அமெரிக்காவில் நவம்பர் 6, 2012 ல் தேர்தல்! செப்டம்பர் 2012 முடியும் வரை, வந்த கருத்துக் கணிப்பின்படி வெற்றிபெரும் வாய்ப்பில் +3 பாயிண்ட்ஸ் போல முன்னிலையில் இருந்தவர் டெமக்ரெட்ஸ் பார்ட்டியைச் சேர்ந்த, தற்போதைய ப்ரஸிடெண்ட் பராக் ஒபாமா தான்! ஆனால் அக்டோபர் 3, 2012 ல் முதல் நடந்த முதல் ப்ரசிண்டெண்சியல் விவாதத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஒபாமா மிகவும் "நாகரிகமாக" நடந்துகொண்டதாலோ என்னவோ, அவர் எதிராளி ரிபப்ளிகன் கவர்னர் மிட் ராம்னி அவரை விவாதத்தில் வென்றார்.
சரி, ஒரு விவாதத்தில் மிட் ராம்னி வென்றதால அப்படி என்ன மாறிவிடப்போகிறது? என்று எண்ணினால், அக்டோபெர் 3 2012 ல இருந்து எல்லாவிதமான கருத்துக்கணிப்பும் கவர்னர் ராம்னிக்கு ஆதரவாக அமைந்து, அதுவரை கருத்துக்கணிப்பின் படி முன்னிலையில் இருந்த ஒபாமா வெற்றி வாய்ப்பிலிருந்து சறுக்கி கீழே வந்துவிட்டார்!!! முதல் ப்ரசிடெண்சியல் விவாதத்திற்குப் பிறகு கருத்துக்கணிப்பின்படி கவர்னர் மிட் ராம்னி +1 பாயிண்ட் அதிகமாகி எல்லாமே மாறிப் போயிருந்தது.
இந்நிலையில் நேற்று, (அக்டோபர் 16) நடைபெற்ற ரெண்டாவது ப்ரசிண்டெண்சியல் விவாதத்தில் (மொத்தம் 3 விவாதங்கள்) ஒபாமா சிறப்பாக விவாதிச்சு, ராம்னியை பலவிதமாகத் தாக்கி விவாதத்தில் வென்றார் என்கிறது அரசியல் விமர்சகர் உலகம்.
இதனால் கருத்துக்கணிப்பில் ஏற்படும் மாற்றங்கள் தெரிய இன்னும் சில நாட்களாகலாம்!
* நேற்று நடந்த விவாதம் நம் கருத்துக்களங்களில் நடப்பதுபோல் "அடி தடி" ஆவது போலத்தான் காரசாரமாகப் போனது!
* முக்கியமாக, செப் 11, 2012 வில் லிபியாவில் நடந்த இழப்பை, சுட்டிக்காட்டும்போது கவர்னர் மிட் ராம்னி கொஞ்சம் சொதப்பிவிட்டதால் அதில் அவர் ஆதாயம் அடையமுடியாமல்ப் போனது அவருக்கு பெரிய மைனஸ் பாயிண்ட்டாக ஆகிவிட்டது என்பது கோடிட்டுக்காட்ட வேண்டிய ஒன்று.
* இன்னும் இது ஒரு இழுபறி தேர்தலாகவே உள்ளது.
* ஒபாமா வெல்வார் என்று உறுதியாக சொல்ல முடியாத நிலையில்தான் இன்றைய நிலைமை இருக்கிறது.
சில கருத்துக்கணிப்புகள் கொடுக்கும் வரைபடங்கள் கீழே!
*************
அடுத்த வருகிற மூன்றாவது மற்றும் கடைசி ப்ரசிடெண்ஸியல் விவாதம், வருகின்ற திங்களன்று, அக்டோபர் 22, 2012 நடக்கவுள்ளது. கடைசி விவாதத்தில் "வெளிநாட்டு அஃபையர்ஸ்/பாலிஸிகள்" பற்றி விவாதிப்பதால் ஒபாமா விற்கு விவாதத்தில் வெற்றியிருக்க வாய்ப்பிருக்கு என்கிறது கருத்துக்கணிப்பு உலகம்!
பொறுத்திருந்து பார்ப்போம்! :)
16 comments:
ஒபாமாவுக்கே நம் ஆதரவும் ... அமெரிக்க நாத்திக இயக்கங்கள் பலவும் ஒபாமாவுக்கே ஆதரவு நல்கி உள்ளன .. ஒபாமா வெற்றி பெற வாழ்த்துக்கள் ..
இ செல்வன்: இழுபறியாகத்தாங்க இருக்கு இன்னும். பார்க்கலாம் என்ன ஆகுதுனு! இன்றைய நிலையில் யாரு வேணா வெற்றியடையலாம்! :)
GOP will win if the current trend continues! Very Slim chance to flip over!!
MaNiyaNNA: Current trend is just a TIE (average of all polls). But the poll will favor Obama in few days because of the second debate. I don't see how GOP can win! Moreover, I don't want them to!
check out the trend here!
http://fivethirtyeight.blogs.nytimes.com/
It is still in Obama's favor! :)
// I don't want them to!//
me either!
