* இது எழுத்தாளன்னு சொல்லி பொழைப்பை ஓட்டுகிற எல்லாருக்குமே கேட்கப்பட்ட கேள்விதான் என்பதால், இதை ஜெயமோகன் பிரசுரிச்சு இருக்காரு அவர் தளத்தில்!
* இந்த தாக்குதலுக்கு பதிலும் சொல்லி இருக்காரு!
* இத நம்ம எல்லாருமே படிக்கனும்! ஜெயமோகன் இதை எப்படி நியாயப் படுத்திகிறார் (ரா?)னு பாருங்க!
* பதிவுலகத்தில் கவிதை, கதை, கட்டுரை எழுதும் நீங்க எப்படி இதை நியாயப் படுத்தப் போறீங்க?
இதை நம்ம எல்லாரும் படிக்கனும், நம்ம நிலைப்பாட்டை முடிந்தால் விளக்கனும், என்கிற அக்கறையில், இங்கே கொடுக்கிறேன்!
பதிவுலக கண்மணிகளே!இலக்கியம் ஒரு கேடா?
Dear writer,
You are living in India. Please try to realize even today millions of village people’s are suffering even a proper daily wage life. Do you know, you are writing novel, it’s your passion? No one force you to write novels or short stories. Country like India, common people, we are not still in a position to enjoy our free time. Because we are from developing country. We must do hard work. We are not in a position to enjoy the novels or imaginary stories. Please don’t compare India with other EU nations. You are an Indian. Try to understand our society. I am sure; your novels are not going to feed any one of poor Indian village people. Are you dare to discuss with me out this issue as open debate.
I am one of your web pages READER. But feel nothing , no way to help my life or any other aspects? My question is why you, writers are cheating……………………..
Note: Country like India without any physical work, if you can survive, you are the luckiest person. Try to realize the ground reality. Are the writers are god? What you writers are thinking about yourself?
Bye
True Indian
gurupradap raajan gpraajan@yahoo.co.in
அன்புள்ள குருப்பிரதாப் ராஜன்
அருமையான கருத்து. அதை அருமையாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் இந்தக்கருத்தைப் பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கவில்லை, உணர்ந்திருக்கவும் இல்லை. இதை நீங்கள் இங்குள்ள இலக்கிய வாசகர் எழுத்தாளர் அனைவருக்கும் கொண்டு சென்று சேர்த்தாகவேண்டும். அப்போதுதான் இக்கருத்தின் விளைவுகள் சாதகமாக இருக்கும். அதற்கு நீங்கள் இப்படி கடிதங்கள் மட்டும் எழுதினால் போதாது. இலக்கியத்தின் அபாயம் மற்றும் தேவையின்மையைப்பற்றி விரிவாக வாதிட்டு ஆதாரங்களுடன் நிறையக் கட்டுரைகள் எழுதவேண்டும். அவை அச்சு இதழ்களிலும் இணைய இதழ்களிலும் நிறைய பிரசுரமாகவேண்டும். இலக்கியத்தின் தீமையை வலியுறுத்தும் நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள் ஆகியவற்றையும் எழுதலாம். தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் எடுக்கலாம். விடாமல் சில பத்தாண்டுகள் முயன்றால் இக்கருத்தை ஆணித்தரமாக நிறுவலாம். இக்கருத்தை மேலே கொண்டுசெல்லக்கூடிய சிந்தனையாளர்களின் ஒரு வரிசையையே நீங்கள் உருவாக்கவேண்டும்.
ஜெ
நீங்க என்ன நினைக்கிறீங்க? இந்தக் கேள்வியையும், அதற்கு ஜெயமோகன் கொடுத்து இருக்கும் பதிலையும் பற்றி?
57 comments:
கேள்வியொன்றும் புதியதன்று. கேட்டவரும் கேட்கப்பட்டவரும் மட்டுமே புதியவர்கள். ஒரு எழுத்தாளர் அக்கேள்விக்குச் சரியான விளக்கமான பதிலைக்கொடுக்க வேண்டும். ஜெயமோஹன் செய்யவில்லை. அங்கதத்தில் கேட்டவரை அவமானப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தில் எழுதியிருக்கிறார். ஜெயமோஹன் பெரிய எழுத்தாளர். ஒரு பெரிய எழுத்தாளருக்குப் பெரிய மனது இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. அதை இங்கு இவரும் நிரூபித்திருக்கிறார். ஒருவேளை கேட்டவர் மரியாதையான சொற்களில் அக்கேள்வியைக் கேட்கவில்லையன்று நினைத்து இடக்கான பதிலைச்சொல்லியிருக்கிறார் என நினைக்க இடமுண்டு.
இக்கேள்வி இலக்கியத்தைப்பாடமாக பட்டவகுப்புகளில் மாணாக்கர் கேட்காமலே முதலாண்டு முதலனாளில் ஆசிரியர் சொல்வார். ஏன் இலக்கியம் ? அதனால் சமூகத்துக்கு என்ன இலாபம்? என்றெல்லாம். மேலும், கேள்வித்தாளிலும் ‘இலக்கியத்தின் பயன்கள்’ பற்றிக்கட்டுரை வரைக என்பார்கள். உலகம் முழுவதும் பலகலைக்கழகங்களில் இலக்கிய பட்டவகுப்பு உண்டு. எல்லாவிடங்களிலும் நான் சொன்ன மாதிரி.
கேள்விக்குப் பதில் தமிழ்ப்பழமொழியாக ஏற்கனவே சொல்லப்பட்டு வந்திருக்கிறது: கலை கவைக்குதவாது. அல்லது, ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.
உண்மையென்ன?
மேலே சொன்னதுதான் உண்மை. இலக்கியம் சோறு போடாது படிப்பவருக்கு. ஜெயமோஹன் அதாவது இலக்கியம் படைத்தவருக்குச் சோறு போடலாம். அதுவும் கூட அவர் ஒரு தேர்ந்த மார்க்கெட்டிங் ஆசாமியாக இருந்தால் மட்டுமே சாத்தியம். அவரை விடுவோம். இவரைப் பிடிப்போம். அதாவது பொது மக்களுக்கு இலக்கியத்தால் என்ன இலாபம்? இலக்கியம் சோறுப்போடவில்லையென்றால் அஃது எதற்கு வெட்டியாக நேரத்தையும் பணத்தையும் விரயம் பண்ணிக்கொண்டு?
பதில் ஏசுவிடமிருந்து வருகிறது. மறுமடலில்.
இப்போது வருண் ஒரு பதிலைச்சொல்ல்லாம்.
இவ்வளவு சொற்களை மெனக்கெட்டு டைப் செய்யும் குருப்ரதாப் போன்ற மடையர்கள் அந்த நேரத்தை படிக்க செலவிட மாட்டார்கள்..
ஏனென்றால் அது கஷ்டம்.. நேரம் செலவிட வேண்டும்..முதிர்ச்சியுள்ள மனம் வேண்டும்.. அதைவிட டீக்கடை அரசியல், சினிமா அரட்டை சுலபம்..அவன் யோக்கியனா ? இதெல்லாம் அவசியமா?
என்றபடி வசைபாடுதல் சுலபம்..இலக்கியம் எதற்கு என்று ஜெயமோகன் குறைந்த பட்சம் நூறு கட்டுரைகள் எழுதி இருப்பார்..அதைப்பற்றி இந்த மடையர்களுக்கென்ன ? இவர்களுக்கு தெரிந்த நாலு விஷயத்தை வைத்துக்கொண்டு உலகிலுள்ள எல்லாவற்றையும் எல்லாம் தெரிந்த புடுங்கிகள் போல ஜல்லி அடிப்பார்கள்..அவர் என் போன்ற வாசகர்களுக்காகவும், அவர் ஆத்மா திருப்திக்காகவும் எழுதுகிறார்..குருப்ரதாப் போன்ற மடையர்கள் வந்து என் எழுத்தை படிக்கவில்லை என்று ஜெயமோகன் எங்காவது அழுதாரா?
மக்களுக்கு சாப்பிட வழியில்ல..இலக்கியம் தேவையா? சிந்தனை என்றால் என்னவென்றே புரியாத மூடன் கேட்கும் கேள்வி இது..எதனுடன் எதை ஒப்பிடுவது? மக்கள் சாப்பிட வழியின்றி சாகும்போது இந்தாளுக்கு எதுக்கு கம்ப்யுட்டர், இன்டர்நெட் ? அந்தப் பணத்தை ஏழைகளுக்கு செலவிடலாமே? எதற்குப் பேன்ட், சர்ட்? கோவணத்தை கட்டிகொண்டு மிச்சப்பணத்தை ஏழைகளுக்கு செலவிடலாமே?
