எனக்கு எழுத்தாளர் சுஜாதா எழுத்தெல்லாம் ரொம்பப் பிடிக்காது. ஏன் சுஜாதா பார்ப்பனர்னால பிடிக்காதா? நிற்க! எனக்கு ஜானகிராமன் எழுத்தும் ரொம்பப் பிடிக்கும்! அப்போ உனக்கு "ஐயர்" னாப் பிடிக்கும் "ஐயங்கார்" னா பிடிக்காதா? னு மறுபடியும் வம்பு பேசக்கூடாது! எனக்கு சாண்டில்யன் (ரங்க பாஷ்யம்) வரலாற்றுக் கதைகளும் பிடிக்கும்.
எனிவே, இன்னைக்கு சுஜாதாவை தலையில் தூக்கி வைத்து, நான் அவர் விசிறினு ஆடவில்லையென்றால் பதிவர்களுக்கு மரியாதை இல்லை என்ற சூழல்களிலும் இதைச் சொல்லுகிறேன்! பொதுவாக அறிவியல், சஸ்பெண்ஸ், த்ரில்லர் போன்றவைகளைவிட மனித "மனவியல்" சம்மந்தப்பட்ட எழுத்தே என்னால் ரசிக்க முடிகிறது.
ஜானகிராமன் மனித மனத்தை (சைக்காலஜி) அழகாகப் புரிந்து கொண்டவர். முக்கியமாக ஆண்களை! அவர் எழுதும் எழுத்து பெண்களை கவருவது அரிது என்று நினைக்கிறேன். கவனம்! நான் அரிது என்றுதான் சொல்கிறேன். எந்தப் பெண்னையும் கவராது என்று சொல்லவில்லை!
ஜானகிராமனின் எழுத்து நடை, சூழ்நிலைகள், பேசும் தமிழ் எல்லாமே நிச்சய்ம "யுனீக்" தான். அவர் இலக்கியத்தரம் உயர்தரம்தான். அதை "காப்பி" என்று எந்த மடையனும் சொல்லமாட்டான். அதேபோல் அவர் எழுதும் "அடல்ட்டரி" அல்லது கள்ளக்காதல் அல்லது தகாத உறவு என்பதெல்லாம் எல்லாக் கலாச்சாரத்திலும் உண்டுதான். ஒரு சில கதைகளில் வரும் விசயங்கள் மேலைநாட்டில் நடந்தவைகளை தழுவியதுபோல் இருக்கும். அதெல்லாம் பரவாயில்லை!
நான் சொல்ல வருவது முக்கியமாக தி ஜா ரா உருவாக்கும் "பெண் பாத்திரங்கள்" எல்லாம் எதற்கும் நுணிந்தவங்களாக, இளகிய மனதில்லாமல், ஏதோ மேலைநாட்டுப் பெண்கள் போல இருந்ததுனு என்பது என் புதிய கண்டுபிடிப்பு.
சரி, அவர் எழுதிய சில கதைகளையும், அவைகளில் வந்துள்ள பெண் பாத்திரங்களையும் கொஞ்சம் மேலோட்டமாகப் பார்ப்போம்!
* தேடல் னு ஒரு சிறுகதை. இதில் வரும் ராமரத்ணத்தை ஒரு நல்ல கலாரசிகனாக காட்டியிருப்பாரு. அவர் மனைவி தன் குழந்தை பெற்றுக்கொள்ள (பிரசவத்திற்கு) அவள் அக்காவீட்டிற்கு போவாள் (அம்மா இல்லை என்பதால்). அக்கா கணவன் ஒரு வக்கீல், குழந்தை பொறந்து இருக்கும்போது கொழுந்தியாவையும் மயக்கி, மனைவியாக்கி வீட்டோடயே வச்சுக்குவாரு. அதோட அவ்ளோதான். குழந்தையுடன் திரும்பி வந்த மனைவியை, "சரியில்லை" என்று உணர்ந்து திருப்பி அக்காவீட்டுக்கே அனுப்பிடுவாரு ராமரத்ணம்! பிரிந்துடுவாங்க. கடைசியில் அவர் பொண்ணு (அவருக்குப் பிறந்தது) பள்ளியில் படிக்கும்போது, அவளை யார்னு தெரிந்து, சிரத்தையுடன் அவளோட போயி பேசுவாரு, தன்னை "தந்தை"னு அறிமுகப்படுத்திக்கொண்டு. அப்புறம் இந்தப் பிரச்சினைக்கு உதவும் இன்னொரு க்ரிஷ்டியன் டீச்சரோடு செட்டில் ஆயிடுவாரு.
