Wednesday, March 2, 2011

துக்ளக்கில் சாருவின் கட்டுரை ?!

சாரு நிவேதிதா தன் தளத்தில் தன் கட்டுரைத் தொடர் ஒண்ணு துக்ளக்கில் வரப்போறதா சொல்லியிருக்கார்!!!! ஆமா துக்ளக்கில்தான்!! ஆமா... துக்ளக் பத்திரிக்கை, குமுதம், விகடன் போலில்லாமல் முழுக்க முழுக்க ஒரு அரசியல் பத்திரிக்கைதான்! அதைவிட்டா ஹிந்து மதம், எங்கே பார்ப்பான் அப்படி இப்படினு பார்ப்பணர்கள் ரசிக்கத்தக்க எதாவது வரும்..துக்ளக் போன்ற எதுக்கெடுத்தாலும் இந்துமதவாதிகளுக்கும் பார்ப்பணர்களுக்கும் வக்காலத்து வாங்கும் மற்றும் அரசியல் பத்திரிக்கையில் சாரு போன்ற எழுத்தாளர் என்ன எழுதப் போறார்னு ஒரே க்யூரியஸாத்தான் இருக்கு!

அதுவும் இது சட்டசபை தேர்தல் நேரம்! தி மு க மற்றும் கலைஞர் கருணாநிதியை இஷ்டத்துக்கு விமர்சிப்பதை முழுநேர வேலையாக கொண்டுயிருக்கிற பத்திரிக்கை நம்ம சோ ராமசாமியின் துக்ளக்.

நம்ம சாரு, கெடைக்கிற காசுக்காக துக்ளக்கில் ஏதாவது தேவையில்லாமல் தி மு க மற்றும் காங்கிரஸ் பற்றி அரசியல் விமர்சனம் எழுதி கலைஞரின் கெட்ட புத்தகத்தில் மாட்டாமல் சமர்த்தாக நடந்துகொண்டால் சரிதான்!

எதைப்பற்றி இந்தக் கட்டுரைனு, மற்றும் தலைப்பு பற்றி எதுவும் சொல்லல! அப்போத்தானே போய் படிப்பீங்க? நான் துக்ளக் எல்லாம் சும்மா கொடுத்தாலும் வாசிக்கப் போவதில்லை. அதனால் சும்மா யூகிக்க வேண்டியதுதான்! காசாப் பணமா?

* நித்யாணந்தா சரசம் அல்லது சல்லாபம் பற்றி நிச்சயம் இருக்காது!

* அரசியல் கட்டுரை, தி மு க அல்லது காங்கிரஸ்க்கு எதிரா?

சாண்ஸே இல்லை!

* சினிமா சம்மந்தப் பட்டது? ரஜினி பத்தி?

ம்ஹூஹூம்!

* ஏதாவது கற்பனைக் கதை?

இல்லை, இது கட்டுரைனு தெளிவாக சொல்லியிருக்காரே!

அப்போ நிச்சயமாக ஏதாவது சாமியார் பத்தியா இருக்கலாம். சாருவும், சோவும் சாமியாரை வணங்கி வழிபடும் ஒரே இனம் தானே? என்ன ரஜினியுமா? ஆமா, ரஜினியும்தான்!

அனேகமாக நம்ம Shridi saibaba பத்தி ஏதாவது "ஸ்பிரிச்சுவாலிட்டி" சம்மந்தமான கட்டுரையா இருக்கும்னு நான் யூகிக்கிறேன்!

என்னனு யாராவது படிச்சு இருந்தால் பெரிய மனசு பண்ணி என்னனு சொல்லுங்க! என்ன "காப்பி ரைட்" பிரச்சினையா? சொல்ல மாட்டீங்களா? சரி நீங்க நல்லா இருக்கனும்!

என்ன இதுக்கெல்லாம் ஒரு பதிவா வா? ஆமா, நான் பெரிய மனசுபண்ணி சாருக்கு ஒரு கமர்ஷியல்தான் கொடுக்கிறேன்! துக்ளக் சர்க்குலேசனை ஒரு 100 பிரதி கூட்டிக் கொடுக்காதா இந்தப் பதிவு?
:)

21 comments:

Anonymous said...

காசுக் கொடுத்தா என்னததையும் செய்யத் தயார் இப்படியும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இனம் இனத்தோடுதானே சேரும். நடத்துங்க உங்க கூததை. துக்ளக் மனுஷன் எல்லாம் வாங்கி படிப்பானா ! சுண்டல் பொட்டலம் கட்டி வரும் போது பார்க்கலாம் சாரு என்னத்தை பிழியிறார்னு

தமிழ்வாசி பிரகாஷ் said...

