Wednesday, October 10, 2012

பதிவுலக சூப்பர் ஸ்டார் சுவனப் பிரியன்!

இன்னைக்கு பதிவுலகில் பெரிய யோக்கியராக நீங்க பட்டம் பெற வேண்டுமென்றாலும், உங்க பதிவு பிரபலப் படுத்த வேண்டுமானாலும் நீங்க இஸ்லாமியப் பதிவர்களுக்கு எதிராகப் பதிவு எழுதனும்! அப்படி நீங்க எழுதினால் உங்க பின்புலம் என்னனு பார்க்காமல்,  நீங்க சொல்ற விடயத்தில் உண்மை எம்புட்டு இருக்குனுகூடப் பார்க்காமல் நீங்க நல்லவர்! நாணயமானவர்! என்று கருதப்படும்!

நான் உண்மையை, அனுபவிச்சதை, பார்ப்பதைத்தான் சொல்லுறேன்! :-)

பொதுவா ஏதாவது  பர்தா குர்தானு, தமிழர்களுக்கு சம்மந்தமே இல்லாத, இந்தியாவுக்கு சம்மந்தமில்லாத,  உலகில் ஏதாவது ஒரு மூலையில் நடப்பதை கொண்டு வந்து இங்கே பேசி பெண்ணியம் பேசனும்!

 இல்லைனா மஞ்சள் பத்திரிக்கை (tabloids) ல வந்து ஒரு செய்தியை கதையாக்கி விக்கலாம்!  சமீபத்தில் "சன்" என்கிற மஞ்சள் பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தி "உண்மைக்கதை"யாக்கப்பட்டது.

"சன்" என்கிற "டாப்லாயிட்" பத்தி ஒரு ஆளு என்ன சொல்றார்னா..
Published on 12:01BST, 1 Jul 2011 0 Comments
Tom Newham

 Think for a second. What is the single most terrifying thing you can contemplate? Spiders? Snakes? Michael Howard? Regardless of who you are, deep down there is a tought that really makes you shudder.

For me, it’s the fact that people who read the Daily Mail have the right to vote. I’m unapologetic for this view, by the way. I think readers of the Daily Mail, the Sun, the Express, the Mirror, the Daily Star and so on should be ruthlessly hunted down and stripped of any right to decide who runs the country.

பதிவுலகைப் பொறுத்தவரையில் மஞ்சள் பத்திரிக்கைனா யாருக்கென்ன? இஸ்லாமியருக்கு எதிராக இருந்தால் போதும், உடனே ஒரு கூட்டமே வந்து உங்க பதிவுக்கு ஒரு 25+ ஓட்டைப்போட்டு அந்தப் பதிவில் சொல்லப்பட்ட எல்லாமே உண்மை என்பதுபோல ஆக்கிவிடுவார்கள்! அந்த மதிப்பெண்கள் உங்கள் எழுத்துக்காக கிடைத்ததல்ல!

 அடுத்து பின்னூட்டங்களில் "சு பி க்ரூப்" னு ஒரு சாடுதலுடன் பின்னூட்ட எழவு ஆரம்பமாகும். அது யாரு?

 நம்ம அண்ணன் சூப்பர் ஸ்டார் சுவனப் பிரியன் தான்.

 ஒரு காலத்தில், ரஜினி,  சாரு நிவாதிதா போல இன்னைக்கு அண்ணன் சுவனப் பிரியனை ஆக்கிப்புட்டாங்க அவருடைய எதிரணி மக்கள்! அவரு பேரை எல்லாப் பின்னூட்டத்திலும் பார்க்கலாம்! இந்தப் பதிவுகூட அண்ணன் பேரைப் போட்டதால சூடாயிடும்! :))))

பின்னூட்டங்களில் பதிவுக்கு சம்மந்தம் இல்லாமல் "சு பி க்ரூப்" னு சொல்லி தாக்குதல் ஆரம்பம் ஆகும். ஆனதும் எங்கேயிருந்தோ, என்னைக்கு எழுதியதையோ அள்ளிவந்து  அரைகுறை பின்னூட்டங்கள் வெட்டி ஒட்டப்படும்! அதுக்கப்புறம் பதிவுக்கும்  பின்னூட்டத்துக்கும் சம்மந்தம் இருக்காது. "சு பி அங்கே அப்படி சொன்னாரு.." "சு பி இங்கே இப்படிச் சொன்னாரு"   "நாங்கதான் உலகத்திலேயே யோக்கியன்" அப்படி இப்படினு ஒரே காடாத்துத்தான்!

