011 4:58 PM**

தங்கள் கருத்துக்கு நன்றி குணா!
------------------
***naveen said...

மன்னிக்கவும் வருண் சார் சட்டம் பெண்களை தவறான பாதைக்கு எடுத்து சென்று விட்டது என்பது உண்மைதான். உண்மை கசப்பானது . மனைவி என்ற பெண்ணால் ஏற்படும் பிரச்னையில் நீங்கள் உங்கள் தாய் சகோதரிகளை காப்பாற்றுவது கடினம் என்று இந்திய சட்டம் சொல்லுகிறது. உங்கள் கடின உழைப்பு பணமும் பறிக்கப்படும். கள்ள தொடர்பு கொள்ளும் கணவனை மட்டுமே சட்டம் தண்டிக்கும் . கள்ள தொடர்பு கொள்ளும் மனைவி மேல் வழக்கே போட முடியாது. இது போல் பல ........ அனுபவபடும் போது அறிந்து கொள்வீர்கள் நன்றி

5 March 2011 10:36 AM***

தங்கள் கருத்துக்கு நன்றி, நவீன். :)

வருண் said...

***செந்தழல் ரவி said...

அந்த பதிவை எழுதும் தோழரைப்போல உங்களையும் லாக்கப்பில் வைத்து கும்மியிருந்தால் தெரிந்திருக்கும் சேதி ...

5 March 2011 12:51 PM***

அப்படியா? உங்களுக்கு அதுபோல அனுபவம் இருப்பதால்தான் அவர் உணர்ச்சிகள் உங்களுக்குப் புரியுதா?

எனிவே, அப்படியே உங்க ஆசைப்படி பொய் கேஸில் பல ஆண் காவ்லர்கள் என்னை அடிச்சு துன்புறுத்தி யிருந்தாலும், நான் "பெண்கள் நாட்டின் கண்கள்" னு ஒரு வலைபதிவு ஆரம்பிச்சு, அதே புனைபெயரை எனக்கு வச்சுக்கிட்டு, முழுநேர ஒப்பாரி வைத்து இருப்பேனானு சந்தேகம்தான்!

Unfortuanately some innocent people do get punished sometimes. When it happens, nobody is going to like that. But, Is this the only solution to show your bittter experience to the world?? And you are going to ACHIEVE what by doing so?

செந்தழல் ரவி said...

எங்கப்பா போலீசு என்பதால் லாக்கப்பில் மீன் வறுத்த அனுபவம் கூட உண்டு.

சில ஸ்பிலிட் பர்சனாலிட்டி ஆட்கள் மாட்டி லாக்கப்பில் ஜட்டி கிழிய அடிவாங்கியதையும் பார்த்திருக்கிறேன்.

அங்கே எப்படி ?

வருண் said...

***செந்தழல் ரவி said...

எங்கப்பா போலீசு என்பதால் லாக்கப்பில் மீன் வறுத்த அனுபவம் கூட உண்டு.***

அந்த அனுபவம் எனக்கு கெடைக்கலை! எங்கவீட்டில் மீன் பொறிப்பாங்க இல்லைனா குழம்புவைப்பாங்க, வறுப்பதில்லை. அதுவும் அம்மாதான் மீன் பொறிப்பாங்க*** சில ஸ்பிலிட் பர்சனாலிட்டி ஆட்கள் மாட்டி லாக்கப்பில் ஜட்டி கிழிய அடிவாங்கியதையும் பார்த்திருக்கிறேன்.

அங்கே எப்படி ?***

எனக்கு ஸ்ப்லிட் பர்சனாலிட்டினு உளறிக்கிட்டு திரிகிற சில அரைலூசுகளை பார்த்த அனுபவம் உண்டு! அதுக மண்டையில் ஒருவேளை களிமண்ணு இருக்குமோனு யோசித்ததுண்டு!

YAAR said...

varun,
Yes, the blog u have mentioned has changed its title from some IPC to this I believe.
For all others, yes women are abusing men through the law of protection. Ok agreed. But are u guys not reading still the abu. se, violence, etc by men in daily news. Otherwise women are taking this kind step where did they learn, they learnt from their counterparts a lot, everything damn social activities the women are copycating men so obviously few of them have take this technique of revenge,cheating etc as teaching lessons

nathin said...