* வீடு னு ஒரு கதை. இது ஒரு குறுநாவல். கணவன் டாக்டர், மனைவி வீட்டரசி. குழந்தைகள் இருக்கும். மனைவிக்கும் டாக்டரிடம் வேலைபார்க்கும் டாக்டருக்கு மிகவும் நம்பிக்கையான கம்பவுண்டருக்கும் ("பெரிய டாக்டர்") கள்ள உறவு ஆரம்பிச்சுரும்.. டாக்டர் ரெண்டு பேரையும் கையும் களவுமாப் பிடிச்சுருவாரு. ஆனால் மனைவியோ, எந்தவித "கில்ட்டி" உணர்வுகளும் இல்லாமல் "கம்பவுண்டரோட" செட்டில் ஆகத் தயாராகிவிடுவாள். அப்புறம் கடைசியில் அவங்க ரெண்டு பேரும் நடக்கும் சண்டை. வசிச்ச அந்த வீடு யாருக்கு சொந்தம் னு டாக்டருக்கும், அவர் மாஜி மனைவிக்கும் சண்டை நடப்பதுபோல கதை முடியும்.
* அம்மா வந்தாள் அலங்காரம். இதையெல்லாம் பத்தி ஏற்கனவே கொஞ்சம் இந்தத் தளத்தில் எழுதியாச்சு. புருசனோட வாழ்ந்துகொண்டே கள்ளக்காதலனுடன் உறவு வைத்துக் கொண்டிருந்தாலாவது பரவாயில்லை. அவனோட சேர்ந்து, அவனுக்கு ரெண்டு பிள்ளைய வேற பெத்துக்குவா இந்த "மகராசி"அலங்காரம்!
* மரப்பசு அம்மணி. இதையும் பத்தி ஏற்கனவே இந்தத் தளத்தில் எழுதியாச்சு. இதில்.. கோபாலி, பட்டாபில இருந்து, ப்ரூஸ்னு வெள்ளைக்காரன் வரை நூற்றுக்கணக்கானவரிடம் படுக்கை அறையில் "உறவாடி" ஆம்பளைங்க எப்படி எப்படி, எவன் எவ்ளோ நேரம் தாக்குப் பிடிக்கிறான்? எவனால தனக்கு"ஆர்கஸம்" கொடுக்க முடிஞ்சதுனு ஒரு பெரிய ரிசேர்ச் சே பண்ணுவாள் நம்ம அம்மணி!
* இன்னொரு சிறுகதை. இந்தக் கதை பேரு என்னனு ஞாபகம் இல்லை. ஒரு கணவன் மனைவி இருப்பாங்க. ஒரு நாள் மனைவி மட்டும் ரயில்ல பொறந்த வீட்டுக்கோ எதுக்கோ போவாள். அங்கே ஒரு கூட ட்ராவல் பண்ணுகிற ஒரு ஆள் இவளை பேசியே, அவளைப் புகழ்ந்து, செட்யூஸ் பண்ணி இவளோட ரயிலில் உறவு வைத்துக்கொள்வான் (இவளும் விரும்பித்தான்) .
* அப்புறம் நம்ம நளபாகம், ரங்கமணி . என்ன ஒரு கேரக்டர்! நளபாகம் பத்தியும் இந்தத் தளத்தில் எழுதியாச்சு!
மேலே சொல்லப்பட்ட எல்லாப் பெண் பாத்திரங்களும் ஒரு "மாதிரியானவைகள்" தான். இவர் கதைகளில் வரும் பெண்கள் கேரக்டர்கள் பொதுவாக எளிதாக ஏற்றுக்கொள்ளும்படி இருக்காது. அதனால ஆளாளுக்கு ரிசேர்ச் பண்ணி இப்படி அப்படி னு சொல்லி யிருக்காங்க. ஒரு சிலர், கோபமடைந்து, இந்தாளுக்கு "பித்துப் பிடிச்சிருச்சு" "இவர் ஒரு பர்வர்ட்"னு ஜானகிராமனை ஆளாளுக்கு திட்ட ஆரம்பிச்சுட்டா! :) நெறைவே இந்த பாத்திரங்கள் பத்தி விவாதிச்சு இருக்காங்க, இன்னைக்கும் விவாதிச்சுக்கிட்டு இருக்காங்க.
