Friday, October 19, 2012

நானும் நீயும் சுயநலவாதிதான்!

நான் வென்றேன்
நான் வீழ்த்தினேன்
நான் நகைத்தேன்
நான் சாதித்தேன்
நான் உதவினேன்
நான் கவர்ந்தேன்
நான் உயர்ந்தேன்
நான் பாராட்டினேன்
என்கிற நான் சுயநலவாதிதான்!

நான் தோற்றேன்
நான் வீழ்ந்தேன்
நான் அழுதேன்
நான் புலம்பினேன்
நான் குழம்பினேன்
நான் இழந்தேன்
நான் மறந்தேன்
நான் உணர்ந்தேன்
என்கிற பரிதாபநானும் சுயநலவாதிதான்!

நான் நீயாவதும்
நீ நானாவதும்
நானும் நீயும் நாமாவதும் இயல்புதானே?

3 comments:

Jayadev Das said...


\\நான் நீயாவதும் நீ நானாவதும் நானும் நீயும் நாமாவதும் இயல்புதானே? \\இதுக்கு அர்த்தத்தை எங்க போய்த் தேவதுன்னுதான் தெரியலை...........

வருண், இந்த போஸ்டை பார்க்கவும் உங்க ஒபினியன் தேவை.......

http://jayadevdas.blogspot.com/2012/10/blog-post_19.html

வருண் said...

ஜெயவேல்: நீங்க இங்க காமெண்ட் போடும்போது நான் அங்கே காமெண்ட் எழுதிட்டு இருந்தேன்! நல்ல டைமிங்தான் போங்க! :)))

வருண் said...

***\\நான் நீயாவதும் நீ நானாவதும் நானும் நீயும் நாமாவதும் இயல்புதானே? \\

இதுக்கு அர்த்தத்தை எங்க போய்த் தேவதுன்னுதான் தெரியலை.***

நான் உங்க விமர்சனத்தை சரியாப் பார்க்கலை! :)))

அதாவது இந்த கவிதையில் வரும் "நான்" நான் மட்டுமல்ல "நீ" (நீங்களும்) யும்தான். ஆக இந்த "நானும்" "நீயும்" "நம்ம" எல்லோரும்தான்! உலகமே (நம்ம எல்லாருமே) சுயநலவாதிகள்தான்னு அர்த்தமோ என்னவோ :)))