ம்...பொறுத்திருந்து பார்ப்போம்.

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில் . மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

பொன் மாலை பொழுது said...

சும்மா கையில் கொடுத்தாலே படிக்கதோன்றுவதில்லை. துக்ளக் மற்றுமின்றி எல்லா பேப்பர் குப்பைகளும் இப்படிதான் ஆகிவிட்டன. சாரு ஒன்ஜ்றும் புதிதாக எழுதப்போவதில்லை. பெயரை பார்த்தாலே "ஏதோ இருக்கு " என்று அளையும் கூட்டம் இருக்கும் வரை இந்த வியாபார முறையும் இருக்கும்.

Anonymous said...

டோண்டு ராகவன் சார் லிங்க் கொடுத்துட்டார் உங்களுக்கு செம ஹிட்டுதான் இன்னிக்கு

PRABHU RAJADURAI said...

துக்ளக்கில் முன்பு எழுத்தாளர் வண்ணநிலவன், ‘துர்வாசர்’ என்ற புனைப்பெயரில் மற்ற தமிழ்ப்பத்திரிக்கைகளில் ஆபாசம் நிறைந்திருப்பதாக குற்றம்சாட்சி ஒரு தொடர் எழுதினார். ஜனரஞ்சக எழுத்தாளர்கள் சகட்டுமேனிக்கு சாடப்பட்டார்கள்...சிவசங்கரிக்கு ‘அடுப்பெடுத்த அம்மா’ என்ற பட்டப்பெயரும் கிடைத்தது. அதைப் போலவும் ஏதாவது எழுதலாம்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வாசித்தேன். துக்ளக்கில் சாருவும்; துர்வாசர் போல் தான் திட்டுகிறார்.
40 ஆயிரம் ரூபாவுக்கு வெளிநாட்டு ஜட்டி போடும்; சாரு ...இன்றைய இளைஞர்கள் வெளிநாட்டு மோகத்தில் கெடுகிறார்களாம்.

நிலவு said...

போலீசுக்கு ஒரு நியாயம் - பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நியாயமா ? http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_02.html

ILA (a) இளா said...

குடுத்த காசுக்கு கூவியாச்சு போல :)

வருண் said...

மிகப்பெரிய துகளக் விசிறியாகிய நண்பர் டோண்டு ராகவன் அவர்கள், இந்த் அகட்டுரை பற்றி விளக்கம் அவர் தளத்தில் கொடுத்துள்ளார் (கீழே லின்க் பார்க்கவும்), அதற்கு அவருக்கு நன்றி! :)

வருண் said...

***இக்பால் செல்வன் said...

காசுக் கொடுத்தா என்னததையும் செய்யத் தயார் இப்படியும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இனம் இனத்தோடுதானே சேரும். நடத்துங்க உங்க கூததை. துக்ளக் மனுஷன் எல்லாம் வாங்கி படிப்பானா ! சுண்டல் பொட்டலம் கட்டி வரும் போது பார்க்கலாம் சாரு என்னத்தை பிழியிறார்னு

2 March 2011 3:40 PM***

இதில் இருவருமே ஒருவருடைய ரெப்யூட்டேஷன் இன்னொருவர் நன்றாக அறிந்தவர்கள். "ஸ்ட்ரிக்ட்லி பிசினெஸ்" என்கிற கூட்டு!

ஏதோ உண்மையை தரமான முறையில் சாரு எழுதினால் சரிதான்!

நடுநிசிநாய்களை குரைக்கவிட்டு, கெளதம் மேனனுக்கு வக்காலத்து வாங்காமல்கண்டுக்காமல் சாரு விட்டதே அதிசயம்தான்! இது இன்னொரு அதிசயம்! :)

வருண் said...

**தமிழ்வாசி - Prakash said...

ம்...பொறுத்திருந்து பார்ப்போம்.

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில் . மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.**

தொடுப்புக்கும் வருகைக்கும் நன்றிங்க, தமிழ்வாசி- ப்ரகாஷ்! :)

வருண் said...

***கக்கு - மாணிக்கம் said...

சும்மா கையில் கொடுத்தாலே படிக்கதோன்றுவதில்லை. துக்ளக் மற்றுமின்றி எல்லா பேப்பர் குப்பைகளும் இப்படிதான் ஆகிவிட்டன. சாரு ஒன்ஜ்றும் புதிதாக எழுதப்போவதில்லை. பெயரை பார்த்தாலே "ஏதோ இருக்கு " என்று அளையும் கூட்டம் இருக்கும் வரை இந்த வியாபார முறையும் இருக்கும்.***

சோவால் விமர்சிக்கப் படாத அரசியல்வாதி களே கெடையாது! காலங்காலமா இவரைப் பார்த்தவர்களுக்கு துக்ளக் போர்தான்!