இந்த மடையர்களுக்கு பதில் ஒரு கேடு..எதற்கு இலக்கியம் என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள் முட்டாள்களே..உங்கள் மூடத்தனத்தை ஜெயமோகன் ஏன் அவர் நேரத்தை விரயம் செய்து உங்களுக்கு விளக்க வேண்டும்?
***passerby said...
கேள்வியொன்றும் புதியதன்று. கேட்டவரும் கேட்கப்பட்டவரும் மட்டுமே புதியவர்கள். ஒரு எழுத்தாளர் அக்கேள்விக்குச் சரியான விளக்கமான பதிலைக்கொடுக்க வேண்டும். ஜெயமோஹன் செய்யவில்லை. ***
உண்மைதாங்க. இது ஒவ்வொரு எழுத்தாளனுக்குள்ளும் தன்னைப் பத்தி தன் மனசாட்சியே கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விதான்.
இதற்கு அழகான, அர்த்தமான பதிலை கொடுத்து இருக்கனும். இவரு என்ன செஞ்சிருக்காரு??? அடுத்த பின்னூட்டத்தில் நான் புரிந்து கொண்டதை சொல்றேன். :)
***Sunantha said...
இவ்வளவு சொற்களை மெனக்கெட்டு டைப் செய்யும் குருப்ரதாப் போன்ற மடையர்கள் அந்த நேரத்தை படிக்க செலவிட மாட்டார்கள்..***
நிங்க அவரை மடையர் என்றெல்லாம் சொல்ல முடியாது. அப்படிப்பார்த்தால் ஜெயமோஹன் மனசாட்சியே இந்த்க் கேள்வியை அவருக்கு முன் வைக்கனும். ஜெயமோகன் மடையரா??? சும்மா எதையாவது சொல்லக்கூடாது!
***passerby said...
அங்கதத்தில் கேட்டவரை அவமானப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தில் எழுதியிருக்கிறார். ஜெயமோஹன் பெரிய எழுத்தாளர். ஒரு பெரிய எழுத்தாளருக்குப் பெரிய மனது இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை.***
உண்மைதான்..
///அன்புள்ள குருப்பிரதாப் ராஜன்
அருமையான கருத்து. அதை அருமையாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் இந்தக்கருத்தைப் பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கவில்லை, உணர்ந்திருக்கவும் இல்லை.///
கேலி பண்னுகிறாரம் கேள்வியை எய்தியவரை! ஜெயமோஹன் என்கிற எழுத்துலக கோமாளி!
****அதை இங்கு இவரும் நிரூபித்திருக்கிறார். ஒருவேளை கேட்டவர் மரியாதையான சொற்களில் அக்கேள்வியைக் கேட்கவில்லையன்று நினைத்து இடக்கான பதிலைச்சொல்லியிருக்கிறார் என நினைக்க இடமுண்டு.
இக்கேள்வி இலக்கியத்தைப்பாடமாக பட்டவகுப்புகளில் மாணாக்கர் கேட்காமலே முதலாண்டு முதலனாளில் ஆசிரியர் சொல்வார். ஏன் இலக்கியம் ? அதனால் சமூகத்துக்கு என்ன இலாபம்? என்றெல்லாம். மேலும், கேள்வித்தாளிலும் ‘இலக்கியத்தின் பயன்கள்’ பற்றிக்கட்டுரை வரைக என்பார்கள். உலகம் முழுவதும் பலகலைக்கழகங்களில் இலக்கிய பட்டவகுப்பு உண்டு. எல்லாவிடங்களிலும் நான் சொன்ன மாதிரி.***
ஜெயமோகன் போலல்லாமல் சிரத்தையுடன் இதை "அனலைஸ்" செய்து இருக்கீங்க. உங்களுக்கு என் பாராட்டுக்கள்! :)
****
# கேள்விக்குப் பதில் தமிழ்ப்பழமொழியாக ஏற்கனவே சொல்லப்பட்டு வந்திருக்கிறது: கலை கவைக்குதவாது. அல்லது, ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.
# உண்மையென்ன?
மேலே சொன்னதுதான் உண்மை. இலக்கியம் சோறு போடாது படிப்பவருக்கு. ஜெயமோஹன் அதாவது இலக்கியம் படைத்தவருக்குச் சோறு போடலாம்.
* அதுவும் கூட அவர் ஒரு தேர்ந்த மார்க்கெட்டிங் ஆசாமியாக இருந்தால் மட்டுமே சாத்தியம். ****
உண்மை உண்மை!னு நான் ஜால்ரா அடிப்பதைத்தவிர வேறுவழியில்லை! ஏனென்றால் நீவிர் சொல்வது அனைத்தும் உண்மையே! :)
***அவரை விடுவோம். இவரைப் பிடிப்போம். அதாவது பொது மக்களுக்கு இலக்கியத்தால் என்ன இலாபம்? இலக்கியம் சோறுப்போடவில்லையென்றால் அஃது எதற்கு வெட்டியாக நேரத்தையும் பணத்தையும் விரயம் பண்ணிக்கொண்டு?***
பொதுமக்களுடைய பொருளாதார நிலையை நீங்கள் மனதில் கொள்ளனும். பணம் என்பது ஒரு பிர்ச்சினையில்லாத வாசகனை என்ன சொல்லுவீங்க?
# அவன், இதை பொழுது போக்கு என்கலாம்?
# நான் வாழ்ந்து அறியாத சூழலை கதையில் பார்க்கிறென் என்கலாம்!
# இப்போதுதான் தமிழ் கற்றுக்கொள்ள எனக்கு வாய்ப்பு கிட்டியது எனலாம்!
இது பணப்பிரச்சினை இல்லாதவர்கள் பற்றி சொல்றேன். அப்படிப்பட்ட வாசகனை என்ன சொல்லமுடியும்?
***passerby said...
பதில் ஏசுவிடமிருந்து வருகிறது. மறுமடலில்.***
சத்தியமாகப் புரியவில்லை என்ன சொல்றீங்கனு! :)
***இப்போது வருண் ஒரு பதிலைச்சொல்ல்லாம்.***
நான் உங்க பின்னூட்டத்தை பிரிச்சுப் பிரிச்சுப் போட்டு என் கருத்தையும் சொல்ல முயன்றுள்ளேன்.
மேலும் சொல்வேன்!
உங்க பின்னூட்டத்திற்கு மனதாற நன்றி தெரிவிக்கிறேன். :)
விதண்டாவாதம செய்யாமல் கேள்வியை நல்ல முறையில் எடுத்துக்கொண்டு பதில் சொல்லியிருக்கீங்க!
எத்தனை பேர் இதைச் செய்ய இயலும்?
வாழ்த்துக்கள், பல உங்களுக்கு, passerby, whoever you are! :-)
பொழப்பத்த தட்டாரன் பு***த் தூக்கி நிறுத்தானாம்' என்று ஒரு சொலவடை உண்டு.
இந்தக் கேள்வி கேட்டவர் இந்தக் கேடகரியைச் சேர்ந்தவர்.இது போன்ற ஆட்களுக்குச் சரியான பதிலைத்தான் ஜெயமோகன் சொல்லியிருக்கிறார்.அதை விளக்க வேண்டும் என்ற அவசியம் அவருக்கில்லை.(நான் ஜெ.யின் வாசகனோ,ரசிகனோ அல்ல என்பதை இங்கு சொல்லி வைக்கிறேன்).
மனிதன் தோன்றிய காலத்திலிருந்து சிறிது சிறிதாக இவால்வ் ஆகிக்கொண்டு இருக்கிறான்.
ஏன் இவால்வ் ஆக வேண்டும் என்பது கேள்வி கேட்டவரின் கேள்வி.இதற்குப் பதில் மிகவும் ஆதாரமானது.
இவால்வ் ஆக வேண்டாம் என்றால் கற்பனை,காவியம்,முன்னேற்றம்,அறிவியல்,கண்டுபிடிப்புகள் எதுவும் தேவை இல்லை.மனிதன் ஆடையற்று அல்லது இலை தழைகளைக் கட்டிக் கொண்டிருக்கும் காலத்திற்குத் திரும்பலாம்.