 பதிவுலகில் நம்ம சு பி அண்ணன் என்னதான் செஞ்சாரு, இப்போ என்ன  செய்ராருனு எனக்குத் தெரியலை! நான் நெஜம்மாவே அவர் தளத்தையோ அவர் பின்னூட்டத்தையோ தொடர்வது இல்லை! நான் பார்க்கிறவரைக்கும் என்னைப் போலல்லாமல் நாகரிக பின்னூட்டங்கள்தான் போடுறாரு. பதிவிலும் சரி, பின்னூட்டத்திலும் சரி, வார்த்தைகளை அளந்துதான் விடுறாரு! ஆனா ஒண்ணு அவர் மதத்தை, இஸ்லாத்தை, அவர் ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லைதான்! ஆமா, யாரு தன் மதத்தை விட்டுக்கொடுக்கிறா?

பொதுவாக இஸ்லாமியனாக இருந்துகொண்டு தப்பு செய்றவன் எல்லாம் சரியாக இஸ்லாமை சரியாகப் புரிந்து கொள்ளவில்லைனு சொல்லி அவனுகள இஸ்லாத்தில் இருந்து ஒதுக்கி விடுவாரு நம்ம சுவனப் பிரியன்! இதை எப்படி தப்புனு சொல்லமுடியும்?? நிச்சயமாக தப்புனு சொல்ல முடியாது!! இதே போல் பிற மதத்தவரும் செய்யலாம்தான். ஆனால் எல்லாராலையும் எல்லாம் முடியாது.

ஆனா ஒண்ணு,

* இங்கேவுள்ள மதப் பதிவுகளை வாசிச்சுப்புட்டு யாரும் மதம் மாறப் போவதில்லை!

* அதேபோல இங்கே உள்ள மத-மறுப்பு, மத-எதிர்ப்பு பதிவுகளை வாசிச்சுப்புட்டு யாரும் அந்த மதத்தை தூக்கி எறியவும் போறதில்லை!

* சும்மா, சண்டை, சச்சரவு, வாதம், விவாதம், விதண்டாவாதம், தனிநபர் தாக்குதல் இத்யாதி இத்யாதிதான்.


எது எப்படியோ,  சுவனப் பிரியன்  அண்ணாச்சி இப்போ பதிவுலக சூப்பர் ஸ்டாராகிட்டாரு!

வாழ்க சு பி அண்ணன்! இன்றைய பதிவுலக சூப்பர் ஸ்டார்! :)

அவரை பதிவுலக சூப்பர் ஸ்டாரக்கிய பெருமை யாரைச் சேரும்?  அவர் நண்பர்களை அல்ல! அவர் பதிவை வாசிச்சு அவரை கரிச்சுக் கொட்டுபவர்களைத்தான் சேரும்! :)))

ஆமாங்க, பதிவுலகில் உங்க நண்பரை விட உங்கள் எதிரணியைச் சேர்ந்தவர்தாம் உங்களுக்கு "புகழ்" தேடித் தருவார்கள்! :)

இந்தப் பதிவை  நம்ம "சூப்பர் ஸ்டாருக்கு" சமர்ப்பிக்கிறேன்! :)

15 comments:

Raazi said...

பலே பலே நீங்க சொல்ற எல்லாம் சரிதான்.. எங்கே போனாலும் சுபி கதைதான்... இந்த பதிவுலக யோக்கியனுகள் தொல்ல தாங்க முடியலப்பா..

மதக்கொள்கைய நம்புறவன் எல்லாம் அயோக்கியனாம்.. அவனுகள் மட்டும்தான் யோக்கியனாம்! ஹய்யோ ஹய்யோ..

Raazi said...

பதிவு போட்டவுடன் இரண்டும் மைனஸ் வோட்.. நாத்திகர்கள் வேலைய தொடங்கிட்டாங்க போல..

நீங்க சொல்றது போல சுபியாலதான் நிறைய பேருடைய பதிவு தமிழ்மணத்துல சூடாகுது..குறிப்பா நம்ம சிங்கைப்பதிவருடையது! இன்னுமொரு அறிவாளி மேற்குலக மீடியாவில் வாற சேதி எல்லாம் தமிழ்படுத்தி பரபரப்பான தலைப்புடன் வெளியிட்டு ஹிட்ஸ் அள்ளுராரு அதுக்கு 40+ வோட் வேறு..!!

