Wednesday, December 2, 2009

சாரு!! இதுக்குப்போயி அலட்டிக்கலாமா?!

"என்னண்ணே நம்ம சாருவின் இலக்கிய ஞானத்தைப் பத்தி குமுதம் கேள்வி பதில்ல கேவலப்படுத்திட்டாங்களாமே?"

"இளையராஜாவின் இசை ஞானத்தைப் பத்தி பேசமட்டும் இவருக்கு அருகதை இருக்காம். இவர் இலக்கிய ஞானத்தைப் பத்தி ஒரு பய கேலி பண்ணக்கூடாதா என்ன?"

"ஆமா, இலக்கியத்தில் சாரு பெரிய ஆளா, அண்ணே?"

"இருந்தாலும் இருக்கும். அதனால் என்ன? நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியையும் இலக்கியவாதிகளியும்கூட க்ரிடிசைஸ் பண்ணத்தான் செய்வார்கள் சிலர். பேச்சுச் சுதந்திரம் மற்றும் எழுத்துச்சுதந்திரம் சாருக்கும் அவர் ஜால்ராக்களுக்கும் மட்டும்தான் உண்டா என்ன? "

"என்ன இருந்தாலும் சாரு நிவேதிதா தமிழ் இலக்கியத்தில் பெரிய ஆள் இல்லையா? அதான் பொங்கி எழுறாரு மனுஷன்"

"யார் சொன்னா?"

"அவரே நினைத்துக்கொள்றாருண்ணே. அப்புறம் அவர் ஜால்ராக்கள் சிலர் சொல்லிக்கிறாங்க! இல்லைனா எதுக்கு அவருக்கு இவ்ளோ கோபம் வருது சொல்லுங்கண்ணே. "டேய்" அது இதுனு திட்டுறாரு அண்ணே?"

"இதெல்லாம் தேவை இல்லாத அலட்டல். ஊர்ல உள்ளவனுக்கெல்லாம் ஒண்ணும் தெரியாதுனு இவர் கிழி கிழினு எல்லாரையும் கிழிப்பாரு. இவரைப்பத்தி ஒரு பய ஒண்ணும் சொல்லக்கூடாதா என்ன? இவரை தமிழ் இலக்கிய மேதைனு எல்லாரும் சொல்லனுமா என்ன?"

"அப்படியெல்லாம் அவர் சொல்லலண்ணே. அவருக்கு ரொம்ப கஷ்டமாப்போச்சு போல இதை படித்து"

"சாரு, இதுக்கெல்லாம் சின்னப்பிள்ளை மாதிரி அலட்டிக்கக்கூடாது! வேற எதுவும் எழுத விசயம் இல்லையோ என்னவோ போ!"

"அண்ணே! சாருவைப்பத்தி கேரளாவில் விசாரிக்கலாம்னு போனேன்"

"ஏன் தமிழ் இலக்கியம் மலையாளிகளுக்குத்தான் தெரியுமா? தமிழனுக்கு தெரியாதா என்ன?. ஏன்ப்பா தமிழனை கேவலப்படுத்துறீங்க??"

"இருங்க, நான் சொல்ல வந்ததை சொல்லிக்கிறேன்.. எனக்குத் தெரிந்த கேரலைட் ஒருவரிடம் கேட்டேன். அங்கேயும் இவர் எழுத்தைப்பிடிக்காதவர்க்ள் ஏகப்பட்டவர்கள் இருக்காங்களாம்"

"சாருட்ட உன் நண்பரை அறிமுகப்படுத்தி வையேன்!"

"நமக்கெதுக்குண்ணே வம்பு?"

9 comments:

இனியா said...

nice on buddy!

இனியா said...

meant to say " nice one...typo

வருண் said...

வாங்க இனியா! இவர் என்னவோ யாரைப்பற்றியும் இதுபோல் தாறுமாறா பேசாத உத்தமர்போலே ரொம்பத்தான் நடிக்கிறார்.

இவர்தான் இந்த குமுதம்காரனுக்கு இப்படியெல்லாம் கேவலமாக பேசக் கத்துக்கொடுத்தவரே! இவர் விமர்சனத்தைப் படிச்சு, இவரிடம் கற்றதை வச்சு இன்னைக்கு இவரையே விமர்சிக்கிறான் ஒருத்தன். The credit goes to Charu. He only created this kind of critics by making outrageous remarks on artists like IR.

வினை விதைத்து இவரே!

இப்போ இவர் பாணியிலே இவரை விமர்சிக்க்கயிலே மட்டும் குத்துது கொடையுதுனா? இவர் கொறஅழுகையைப்பார்த்து யார் இவர்மேலே அனுதாபப்படப் போறார்கள்னு தெரியலை.

இந்தக் "குமுதம் அவதூறு" வச்சு கொஞ்சநாள் இவர் தளத்தை ஓட்டலாம்னு முடிவுக்கு வந்துட்டார் போல.

andygarcia said...

வருணுக்கு ஒரு எச்சரிக்கை, டேய் தம்பி, என்று சாரு பதிவு போடா போறாரு

வந்தியத்தேவன் said...

நன்றிகள் வருண் சாருவின் உண்மையான முகத்தை காட்டியதற்க்கு இவர் எதற்க்கு எடுத்தாலும் மலையாளத்தைப் பார் என்பது சகிக்கவில்லை. தமிழ் இலக்கியம் தமிழரை விட மலையாளிகளுக்கு மட்டும் தான் புரிகின்ற இவரின் தத்துவம் விளங்கவில்லை.