விளைவித்தோ, வேட்டையாடியோ தின்று,காமத்தில் ஈடுபட்டு செத்து விடலாம்.ஏனெனில் பசியும் காமமும் மட்டுமே ஆதாரமான உணர்வுகள்.இவை மட்டும் போதும் என்பருக்கு வேறு எதுவும் தேவை இல்லைதான்; மனிதனா,விலங்கா என்ற வேறுபாடு கூட இல்லாது விரும்பிய வண்ணம் வாழலாம்..
இதை ஒரு விதயமாகவும், ஏதோ ஜெயமாகன் பதில் சொல்ல லாயக்கில்லை என்ற நோக்கில் பதிவுக்கான விதயமாக எடுத்திருப்பது...
ஒன்றும் சொல்வதற்கில்லை.
**** Sunantha said... ஏனென்றால் அது கஷ்டம்.. நேரம் செலவிட வேண்டும்..முதிர்ச்சியுள்ள மனம் வேண்டும்.. அதைவிட டீக்கடை அரசியல், சினிமா அரட்டை சுலபம்..அவன் யோக்கியனா ? இதெல்லாம் அவசியமா?
என்றபடி வசைபாடுதல் சுலபம்..இலக்கியம் எதற்கு என்று ஜெயமோகன் குறைந்த பட்சம் நூறு கட்டுரைகள் எழுதி இருப்பார்..அதைப்பற்றி இந்த மடையர்களுக்கென்ன ? இவர்களுக்கு தெரிந்த நாலு விஷயத்தை வைத்துக்கொண்டு உலகிலுள்ள எல்லாவற்றையும் எல்லாம் தெரிந்த புடுங்கிகள் போல ஜல்லி அடிப்பார்கள்..அவர் என் போன்ற வாசகர்களுக்காகவும், அவர் ஆத்மா திருப்திக்காகவும் எழுதுகிறார்..குருப்ரதாப் போன்ற மடையர்கள் வந்து என் எழுத்தை படிக்கவில்லை என்று ஜெயமோகன் எங்காவது அழுதாரா?
மக்களுக்கு சாப்பிட வழியில்ல..இலக்கியம் தேவையா? சிந்தனை என்றால் என்னவென்றே புரியாத மூடன் கேட்கும் கேள்வி இது..எதனுடன் எதை ஒப்பிடுவது? மக்கள் சாப்பிட வழியின்றி சாகும்போது இந்தாளுக்கு எதுக்கு கம்ப்யுட்டர், இன்டர்நெட் ? அந்தப் பணத்தை ஏழைகளுக்கு செலவிடலாமே? எதற்குப் பேன்ட், சர்ட்? கோவணத்தை கட்டிகொண்டு மிச்சப்பணத்தை ஏழைகளுக்கு செலவிடலாமே?
இந்த மடையர்களுக்கு பதில் ஒரு கேடு..எதற்கு இலக்கியம் என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள் முட்டாள்களே..உங்கள் மூடத்தனத்தை ஜெயமோகன் ஏன் அவர் நேரத்தை விரயம் செய்து உங்களுக்கு விளக்க வேண்டும்?******
Sunantha!
உங்க பின்னூட்டத்திற்கு நன்றி. நான் உங்க பின்னூட்டத்தை கவனமாகப் படித்து என் ஏற்புதல் அல்லது மாற்றுக்கருத்தை முன்வைக்கிறேன். வெகு விரைவில், நேரம் கிடைக்கும்போது!
அதுவரை பொறுத்திருங்கள்! :)
aama nee oru dubukku...
"எழுத்து என்ன மயித்துக்கு?" அப்படினு கேட்டவரையே எழுத்தாளரா மாத்தறதுக்கு முயற்சி பண்ணிருக்காரு ஜெயமோகன் அவர்கள். :-)
குருப்ரதாப் முதிர்ச்சியடைதலின் ஆரம்பநிலையைக் கூடத் தொடவில்லை என்பது என் கருத்து. மனிதனை உயிர்ப்புடன் வைத்திருப்பதே அவனது வாசிக்கும் பழக்கம்தான். இலக்கியம் தேவையா என்ற கேள்வியை எழுப்பியிருக்கத் தேவையேயில்லை. ஐந்து வேறு வேறு எழுத்தாளர்களின் சில நூல்களை வாங்கிப் படித்து அதன்மூலம் தனக்குள் ஏற்படும் உளமாற்றங்களை, உணர்வு தூண்டல்களை அனுபவித்திருந்தாலே இலக்கியம் என்றால் என்ன என்பது பிடிபட்டிருக்கும்.
குருபிரதாப்புக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். எல்லா ஆணும் பெண்ணும்தான் உடலுறவு வச்சிக்கறாங்க. ஆனா எல்லாருக்கும் ஒரே அனுபவமா கிடைக்குது?? கூடலில் குழைந்து கிடைக்கும் இன்பத்தினை எழுத்தாளனால் நயமாக உரைக்க முடியும். சின்சியர் வாசகனால் அதை திறம்பட உள்வாங்க முடியும். சீரிய வாசிப்பனுபவம் பெற்ற வாசகனுக்கும், அது இல்லாதவனுக்கும் செக்ஸ் இன்பம் வேறு வேறாகவே இருக்கும்.
அஞ்சு நிமிசத்துல சோலிய முடிச்சுட்டு நடையக் கட்டுனாப் பத்தாதா.. ஒரு மணி நேரம் நீட்டி முழக்கனுமான்னு குருபிரதாப் கேட்கறாரு. எந்த விஷயத்துக்குள்ளேயும் அதோட முழு ஆழத்திற்குச் சென்று அதன் பல பரிணாமங்களையும் காணுகிற அற்புத உணர்வுநிலை இவருக்கு இல்லை. இலக்கியம் அந்தப் பாங்கை, உணர்வை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்ற உண்மை பிடிபடவில்லை.
பதிவுத் தலைப்பும் ஹிட்ஸை அதிகப்படுத்தும் நோக்கில் வைக்கப்பட்டிருப்பது தெளிவாகப் புலனாகிறது.
*** Sunantha said...
இலக்கியம் எதற்கு என்று ஜெயமோகன் குறைந்த பட்சம் நூறு கட்டுரைகள் எழுதி இருப்பார்..***
அந்த கட்டுரைகளில் அவர் சொன்ன கருத்தை இவருக்கு சொல்ல வேண்டியதுதானே? எதற்கு இந்த வீண் ஜம்பம்??? எதர்கு இந்தத் திமிர்? எதற்கு இந்த மேதாவதித்தனம்?
ஒரு பொறுப்புள்ள பேராசிரியர், தான் 100 முறை நடத்திய அதே பாடத்தை, ஒரு புதுமுகத்துக்கு பொறுமையுடன் நடத்தி விளக்க முயல்வது இல்லையா?
நான் 100 முறை நடத்தி கிழிச்சுட்டேன். இனிமேல் புதியவர்கள் கேள்வி கேட்டால் விதண்டாவாதமா, மேதாவித்தனமாத்தான் பதில் சொல்வேன் என்பது பொற்ப்புள்ள பேராசிரியருக்கு அழகல்ல.
ஜெயமோகனுடைய பொறுப்பற்ற மேதாவித்தனம்தான் அவருடைய பதிலில் தெரிகிறது!
மேலும் உம்மைப்போல் எல்லாருமே மேதைகள் அல்ல சுனுந்தா. அதை முதலில் புரிந்துகொள்ளும். அப்படி பதில் சொல்ல வக்கில்லை என்றால் என்னத்துக்கு அதை பிரசுரிக்கனும்? தூக்கி குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டுப்போக வேண்டியதுதானே?
***அதைப்பற்றி இந்த மடையர்களுக்கென்ன ? இவர்களுக்கு தெரிந்த நாலு விஷயத்தை வைத்துக்கொண்டு உலகிலுள்ள எல்லாவற்றையும் எல்லாம் தெரிந்த புடுங்கிகள் போல ஜல்லி அடிப்பார்கள்.***
உமது கருத்துக்கு மாற்றுக் கருத்து வைத்திருப்பவரெல்லாம் மடையர்கள் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளும்!
நீரும்தான் இப்போ பெரிய புடுங்கிபோல் கேள்வி எய்தவனை விமர்சிக்கிறீர்.
இல்லையா?
