சரவணனுக்கு சிறுவதிலிருந்தே இந்தப்பழக்கம் உண்டு. தெருவில் நடுரோட்டில்
வாழைப்பழத் தோல் கிடந்தால் அதை கவனமாக எடுத்து குப்பையில் போடும் வழக்கம் .
உடைந்த கண்ணாடி கிடந்தாலோ அல்லது ஒரு ஆணி கிடந்தாலோ அதை குனிந்து கவனமாக
எடுத்துக்கொண்டு போய் ஓரமாகப் போடுவான். ஒரு சில நண்பர்கள் இதெல்லாம்
தேவையில்லை என்று நினைப்பதையும் பார்த்து இருக்கான். இதெல்லாம் ஒரு "ஹாபிட்".
அவனுக்கு பழகிவிட்டது.
இன்று காலையில் சிகாகோவில் வேலைக்கு
புறப்பட்டு மெட்ரோ ரயிலில் ஏறி வந்து உட்கார இடம்தேடும்போது கூட்டம்
அதிகமில்லை. எல்லா இருக்கைகளிலும் இருவர் அல்லது ஒருவர் அமர்ந்திருந்தார்கள். ஒரு இருக்கையில் மட்டும் யாரும் இல்லை என்பதால் தன்
பேக்- பாக் கை அருகில் வைத்து அமர்ந்தான். இப்போது மணி காலை எட்டு
நாற்பத்தைந்து. அவனுக்கு ஒன்பதரைக்கு ஒரு மீட்டிங் இருக்கு. இந்த
ட்ரயினில் போனால் ஒன்பது பதினைந்துக்கு இவன் ஆஃபிஸில் இருக்கலாம்.
அடுத்த
ஸ்டாப்பில் ஒரு சுமார் முப்பது வயதிருக்கும் அழகான கவர்ச்சியான
வெள்ளைக்காரப் பெண் ஏறி வந்தாள், உடனே இவன் தன்னுடைய பேக் பாக்கை
எடுத்துவிட்டு அவளுக்கு இடம் கொடுத்தான். அவளுக்கு இடம்
கொடுக்கும்போதுதான் கவனித்தான், அவள் அவசரத்தில் பேண்ட்ஸ் zipப்பை மாட்ட மறந்திருந்தாள்! முன்னால் அந்தப் பகுதியில் அவளுடையை சிவப்பு பேண்டிஸை நல்லாவே பார்க்க முடிந்தது! அவளோ அதை சுத்தமாக உணராமல் அவன் அருகில் அமர்ந்து ஏதோ ஒரு கதைப்புத்தகத்தை திறந்து வாசிக்க ஆரம்பித்தாள்.
சரவணனைத்தவிர யாரும் அவளின் இந்தக் கோலத்தை
கவனிக்கவில்லை! அவனுக்கு ஒரே "டிலெம்மா" அவளிடம் அவளுக்கு மட்டும்
கேட்கும்படி அவளை சரி செய்ய சொல்லுவோமா? இல்லை வேண்டாமா? என்று. ஒன்ஸ் அவள்
இதை "ரியலைஸ்" செய்யும்போது எத்தனை பேர் என்னை இப்படிப் பார்த்தார்களோ?
என்றுதான் அவள் யோசிப்பாள். சரி "பொலைட்"டாக அவளிடம் சொல்லிவிடலாம் என்று
திரும்பினான்!
ஆனால் அவனுக்கு சக்கண்ட் தாட் ..
அவள் யாருனே
இவனுக்குத் தெரியாது. அவளிடம் சொல்வதால் இவன் தன்னை இப்படிப் பார்த்துவிட்டானே என்று அவள்
எம்பாரஸ் ஆகலாம். இவனுடைய இந்த "உதவி"யை அவள் வேறு மாதிரி எடுத்துக்
கொண்டால்? அதாவது நான் உன் உள்ளாடையைப் பார்த்துவிட்டேன் என்று இவன்
சொல்வதாக.. அவ என்ன மாதிரி டைப்போ, யாரோ?
இதுபோல் அவனுடைய க்ளோஸ்
ஃப்ரெண்ட் டயானா என்று ஒருத்தி இதுபோல மறந்ததையும், அதை யாரோ ஒரு பாய்
"ஃப்ரெண்ட்" சரிசெய்யச் சொன்னதையும் சொன்னாள். அதற்கு அவள் எப்படி
ரியாக்ட் செய்தாள் என்று சொன்னவரிகளை அவன் இன்னும் மறக்கவில்லை.
"Oh
gosh, the panty thing is the worst. That happened to me when I was in
Texas, and it was a male friend who told me. I was so embarrassed."
தன்
தோழர் சொன்னதுக்கே டயானா அப்படி ஃபீல் பண்ணியதாக சொன்னாள், நம்ம எதுக்கு
சொல்லி கெட்ட பெயர் வாங்கிக்கொள்ள என்று மனதை மாற்றிக் கொண்டான்.