இசை பற்றிய எந்த அறிவும் இல்லாமல் எப்படித் தான் இவரால் இசைஞானியை விமர்சிக்கமுடிகின்றதோ.

குமுதம் அரசு பதில்களில் எந்த வித தப்பும் இல்லை.

வருண் said...

*** andygarcia said...

வருணுக்கு ஒரு எச்சரிக்கை, டேய் தம்பி, என்று சாரு பதிவு போடா போறாரு

2 December, 2009 11:42 PM***

அப்படிங்கிறீங்களா?

இளையராஜாவை (அவர் ஒரு தமிழர், திராவிடன், தமிழ் சினிமாவில் புதிய சகாப்தத்தை உருவாக்கியவர்) , வட இந்திய ஆரிய மேதைகள் ஏதோ "பா" னு ஒரு படத்துக்கு சரியா இசயமைக்கலைனு கேலி பண்ணுவதாக இவர் சொல்கிறார்.

எனக்கு ரத்தம் கொத்திக்குது! மறுபடியும் மறுபடியும் இளையராஜாவையே சொல்லிக்கிட்டு இருக்காரு இவரு.

என்ன வட இந்தியாக்காரன், பீகார், டெல்லில்லா உள்ளவன் எல்லாம் என்ன பெரிய இசை ஞானிகளா?

தமிழனை கேவலப்படுத்த கிளம்பி இருக்காரு இவரு..

இளையராஜா தமிழன்!

வருண் said...

***Blogger வந்தியத்தேவன் said...

நன்றிகள் வருண் சாருவின் உண்மையான முகத்தை காட்டியதற்க்கு இவர் எதற்க்கு எடுத்தாலும் மலையாளத்தைப் பார் என்பது சகிக்கவில்லை. தமிழ் இலக்கியம் தமிழரை விட மலையாளிகளுக்கு மட்டும் தான் புரிகின்ற இவரின் தத்துவம் விளங்கவில்லை.

இசை பற்றிய எந்த அறிவும் இல்லாமல் எப்படித் தான் இவரால் இசைஞானியை விமர்சிக்கமுடிகின்றதோ.

குமுதம் அரசு பதில்களில் எந்த வித தப்பும் இல்லை.

3 December, 2009 8:52 AM***

இவர் பாணியிலேயே இவரை விமர்சிச்சிருக்கான். அவன் பண்ணியது தப்புனா, இவர் பண்ணியது என்னவாம்?

பகிர்தலுக்கு நன்றிங்க, வந்தியத்தேவன் :)

மஞ்சரி said...

ரொம்ப சரி, என்னோட கருதும் அது தான். அதிலும் குமுதத்தின் விற்பனையை அதிகபடுதவே இப்படி எழுதுகிறார்கள் என்று அவர் கூறுவது எல்லாம் ரொம்பவே ஓவர்.

"பா என்ற இந்திப் படத்துக்கு உன் இளையராஜா எப்படி பாட்டுப் போட்டிருக்கிறார் என்பதை தயவு செய்து இசை தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார். வட இந்திய சினிமாவில் இப்படி ஒரு நகைச்சுவையைக் கேள்வி கூடப் பட்டது கிடையாது என்று சிரிக்கிறார்கள். இளையராஜாவை பா படத்தின் காரணமாக அங்கே எல்லோரும் ஜோக்கராகவே பார்க்கிறார்கள். இல்லை என்று யாராவது நிரூபித்தால் நான் எழுதுவதையே நிறுத்திக் கொள்கிறேன்" என்கிறார் இவர். இவர் உலகத்தையே ஜோக்கராக பார்பாரம். இவரை ஜோக்கர என்று யாராவது சொன்னால் கோர்ட்டுக்கு போவாராம்!!!! என்ன கொடும சாரு எது????

"கேரளாவில் உனக்குத் தெரிந்த யாருக்காவது போன் போட்டு சாரு நிவேதிதா என்றால் யார் என்று கேள். அப்போது தெரியும்" என்கிறார். ஏன் ஐயா!!! சொந்த ஊரில் உங்கள் முகத்திரை கிழிந்து விட்டதா??????

வருண் said...

***மஞ்சரி said...

7 December, 2009 12:15 AM ***

சாரு ரொம்ப காமெடித்தான் எழுதுகிறார்.

* இவர் பலரை விமர்சனம் செய்யும்போது, இவர் தளத்தில் இவரை காப்பாற்றிக்கொள்ளலாம். இவர் ஜால்ராக்களும் கண்டுக்காமல் போயிடும்கள். ஆனால், உலகமே இவர் சொல்வதையெல்லாம் வேதவாக்கா எடுத்துக்கொண்டு இவரைப்பத்தி விமர்சிக்கக்கூடாதுனு இருக்கா என்ன?

வட இந்தியாக்காரன் இளையராஜாவைப்பார்த்து சிரிக்கிறான் என்பதை எந்த மானமுள்ள தமிழனும் ரசிக்கமுடியாது- சாரு ஜால்ராக்களையும் சேர்த்துதான்.

If he has not done a good job on that movie, it is not a big deal. It happens, a creator comes up with "not-so-good" albums as well. So does a writer or a critic!

Thanks for your comment, manjari :)