***அவர் என் போன்ற வாசகர்களுக்காகவும், அவர் ஆத்மா திருப்திக்காகவும் எழுதுகிறார்..குருப்ரதாப் போன்ற மடையர்கள் வந்து என் எழுத்தை படிக்கவில்லை என்று ஜெயமோகன் எங்காவது அழுதாரா?***
ஒரு முறை ஜாக்கி சேகர் தளம்போல் தளங்களுக்குத்தான் கூட்டம் வருகிறது. தன்னைப்போல் இலக்கியசிகாமணிகள் தளங்களை எவனும் மதிப்பதில்லைனு சொன்னதா ஞாபகம்.
இதெல்லாம் ஒரு மாதிரியான "அழுகையும்" "ஒப்பாரியும்"தான் என்பது உமக்கு விளங்கவில்லை!
***மக்களுக்கு சாப்பிட வழியில்ல..இலக்கியம் தேவையா? சிந்தனை என்றால் என்னவென்றே புரியாத மூடன் கேட்கும் கேள்வி இது.***
கெடையவே கெடையாது.
* ஒரு ஆட்டொ ஓட்டுபவனை யாரும் இப்படி விமர்சிக்க முடியாது
* ஒரு குப்பை அள்ளுபவனை இதுபோல் விமர்சிக்க முடியாது
* ஒரு டாக்டரை, ஒரு பஸ் ட்ரைவரை, ஒரு கண்டக்டரை இதுபோல் விமர்சிக்க முடியாது.
ஒரு எழுத்தாளனை நிச்சயம் விமர்சிக்கலாம்!
***எதனுடன் எதை ஒப்பிடுவது? மக்கள் சாப்பிட வழியின்றி சாகும்போது இந்தாளுக்கு எதுக்கு கம்ப்யுட்டர், இன்டர்நெட் ? அந்தப் பணத்தை ஏழைகளுக்கு செலவிடலாமே? எதற்குப் பேன்ட், சர்ட்? கோவணத்தை கட்டிகொண்டு மிச்சப்பணத்தை ஏழைகளுக்கு செலவிடலாமே?***
நீர் கேள்வி எய்தவனை மடையனாக்கி விடுவதால் இங்கே இரண்டு மடையர்கள் இருக்காங்கனுதான் காட்டுக்கிறீர்.
* மடையன் ஒண்ணு, ஜெயமோகன்
* மடையன் ரெண்டு, gurupradap raajan gpraajan
* மடையன் மூனு , சுனுந்தா!
* மடையன் நாலு, வருண்!
நீர் பதில் சொல்லி சாதித்தது இதுதான்! இது எந்தவகையிலும் நம் சமூகத்தை உயர்த்தப் போவதில்லை! ஆகவே கேஎள்வி கேட்டவன் வெல்கிறான்! :)
***மக்கள் சாப்பிட வழியின்றி சாகும்போது இந்தாளுக்கு எதுக்கு கம்ப்யுட்டர், இன்டர்நெட் ? அந்தப் பணத்தை ஏழைகளுக்கு செலவிடலாமே? எதற்குப் பேன்ட், சர்ட்? கோவணத்தை கட்டிகொண்டு மிச்சப்பணத்தை ஏழைகளுக்கு செலவிடலாமே? ***
சுனுந்தா போல் மேட்டுக்குடிகளின் பொறுப்பற்ற விதண்டாவாதம்தான் இது! பணத்திமிர்! படிச்சவன் என்கிற அகங்காரம்!
***இந்த மடையர்களுக்கு பதில் ஒரு கேடு..எதற்கு இலக்கியம் என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள் முட்டாள்களே..உங்கள் மூடத்தனத்தை ஜெயமோகன் ஏன் அவர் நேரத்தை விரயம் செய்து உங்களுக்கு விளக்க வேண்டும்?***
நீர் ஏன் இப்போது மடையனாகிறீர் தெரியுமா?
அதை மேதாவி ஜெயமோகன் குப்பைக்கூடையில் தூக்கி எறியாமல் அதை பிரசுரிச்சதால். அதற்கு கேணத்தனமா ஒரு பதில் எழுதி அதையும் பிரசுரித்ததால்!
அதுபோல் செய்ததை, பொறுப்பில்லாததனத்தை, மேட்டுக்குடி நீர் சரி என்று வாதிடுவதால்!
***வாசகன் said...
பொழப்பத்த தட்டாரன் பு***த் தூக்கி நிறுத்தானாம்' என்று ஒரு சொலவடை உண்டு.
இந்தக் கேள்வி கேட்டவர் இந்தக் கேடகரியைச் சேர்ந்தவர்.இது போன்ற ஆட்களுக்குச் சரியான பதிலைத்தான் ஜெயமோகன் சொல்லியிருக்கிறார்.அதை விளக்க வேண்டும் என்ற அவசியம் அவருக்கில்லை.(நான் ஜெ.யின் வாசகனோ,ரசிகனோ அல்ல என்பதை இங்கு சொல்லி வைக்கிறேன்).***
எனக்கு இந்தக் கருத்தில் ஏற்புதல் இல்லை, வாசகன்!
***மனிதன் தோன்றிய காலத்திலிருந்து சிறிது சிறிதாக இவால்வ் ஆகிக்கொண்டு இருக்கிறான்.
ஏன் இவால்வ் ஆக வேண்டும் என்பது கேள்வி கேட்டவரின் கேள்வி.இதற்குப் பதில் மிகவும் ஆதாரமானது.
இவால்வ் ஆக வேண்டாம் என்றால் கற்பனை,காவியம்,முன்னேற்றம்,அறிவியல்,கண்டுபிடிப்புகள் எதுவும் தேவை இல்லை.மனிதன் ஆடையற்று அல்லது இலை தழைகளைக் கட்டிக் கொண்டிருக்கும் காலத்திற்குத் திரும்பலாம்.***
எல்லாம் சரி, டெய்லி வேலை செய்து பொழைப்பை ஓட்டும் தினக்கூலிகள் வாழ்க்கையை முன்னேற்ற இவரு கட்டுரை எந்தவகையில் உதவுது என்பது கேள்வி!
***விளைவித்தோ, வேட்டையாடியோ தின்று,காமத்தில் ஈடுபட்டு செத்து விடலாம்.ஏனெனில் பசியும் காமமும் மட்டுமே ஆதாரமான உணர்வுகள்.இவை மட்டும் போதும் என்பருக்கு வேறு எதுவும் தேவை இல்லைதான்; மனிதனா,விலங்கா என்ற வேறுபாடு கூட இல்லாது விரும்பிய வண்ணம் வாழலாம்..
இதை ஒரு விதயமாகவும், ஏதோ ஜெயமாகன் பதில் சொல்ல லாயக்கில்லை என்ற நோக்கில் பதிவுக்கான விதயமாக எடுத்திருப்பது...
ஒன்றும் சொல்வதற்கில்லை.***
இதுபோல் கேள்விகளை இலக்கியவாதிகள் எல்லோருமே த்ன்னை நோக்கி எய்துகொண்டு, அதற்கு பதிலை ஆராய்ந்து கொடுப்பதுண்டு.
You can even google and find a sensible answer for that!
ஜெயமோகன் செய்வது பொறுப்பற்ற தன்மை. கேள்விகள் நிச்சயம் நியாயமான ஒன்றே! அதை யார் கேட்டால் என்ன???
***Vb M said...
aama nee oru dubukku...**
சரி சரி, எங்கேயாவது போய் தொலை!
மறுபடியும், இதுக்கு என்ன பதில் சொன்னான் வருண்னு பார்க்க வந்து நிக்காதே!
புரியுதா??
****ரிஷி said...
"எழுத்து என்ன மயித்துக்கு?" அப்படினு கேட்டவரையே எழுத்தாளரா மாத்தறதுக்கு முயற்சி பண்ணிருக்காரு ஜெயமோகன் அவர்கள். :-)***
அட அட அட அட!!! :))))
முதல் ரெண்டு வரியே உம்மை அழகாக் காட்டிருச்சு, ரிஷி!
***பதிவுத் தலைப்பும் ஹிட்ஸை அதிகப்படுத்தும் நோக்கில் வைக்கப்பட்டிருப்பது தெளிவாகப் புலனாகிறது.***
கடைசி ரெண்டு வரி அதை விட தெளிவா உம்மைக் காட்டுது.
