Sunday, December 27, 2009

சந்திரமுகி Vs. சிவாஜி கலக்சன் ரிப்போர்ட்!


“அண்ணே ரஜினி படத்தில் குசேலனால் ப்ரமிட் சாய்மீராவுக்கு பெரிய நட்டமாகிப்போச்சு! இல்லையாண்ணே?”

“ப்ரமிட் சாய்மீராவுக்கு நேரம் சரியில்லைனு நெனைக்கிறேன்! ரஜினியை வச்சு குசேலனை ஏகப்பட்ட விலைகொடுத்து (60 கோடி!) வாங்கி 25 கோடிக்குமேல் நஷ்டமாச்சுனு சொல்றாங்க. ரஜினிபடத்தை வாங்கி இப்படினா, கமலை வச்சு படம் எடுக்காமலே ஒரு 10 கோடிவரை நஷ்டம்போல!”

“மர்மயோகியைப் பத்தி சொல்றீங்களா?”

“ஆமா, உலகப்பொருளாதார சீர்குழைவால் மர்மயோகியை கைவிட்டுட்டாங்க. அதனால் ஒரு பெரிய தொகை நஷ்டம்னு சொல்றாங்க!”

“சரிண்ணே, சந்திரமுகி, ரஜினிக்கு பெரிய வெற்றிப்படமா? இல்லை சிவாஜியா? எதுண்ணே உண்மையிலேயே பெரிய வெற்றிப்படம்?”

“எவ்வளவு பணம் போட்டு எவ்வளவு எடுத்தாங்கனு பார்த்தால் நிச்சயம் சந்திரமுகிதான் பெரிய வெற்றினு நினைக்கிறேன். 30 கோடிக்குமேலே செலவாகியிருக்காது சிவாஜி பிலிம்ஸ்க்கு, ரஜினி சம்பளத்தையும் சேர்த்துத்தான். ஆனால் வருமானம் குறைந்தது 150 கோடிக்கு மேலே வந்ததுனு சொல்றாங்க! தியேட்டர் ஓனர்கள், நிர்வாகிகள், தயாரிப்பாளர்கள், எல்லோருமே ஒரு பெருந்தொகை சம்பாரிச்சாங்கங்கிறதில் சந்தேகமே இல்லை!”

“ஆமாண்ணே அது 700 நாளுக்கு மேலே வேற ஓடுச்சு இல்லையா?”

“அதெல்லாம் சும்மா சாதனை என்கிற பேருக்குத்தான்! ஆனால் சந்திரமுகி, படையப்பாவைவிட சந்தேகமில்லாமல் பெரிய வெற்றினு அடிச்சுச் சொல்லலாம். சிவாஜியை சந்திரமுகியைவிட பெரிய வெற்றிப்படம்னு சொல்லமுடியுமானு தெரியலை? ஆனால்..”

“ஆனால் என்னண்ணே?”

“சிவாஜி, ரிலீஸ் பண்ணியவிதம் வேற மாதிரி. நெறைய பெட்டிகளை வெளியிட்டு குறைந்த காலத்தில் நெறைய வசூல் அள்ளும் புதுமுறையில் ரிலீஸ் ஆனது. அதனால் குறைந்த நாட்கள்லயே அதிகமாக கலக்ஷன் ஆகியிருக்கலாம்.”

“பட்ஜெட்டும் இரண்டு மடங்குக்கு மேலே இல்லையாண்ணே. 70 கோடிங்கிறாங்க..”

“அதுதான் பெரிய பிரச்சினை. போட்டது 70 கோடி. எடுத்தது 180 கோடியா இருந்தாலும், 110 கோடி லாபம்னு வச்சுக்கலாம். போட்டதைவிட 1.5 மடங்குக்கு மேலே வந்திருக்கலாம். ஆனால், சிவாஜியைப்பொறுத்தவரையில் ஒரு சில விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் ஓனருக்கு லாபம் பெருசா கெடைக்கலைனு சொல்றாங்க! சந்திரமுகிக்கு அந்தமாதிரி எந்த குற்றச்சாட்டும் வரலை”

“அப்போ சந்திரமுகிதான் சந்தேகமே இல்லாமல் வெற்றியாண்ணே? ஆந்திரா, மற்றும் ஓவர்சீஸ்ல எப்படிண்ணே?”

