Thursday, October 11, 2012

கெட்டகுடியே கெடும்! கடலை கார்னர்- 79

"சமைச்சுட்டீங்களா, கண்ணன்?"

"ஏன் இப்படி துண்டை  மட்டும் கட்டிட்டு வந்து நிக்கிற? போய் ஒழுங்கா ட்ரெஸ் பண்ணிட்டு வா!"

"என்ன பண்ணிருக்கீங்கனு பார்த்துட்டுப் போறேனே?"

"இவ்வளவு நேரமா குளிச்ச?"

"இல்லை, பாத்ரூம்ல தூங்கி எழுந்துண்டு  வர்ரேன்!"

"சரி சரி, இப்படி அரைகுறையா நிக்காம போயி ஏதாவது நைட்டி கிய்ட்டி மாட்ட்டிட்டு வா! ஓரளவுக்கு சமையல் முடிச்சாச்சு! இந்த கீரைய மட்டும் கொஞ்சம் தாளிக்கனும்!"

"பரவாயில்லையே கண்ணன்! கம கமனு சமையல் மணக்குது! எப்படி இதெல்லாம்?"

"போயிட்டு வாடி!"

"சரி, இந்த துண்டை மட்டும் பாத்ரூம்ல போட்டுடுங்க! நான் போயிட்டு வர்ரேன்"

"ஓ மை காட்! நீ ரொம்ப மோசம்!"

"ஒழுங்கா சமச்சு முடிங்க!"

**************

"சரி இப்போ சொல்லுங்க! எப்படி சமைக்க கத்துக்கிட்டீங்க?"

"நாளைக்கு நீ என்னை டைவோர்ஸ் பண்ணிட்டு போயிட்டேனா? நானா சர்வைவ் ஆகனுமில்ல? அதான்"

"கல்யாணமே இன்னும் பண்ணல?"

"கல்யாணம் நடந்து, விவாகரத்து நடந்துருச்சுனா?"

"ஹா ஹா ஹா!"

"ஏய் என் கோ-வொர்க்கர் காத்தரைன் கதை கேட்டயா?"

"என்ன சொன்னாள்?"

"ரெண்டு நாள் முன்னால ராபர்ட்டோடையும் ப்ரேக் அப் பண்ணிட்டாளாம்! ஒரே அழுகை"

"ராபர்ட் யாரு?"

"அவந்தான் அவளோட புது பாய் ஃப்ரெண்டு! ஒரு மாதமா "டேட்" பண்ணூறா! ராஜரை டைவோர்ஸ் பண்ணுறதுக்கு முன்னாலேயே இவனோட சுத்தியிருப்பாள்னு நெனைக்கிறேன்."

"அவ எக்ஸ் ராஜர் நல்ல டைப் மாறித்தானே தெரிஞ்சது?"

"ராஜர் ஒரு ஜெண்டில்மேன் தான், பிருந்த். காத்தரைனுக்கு  அவனை அதுக்குள்ள போரடிச்சிருச்சாம். அவனுக்கு குழந்தை பெத்துக்க இஷ்டம் இல்லை. அவன் ரொம்ப "சென்ஸிட்டிவ்" அது இதுனு எதையோ சொல்றாள். எல்லாம் ராபர்ட்டை மீட் பண்ணிய பிறகுதான்.."

"ராபர்ட்டை நம்ப முடியாதா?"

"எனக்கென்னவோ அவளோட மாஜி ஹஸ்பண்ட்  ராஜர் பரவாயில்லைனு தோணுது. ராபர்ட் இவளை கலயாணம் எல்லாம் பண்ணப் போறதில்லை!"

"ஏன்?"

"இங்க பாரு! காதரைனுக்கு அப்பா யாருனே தெரியாது! அம்மா சிங்கிள் மதரா வளர்த்து ஆளாக்கி இருக்காள். சாதாரண வாழ்க்கைனா என்ன? அப்பா அம்மானா எப்படி இருப்பாங்க? எதுவுமே தெரியாது! அனுபவிக்கவில்லை! "

"அதனால?"

"அவளுக்கு சரியான் துணையை தேடிக்கத் தெரியலை! கணவனை எப்படி தேர்ந்தெடுக்கிறதுனு தெரியலை! அவளை வழி நடத்த ஆள் இல்லை!'

"உங்க கலீக்தானே? நீங்க செய்ய வேண்டியதுதானே?"

"நான் படிச்சுப் படிச்சு சொன்னேன். ராஜர் அவ்ளோ மோசமாத் தெரிய்லைனு. அப்படிச் சொன்னால் அவளுக்கு கோபம் வருது. நமக்கெதுக்கு வம்பு? னு விட்டுட்டேன்."

"இப்போ என்ன சொல்றீங்க?"