Aashiq Ahamed said...

சகோதரர் வருண்,

உங்கள் மீதும் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

பதிவுலகில் உள்ள மிகப் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் அல்லது இஸ்லாம் மீதான தாக்குதலை ஆதரிக்காதவர்களே. ஆம், இஸ்லாம் அல்லது முஸ்லிம்கள் குறித்த பதிவுகள் ஹிட் ஆகின்றன, இதற்கு காரணம் இஸ்லாம்/முஸ்லிம்கள் என்றாலே அதனை கிளிக் செய்து படிப்போமே என்ற உந்துதல் மட்டுமே. ஹிட் கிடைப்பதால் அதனை எல்லாரும் ஆதரிக்கின்றார்கள் என்று ஆகிவிடாது.

மேலும், இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளுக்கான வோட்களையும் பார்த்தோமேயானால் அவற்றில் 75%, பதிவர்கள் அல்லாத அல்லது நாம் கேள்விப்படாத பதிவுலக பெயர்களாகவே இருக்கும்.

நீங்கள் சொல்வது போல் // நீங்க சொல்ற விடயத்தில் உண்மை எம்புட்டு இருக்குனுகூடப் பார்க்காமல் நீங்க நல்லவர்! நாணயமானவர்! என்று கருதப்படும்!// - இவற்றை செய்வது மிக சிறிய பதிவுலக தொகையே. இதனை மிக அழகான மனிதர்களை கொண்ட மற்றவர்களோடு ஒப்பிடும் போது நிராகரிப்பட வேண்டியதே.

சுவனப்பிரியன் அண்ணன சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்துட்டீங்க :-)

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Anonymous said...

Hahaha ! Varun a nice article, I think these days you are think too much about me, I could see that from your recent posts. You could mentioned my name directly, I never mind. To be be frank I like Su.Pi because he always inspire to write in blog, most of my early posts are direct answers for his posts. As for as I don't have any grudge on Su.Pi as you do on me. Writing anti-terrorism, anti-fundamentalism, anti-theocracr, anti-casteism cannot be considered as anti-islam or anti-religious. If they think it as it, then fundamentally something wrong somewhere. Hope you publish my comments. Cheers !

Anonymous said...

Sorry 4 typing in English n Typing Errors - typing from this damn mobile. Pls read, Raazi's article bout me, it is f...ing hilarious

அஜீம்பாஷா said...

See below what i said,

'azeem basha said...

உங்கள் பதிவுகளுக்கு எதிராக பின்னூட்டம் இட்டே உங்களை இத்தனை பிரபலமாக்கிய எதிர் கருத்துள்ள பதிவர்களுக்கு நன்றி. நிச்சயமாக இந்தியா போன்ற ஜனநாயக பிறந்த நாம் வெளிநாடு வருவதற்கு முன்பே இவர்களின் இந்த எள்ளி நகையாடலை சகிக்க கற்றுகொண்டோம். எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அந்த சக்தியை கொடுத்திருக்கிறான். ஆமின்.
நீங்கள் உங்கள் பணி தொடருங்கள்.'
Sorry Mr. Varun you are late see above i told this matter in Mr.Suvanapriyan' Blog on 28 September 2012 itself.

சுவனப் பிரியன் said...

சகோ வருண்!

என்னை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு கொண்டு போனதுக்கு நன்றி! ஆனால் அதற்கெல்லாம் சற்றும் தகுதியானவன் நான் அல்ல. ஆரம்பத்தில் நேசகுமார், தருமி, டோண்டு ராகவன், போன்றவர்கள் இஸ்லாத்தின் மீது வைத்த குற்றச்சாட்டுகளை விளக்கி சில பதிவுகளை நாகரிகமாக கொடுத்தேன். இது தான் என்னை பதிவுலகுக்கு கொண்டு வந்த கதை. தெரிந்தோ தெரியாமலோ ஏதோ எனக்கு தெரிந்ததை ஓய்வு நேரங்களில் பதிவுகளாக்குகிறேன்.

