இப்போ கருத்துச் சுதந்திரம்னா என்ன? என்ன எழுதினாலும் சைபர் போலிஸ் நம்மள அரெஸ்ட் செய்வாங்களா? என்கிற பீதி பதிவுலகில் உண்டாகியுள்ளது.
பதிவெழுதும் முன்னால் யோசிச்சு யோசிச்சு, எதுக்கு வம்புனு பலர் ட்ராஃப்ட்லயே விட்டு விட்டதுபோல இருக்கு.
இது பத்தாதுனு, சைபர் க்ரைம் னு யாரைவேணா ஜோடிச்சு உள்ளே பிடிச்சுப் போடலாம் என்பதுபோல் சட்டம் அறிந்த பிரபு ராஜதுரை ஒரு பதிவை எழுதி எல்லாருக்கும் இன்னும் கொஞ்சம் பீதியைக் கிளப்பியுள்ளார்.
சின்மயி கேஸுக்கு பலம் வகிப்பது..
* அவர் ஒரு கல்யாணம் ஆகாத கன்னிப் பெண்.
* அவர் தாயாரையும் இகழ்ந்து பேசியுள்ளனர்.
* தொடர் தொந்தரவு என்பது ரொம்ப முக்கியம். ஒரு நாள் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டு போவது வேறு. தொடர்ந்து "டார்கெட் "செய்வது வேறு
* அவர் ஒரு பிரபலம் என்பதால் " defamation" முயற்சியா? என்றும் ஒரு கேள்வியைத் தொடுக்கிறார்.
* அவர் யாரையும் வரம்புமீறி தனிமனிதரைத் தாக்கவில்லை. ஆனால் அவர் தாக்கப்பட்டு இருக்கிறார். இது ஒருபக்கத்தாக்கு!
* அவர் இட ஒதுக்கீடு மற்றும் மீனவர் பற்றி சொன்ன கருத்துக்கள், பொதுக் கருத்துக்கள். அதையும் வலையுலகில் திரிக்கப் பட்டதாக ஒரு விளக்கப் பதிவு வேறு போட்டு இருக்கிறார்.
Facing abuse and a backlash of rumours
மேலே உள்ள இந்தப் பதிவில் உள்ள ஒரு முக்கியமான ட்வீட் சம்மந்தமாக காட்டியிருக்கும் ஸ்க்ரீன் ஷாட் டை கடுமையாக, விமர்சிச்சு பதிவர் மாமல்லன், ஏதோ ஒரு "manipulation" நடந்து இருப்பதாகவும் சொல்கிறார். அதையும் கட்டாயம் வாசிச்சுடுங்க!
ஒரு ஸ்கிரீன் ஷாட்டும் அதன் நோய்க்கூறுகளும்
* "அசிங்கப் பட்டாள் சின்மயி" என்கிற ஐ டி யை எப்படி நியாயப் படுத்துவது ??? இந்த ஐ டி தயாரித்தவர் எப்படி சட்டத்தின் முன்னிருந்து தப்பிக்க முடியும்??
சரி, வரம்பு மீறீட்டாங்க! மறுப்பதற்கில்லை!
ஆனால் இதற்கு என்ன தண்டனை?
* இதுபோல் தமிழ் நாட்டு வரலாற்றில் எந்த கேஸும் நடந்ததில்லைனு சொல்லலாம்.
* இணையதள உலகில் கருத்துச் சுதந்திரம் என்பது அதைப்பற்றி பேசும் யாருக்குமே தெளிவாகத் தெரியாத ஒரு நிலையில் என்ன தண்டனை கொடுக்கலாம் இவர்கள் செய்த குற்றத்திற்கு?
* இதுபோல் தவறுகள் செய்து பலர் தண்டனை அனுபவித்து இருந்தால், இதுபோல் இவர்கள் தொடர் தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள் என்பதென்னவோ மறுக்க முடியாது.
* இவர்களை சட்டம் மன்னித்து, கடுமையா எச்சரிக்கை செய்து விட்டுவிட்டால் என்ன?
* ஏற்கனவே எல்லாப் பத்திரிக்கைகளிலும் அவர்கள் படம் வந்து அவர்கள் பட்ட அவமானம் போதாதா? இதைவிட என்ன தண்டனை இவர்களுக்கு வேண்டிக்கெடக்கு?
என்றெல்லாம் பலரும் எண்ணுவதென்னவோ மறுக்க முடியாது.
பதிவுலகிற்கு பெரிய இழப்பு?