இடையில் உள்ளதெல்லாம் வாசிக்கவோ பதில் சொல்லவோ அருகதையற்ற வாக்கியங்கள், கருத்து..:)))
Take care! Bye for now, Rishi! :))))
பகிர்வுக்கு நன்றி
அமர்க்களம் கருத்துக்களம்
http://amarkkalam.msnyou.com
//இடையில் உள்ளதெல்லாம் வாசிக்கவோ பதில் சொல்லவோ அருகதையற்ற வாக்கியங்கள், கருத்து..:)))
Take care! Bye for now, Rishi! :)))) //
கருத்துக்கு பதில் கூறுவதும் கூறாமல் செல்வதும் தங்கள் உரிமை மற்றும் விருப்பம். அதில் தலையிட நான் யார்! :-)
Bye, Arun :-))
என்னங்க பதில் சொல்றது?
***ரிஷி said...
"எழுத்து என்ன மயித்துக்கு?" அப்படினு கேட்டவரையே எழுத்தாளரா மாத்தறதுக்கு முயற்சி பண்ணிருக்காரு ஜெயமோகன் அவர்கள். :-)***
ஒரு திறந்த மனதுல்ல எழுத்தாளன், தன்னை விமர்சிப்பவன் கேள்விகளை எதிர்கொண்டு பதில் சொல்லனும். அதைத்தான் ஜெயமோகன் செய்யனும்.
அவருடைய குதற்க பதில், அவருடைய குறுகிய ம்னதைத்தான் வெளிச்சம்போட்டுக் காட்டுது!
அவரு உங்க தெய்வம். அதனால நான் செய்வது உங்களுக்கு தெய்வகுத்தம்! :))))
இல்லையா, ரிஷி???
-------------
உங்க கேள்வியையும், பின்னூட்டத்தையும் நான் அதைத்தான் செய்யனும்..
ஆனால்.. இதுபோல் ஒரு தாக்குதலும் இருக்கு..
***பதிவுத் தலைப்பும் ஹிட்ஸை அதிகப்படுத்தும் நோக்கில் வைக்கப்பட்டிருப்பது தெளிவாகப் புலனாகிறது***
சரி நான் முயற்சிக்கிறேன்..
இதைவிட நல்ல தலைப்பு எனக்கு எதுவும் தோனலை, ரிஷி. உங்க மனதில் தோனுவதை என்னால் வாசிக்க முடியலை! :-)))
உங்க பின்னூட்டக் கருத்தில் இடைப்பகுதி ...
****குருப்ரதாப் முதிர்ச்சியடைதலின் ஆரம்பநிலையைக் கூடத் தொடவில்லை என்பது என் கருத்து. ***
உங்க் கருத்து! நல்லது. :)
***மனிதனை உயிர்ப்புடன் வைத்திருப்பதே அவனது வாசிக்கும் பழக்கம்தான்.***
அப்போ ஒரு காலத்தில் வாசிக்க தெரியாமல், பாட்டுப் பாடி, டாண்ஸ் ஆடிக்கிட்டு, சாப்பிட்டுக்கிட்டு, செக்ஸ் வச்சுக்கிட்டு வாழ்ந்த ஆதிவாசிகளா இருந்தவன் எல்லாம் எப்படி உயிரோட இருந்தான்?
**இலக்கியம் தேவையா என்ற கேள்வியை எழுப்பியிருக்கத் தேவையேயில்லை.***
எந்த ஒரு கேள்வியையும் எழுப்பலாம்- நாகரிகமாக, கன்னியமாக. அதைத்தான் இந்த வாசகர் செய்துள்ளார். அதில் தவறெதுவும் இல்லை!
***ஐந்து வேறு வேறு எழுத்தாளர்களின் சில நூல்களை வாங்கிப் படித்து அதன்மூலம் தனக்குள் ஏற்படும் உளமாற்றங்களை, உணர்வு தூண்டல்களை அனுபவித்திருந்தாலே இலக்கியம் என்றால் என்ன என்பது பிடிபட்டிருக்கும்.***
இல்லைனா பிடிபட்டுருச்சுனு உங்களைமாரி நெனச்சுக்கலாம்! :)))
-தொடரும்
***குருபிரதாப்புக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். எல்லா ஆணும் பெண்ணும்தான் உடலுறவு வச்சிக்கறாங்க. ஆனா எல்லாருக்கும் ஒரே அனுபவமா கிடைக்குது?? ***
இல்லையா? அதெப்படி உங்களுக்குத் தெரியும்???
நீங்க அநுபவிச்சதைத்தான் உங்களால் உணர முடியும். அடுத்தவர் அனுபவிச்சதை உணர முடியாதே?
நீங்கதான் பெஸ்ட் செக்ஸ் அனுபவிச்சவர்னு சொல்றம் தப்பு. எல்லாரும் செக்ஸ்தான் அனுபவிச்சாங்க இதில என்ன கூட்டி கொறச்சினு சொல்வதில் தவறும் இல்லை!
***கூடலில் குழைந்து கிடைக்கும் இன்பத்தினை எழுத்தாளனால் நயமாக உரைக்க முடியும். ***
வாசகர்களில் ஒரு ஸ்பெக்ட்ரம் இருக்கு. குழைந்து கூடலை எழுதும் எழுத்தாளன் எல்லாரும் ஒரே வகையும் இல்லை. அதில் இவர்தான் உயர் தரம்னு நீங்க சொல்வது உங்க அறியாமை!
சி
//அவரு உங்க தெய்வம். அதனால நான் செய்வது உங்களுக்கு தெய்வகுத்தம்! :))))//
என்னைப் பற்றிய தங்கள் முன்கூட்டிய முடிவுகளுக்கு நான் பொறுப்பல்ல :-)
ஒற்றை வரி பதிலிலேயே இப்படிக்கூட முடிவு கட்ட முடியுமா!! தங்கள் பதில் என்றில்லை. பதிவுலகத்தின் பல தளங்களைப் பார்க்கும்போதும் இது போன்ற முன்முடிவுகள் ஆயாசத்தையே தருகிறது :-(
//இதைவிட நல்ல தலைப்பு எனக்கு எதுவும் தோனலை, ரிஷி. உங்க மனதில் தோனுவதை என்னால் வாசிக்க முடியலை! :-)))//
ஹும்ம்.. என்னங்க வருண் இப்படி சொல்லிட்டீங்க. ஜெயமோகன் என் தெய்வம்னெல்லாம் புதுசா ஒன்னு கண்டுபிடிச்சி சொன்னீங்க. அதுமாதிரி புதுமாதிரியான தலைப்பு வைங்க.. :-))
***சின்சியர் வாசகனால் அதை திறம்பட உள்வாங்க முடியும்.***
உங்களைப்போல! :))))
*** சீரிய வாசிப்பனுபவம் பெற்ற வாசகனுக்கும், அது இல்லாதவனுக்கும் செக்ஸ் இன்பம் வேறு வேறாகவே இருக்கும்.***
அப்படியா? எனக்கென்னவோ உங்க செக்ஸ் அனுபவத்தை மட்டும் பேசுறது நல்லது. ஊர்ல உள்ளவன் அனுபவம் உமக்கெப்படி தெரியும்??
***அஞ்சு நிமிசத்துல சோலிய முடிச்சுட்டு நடையக் கட்டுனாப் பத்தாதா.. ஒரு மணி நேரம் நீட்டி முழக்கனுமான்னு குருபிரதாப் கேட்கறாரு.***
ஆமா, அஞு நிமிடம் எல்லாம் பத்தாது, சார். பெண்கள்ட்ட பேசிப் பாருங்க! நீங்க் ஆம்பளை மாரியே பேசுறீங்க! :))
***எந்த விஷயத்துக்குள்ளேயும் அதோட முழு ஆழத்திற்குச் சென்று அதன் பல பரிணாமங்களையும் காணுகிற அற்புத உணர்வுநிலை இவருக்கு இல்லை.***
அது எவருக்குமே இல்லை என்பதே உண்மை! உமக்கும், எமக்கும், ஜெயமோகனுக்கும் சேர்த்துத்தான்! :)
***இலக்கியம் அந்தப் பாங்கை, உணர்வை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்ற உண்மை பிடிபடவில்லை. ***
அதனால என்ன? நம்மில் ஒரு சோம்பேறி குறைகிறான். நல்லதுதானே? இதுக்குப் போயி ஏன் கவலைப்படுறீங்க? :)))
செக்ஸ் அனுபவம் ஒரு உதாரணத்திற்காக ஒப்பிட்டேன். அது பற்றி நிறைய பேசலாம். கட்டுரை(?!)யின் பேசுபொருள் அதுவல்ல என்பதால் அதிலிருந்து விலகிக்கொள்கிறேன்.