“ஆந்திராவில், சந்திரமுகி மிகப்பெரிய வெற்றி. சிவாஜியும் வெற்றிதான். ஆனால் ஓவர் சீஸ்னு போனால் சிவாஜிதான் பெரிய வெற்றி!”

“ஓவர்சீஸ்ல சிவாஜிதானாண்ணே? சந்தேகமே இல்லையா?”

“UK ல, சிவாஜி கலக்சன் எவ்வளவுனு பார்த்தால், $799,834 = 3.6 கோடி!
மலேசியாவில், $2,422,788 = 11 கோடி! இது போக அமெரிக்கா, சிங்கப்பூர் கனடா எல்லாவற்றையும் சேர்த்தால், குறைந்தது எல்லாவற்றையும் சேர்த்து ஒரு 20 கோடியாவது வரும். ஆனால் சந்திரமுகி 20 கோடி ஓவர்சீஸ் கலக்ஷன் கொடுத்து இருக்குமான்கிறது சந்தேகம்தான்! அதனால் ஓவர்சீஸ் கலக்ஷன்னு பார்த்தால் சிவாஜிதான் பெரிய வெற்றி!”

“சிவாஜி, தமிழ்நாடு, ஆந்திரா கேரளா கலக்ஷன் எவ்வளவுண்ணே?”

“ஒரு சுமாரான கணக்குப்போடுறேன். தமிழ்நாட்டிலே ஒரு 120 கோடி, ஆந்திரா 30 கோடி, கேரளா ஒரு 8 கோடி, ஆடியோ டிவி ரைட்ஸ் 5 கோடி, ஓவர்சீஸ் 20 கோடினு போட்டால், 183 கோடி வருது. சும்மா ஒரு கணக்குக்குத்தான். நானா எண்ணிப்பார்த்தேன்?”

“ஓவரால்லா பார்த்தால் சந்திரமுகிதான் க்ளியர் வின்னராண்ணே?”

“போட்ட தொகை கம்மி. எடுத்தது சிவாஜியைவிட 20-30% கம்மியா இருந்தாலும், வருமானம்னு பார்த்தால் சந்திரமுகிதான்னு எனக்குத் தோனுது. ஆனால் இதெல்லாம் சும்மா ஒரு யூகந்தான். உண்மை என்னனு எனக்குத்தெரியாது.”

“அண்ணே தசாவதாரம் கலக்ஷன் 250 கோடியாம்!”

“எங்கே விக்கில பார்த்தியா? சிவாஜி கலக்சன் 100-300 கோடினு போட்டு இருக்காங்க! அந்த நம்பர்களிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை!”

“நீங்க சொல்றதையும் அப்படித்தான் எடுத்துக்கனுமா?”

“அப்படியும் எடுத்துக்கலாம். உண்மையான கலக்சனோ பட்ஜெட்டோ எனக்கு சத்தியமா தெரியாது. ஒரு மாதிரி யூகம்தான்.”

4 comments:

கிரி said...

வருண் சந்திரமுகியை விட சிவாஜி வசூல் அதிகம் இருந்தாலும் முதலீடு இதில் குறைவு என்பதால் என்னை பொறுத்தவரை சந்திரமுகி தான் மிகப்பெரிய வெற்றிப்(வசூல்)படம்.

thiyaa said...

அருமையான இடுகை வாழ்த்துகள்

வருண் said...

***கிரி said...
வருண் சந்திரமுகியை விட சிவாஜி வசூல் அதிகம் இருந்தாலும் முதலீடு இதில் குறைவு என்பதால் என்னை பொறுத்தவரை சந்திரமுகி தான் மிகப்பெரிய வெற்றிப்(வசூல்)படம்.

27 December 2009 8:54 AM***

நீங்க உண்மையைத்தான் சொல்றீங்க, கிரி! :)

பகிர்தலுக்கு நன்றி, கிரி :)

வருண் said...

***தியாவின் பேனா said...
அருமையான இடுகை வாழ்த்துகள்

27 December 2009 9:00 AM***

வருகைக்கும்.வாழ்த்துக்கும் நன்றி, தியாவின் பேனா :)