Wednesday, March 16, 2011

எனக்குப் புரிந்த மற்றும் புரியாத பெண் பதிவர்கள்!

இங்கே நான் பிடித்த அல்லது பிடிக்காத பதிவர்களைப் பத்தி பேசவில்லை! அதைத் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். பதிவுலகில் உங்க முகம் தெரிவதில்லைதான். தெரிந்தாலும் அதை ரொம்ப கவனிப்பதில்லை நான்! ஆனால் ஒருவர் பதிவுகள் மூலம் அவர்களுடைய பின்னூட்டங்கள் மூலம் பதிவர்களைப் பற்றி நாம் கற்றுக்கொண்டு வருகிறோம். ஒரு சிலரை நமக்குப் புரிந்துகொள்ள முடியும். அதாவது அவங்க சொல்ற கருத்துக்கள், அவங்க என்ன சொல்ல வர்றாங்க, என்ன சொல்ல வந்து சரியாக சொல்லவில்லை, அவங்களுடைய உள் எண்ணங்கள் என்ன? (தனிப்பட்ட அல்ல! பொதுநோக்குகள்). ஆனால் ஒரு சிலரை புரிந்து கொள்ள முடியாது.

நான் சொல்வது, பதிவுகல "இண்டர் ஆக்சன்" களில் இருந்து மட்டுமே! தனிப்பட்ட முறையில் அவங்களை சந்திப்பது, கல்யாணத்துக்குப் போவது, காதுகுத்துக்குப் போவது, ஃபோன் பண்ணி பொறணி பேசுவது, இதெல்லாம் வேற விசயங்கள். தனிப்பட்ட முறையில் பழகினால் எல்லாரையும் ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம்தான்

புரிகிற பதிவர்கள் னு பார்த்தால் இவங்களை சொல்லலாம்:

* துளசி கோபால்

* ராமலக்ஷ்மி

* "பயணங்களும் எண்ணங்களும்" சாந்தி

* கலகலப்ரியா

* முகுந்த் அம்மா

* கவிதா/kavitha

* "கொஞ்சம் வெட்டிப்பேச்சு" சித்ரா

* கெளசல்யா

நிற்க! அதாவது புரியிறவங்க சொல்ற கருத்தையெல்லாம் நாம் ஆமோதிக்கிறோம் என்பதில்லை! இவங்களோட நெறைய கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கருத்துச் சண்டைகள் இருக்கலாம். நம்ம பின்னூட்டங்களை இவங்க வெளியிடாமலும் இருந்து இருக்கலாம். இவங்க பதிவுக்குப் பின்னூட்டமிட்டு பல ஆண்டுகள் இருக்கலாம். நம்மைப் பார்த்தாலே இவங்களுக்குப் பிடிக்காமலுமிருக்கலாம். ஆனால் அவர்கள் செய்கைகள் (வெறுப்போ, விருப்போ, ஆதங்கமோ) புரிந்து கொள்வதுபோல இருக்கும். என்ன சொல்ல வர்றாங்க. என்ன எதிர்பார்க்கிறாங்க என்பதெல்லாம் புரியும். அது நமக்கு பிடித்த விசயமாகவும் இருக்கலாம் பிடிக்காத விசயமாகவும் இருக்கலாம். ஆனால் சொல்ல வர்றது புரியும்!

சரி, புரியாத பதிவர்கள் யார் யாரு?

நான் ஏன் இதை இப்போ ஆரம்பிச்சேன்னா, அன்னா வினவிலே ஒரு கட்டுரை எழுதி இருக்கார். பெண்கள் ஏன் அறிவியலில் சாதிக்கலைனோ இல்லை என்னவோ. இவர் அனலிஸ்ட்னு இன்னொரு பேரில் எழுதுவாருனு நெனைக்கிறேன். இந்தக் கட்டுரையை வினவில் வாசிக்கும்போது, ஏன் இவரை நமக்குப் புரியவே மாட்டேன்கிது யோசிக்க வைத்தது.

எனக்கு எழுந்த கேள்விகள் அதாவதுபோல கட்டுரையால் என்ன சொல்ல வர்றாரு. பெண்களை அறிவியலில் சாதிக்க வைக்க இதுதான் ஒரு ஆக்கப்பூர்வமான முயற்சியா? இதுபோல எழுதி மேலும் பெண்களை "மோட்டிவேட்" பண்ண முடியுமா? இல்லைனா இது ஒரு ஜஸ்டிஃபிகேஷனா? மேலும் இவர் பகிரும் விசயங்கள், பின்னூட்டங்கள் இதெல்லாம் பல இடங்களில் எனக்கு சரியாகப் புரியலை! என்ன புரியலை? . அதான் அவர் என்ன சொல்ல வறார்னு புரியலை. ஆளை விடுங்க!

ஒரு உதாரணம் சொல்லவா?