சாரு, இதுபோல் சமுதாய அக்கறையுடன் எழுதுற கட்டுரை என்னவோ வேடிக்கைதான்! :)

வருண் said...

***ஆர்.கே.சதீஷ்குமார் said...

டோண்டு ராகவன் சார் லிங்க் கொடுத்துட்டார் உங்களுக்கு செம ஹிட்டுதான் இன்னிக்கு

2 March 2011 9:01 PM***

அவருக்கு ரொம்ப சந்தோஷம்போல இருக்கு -இந்த செய்தி!அதான் தொடுப்பல்லாம் கொடுத்து இன்னொரு கமர்ஷியல் கொடுக்கிறார்! :)

வருகைக்கு நன்றிங்க, சதீஷ்குமார், ஆர் கே! :)

வருண் said...

***Prabhu Rajadurai said...

துக்ளக்கில் முன்பு எழுத்தாளர் வண்ணநிலவன், ‘துர்வாசர்’ என்ற புனைப்பெயரில் மற்ற தமிழ்ப்பத்திரிக்கைகளில் ஆபாசம் நிறைந்திருப்பதாக குற்றம்சாட்சி ஒரு தொடர் எழுதினார். ஜனரஞ்சக எழுத்தாளர்கள் சகட்டுமேனிக்கு சாடப்பட்டார்கள்...சிவசங்கரிக்கு ‘அடுப்பெடுத்த அம்மா’ என்ற பட்டப்பெயரும் கிடைத்தது. அதைப் போலவும் ஏதாவது எழுதலாம்***

வாங்க திரு ராஜதுரை! :)

இபோதைக்கு நம்ம சமூகம் பற்றியும் அரைவேக்காடுகள் பற்றியும் எழுதுறாராம்! கீழே "டோண்டு தளம்" லிங்க் பாருங்க!

பார்க்கலாம் போகப்போக எப்படிப்போகுதுனு!

வருண் said...

***யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வாசித்தேன். துக்ளக்கில் சாருவும்; துர்வாசர் போல் தான் திட்டுகிறார்.
40 ஆயிரம் ரூபாவுக்கு வெளிநாட்டு ஜட்டி போடும்; சாரு ...இன்றைய இளைஞர்கள் வெளிநாட்டு மோகத்தில் கெடுகிறார்களாம்.***

என்னை ஊர் விமர்சிக்கட்டும். நான் ஊராரை விமர்சிக்கிறேன்னு சாரு இறங்கிட்டாரு போல, "களத்தில்"! :)

வருண் said...

***நிலவு said...

போலீசுக்கு ஒரு நியாயம் - பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நியாயமா ? http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_02.html**

வாங்க நிலவு. உங்க தொடுப்புக்கு நன்றி. வந்து என்னனு பார்க்கிறேன் :)

வருண் said...

***ILA(@)இளா said...

குடுத்த காசுக்கு கூவியாச்சு போல :)

3 March 2011 6:08 AM***

வாங்க இளா! :)

ஒரு நல்ல பெரிய தொகையா வாங்கினால் சந்தோசம்தான்! :)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அண்ணே.. டெம்ப்ளேட் கலர்ரை மாத்துங்க.. கன்ணுல அடிக்குது.
:-)

R.Gopi said...

சாரு...துக்ளக்ல எழுதறாரா...

தூள்ள்ள்ள்ள்... ஆளும் கட்சியை பற்றி விமர்சனமாகத்தான் கண்டிப்பாக இருக்கும்....

வருண் said...

***பட்டாபட்டி.... said...

அண்ணே.. டெம்ப்ளேட் கலர்ரை மாத்துங்க.. கன்ணுல அடிக்குது.
:-)

3 March 2011 9:11 PM***

சாரிங்க, டெம்ப்ளேட் கலர் மாற்றமுடியாத சூழல்! :(

வருண் said...

***R.Gopi said...

சாரு...துக்ளக்ல எழுதறாரா...

தூள்ள்ள்ள்ள்... ஆளும் கட்சியை பற்றி விமர்சனமாகத்தான் கண்டிப்பாக இருக்கும்....

4 March 2011 9:05 PM***

அரசியலை தொடமாட்டார்னு நான் நெனைக்கிறேன். பார்க்கலாம்! :)