Wednesday, October 31, 2012

அமெரிக்கத் தேர்தலில் ஒபாமாவே வெல்வார்!

இன்னும் ஒரு வாரமே இருக்கு அமெரிக்க தேர்தல் நடந்து, அதன் முடிவு தெரிய. முதல் ப்ரசிடென்ஸியல் விவாத்தத்தில் ப்ரெஸிடெண்ட் ஒபாமா சரியாக விவாதிக்காததால் கவர்னர் ராம்னி வெற்றி பெறும் நிலைமை வந்தது. அதன் பிறகு ப்ரஸிடெண்ட் ஒபாமா சுதாரித்துக்கொண்டு அடுத்த இரண்டு விவாதங்களில் நல்லவிதமாக விவாதிச்சதால், மறுபடியும் ஒபாமா வெற்றி வாய்ப்பை அடைந்துள்ளார் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.

இன்றைய நிலையில் ஒபாமா,  300/538  "எலக்ட்டோரல் வோட்" ம்,  ராம்னி 238/538 "எலக்ட்டோரல் வோட்"ம்  பெருவதாக உள்ளது.  270/538 "எலக்ட்டோரல் வோட்" வெற்றிபெற்றாலே ஒபாமாதான் அடுத்த ப்ரசிடெண்டும்.

நெவேடா (NV), ஒஹையோ (OH), ஐயோவா (IA), விஸ்காண்சின் (WI), காலராடோ (CO) போன்ற ஸ்விங் ஸ்டேட்களில் ஒபாமாவுக்கு  வெற்றிவாய்ப்பு  இருப்பதால் அவரே அடுத்த அமெரிக்க ப்ரசிடெண்ட் ஆவார் என நம்பப்படுகிறது.

 






மேலும் விபரங்கள் வேணுமென்றால் 538 என்கிற இந்த தளம் பாருங்க!

I am happy that Obama is going to win! :-)

7 comments:

Jayadev Das said...
This comment has been removed by the author.
Jayadev Das said...

இப்போ வெல்லாம் எல்லா பயல்களும் 10 வருஷம் முடிச்சிட்டு தான் போறானுவ போலிருக்கே........

வருண் said...

வாங்க ஜெயவேல்! நான்கு வருடம்தான் ஒரு "டேர்ம்"!

ஆமா, பில் க்ளிண்டன், ஜார்ஜ் புஷ் ஜூனியர் ரெண்டு பேரும் 8 வருடங்கள் (இரண்டு டேர்ம்) இருந்தாங்க.

ஒபாமாவும் ரெண்டு டேர்ம் இருப்பார்போல்தான் தெரியுது. :)

Anonymous said...

Highly doubtful...Sandy might have helped him...It is too close to call Varun...

வருண் said...

No Sir, it looks tied when you look at the nationally (or national poll). Besides the blue states, if Obama gets, OH and NV in the swing states, he will win. So far, OH is looking very promising for him. So is NV. He does not need FL or VA to win the election.

Yes, Sandy has helped Obama esp in OH, because of Romney's stupidity! :)

ராஜ நடராஜன் said...

கடந்த ஐந்து வருட்ங்களில் பிரச்ச்னைகளை ஓரளவுக்கு மென்மையாக கையாண்டுள்ளார் ஒபாமா.தேர்தல் முடிவுக்கு முன்பே இரண்டாம் சுற்றில் ரோம்னியுடனான விவாத நேரத்திலேயே ஒபாமாவுக்கு வாய்ப்பு அதிகம் என்பது எனது கணிப்பு.எனது தேர்வும் ஒபாமாவே.

இப்பொழுது ஒப்புக்கு சப்பாணியாக சாண்டியும் வந்து சேர்ந்து கொண்டதால் ரோம்னிக்கு சான்ஸே இல்லை.

ஜார்ஜ் புஷ் காத்ரீனாவை கையாண்டதற்கும் ஒபாமா சாண்டியை கையாண்டதற்கும் வித்தியாசங்கள் இருக்கிறது.அதே போல் ஈராக்,ஆப்கானிஸ்தான் பிரச்சினைகளையும் கூட.

பதற்றமற்ற உலக நிலைக்கு டெமாக்ரடிக்ஸ் இன்னும் ஆட்சியில் நிற்பது அவசியம்.

வருண் said...

வாங்க நடராஜன்! உலகிற்கு மட்டுமல்லங்க, அமெரிக்காவிற்கும்/அமெரிக்கர்களுக்கும் ஒபாமா திருப்பி வருவதுதான் நல்லது.

இன்னைக்கு நிலைமைக்கு அவர்தான் வருவார்.

பார்ப்போம். :-)