இந்த stereotypes இன் விளைவுகள் தனியே அறிவியல் தெரிவையோ பெண்களையோ மட்டும் பாதிப்பவை அல்ல. எந்த ஒடுக்கப்படும் குழுவிற்கும் எதிர் மறையான stereotype க்கும் பொருந்தும். உதாரணத்திற்கு எம் மகனுக்கு மொண்டோசொரி வகுப்பு தேர்ந்தெடுக்கும் போது பல இடங்களுக்கு சென்று வகுப்புகளைப் பார்வையிட்டு பிள்ளைகளை ஊக்குவிக்கும் தரத்தை அவதானிக்கச் சென்ற போது ஒன்று மிகத் தெளிவாகத் தெரிந்தது. நான் சென்ற ஒரு இடத்திலும் ஆண் ஆசிரியர்கள் இல்லாதது. இருபாலினரும் படிப்பித்தால் கூடிய நன்மை தரும் என்ற கருத்துக்கொண்டவள் நான், அத்தோடு மகனுக்கும் ஒரு balanced perspective வரும் என்பது என் கருத்து. விசாரித்துப் பார்த்ததில் ஒரேயொரு இடம் தான் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனாலும் ஆண்கள் மொண்டொசொரி சங்கம் வைத்திருக்கிறார்கள். அவர்களுடன் கதைத்த போது, இதே stereotype இன் தாக்கங்களையே பொறிந்து தள்ளினர். இதைப் பற்றி எம்மவர் சிலரிடம் கதைத்துக் கொண்டிருந்த போது ஒருவர் சொன்னது “அப்பிடியே எங்காவது ஆண்கள் மொண்டொசொரி ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்கள் ஓரினச்சேர்க்கையாளரா இல்லையா என்பதை நிச்சயித்து அனுப்புங்கோ”. I was completely taken back. நம்பவே முடியவில்லை.

* இன்னும் 5000 ஆண்டுகள் ஆனாலும் எல்லாவற்றிலும் ஆணும் பெண்ணும் 50/50 இருக்கப்போவதில்லை! I strongly believe that today!

* இப்போ இவர் ஏரோ ப்ளேனில் ஏறும்போது 50/50% ஆண்கள் பெண்கள் flight attendant உள்ள ப்ளேன் பார்த்து ஏறனும்னு நெனைப்பாரா?

* ஹாஸ்பிட்டல் போகும்போது 50/50% ஆண் நர்சுகள் உள்ள ஹாஸ்பிட்டல்ல சேரனும்னு நெனைப்பாரா?

Are we trying to solve a problem? Or we are part of the problem? Or we are always looking for something to complain about? This is the kind of thoughts go through my mind when I read that paragraph.

* சரி, இவர் சொல்றபடி அந்த ஆண் வாத்தியார் ஓரினசேர்க்கையை சேர்ந்தவராக இருந்தால்தான் என்ன?

* அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இவர் குழந்தையை பாதிக்கும் னு தெரியவில்லை!

பெண்கள் முன்னேறிக்கிட்டுதான் இருக்காங்க. இன்னைக்கு நிலைமையை 20 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள நிலைமையோட பார்ப்பதுதான் நியாயமான பார்வை. பெண்கள் மட்டுமல்ல, அஃப்ரிக்கன் அமெரிக்கன், நம்ம ஊரில் தீண்டாமையால் பாதிக்கப்பட்டவங்க எல்லாரும் முன்னேறிக்கிட்டு இருக்காங்க. முன்னேறுவாங்க! என்கிற பாஸிட்டிவ் கண்ணோட்டத்தில் பார்க்க விரும்பும் நான் இவர் கட்டுரையை புரிந்துகொள்ளமுடியாமல் திணறுகிறேன் னு சொல்லலாம்.


அன்னாவுடன் சேர்த்து இன்னும் சில புரியாத பெண் பதிவர்கள் யார் யாருனு சொல்லலாம்தான். அப்படி ஆரம்பித்தால் இப்பதிவு திசை திருப்பப்படலாம். அதனால இதோட நிறுத்திக்கிறேன். புரியாதவங்க எல்லாம் பிடிக்காதவங்க இல்லை! ரெண்டுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு! எனக்கு குவாண்டம் மெக்கானிக்ஸ் புரியாது. அதனால குவாண்டம் மெக்கானிக்ஸ் மேலே குறை இல்லை! எனக்குத்தான் புரிந்துகொள்ளும் அளவுக்கு அறிவு இல்லை! அதனால் ஏன் புரியலைனு யாரும் கேக்காதீங்க! புரியலை அம்புட்டுத்தான்! :)

இதுபோல் எல்லாருக்கும் புரிந்த புரியாத/விளங்காத பதிவர்கள் இருப்பாங்கனு நம்புறேன்.

உங்களுக்குப் புரியாதவங்க யாருங்க?

வருணா? உங்க மேலே தப்பே இல்லை! எல்லாம் என் தப்புதான்!

இது சும்மா ஒரு மொக்கைப் பதிவுதான். இதை வைத்து யாரும் காமெடியோ கலாட்டாவோ செய்ய வேணாம்! நன்றி வணக்கம்!

3 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

பெண் பாவம் பொல்லாதது.. பார்த்துக்கங்க....

எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

வருண் said...

நீங்க என்ன அந்தக்காலத்திலே இருக்கீங்க. ஆணென்ன பெண்னென்ன? எல்லாம் ஓரினம்தான் :)

Unknown said...

உண்மை தான்..