Saturday, October 13, 2012

நாத்திகன் என்பவன் யார்?



பண்பில்லாதவன்
பாசமில்லாதவன்
அன்பில்லாதவன்
இரக்கமில்லாதவன்
ஆணவம் பிடித்தவன்
அநாகரிகமானவன்
என்றெல்லாம் இகழப்படுபவன்!

உண்மையானவன்
கன்னியமானவன்
மனிதாபமுள்ளவன்
மனசாட்சியுள்ளவன்
தன்மானமுள்ளவன்
நேர்மையானவன்
என்று ஒருநாளும் மதிக்கப்படாதவன்!

கடவுளை வாழ்த்தி 
கடவுளை வணங்கி
கடவுளைப் புகழ்ந்து
கடவுளைத் தாலாட்டி
கடவுளைப் பாராட்டி
கடவுளை ஏமாற்றி
தன்னையும்  ஏமாற்றி வாழத்தெரியாதவன்!
 



12 comments:

Anonymous said...

Awesome Poem, Not all Theists are good and not all atheists are bad .. To be a good human we don't need God, but need a emapthic n sympathic mind..

Unknown said...

சகோ.வருண்

நாத்திகன் என்பவன் யார் ? என்பதற்கு நீங்கள் சொன்ன அர்த்தம் இருக்கலாம் ஆனால் அது பெரியாரோடு சென்றுவிட்டதாகவே தோன்றுகிறது...இன்றும் சில நன்மக்களிடம் இருக்கலாம் மறுப்பதற்கில்லை...ஆனால் இன்று பொதுவாக

நாத்திகன் என்பவன் யார்.?

மதங்கள் இல்லை என்பான் ....
விமர்சிக்க இஸ்லாத்தை தவிர வேறு மதங்கள் இல்லை அவனுக்கு ...

கடவுள் இல்லை என்பான்..........
விமர்சிக்க அல்லாஹ்வை தவிர வேறு கடவுள் இல்லை அவனுக்கு..........

தோழரே , தோழரே என்பான்.........
சகோதரரே, சகோதரியே என்று விளிப்பவரின் மாண்பு புரியாது அவனுக்கு...........

மார்க்சியம்,மூலதனம் பேசுவான் .......
மக்கள் வாழ ஒரு தெளிவான மார்க்கம் தெரியாது அவனுக்கு...........

இறுதியாக மார்க்சியமே வெல்லும் என்பான்.......
என்றுமே அழகிய மார்க்கமே வெல்லும் என்று தெரியாது அவனுக்கு ..........

இவனே நாத்திகன் ....ஆம் இன்றைய நவீன நாத்திகன் ....

நன்றியுடன்
நாகூர் மீரான்

suvanappiriyan said...

//கடவுளை வாழ்த்தி
கடவுளை வணங்கி
கடவுளைப் புகழ்ந்து
கடவுளைத் தாலாட்டி
கடவுளைப் பாராட்டி
கடவுளை ஏமாற்றி
தன்னையும் ஏமாற்றி வாழத்தெரியாதவன்!//

அருமை!

வருண் said...

தங்கள் கருத்துக்கு நன்றி, இக்பால் செல்வன், நாகூர் மீரான் & சுவனப் பிரியன்! :)

ssk said...

பொதுவாக, தன் செயல்கள் தன்னுடைய நிலைக்கு காரணம் என்று நம்புவன்.
சமுகம் அமைதியுடன் வாழ தனி மனித ஒழுக்கமே தலையாய தேவை என்று சொல்லி அதன் படி நடப்பவன்.
எந்த கருத்தையும் ஆராய்ந்து ஏற்று கொள்பவன். யாரோ எவரோ எங்கோ எந்த காலத்திலோ எதற்காகவோ சொன்னதை விடா பிடியாக இன்றும் பிடித்து கொண்டு தொங்கி கொண்டு இருப்பவரால் இன்று ஏற்படும் பல அநீதிகளை பரிதாபத்துடன் பார்ப்பவன்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.வருண்,

சிறந்த அறவியல் கோட்பாடுகளை முன்வைத்து அதனயே தமது வாழ்வியல் நடைமுறையாக மாற்றத் தெரிந்தவர்களுக்குக் கடவுளும் மதமும் தேவையேயில்லை சகோ.

ஆனால்...

'மெய்யாலுமே அது சிறந்த அறவியல் கோட்பாடுகள்தானா' என்று சந்தேகமற அறிந்து புரிந்து தெளிந்து கொள்வது எப்படி..? இதற்கு ஏதோ ஒர் உரைகல் அவசியமல்லவா..?