* இனிமேல் பெண்கள் எழுதும் பதிவிற்கு மாற்றுக்கருத்து வைக்கவே யாரும் முன்வரமாட்டார்கள். எதுக்கு வம்பு?
* பின்னூட்டங்கள் எழுதவும் பலவிதமாக யோசிப்பார்கள்.
* 8 + 2 = 11 என்றாலும் "ஆமா ஆமா"னுதான் எல்லோரும் போவார்கள்!
* உப்புச் சப்பில்லாத பின்னூட்டங்கள் நிறையவே பார்க்கலாம்.
* இப்படி அநியாயத்துக்கு மரியாதை கொடுப்பதால் பெண்கள் "சம உரிமையை" ஒரு மாதிரியாக "அதிக மரியாதை கொடுக்கப்பட்டு" இழக்கிறார்கள்னு கூடச் சொல்லலாம்.
* இதுபோக இனிமேல் நியாயமான எதிர்வினைப் பதிவுகள், பிரபலங்களை விமர்சிக்கும் பதிவுகள், விவாதப் பதிவுகள் எல்லாம் குறைய வாய்ப்பதிகம்.
* இங்கே யாரும் சம்பாரிக்க வரவில்லை. சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கத்தான் பதிவுலகுக்கு வருகிறார்கள். அதற்குக் கிடைக்கும் சம்பளம் உங்கள் வேலை இழப்பு என்று வருமானால், யாரு பதிவெழுதுவா?
* பதிவுலகம் ஒரு உப்பு சப்பில்லாத இடமாவதால், கொஞ்சம் கொஞ்சமாக பதிவர்கள் வேறு வேலையைப் பார்க்க கிளம்பலாம். பதிவுலகத்தின் இருண்ட காலம் ஆரம்பிக்கலாம்!
எனிவே, இப்போது cyber crime சம்மந்தமாக நடப்பதெல்லாம் வருங்கால பதிவுலகுக்கு நல்லதுக்கா கெட்டதுக்கானு தெரியவில்லை!
பொறுத்திருந்துதான் பார்க்கனும்.
25 comments:
சின்மயி செய்தது சரியே, அவரையும் அவர் தாயாரையும் இகழ்ந்து பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது.அதையும் தாண்டி கைது செய்யப்பட்ட ஆண்கள் மிகவும் தரைக்குறைவாக பலரை பேசியுள்ளனர். கருத்து என்கிற பெயரில் சில ஆண்கள் முகநூல், ட்விட்டர் போன்ற சமூகதளங்களில் தனிநபர் தாக்குதல் நடத்துகின்றனர்.
வருண் மாமா.
இந்த பதிவு நீர் எழுதினதா?
கொஞ்சம் உறுப்படியா இருக்கு.அதான் கேட்டேன்.
:))))))))))))))
கருத்து சுதந்திரம் அனானி முகமுடிப் போட்டுக் கொள்ள பணிக்கிறது
:)
இதை பெண் பதிவர்களே விரும்ப மாட்டார்கள். இறுக்கமான சூழ்நிலையை யார்தான் விரும்புவார்கள்? அவர்களுக்கும் ஃபாலோயர்ஸ், பின்னூட்டங்கள் எல்லாம் குறையும்.
***Ayesha Farook said...
சின்மயி செய்தது சரியே, அவரையும் அவர் தாயாரையும் இகழ்ந்து பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது.அதையும் தாண்டி கைது செய்யப்பட்ட ஆண்கள் மிகவும் தரைக்குறைவாக பலரை பேசியுள்ளனர். கருத்து என்கிற பெயரில் சில ஆண்கள் முகநூல், ட்விட்டர் போன்ற சமூகதளங்களில் தனிநபர் தாக்குதல் நடத்துகின்றனர்.***
எந்த ஒரு தயக்கமுமில்லாமல் தெளிவாக உங்க நிலைப்பாட்டை சொன்னதற்கு ரொம்ப நன்றிங்க, ஆயிசா! :)
***முட்டாப்பையன் said...
வருண் மாமா.
இந்த பதிவு நீர் எழுதினதா?
கொஞ்சம் உறுப்படியா இருக்கு.அதான் கேட்டேன்.