"ராபர்ட் அவளைக் கலயாணம் பண்ணப் போவதில்லை! ராஜரிடம் இவ திரும்பிப் போகவும் முடியாது! அவ அம்மா வாழ்க்கை மாரியேதான் இவள் வாழ்க்கையும் முடியும்!"

"பெரிய ஞானி நீங்க! சும்மா இருங்க கண்ணன். ராபர்ட் போனா என்ன? அவ நிச்சயம் ஒரு நல்ல பார்ட்னரை கல்யாணம் செய்து நல்லா வாழலாம்!"

'எனக்கென்னவோ அப்படி தோணலை!"

"ஏன்?"

"பட்டகாலிலேயே படும்! கெட்ட குடியே கெடும்!" என்பது பழமொழி!

"ஹா ஹா ஹா!"

"நான் அவளை கவனிச்சுக்கிட்டேதான் இருக்கேன். நான் பார்த்தவரைக்கும் அவகிட்டதான் பிரச்சினை. அவளாள ஒரு ஆளோட நம்பி வாழ்ந்து முடிக்க முடியாது!'

"இப்படியெல்லாம் யாரையும் நீங்க ஜட்ஜ் பண்ண முடியாது! கூடாது!"

"ஆனால் பண்ணத்தான் செய்றோம்! உன்னை ஜட்ஜ் பண்ணாமலா இருக்கேன்? நீ ட்ரெஸோட எப்படி இருக்க? ட்ரெஸ் இல்லாம எப்படி இருக்க? நீ நல்ல பொண்ணா? இல்லை கெட்ட பொண்ணானு?"

"சரி, ஜ்ட்ஜ் பண்ணிய ரிசல்ட் சொல்லுங்க!"

"அது டின்னருக்கு அப்புறம்? என் சாப்பாடு எப்படி இருக்குனு நீ ஜட்ஜ் பண்ணிய பிறகு!'

"நான் குறை எதுவும் சொல்லப் போவதில்லை!"

"சரி, பார்க்கலாம்! ஒரு அஞ்சு நிமிடம் என்னை தனியா விடுறியா?"

"சரி நான் லிவிங் ரூம்ல இருக்கேன்!"

-தொடரும்

தொடர்புடைய பதிவு!

காம விரதம்! கடலை கார்னர் -78 (18+ மட்டும்)



9 comments:

முட்டாப்பையன் said...
This comment has been removed by a blog administrator.
suvanappiriyan said...

சகோ வருண்!

//"அவளுக்கு சரியான் துணையை தேடிக்கத் தெரியலை! கணவனை எப்படி தேர்ந்தெடுக்கிறதுனு தெரியலை! அவளை வழி நடத்த ஆள் இல்லை!'//

கதையின் ஓட்டம் அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது. தொடருங்கள்.


வருண் said...

வாங்க சுவனப் பிரியன்! நன்றி. :)

இந்த "முட்டாள் பையன்" அக்கப்போரு தாங்க முடியலை! ஒரு வழியாப் போயி தொலைஞ்சான்!

பழமைபேசி said...

யோவ் தளபதி இங்கெல்லாம் வந்து போங்கய்யா! தொடரும் போட்டா அது தொடர் கதையா, சிறுகதையா??

ராஜ நடராஜன் அவர்களாவது வர்றாரா பாப்போம்!!

பழமைபேசி said...

"சரி, இந்த துண்டை மட்டும் பாத்ரூம்ல போட்டுடுங்க! நான் போயிட்டு வர்ரேன்"

"ஓ மை காட்! நீ ரொம்ப மோசம்!"
------------

இதும் இருக்கு. ’அனுபவம்’ன்னும் இருக்கு!!

வருண் said...

****பழமைபேசி said...

யோவ் தளபதி இங்கெல்லாம் வந்து போங்கய்யா! தொடரும் போட்டா அது தொடர் கதையா, சிறுகதையா??***

வாங்க மணியண்ணா!:)

அது வந்து தொடர் கதைதான்..ஆனால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு "சிறு கதை" மாதிரியும் இருக்கும். அதான்.. :)))

வருண் said...

***பழமைபேசி said...

"சரி, இந்த துண்டை மட்டும் பாத்ரூம்ல போட்டுடுங்க! நான் போயிட்டு வர்ரேன்"

"ஓ மை காட்! நீ ரொம்ப மோசம்!"
------------

இதும் இருக்கு. ’அனுபவம்’ன்னும் இருக்கு!!***

அதாவது இதில் அனுபவமும், மேலும் கற்பனையும் கலந்து இருக்கு. "இது" அனுபவமா இல்லை கற்பனையானு கதை எழுதினவாளுக்குத்தான் தெரியும்! :)))

பழமைபேசி said...

ஆகா! சமாளிபிகேசன்!!

வருண் said...

வேற என்ன பண்ணுறது? :)

நீங்க இப்படி கடலை கார்னரையெல்லாம் இவ்ளோ கவனமாப் படிப்பேளா?!!! :))))