இவ்வளவு
வளர்ந்த பின்னும் அவனுக்கு இதுபோல் விசயங்களில் ஒரு முடிவு எடுக்க
முடியவில்லை. இன்னொரு முறை அவன் இந்தியாவில் படித்துக் கொண்டிருந்தபோது,
லேடீஸ் ஹாஸ்டல் பின்புறம் இவன் அறையிலிருந்து பார்த்தால் நல்லாத் தெரியும்.
பக்கத்தில் உள்ள சேரியில் உள்ள சில பொறுக்கிப் பசங்க இரவு 7-8 மணிப்போல
வந்து லேடீஸ் ஹாஸ்டலில் உள்ள "வெண்டிலேட்டர்" மூலம் பாத்ரூமில் எட்டி
பார்ப்பதை பார்த்த இவனும் இவன் நண்பர்களும், ஒரு சின்ன சத்தம் போட்டதும்
அவர்கள் ஓடி விட்டார்கள்.
அது போதாதென்று அடுத்த நாள் அவனுடைய சகமாணவி
மாலினியிடம், இதைப்பத்தி சொல்லி கவனமாக அவள் ஹாஸ்டலில் வெண்டிலேட்டரை அடைத்து
வைத்துக்கொள்ளும்படி சரவணன் சொன்னான். அதற்கு மாலினியிடமிருந்து வந்த ரியாக்ஷன்
அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை! என்னவோ இவனே பாத்ரூமில் எட்டிப்பார்த்தது போல ஒரு
"கேவலமான தேங்க்ஸுடன்" போனாள். சரவணனுக்கு எதுக்குடா இதைப்போயி சொன்னோம்னு
ஆகிவிட்டது. இவளுகளை நிர்வாணமா பார்த்தால் என்ன? இல்லை கற்பழித்தால்தான் நமக்கென்ன? என்று நினைத்தான்.
அவன்
ஸ்டாப் அதற்குள் வந்துவிட்டது. அவளிடம் எதுவும் சொல்லாமல் இறங்கி தன்
வேலை செய்யும் இடத்திற்குப் போனான். "எவ எப்படிப்போனா நமக்கென்ன? உதவி
செய்கிறோம் என்று வம்பை விலைக்கு வாங்காமல் இருப்பது நல்லது" என்று
நினைத்துக்கொண்டான், சரவணன்.
****
இதுவும் ஒரு மீள்பதிவே!
9 comments:
It is okay to say 'your fly is down or open,' but add a sentence such as...
I am not sure whether it is proper to say but I strongly feel that I should let you know that your fly is down or open.
நம்பள்கி கரெக்ட் எடிக்கெட் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க. பரவாயில்லை, நல்லதுதான்.
***நம்பள்கி said...
It is okay to say 'your fly is down or open,' but add a sentence such as...
I am not sure whether it is proper to say but I strongly feel that I should let you know that your fly is down or open. ***
நன்றி நம்பள்கி! :-)
இது சம்மந்தமாக ஒரு பெரிய கலந்துரையாடலே நடந்து இருக்கு..
///Is there some kind of official or everyone-knows-about-it gesture to indicate that someone has their fly open? If not, why not?
I was about to take my teenager out with his friends and then stop by a meetup happening near me tonight, and my son pointed out a wardrobe problem. He pointed it out by asking "is there a gesture to make when someone has their fly open" which was a nice bit of indirection, but it was also a good question. Are we missing out on something? And doesn't this seem like the kind of thing that should exist just to make life more livable?
http://ask.metafilter.com/172240/If-my-fly-is-down-I-want-to-know
****பழனி.கந்தசாமி said...
நம்பள்கி கரெக்ட் எடிக்கெட் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க. பரவாயில்லை, நல்லதுதான்.***
வாங்க சார்! :)))
இப்படி சொன்னா இந்தியாவில் இது வேற மாதிரி வேலை செய்யும். எப்பட?
ஏண்டா பொறம்போக்கு நீ அக்கா தங்கச்சியோட பொறக்கலியா? கம்மினாட்டி அங்க என்னடா பார்வை?
----
இங்கு பெண்களே ஆண்களிடம் தைரியாமாக சொல்வார்கள் in just one sentence
Hi! your fly is down or open.
***இங்கு பெண்களே ஆண்களிடம் தைரியாமாக சொல்வார்கள் in just one sentence
Hi! your fly is down or open***
ரொம்ப "ஷை" பெண்களும் இருக்கத்தான் செய்றாங்க. அப்படிப் பெண்கள் (ரொம்ப ஷை டைப்) இல்லவே இல்லைனும் சொல்ல முடியாது!
Re-read it...Varun...
நம்பள்கி -:)
வாங்க, ரெவரி.:-)
உங்கள் பதிவு மிகவும் யதார்த்தமானது....ஒரு பெண் தனது பிரா ஜாகெட்டிற்கு வெளியே தெரிய சென்றுகொண்டிருந்தாள் எல்லோரும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தனர் அவசரக் குடுக்கையான நான் அவளிடம் அதைச் சொன்னேன்..அதற்கு அவள்.....ஹி..ஹி..அதையெல்லாம்வெளிய சொல்லவேணாம் சார்
Post a Comment