தங்களின் வளமான புரிதலுக்கும் விவாதத்தினை கொண்டு செல்லும் முறைக்கும் என் வணக்கங்கள் வருண்! நான் செல்கிறேன். :-))
அன்புடன்
ரிஷி
ரிஷி சார்: நீங்க சொன்ன உதாரணத்தை வச்சுதான் நான் தொடர முடியும். நீங்க செக்ஸ் பத்தி சொல்லுபோது, நான் ஆண்மீகம் பத்தி பேசி விளக்கம் கொடுத்தால் கேலிக்கூத்தாத்தான் நம்ம விவாதம் முடியும். :))
வருண்,
உதாரணம் சொல்ல வருவதன் கருப்பொருளை எடுத்துக்கொண்டு, அந்தப் புரிதலின் அடிப்படையில் கட்டுரை பேசுபொருளை அணுகும்போது அது ஆரோக்கியமான விவாதமாக வளரும் என்பது என் பணிவான கருத்து. இதற்கு மாற்றுக் கருத்து உங்களிடம் இருப்பின் அதற்கு என்னிடம் மறுப்பேதும் இல்லை. :-))
வரிக்கு வரி பதில்கள் என்ற Immediate Reaction பாணியிலான பதில்களை விட, முறைப்படுத்தப்பட்ட கருத்து களமாய் மாற்றுவது என்பது பெரும்பான்மையான பதிவர்களால் இயலாதது என்பது அறிந்த ஒன்றே! :-)
ரிஷி: வரிக்கு வரி பதில் தேவையில்லையென்றால் புறக்கணியுங்கள், தவிர்த்துவிடுங்கள். உங்களுக்குத் தேவையான பதிலும் அதில் இருக்கு. அதைமட்டும் எடுத்துக்கோங்க. நன்றி. :)
எங்கடா தம்பி பின்னூட்டம் ? செருப்பால அடிச்சா மாதிரி இருக்குதா? நிஜமாவே உன் தரம் அதுதான்..என் பின்னூட்டம் இங்கு வரும் மற்றவர்களுக்காக மட்டுமே..
சுனந்தா!
அப்படியானால் எனக்காக பதில் சொல்லுங்கள்.
ஒரு ஏழைக்கூலித்தொழிலாளி காலை 5 மணிக்கு தன் வேலைக்குச்செல்கிறான் கிராமப்புறங்களில். இரவு திரும்புகிறான். நாட்கூலி வாங்கி அவன் மனைவி சாதம் வடித்துத்தன் குழந்தைகளுக்குக் கொடுக்க அவர்களைத் தேடும்போது அவர்கள் ஆழ்ந்து உறங்கிக்கொண்டு கிடக்கிறார்கள். அவர்களை எழுப்பிஎழுப்பி ஊட்டுகிறாள். அவர்கள் முக்கால்தூக்கத்தில் சாப்பிடுகிறார்கள்.
மழை, அல்லது வேறெதாவது காரணங்களால் வேலை நிறுத்தம்போது, குடும்பமே கொலைப்பட்டினி.
இதுதான் காட்சி. இம்மாந்தர்களுக்கு ஆயிரம் பக்கங்களில் எழுதப்பட்ட விஸ்ணுபுரம் என்ற நாவலால் என்ன இலாபம்? அவர்கள் பசிப்பிரச்சினையைத் தீர்க்குமா?
உங்களுக்கு நேரம் இருக்கிறது. மனமுதிர்ச்சி இருக்கிறது. இல்லையா?
எப்படி அந்த நேரம் வந்தது? எப்படி அந்த மனமுதிர்ச்சி வந்தது?
எப்படி இவர்களுக்கு இல்லை?
இவர்கள் நிலையில் நீங்கள் இருந்தால் ஜெயமோஹனிடம் கேட்டாரே ஒருவர், அவரை மடையர் என்றீர்களே நீங்கள், அதே கேள்வியை நீங்களே கேட்டிருப்பீர்கள் ம ன சா ட் சி என்று ஒன்று உங்களுக்கு இருந்தால்.
//இதுதான் காட்சி. இம்மாந்தர்களுக்கு ஆயிரம் பக்கங்களில் எழுதப்பட்ட விஸ்ணுபுரம் என்ற நாவலால் என்ன இலாபம்? அவர்கள் பசிப்பிரச்சினையைத் தீர்க்குமா?
ஏங்க இலக்கியத்தோட நிறுத்திட்டீங்க..இன்னமும் நிறைய கேளுங்க..
செய்தித்தாள் எதற்கு? ஏழைகளுக்கு பசி தீருமா? இழுத்து மூடவும்
தொலைக்காட்சி எதற்கு?ஏழைகளுக்கு பசி தீருமா?
வானொலி எதுக்கு?ஏழைகளுக்கு பசி தீருமா?
சினிமா எதுக்கு?ஏழைகளுக்கு பசி தீருமா?
பண்டிகைகள் அதுக்கு? பண விரயம்.ஏழைகளுக்கு பசி தீருமா?
கோயில் எதுக்கு?ஏழைகளுக்கு பசி தீருமா?
கம்ப்யுட்டர் எதுக்கு?ஏழைகளுக்கு பசி தீருமா?
செல்போன் எதுக்கு?ஏழைகளுக்கு பசி தீருமா?
ஏழை பசியைத் தீக்காத இதெல்லாம் தூக்கிப் போட்டு உடைங்க..
மொதல்ல சிந்திக்கிறது எப்படின்னு உக்காந்து யோசிங்கம்மா ...அப்புறம் விவாதமெல்லாம் பண்ணலாம்..
Passerby அவர்கள் விட்டால் விஷ்ணுபுரத்தால்தான் ஏழைகளே உருவானார்கள் என்று கூறிவிடுவார் போலிருக்கிறதே!!! பள்ளிக்கூடங்களில் எதற்கு தமிழ்பாடம் என்று வைக்கிறார்களோ தெரியவில்லை. அதான் ஏழைக் குழந்தைகள் அருமையாக தமிழ் பேசுகின்றனரே.. அப்புறம் எதுக்கு பத்தாம் வகுப்பு வரை தமிழ்ப்பாடம். :-(((
ஏழைகள் நிறைந்த கிராமப்புறங்களில் மாரியத்தாவுக்கு கிடா வெட்டிப் பொங்கல் வைக்கிறார்கள். மாரியாத்தாவால் ஏழைகளுக்கு என்ன லாபம்?? :-((
விஷ்ணுபுரம் என்ன விலைன்னு தெரியல. ஒரு 300 ரூபா இருக்குமா? அதிகபட்சம் 5000 copy வித்திருக்குமா? 15 லட்ச ரூபா மொத்த வருமானம். இதுல செலவினங்கள், மற்றவர்களின் வருமானம் எல்லாம் போக ஆசிரியருக்கு எவ்வளவு கிடைத்திருக்கும்!!
நடிகைகளின் குலுக்கல்களும், கவர்ச்சித் தழும்பல்களும், கவைக்குதவா செய்திகளும் நிரம்பி வழியும் குப்பை இதழ்களான குங்குமம், வண்ணத்திரை, குமுதம் இன்னபிற இதழ்களும் சேர்ந்து ஒரு 30 லட்சம் விக்குமா? ஒரு புத்தகம் 15 ரூ வச்சிக்கிட்டா நாலரைக் கோடி ஆச்சு வருமானம் (ஒரு மாசத்துக்கு மட்டும்). ஏழை பாழைகளுக்கு இதனால் என்ன லாபம்? இதை அறச்சீற்றத்துடன் எதிர்க்க யாருமேயில்லையா??? :-((
****Sunantha said...
எங்கடா தம்பி பின்னூட்டம் ? செருப்பால அடிச்சா மாதிரி இருக்குதா? நிஜமாவே உன் தரம் அதுதான்..என் பின்னூட்டம் இங்கு வரும் மற்றவர்களுக்காக மட்டுமே..***
என்னண்ணா நீங்க! உங்க பின்னூட்டம் என் தரத்தை குறைப்பதைவிட "அனானியாக" இருக்கும் உங்கள் தரத்தைத்தான் மிகவும் குறைக்கிது. அதை எப்படி அனுமதிப்பதுங்கண்ணா? :))))
***Sunantha said...
//இதுதான் காட்சி. இம்மாந்தர்களுக்கு ஆயிரம் பக்கங்களில் எழுதப்பட்ட விஸ்ணுபுரம் என்ற நாவலால் என்ன இலாபம்? அவர்கள் பசிப்பிரச்சினையைத் தீர்க்குமா?