எனக்கென்னவோ, இவர் பெண்கள் கேரக்டர்கள் எல்லாமே ஒரு மாதிரி மேலைநாட்டுக் கதைகள், சினிமாக்கள் போன்றவற்றில் படித்த ஒரு சில பெண் கேரக்டர்களாக இருக்கலாம்! அவைகளை ஒரு மாதிரி "தமிழ்ப் படுத்தி" தமிழில் நம் கலாச்சாரத்தில் அலங்காரம், ரங்கமணி, அம்மணினு உருவாக்கிவிட்டார் நம்ம, தி ஜா ரா! அதன் காரணமாகவே இந்த கேரக்டர்களை பலரால புரிஞ்சுக்கவே முடியலையோ என்னவோ!
தொடர்புடைய பதிவுகள்:
பொம்மனாட்டிக்கு என்னையா வேணும்?- ஜானகிராமன்
தாய் என்பவள் தெய்வம் போன்றவளா? (I) அம்மா வந்தாள்
நளபாகம் எழுதிய ஜானகிராமன் ஒரு அசிங்கமான எழுத்தாளரா?! நளபாகம்,
படித்ததில் பிடிக்காதது- மரப்பசு விமர்சனம்! மரப்பசு
6 comments:
தி.ஜானகிராமனோட ஒரே ஒரு கதை படிச்சதா ஞாபகம்.மனசுல நிக்கல பாஸ்
வாங்க முரளி!
ரொம்ப நல்லா எழுதுவாருங்க. சிறுகதைகள்தான் ரொம்ப நல்லாயிருக்கும். :-)
உங்க டேஸ்ட் கொஞ்சம் வேறயா இருக்குமோ?னு தெரியலை.
நீங்க சொன்னதுல எனக்கு சாண்டில்யன் கதைகள் தான் படிச்சிருக்கேன்... மற்றவர்கள் பற்றி கேள்விப் பட்டுருக்கேன்,ஆனால் படித்ததில்லை...
வாங்க புன்னகை!
சாண்டில்யன் கதை கொஞ்சம் சாஃப்ட் போர்ன் மாதிரித்தான். அதை பொதுவாக பலர் படிப்பதுக்குக் காரணம் அதுதான். ஆனால் கடல் புறா, யவன ராணி, மன்னன் மகள், கன்னிமாடம் எல்லாம் ஓரளவுக்கு நல்லாத்தான் இருக்கும். சாண்டில்யனுக்கு வயதான பிறகு பின்னால வந்ததெல்லாம் சும்மா "சாஃப்ட் போர்ன்" சமாச்சாரம்தான். வரலாறும் இருக்காது மண்ணாங்கட்டியும் இருக்காது. :)
தி ஜா ரா காப்பியடிச்சாரா?
Hope not...
வாங்க ரெவெரி!
நான் தி ஜா வின் மிகப்பெரிய விசிறி. ஆனால் * ரங்கமணி * அலங்காரம் * அம்மணி போன்ற பெண்களை நான் என் வாழ்வில் இன்னும் பார்க்கவில்லை! தி ஜா எழுதிய காலகட்டத்தில் நம்ம கலாச்சாரட்த்ஹில் அதுபோல் பெண்கள் இருந்து இருப்பாங்களா? என்று யோசித்தால்.. குழப்புது
ஆனால் மேலை நாட்டுக்கலாச்சாரத்தில் இருந்து இருப்பாங்க.
கதையில் வரும் கேரக்டர்களாக அவர்களைப் பார்க்காமல் உண்மையான வாழ்ந்த உயிர்களாகப் பார்க்க முயல்கிறேன்! :)
மற்றபடி அவர் காப்பியெல்லாம் அடிக்கலை! :)
Post a Comment