அகநானூறு, புறநானூறு, நாலடியார், நான்மணிக்கடிகை, நற்றிணை, குறுந்தொகை, திருக்குறள், சைவம், வைணவம், பவுத்தம், ஜைனம், யூதம், கிருத்துவம், இஸ்லாம், சீக்கியம், மார்க்ஸியம், மாவோயிசம், பெரியாரிசம், ரஜனிஷியம்.... இது போன்றவற்றிலிருந்து எனது 'அறவியல் உரைகல்' என எனது ஆய்வில் நான் இஸ்லாமையே எனக்கானதாய் தேர்ந்தெடுத்துக்கொண்டேன் சகோ.வருண். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று சரியாக தோன்றலாம்.

எனினும், இறுதியாக...

தமக்கு எது நல்லது என்று நாம் விரும்புகிறோமோ அதையே பிறருக்கும் நாடுவதே எந்த அறவியலிலும் முதன்மையானது.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

உங்கள் அறவியல் பார்வையில் இவ்விடுகை மிகவும் சிறப்பாக வந்துள்ளது சகோ.வருண்.

எனது அறவியல் பார்வையில்...

தலைப்பில் ஒரேழுத்து மாறும்... நா- க்கு பதில் ஆ- வரும்.

முதல் இரண்டு பத்தியும் ஓகே. மிகவும் அருமை சகோ.வருண்.

இறுதி பத்தி... மட்டும் மாறும்.

மனிதனைத் தூற்றி
மனிதனை வணங்கி
மனிதனை இகழ்ந்து
மனிதனைத் திட்டி
மனிதனைக் கொன்று
கடவுளை ஏமாற்றி
தன்னையும் ஏமாற்றி வாழத்தெரியாதவன்!

kk said...

நல்ல பதிவு நாத்திகன் வேறு பகுத்தறிவாளன் வேறு நாத்திகர்கள் எல்லோரும் பகுத்து அறிவதில்லை என்பதும் உண்மைதான்...பொதுவாக நாத்திகர்கள் நம்பிக்கையில்லாதவர்கள் என்ற ஒரு கருத்து இருக்கின்றது.கடவுள் நம்பிக்கை மாஜிக் களில்தான் நம்பிக்கை இருப்பதில்லை....ஒரு பிழையை செய்யும்போது இறைவன் தண்டனை கொடுப்பான் என்றபயத்தில் ஆத்திகர்கள் அதை செய்வதில்லை ஆனால் யாரும் தண்டனை கொடுக்கமாட்டான் இருந்தும் அதை செய்யவேண்டால் என்று எவர் குறுக்கீடும் எவர்மீதான பயமும் இல்லாமல் தவறை செய்யாமல் விடுபவன் நாத்திகன்

விஜய் said...

பகுத்தறிவின் ஆரம்ப கட்டம்தான் நாத்திகம். மனிதன் செய்யும் தவறுகளுக்கும் ஆத்திகம் மற்றும் நாத்திகத்துக்கும் சம்பந்தம் இல்லை. எண்ணிலடங்கா பாவங்களை செய்துவிட்டு கோடி கோடியாக உண்டியலில் போடுவதும், பாவமன்னிப்பு கேட்பதும் ஆத்திகர்களே. நரபலி கொடுப்பவனும் ஆத்திகனே. அதனால் கடவுள் மீது பயம் இல்லாதவர்கள் எல்லாரும் கெட்டவர்களாக மாறுவார்கள் என்னும் ஆத்திகர்களின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

வருண் said...

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி எஸ் எஸ் கே, முகமத் ஆஸிக், கிருத்திகன் யோகராஜா மற்றும் விஜய்!

Jayadev Das said...

\\கடவுளை ஏமாற்றி
தன்னையும் ஏமாற்றி வாழத்தெரியாதவன்! \\ அப்போ கடவுள் இருக்காருன்னு ஒத்துகிட்டவனாயிடறானே!! அப்புறம் எப்படி இவனை நாத்தீகன் என்பது?

நாத்தீகன் என்பவன், அறிவை சரியான வழியில் பயன்படுத்தி சிந்திக்கத் தெரியாதவன். நீங்க மத்தபடி எழுதியிருப்பது மக்கள் அவனைப் பற்றி நினைப்பவை மட்டுமே.....

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ சகோ.Jayadev Das said...

////////////
\\கடவுளை ஏமாற்றி
தன்னையும் ஏமாற்றி வாழத்தெரியாதவன்! \\ அப்போ கடவுள் இருக்காருன்னு ஒத்துகிட்டவனாயிடறானே!! அப்புறம் எப்படி இவனை நாத்தீகன் என்பது?
//////////

சரியா சொன்னீங்க சகோ..!

அதுக்குத்தான் எனது 'ஆத்திகன்' -ரீமேக் அயிட்டத்தில் அந்த இரண்டு வரிகளையும் அப்படியே எடுத்துக்கிட்டேன்..!