ஏங்க இலக்கியத்தோட நிறுத்திட்டீங்க..இன்னமும் நிறைய கேளுங்க..
செய்தித்தாள் எதற்கு? ஏழைகளுக்கு பசி தீருமா? இழுத்து மூடவும்
தொலைக்காட்சி எதற்கு?ஏழைகளுக்கு பசி தீருமா?
வானொலி எதுக்கு?ஏழைகளுக்கு பசி தீருமா?
சினிமா எதுக்கு?ஏழைகளுக்கு பசி தீருமா?
பண்டிகைகள் அதுக்கு? பண விரயம்.ஏழைகளுக்கு பசி தீருமா?
கோயில் எதுக்கு?ஏழைகளுக்கு பசி தீருமா?
கம்ப்யுட்டர் எதுக்கு?ஏழைகளுக்கு பசி தீருமா?
செல்போன் எதுக்கு?ஏழைகளுக்கு பசி தீருமா?
ஏழை பசியைத் தீக்காத இதெல்லாம் தூக்கிப் போட்டு உடைங்க..
மொதல்ல சிந்திக்கிறது எப்படின்னு உக்காந்து யோசிங்கம்மா ...அப்புறம் விவாதமெல்லாம் பண்ணலாம்..****
ஆமாண்ணா! இந்த பாழாப்போன லோகத்திலே சிந்திக்கத் தெரிஞ்சது ரெண்டு பேருதான்ண்னா!
ஒண்ணு நீர்!
இன்னுண்ணு, உம் ஆசான் ஜெயமோகன்!
இல்லையாண்ணா?
பாவம், நல்லாத்தானண்ணா இருந்தீர்?
நோக்கு என்னாச்சுண்ணா? :))))
**** ரிஷி said...
Passerby அவர்கள் விட்டால் விஷ்ணுபுரத்தால்தான் ஏழைகளே உருவானார்கள் என்று கூறிவிடுவார் போலிருக்கிறதே!!! பள்ளிக்கூடங்களில் எதற்கு தமிழ்பாடம் என்று வைக்கிறார்களோ தெரியவில்லை. அதான் ஏழைக் குழந்தைகள் அருமையாக தமிழ் பேசுகின்றனரே.. அப்புறம் எதுக்கு பத்தாம் வகுப்பு வரை தமிழ்ப்பாடம். :-(((***
ரிஷி: எந்த ஏழைக்குழந்தைக்கு நீர் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தீர்?னு சொன்னால் நல்லாயிருக்கும்!
இல்லைனா இப்படி ஆதாரமில்லாமல் எதையாவது பேசுவதுதான் உம் இயல்பா?
***ஏழைகள் நிறைந்த கிராமப்புறங்களில் மாரியத்தாவுக்கு கிடா வெட்டிப் பொங்கல் வைக்கிறார்கள். மாரியாத்தாவால் ஏழைகளுக்கு என்ன லாபம்?? :-((***
மாரியாத்தாவால தான் ஏழைகளுக்கு ஆட்டுக்கறியும், பொங்கலும் கெடைக்கிது. புரியலையா ரிஷி?
மாரியாத்தாவா பொங்கலையும், ஆட்டுக்கறியும் சாப்பிடுது? ஏழைகள்தான் சாப்பிறாங்க!
****ரிஷி said...
விஷ்ணுபுரம் என்ன விலைன்னு தெரியல. ஒரு 300 ரூபா இருக்குமா? அதிகபட்சம் 5000 copy வித்திருக்குமா? 15 லட்ச ரூபா மொத்த வருமானம். இதுல செலவினங்கள், மற்றவர்களின் வருமானம் எல்லாம் போக ஆசிரியருக்கு எவ்வளவு கிடைத்திருக்கும்!!
நடிகைகளின் குலுக்கல்களும், கவர்ச்சித் தழும்பல்களும், கவைக்குதவா செய்திகளும் நிரம்பி வழியும் குப்பை இதழ்களான குங்குமம், வண்ணத்திரை, குமுதம் இன்னபிற இதழ்களும் சேர்ந்து ஒரு 30 லட்சம் விக்குமா? ஒரு புத்தகம் 15 ரூ வச்சிக்கிட்டா நாலரைக் கோடி ஆச்சு வருமானம் (ஒரு மாசத்துக்கு மட்டும்). ஏழை பாழைகளுக்கு இதனால் என்ன லாபம்? இதை அறச்சீற்றத்துடன் எதிர்க்க யாருமேயில்லையா??? :-((****
இப்போ சினிமாதான் ஏழைகளுக்கு சாப்பாடு போடுது. சினிமா ரொம்ப அவசியம்னு யாரும் வாதிட்டதா எனக்குத் தெரியலை, ரிஷி.
***passerby said...
இவர்கள் நிலையில் நீங்கள் இருந்தால் ஜெயமோஹனிடம் கேட்டாரே ஒருவர், அவரை மடையர் என்றீர்களே நீங்கள், அதே கேள்வியை நீங்களே கேட்டிருப்பீர்கள் ம ன சா ட் சி என்று ஒன்று உங்களுக்கு இருந்தால்.****
மனசாட்சியாவது மண்ணாங்கட்டியாவது! சுயநலப்பேய்களுக்கு ஒழுங்கா வேலை செய்யும் மூளையே கெடையாது, இதுகளிடம் மனசாட்சியெல்லாம் எல்லாம் நீங்க எப்படி எதிர்பார்க்கிறீங்கனு எனக்கு விளங்கவில்லை?
//ரிஷி: எந்த ஏழைக்குழந்தைக்கு நீர் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தீர்?னு சொன்னால் நல்லாயிருக்கும்!
இல்லைனா இப்படி ஆதாரமில்லாமல் எதையாவது பேசுவதுதான் உம் இயல்பா?
//
புரியவில்லை அன்பரே. தெளிவாகக் கூறுங்கள்.
சரி.. நான் முன்கூறியவை அனைத்தும் உங்களுக்குப் புரியவில்லை என்பதால் சுருக்கமாக மூன்று விஷயங்கள் கேட்கிறேன்.
1) இந்தியாவில் அல்லது குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் ஏழைகள் இல்லை என்ற நிலை வரும்போதுதான் (அனைவருக்கும் மூன்று வேளை சோறு கிடைக்கும்போது) இலக்கியப் படைப்புகள் வேண்டும் என்கிறீர்களா?
2)அல்லது இலக்கியமே தேவையில்லை என்கிறீர்களா?
3) அல்லது ஜெயமோகனின் திமிர்த்தனத்தைப் பற்றியது மட்டும்தான் இந்தப் பதிவு. மற்றபடி வேறெந்த இலக்கியவாதிகளையும் குறைகூறவில்லை என்கிறீர்களா?
ரிஷி: என்ன சொல்லவர்ரேன் என்றால், அந்த வாசகர் கேட்ட கேள்விக்கு (குதற்கமான கேள்வியாக இருந்தாஅலும்) பொறுப்புடன் ஒழுங்கான, சரியான பதிலை கொடுக்கலாம்.
* அந்தக் கேள்விக்கு ஜெயமோகன் குதற்கமாக பதில் சொல்வது ஒரு வகையான "ஏமாற்று", "தப்பித்தல்" தான்.
* அதேபோல் அந்தக்கேள்விக்கு நீங்க இதுபோல் 3 கேள்விகளை திருப்பி கேட்பதற்கு பதிலாக, சரியான பதிலை- ஏன் இலக்கியம் தேவை என்று- இதுபோல் பாயிண்ட் பாயிண்ட்டாக சொல்லலாம். அதை ஏன் செய்ய மாட்டேன்கிறீங்க???
உங்களிடம் இருந்து இதற்குமேல் எதுவும் எதிர்ப்பார்க்கப்படவில்லை!
நான் கேட்ட கேள்விக்கும் ஜெயமோஹனின் எழுத்துக்களுக்கும் தொடர்பில்லை. அவரின் நாவல் ஒரு எடுத்துக்காட்டுக்கு மட்டுமே. ரிஷிக்குப் பிடிக்கவில்லையென்றால் விஷ்ணுபுரத்தை, ”சில நேரங்களில் சில மனிதர்கள்” என்று மாற்றிக் கொள்ளலாம். எனவே என் கேள்வி பொதுவானது:
ஒரு ஏழைத்தொழிலாளி நாவல் படித்தால் அவன் வாழ்க்கைப் பிரச்சினை தீருமா? அவன் குழந்தைகளுக்கு ஒருவேளையாவது சாப்பாடு கிட்டுமா? இலக்கியத்தால் அவனுக்கு என்ன நன்மை? என்பதே கேள்வி.