:))))))))))))))***
ஏன் சின்னவனுக்கு பதிவு ரொம்ப பிடிச்சுப் போச்சாக்கும்?! :-)))
திருடிட்டு வந்துட்டான்னு ஏதாவது "காப்பி ரைட்" வழக்குப் போட்டுடாதே, சின்னவனே! :)))
*** கோவி.கண்ணன் said...
கருத்து சுதந்திரம் அனானி முகமுடிப் போட்டுக் கொள்ள பணிக்கிறது
:)***
தவறு ச்ய்யும் பட்சத்தில், சைபர் போலிஸ், அனானி மற்றும் தன்னைப் பற்றி விபரம் கொடுக்காதவர்களையும் எளிதில் பிடித்துவிட முடியும்னு நெனைக்கிறேன், கோவி! :)
***ramalingam said...
இதை பெண் பதிவர்களே விரும்ப மாட்டார்கள். இறுக்கமான சூழ்நிலையை யார்தான் விரும்புவார்கள்? அவர்களுக்கும் ஃபாலோயர்ஸ், பின்னூட்டங்கள் எல்லாம் குறையும்.***
உங்க கருத்து முற்றிலும் உண்மைங்க, ராமலிங்கம்! :)
/தவறு ச்ய்யும் பட்சத்தில், சைபர் போலிஸ், அனானி மற்றும் தன்னைப் பற்றி விபரம் கொடுக்காதவர்களையும் எளிதில் பிடித்துவிட முடியும்னு நெனைக்கிறேன், கோவி! :)/
மின்னஞ்சல்களை ட்ரேஸ் செய்ய முடியும், ஆனால் அனானி கமெண்டுகளை ஸ்மெல் பண்ணுவது எளிதல்ல, ப்ராக்ஸி சர்வர்கள் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இணையத் தளங்களைப் பார்வையிடக் கிடைக்கும், அந்த அளவுக்கெல்லம ரிஸ்க் எடுத்து அனானி கமெண்டு போடமாட்டாங்க
:)
தமிழ்நாட்டுக்கு தான் இருண்ட காலம் என்று பார்த்தால் தமிழ்ப் பதிவுலகிற்கும் இருண்ட காலம், எப்போ வரும் விடிவு காலம்?
நீங்கள் கூட வவ்வாலு, முட்டபய்யன், செட்டுபய்யன் மேல கேஸ் போடலாம். ஐடியா இருக்க?
***கோவி.கண்ணன் said...
/தவறு ச்ய்யும் பட்சத்தில், சைபர் போலிஸ், அனானி மற்றும் தன்னைப் பற்றி விபரம் கொடுக்காதவர்களையும் எளிதில் பிடித்துவிட முடியும்னு நெனைக்கிறேன், கோவி! :)/
மின்னஞ்சல்களை ட்ரேஸ் செய்ய முடியும், ஆனால் அனானி கமெண்டுகளை ஸ்மெல் பண்ணுவது எளிதல்ல, ப்ராக்ஸி சர்வர்கள் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இணையத் தளங்களைப் பார்வையிடக் கிடைக்கும், அந்த அளவுக்கெல்லம ரிஸ்க் எடுத்து அனானி கமெண்டு போடமாட்டாங்க
:)***
விபரத்திற்கு நன்றி! :-)))
***மருதநாயகம் said...
தமிழ்நாட்டுக்கு தான் இருண்ட காலம் என்று பார்த்தால் தமிழ்ப் பதிவுலகிற்கும் இருண்ட காலம், எப்போ வரும் விடிவு காலம்?***
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிலையங்க, மருதநாயகம். எங்கே பார்த்தாலும் ஒரே இருட்டுத்தான் தெரியுது. ஒரு வேளை குருடனா பொறந்து இருந்தால் நம்ம லக்கினு சொல்லலாம். :-)))
***mubarak kuwait said...
நீங்கள் கூட வவ்வாலு, முட்டபய்யன், செட்டுபய்யன் மேல கேஸ் போடலாம். ஐடியா இருக்க?***
அட ஏங்க நீங்க வேற. நான் பதிவுலகம் இருண்டுடுமோனு கவலைப் பட்டுக்கிட்டு இருக்கேன். நீங்க இன்னும் கொஞ்சம் இருட்டடிக்க ஆலோசனை தர்ரீங்க! :)))
கட்டாயம் இருண்ட காலம்தான். பதிவுலகை விட்டுவிடலாமா என்று தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
உண்மைதான் பாஸ் இனி கண்டிப்பாய் பிரபலங்களை தாக்க எல்லோரும் கொஞ்சம் யோசித்தே ஆவார்கள்... இனி அப்படியான பதிவுகள் குறையும் என்பது நிதர்சனமே........
இட்லி வடை பொங்கல் அமெரிக்காவிலும் கிடைக்கிறது. சோளதோசை இந்தியாவிலும் கிடைப்பதில்லை என்கிறார்கள். அன்பே சிவம்!