1.ஒன்றுபட்ட கூட்டு குடும்பம் சிதைந்து மனிதர்களை நேசிக்கும் மனோபாவமும் குறைந்து விட்டது. நானும் சம்பாதிக்கிறேன்: நீயும் சம்பாதிக்கிறாய். உனக்கு நான் ஏன் கட்டுப்பட வேண்டும். உன் பேச்சை நான் எதற்கு கேட்க வேண்டும் என்ற ஈகோ.
2.நமது நாட்டிலும் விவாகரத்து தினம் தினம் அதிகரித்து வருவது பெண்ணைப் பெற்றவர்களும், பெண்ணின் சகோதரர்களும் இப்போது நன்றாக குளிர் காய்ந்துகொண்டிருக்கிறார்கள். மருமகனை வீட்டோடு மாப்பிள்ளையாக்கிக்கொள்வதற்கு, அவன் சம்பாதிக்கும் பணத்தை மகளை ஏவிவிட்டு பிடுங்குவதற்கு, மகளின் கள்ளக்காதலை மாப்பிள்ளை கண்டும் காணாமல் இருக்கச் செய்வதற்கு.நம் நாட்டில் ஆண்டுக்கு 76,000 பொய்க் கேசுகள் (498A) போடப்பட்டு ஒரு பாவமும் அறியாத வயதான தாய்மார்களும் இளம் பெண்களும் சின்னஞ்சிறு குழந்தைகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
3.கடமைகளை செய்யாமல் உரிமைகளை மட்டும் கோரும் பெண்ணியவாத குள்ளநரிகளின் கோர கரங்களில் இருந்து தேச பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.நாட்டில் கடமைகளை செய்ய மட்டுமே ஆண் வர்க்கம், உரிமைகளை பெற பெண் வர்க்கம் என்னும் அக்கிரமங்கள் அரங்கேற்றப்படுகிறது.
4.கற்பை கல்லூரிகளிலும், கடைதெருக்களிலும் விற்கும் பொருளாக அல்லது இலவசமாக பரிமாறும் பொருளாக எண்ணி தறி கேட்டு வாழும் தரம் கெட்ட பெண்கள்
5கள்ளக்காதல் விவகாரத்தில் இந்திய no ;1இந்தியசட்டம் பல பெண்களுக்கு கள்ளக் காதலை வளர்த்துக் கொள்ள மிகவும் சாதகமாக இருந்து வருகிறது !6.இந்தியாவில் திருமணம் செய்தால் அரசாங்க ஆதரவுடன் கண்டிப்பாக ஒருநாள் பொய் வழக்கில் சிக்கி சிறைக்குச் செல்வது உறுதி. இதனை தடுக்க எந்தவித நச்சு முறிவு மருந்தும் இந்த உலகத்தில் கிடையாது!!
7.ஆண்கள் பயிலும் பள்ளிகளைவிட பெண்கள் பயிலும் பள்ளிகளுக்கு நிதிஉதவி இந்தியசட்டம் ஆண்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதால்
8.இந்தியாவில் தற்போதைய கணக்குப்படி ஆண்டுக்கு 55 ஆயிரம் ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்களில் 40 சதவீதம் பேர் பெண்களால் பாதிக்கப்பட்டுதான் உயிரை இழக்கிறார்கள்.
9.ஒரு ஆண் தனக்கு நேரும் சங்கடங்களை, உடல்(sex), மன ரீதியான பாதிப்புகளை தயக்கத்தின் காரணமாக வெளியில் சொல்வதில்லை.இந்தியசட்டம் சட்டம் ஆண்கள் காலில் பூட்டப்பட்ட விலங்காக உள்ளது. ஆண்களுக்கு எதிராகப் பல விதிகள் .
10.இந்தியாவின் தேசிய நடைமுறை. இதற்கு பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்,கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தனது கள்ளக்காதலன் மற்றும் தங்கையுடன் சேர்ந்து, கட்டிய கணவனின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த பெண்ணைப். …….,;;;;……,,,,..,--
இப்போதைய உடனடித் தேவை --
அனைத்து சட்டங்களும் உடனடி மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் மற்றும் போர்க்கால அடிப்படையில் இதிலுள்ள ஓட்டைகள் அடைக்கப் பட வேண்டும். இப்போது உள்ள சட்டங்களில் ஓட்டைகளால் தீவிரவாதத்தை போன்று இன்னும் பல மடங்கு சக்தி வாய்ந்த கலாசார சீரழிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை நடுவண்-மாநில அரசுகள் உடனுக்குடன் கவனித்த தீர்த்து வைக்க ஆவண செய்ய வேண்டும்.