Anyway, it appears that WI and OH is coming along nicely... that is good for Obama!!
இப்படி ஆஹா.....ஓஹோ......... என்று அதிகாரத்தில் இருக்கும் இவனுங்க பதவிக்காலம் முடிஞ்சதும் செல்லாகாசாக யாரும் கவனிப்பாரற்று, முக்கியத் துவம் இல்லாமல் போவது விந்தையாக இருக்கிறது!!
***பழமைபேசி said...
// I don't want them to!//
me either!
Anyway, it appears that WI and OH is coming along nicely... that is good for Obama!!***
We will see the consequence of second debate may be polls coming out today. But Obama has to do well on 22nd. He cant afford to make the same mistake he made on Oct 3, anymore!
***Jayadev Das said...
இப்படி ஆஹா.....ஓஹோ......... என்று அதிகாரத்தில் இருக்கும் இவனுங்க பதவிக்காலம் முடிஞ்சதும் செல்லாகாசாக யாரும் கவனிப்பாரற்று, முக்கியத் துவம் இல்லாமல் போவது விந்தையாக இருக்கிறது!!***
என்ன ஜெயவேல், சாய்பாபா காலம் முடிஞ்சது, புட்டப் பருத்தி என்கிற ஊரே இப்போ அழிந்துகொண்டு வருதாம். கடவுளுக்கே இந்த நிலைமைனா, இவங்கலாம் மனுஷங்கதானே? :)
மன்னிக்கணும் அந்தாளு கடவுள் இல்லை மனுஷன்............மனுஷன்............மனுஷன்............மனுஷன்............மனுஷன்............
சரி, அடுத்த படிக்குப் போவோம்.
அன்று..ஒரு சில கோயில்களில் உள்ள கடவுள்களை வணங்க ஆட்களும் கூட்டமும் வருகின்றன.
புதிய கோவில்களும், புதிய சாமிகளும (அய்யப்பன் எல்லாம் புதுசுதான்) வந்தவுடன், பழைய சாமி வாழும் கோவில்கள் சிதைந்து, வணங்க ஆளில்லாமல் போவதை நீங்க பார்த்ததில்லையா, ஜெயவேல்?
பாவம் அந்த சாமி என்ன பாவம் செய்தது? மக்கள் புது புதுசாத்தானே தேடிப் போறாங்க?
சும்மா எல்லாரும் கடவுளாகி விட முடியாது வருண். ஷிர்டிக்காரன் புட்டபர்த்திக்காரன், ரஞ்சிதானந்தா, மேல்மருவத்தூரான், திருச்சி விராலிமலைக்காரன், கட்டிப் பிடி வைத்தியம் கேரளாக்காரி, ஆர்ட் ஆ ஃ ப் கில்லிங் தாடிக்காரன், கல்கி புருஷன் பெண்டாட்டி பொறம்போக்குகள் என எண்ணிலடங்கா அயோக்கியப் பயல்கள் இருக்கானுவ........... கணக்கே இல்லை. ஐயப்பன் கதை எந்த புராணத்திலும் இல்லை கேரளாக்கார நாதாரிகள் திரித்த புருடா அது...........
சிரிக்கிறேன்..:-)))
ஆனால் ஒண்ணு கவனிங்க, நீங்க இப்போ சொல்றதயே, நான் சொன்னால் எனக்கு "பாய்" (இஸ்லாமியன்னு) பட்டம் கெடைக்கும்! :))))
வேதக் காலத்தில் கில்லியாக இருந்த பிரம்மா, இந்திரன், அக்னி, வருணன் போன்ற கடவுளர் எல்லாம் புதிய பக்தி இயக்க காலத்துக்கு பின் மவுசு மங்கி காணமல் போகவில்லையா ... !!!
புதுசா தினுசா வருவதையே மக்கள் விரும்புவார்கள் .. !!!
வருங்காலத்தில் ரஜினிகாந்த, குஸ்பு, சூப்பர்மேன், ஸ்பைடமேன் எல்லாம் கடவுளாகி திருபள்ளி எழுச்சியும், தேரோட்டங்களும் ( காரோட்டங்களும் ) நடைப்பெறக் கூடும் ...
வரலாற்று முந்தியக் காலத்தில் கெத்தா இருந்த மாபெரும் கடவுளர்களான ஜீயஸ், ரா எல்லாம் இப்போது வெறும் கார்ட்டூன்களில் மட்டுமே காண முடிகின்றது ..
இந்த பராக்கிரமம் வாய்ந்த கடவுளுக்கு இந்த நிலை என்றால் பிஸ்கோத்து பில் கிளிண்டன், ஒபாமா எல்லாம் கால் தூசிங்கோ ... !!
ஹிஹிஹி !!!
நாங்களும் ஸ்பைடர் மேனை இறைத் தூதாராக்கி வழக்கிழந்த ஒரு மதத்துக்கு புது உருவம் கொடுத்து வருகின்றோம். முக்கிய இடங்களை பிடித்துக் கொள்ள விரைவில் மதம் மாறுங்கள், இந்த ஆஃபர் சிறிது நாட்களுக்கு மட்டுமே ... !!!
Post a Comment