//பழனி.கந்தசாமி said...
கட்டாயம் இருண்ட காலம்தான். பதிவுலகை விட்டுவிடலாமா என்று தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கிறேன்.//
விடாது கறுப்பு!!
இதுவரை சுதந்திர ஊடகமாக இருந்த பதிவுலகத்திலும், வழக்கம்போல பிரபலங்கள் தங்கள் பலத்தைக் காட்டலாம்னு தெரிகிறது. இது நல்லதா இல்லையான்னு யோசிக்கவே வேண்டியதில்லை வருண்!
ஏய், பார்ப்பான், பொத்திக்கிட்டுப் போடா.... பாப்பாத்திய ரேப் பண்ணணும். ஆஹா..... இதுதான் பதிவுலக வெளிச்சம் என்றால் இந்த வெளிச்சம் தேவையே இல்லை. எந்த ஒரு கருத்தையும் விவாதிக்க இறங்கினால் முதலில் எதற்கு இவ்வளவு உணர்ச்சிப் பொங்கல்? மனிதர்களை அன்றிக் கருத்துகளை விவாதிக்க எப்போது கற்றுக் கொள்ளப் போகிறோம்?
அச்சு, ஒலி, ஒளி ஊடகங்களில் வாதப் பிரதிவாதங்கள் நிகழாமலா இருக்கின்றன? அங்கு கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இப்படியா அத்து மீறல் நடக்கிறது? இதே நபர்கள் அங்கே அடக்கி வாசிக்கக் காரணம் சட்டத்துக்கு பயம் தானே?
அங்கு பம்முகிறவர்கள் இணையத்தில் பாயக் காரணம் என்ன? பொது இடத்தில் முழு இருட்டில் மல ஜலம் கழிக்கிற மாதிரி கருத்துகளைப் பலர் அறிய கொட்டிவிட்டுத் தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு மனதின் குப்பைகளைக் கொட்ட இடம் இருந்தால் கொட்டி விடுவதா?
நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியிருப்பதற்காக சின்மயியைப் பாராட்டத்தான் வேண்டும். எப்போ எதைப் பற்றிக் கருத்து சொல்லப் போனாலும் தேவையே இல்லாமல் சாதி, மதம் பற்றிய அவதூறுகளால் நாறிக் கொண்டிருக்கிற பதிவுலகத்தில்ருந்து மன நோயாளிகள் பலர் வெளியேற வேண்டும். அது பதிவுலகு, தமிழ் மொழி, சமூகம் எல்லாவறுக்குமே ஆரோக்கியமானது என்பதில் ஐயமில்லை.
https://www.facebook.com/notes/je-ranjit/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/3914053969585
வருண், எனக்குத் தோன்றுவது என்னவென்றால், காலம் இதையும் மறக்கடிக்கும் என்பதுதான். முக்கால்வாசி தளங்கள் அரசாங்கத்தை எதிர்த்து எழுதப்படுபவை. இணையதளங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுபவை என்பது மிகப்பழைய செய்தி. இது பிரபலத்தின் பிரச்சனை என்பதாலேயே இவ்வளவு பெரியதாகி விட்டது. அரபு நாடுகள் மாதிரி இதை வைத்து அரசாங்கத்தை அசைத்துவிட முடியாதென்பதால் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன். சில வருடங்கள் முன்பு ஒரு பெங்களூர்க்காரர் எழுதாத குற்றத்துக்கு தீராத இன்னலை அடைந்து பின் விடுவிக்கப்பட்டார். அதற்குப் பிறகும் எல்லோரும் அதையே நினைத்துக் கொண்டிருக்க வில்லையே. இங்கு அனானி முகமூடி போட்டு செய்ததை விட தன் புரோஃபைல் படம் போட்டவர்களே செய்திருக்கின்றனர். பிரச்சனை விரைவில் தீர வேண்டுமென்பதே என்விருப்பம்.
நீங்க சொல்ரா மாதிரி நடக்குமா என்னனு பொறுத்து இருந்துதான் பாக்கனும்!
---
www.sudarvizhi.com
நல்ல இருக்கு ஒங்க பதிவு.
நம்ம பதிவையும் கேட்டு பாருங்க
http://soundcloud.com/puthiyavan/singer-krish-threatened-by
கந்தசாமி சார், மணியண்ணா, ஜீ.., பூர்ணம், தி தேன்மதுரன், தமிழானவன், சுடர்விழி, அதிரடி..
உங்க எல்லாருடைய கருத்துக்கும் நன்றி. :-)
Post a Comment