நீங்கள் சொல்வது போல் பதிவுகளை படித்து எவரும் மதத்தை விடப் போவதில்லை. நான் எழுதும் நோக்கம் இவர்கள் இஸ்லாத்தின் மீது வைக்கும் அவதூறுகளை அம்பலப்படுத்தவே. அதில் எனக்கு ஒரு திருப்தி கிடைக்கிறது. இதற்காக அவர்கள் சொல்வது போல் எனக்கு சவுதி அரசு எந்த பண முடிப்புகளையும் கொடுப்பது இல்லை. அப்படியே கொடுத்தாலும் அதை வாங்கிக் கொள்வதில் இஸ்லாமிய அடிப்படையில் தவறும் இல்லை.

என்னை இந்த அளவு பிரபல்யப்படுத்தியதே என்னை எதிர்ப்பவர்கள் தான். எனவே அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

அருள் said...

// //நான் உண்மையை, அனுபவிச்சதை, பார்ப்பதைத்தான் சொல்லுறேன்!// //

வருண்

நீங்கள் சொல்வது உண்மைதான்.

எதற்காக எதற்கெடுத்தாலும் இஸ்லாம் மதத்தை திட்டுகிறீர்கள் என்று நான் பதிவிட்டால் - உடனே நான் இந்து மதத்துக்கு எதிராக எழுதுவதாக எனக்கு பின்னூட்டமிடுகின்றனர்.

பதிவுலக அரசியல் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

"" இளம்பெண் வலைப்பதிவர் சுடப்பட்டமைக்கு இஸ்லாம் காரணமா? ""

http://arulgreen.blogspot.com/2012/10/malala-yousafzai-islam.html

அஞ்சா சிங்கம் said...

அவரு சூப்பர்தான் அது எல்லோருக்கும் தெரியும் . அருமையான பதிவு வாழ்த்துக்கள். அப்படியே கர்ணன் படம் பார்த்த மாதிரி இருக்குது . என்ன கொடுமைனா இவ்ளோ நாளும் மறைச்சி வச்சிருந்த கொண்டை வெளியில் தெரிஞ்சிடுச்சி .
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்கிய சு.பி. க்கு வாழ்த்துக்கள் .................

வருண் said...

Good news! They removed this blog post from TM for some reason! It is OK, let us move on!

அஞ்சா சிங்கம் said...


வருண் said...

Good news! They removed this blog post from TM for some reason! It is OK, let us move on!////////////////////
///////////////////
ஒகே இந்த வியாபாரம் ஊத்திகிச்சு ..................வாங்க மார்வாடி கடைக்கு ............
அடுத்த கடையை போடணும் (கவுண்டமணி ஜோக்)

வருண் said...

அஞ்சா சிங்கம்: சந்தோஷமா? :))))

வருண் said...

**** இக்பால் செல்வன் said...

Hahaha ! Varun a nice article, I think these days you are think too much about me, I could see that from your recent posts. You could mentioned my name directly, I never mind. To be be frank I like Su.Pi because he always inspire to write in blog, most of my early posts are direct answers for his posts. As for as I don't have any grudge on Su.Pi as you do on me. Writing anti-terrorism, anti-fundamentalism, anti-theocracr, anti-casteism cannot be considered as anti-islam or anti-religious. If they think it as it, then fundamentally something wrong somewhere. Hope you publish my comments. Cheers !***

இக்பால் செல்வன்: நான் உங்க பின்னூட்டங்களில் சம்மந்தமே இல்லாமல் சு பி யை இழுப்பதை பார்த்தேன்.

உங்களுடைய பரத்தையைர அரங்கேற்ற பதிவில் கூட உங்களுக்கு ஆதரவாக சு பி போன்றவர்கள் பின்னூட்டமிட்டதுக்கும், அவர்கள் மேஎல் தாக்குதல் நடந்தது. அதையும் வேடிக்கை பார்த்து ரசிக்கிறீங்க!

நீங்கள் பேசும் நியாயம் எனக்குப் புரியலை.

மாடெரேசன் செய்யும்போது சண்டை இழுப்பவன் யாருனு பார்க்கத் தெரியலை உங்களுக்கு.

நான் எதிர்கருத்து தெரிவிப்பதால் வீம்புக்கு சண்டைக்கு வருபவனுடன் சேர்ந்து ஒத்து ஊதுறீங்க.

நடத்துங்க உங்க பணியை! :)

முட்டாப்பையன் said...
This comment has been removed by a blog administrator.
வருண் said...

சின்னவனே: எடத்தை காலி பண்ணு!