இதற்கு நேரடியான பதில் தேவை.
நினைவிருக்கட்டும். கொலைப்பட்டினியில் கிடப்பவனுக்கு பகவான் ஒரு ரொட்டித்துண்டில் காட்சியளிப்பார் என்றார் காந்தி. அதை இன்னும் அழுத்தமாக நாம், அப்படித்தான் காட்சியளிக்க வேண்டும் எனலாம்.
இப்போது அவனுக்கு ரொட்டித்துண்டிலே காட்சியளிக்க வேண்டுமென்றால், அந்த பகவான் தன்னைப்பற்றி என்னென்னவோ மதங்கள் சொல்லியனவோ அவற்றை இங்கு ஒரு பைசா பிரயோஜனமில்லையென்று தள்ளிவிடுகிறார்.
இதையும் நினைவிற்கொள்க. இப்போது ஒரு ஏழைக்கு ஜெயமோஹனின் விஷ்ணுபுரம் ஒரு குப்பைத்தாளுக்குத்தான் சமம். அல்லது அதன் கோப்பிகள் ஒரு பத்து கிடைத்தால், அதை பேப்பர் கடையில் போட்டு சில காசு பார்த்து ஒரு அரைப்படி அரிசி வாங்கத்தான் உதவும். தாளில் எழுதப்பட்டவை ஒரு காசுக்குப்பெறாது
இலக்கியம் வெறும் தாள் அவனுக்கு. இப்படி எழுத்தாளனின் வீச்சு ஒரு குறுகிவட்டத்துக்குள் மட்டுமே பாயும். அவ்வட்டத்துக்குள் ஒருவர் வரவேண்டிய தகுதிகள்:
• மனமுதிர்ச்சி;
• பொழுது போக்க நேரம்;
• அடுத்த வேளை உணவுக்கு கவலையில்லா வாழ்க்கை.
சுனந்தாவும் ரிஷியும் இப்போது இலக்கியத்தால் என்ன நன்மை பொது மக்களுக்கு, அதாவது அவ்வட்டத்துக்குள் வராதவருக்கு? என்று சொல்லலாம்..
என் கேள்விக்கு எனக்கு பதில் தெரியும். அதனாலே, ஏசு சொன்னார் என்று நிறுத்திவிட்டு யான் தொடரவில்லை.
நீங்கள்தான் சிந்திக்க வேண்டும். சிந்தியுங்கள். எப்படி பதில் வருகிறது என்று பார்ப்போம். பதிவுகள் சிந்திபதற்காக. திட்டிக்கொள்வதற்கன்று.
//ஒரு ஏழைத்தொழிலாளி நாவல் படித்தால் அவன் வாழ்க்கைப் பிரச்சினை தீருமா? அவன் குழந்தைகளுக்கு ஒருவேளையாவது சாப்பாடு கிட்டுமா? இலக்கியத்தால் அவனுக்கு என்ன நன்மை? என்பதே கேள்வி.
இதற்கு நேரடியான பதில் தேவை.//
நேரடியான பதிலையே அளிக்கிறேன்.
1) நிச்சயமாய் தீராது.
2) சோறு கிட்டாது.
3) நேரடி நன்மை என்று எதுவும் இல்லை.
ஒரு ஏழைக்கு விஷ்ணுபுரத்தாலோ, பல நேரங்களில் பல மனிதர்களோ, பொன்னியின் செல்வனோ பொருட்டல்ல.. அவை வெறும் குப்பைக்காகிதங்களே. இந்த விஷயத்தில் இப்போது நான் உங்கள் பக்கம் இருக்கிறேன்.
சரி.. இதற்கும், ஜெயமோகனிடம் இலக்கியம் உமக்கு ஒரு கேடா என்று கேட்பதற்கும் என்ன சம்பந்தம்?
நாட்டில் ஏழைகள் ஒழிந்தால்தான் எழுத்தாளர்கள் இலக்கியம் படைக்கவேண்டுமா.. என்பதுவே என் கேள்வி. இதற்கு நேரடியான பதில் சொல்லுங்கள்.
நேரடியான பதிலையே அளிக்கிறேன்.
இந்த விஷயத்தில் இப்போது நான் உங்கள் பக்கம் இருக்கிறேன்.
சரி.. இதற்கும், ஜெயமோகனிடம் இலக்கியம் உமக்கு ஒரு கேடா என்று கேட்பதற்கும் என்ன சம்பந்தம்?
நாட்டில் ஏழைகள் ஒழிந்தால்தான் எழுத்தாளர்கள் இலக்கியம் படைக்கவேண்டுமா.. என்பதுவே என் கேள்வி. இதற்கு நேரடியான பதில் சொல்லுங்கள்.//
நேரடியான பதில் சொல்லிவிட்டீர்கள்.
Well done!
சரி, இதற்கும் ஜெயமோகனிடம் இலக்கியம் உமக்கு ஒரு கேடா என்று கேட்பதற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விக்கு வருண் தான் பதில் சொல்லவேண்டும்.
நான் ஜெயமோஹனைப்பற்றி எழுதியதைப் படிக்கவில்லையா? கேள்வி கேட்டவர் ஒரு தப்பான கேள்வியைக் கேட்கவில்லை. அஃது எல்லாரும் கேட்பதுதுதான். ஒரு எழுத்தாளர் அக்கேள்விக்குப் பதில் சொல்லவேண்டும். ஜெயமோஹன் சொல்லாமல் கேட்டவரை இழிவுபடுத்து பதில் போடுகிறார்
ஒரு மாபெரும் எழுத்தாளருக்கு இஃது அழகன்று. எனினும், நான் மேலும் சொன்னது போல, கேட்டவர் நற்சொற்களைப் பயன்படுத்தி கேட்கவில்லை. அஃது ஒருவேளை ஜெயமோஹனை கோபமடையச்செய்து அக்கேள்வியாளரைப் பழிக்குப்பழியாக இழிவுபடுத்தியிருக்கிறார்.
ஒரு மாபெரும் எழுத்தாளர் இப்படிச் சிறுபிள்ளைத்தனங்களில் இறங்கமாட்டார். எனவேதான் வருண் ‘இவருக்கு இலக்கியம் ஒரு கேடா? என்று கேட்டிருக்கலாம் என்பதே என் கருத்து. உங்கள் கருத்தென்ன?
இலக்கியமென்றால் என்ன ரிஷி? மன முதிர்ச்சியடைந்தவர்களுக்கு, நேரம் நிறைய உடையோர் அதைப்போக்குவதற்கு, அடுத்த வேளை உணவுமட்டுமன்று. எவ்வேளை உணவுக்கும் கவலையில்லாதவர்களுக்கு மட்டுமா?
இதற்குப்பதில் சொல்லுங்கள். நான் பதில் சொல்கிறேன்.
Rishi, pl note. Not only to this questioner, but to many he replies insultingly. He likes only those who agree with him. For others, either he insults, or block them from his blog.
He is afraid of criticisms if they point out that there is something wrong here or there, in his opinions or writings. He believes that he is impeccable, and unimpeachable.
He may be a good writer (but in parts!) but very childish in behaviour.
You may say, we mus take his writings only. No doubt. But when we discuss him as a person, what remains is only his bad behaviour. That definitely has irked many, many, and varun is one of them I believe.
நேரடியான பதிலையே அளிக்கிறேன்.
3) நேரடி நன்மை என்று எதுவும் இல்லை.//
உண்டு என்று வரலாறு நிரூபித்திருக்கிறது.
ஆனால் நான் எப்படி என்று சொல்லமாட்டேன். ரிஷியின் கட்சியது!
நன்றி ரிஷி மற்றும் பாஸ்ஸர்பை, விவாதத்தை ந்ன் முறையில் கொண்டு வந்ததற்கு! :)
***ரிஷி said...
//ஒரு ஏழைத்தொழிலாளி நாவல் படித்தால் அவன் வாழ்க்கைப் பிரச்சினை தீருமா? அவன் குழந்தைகளுக்கு ஒருவேளையாவது சாப்பாடு கிட்டுமா? இலக்கியத்தால் அவனுக்கு என்ன நன்மை? என்பதே கேள்வி.
இதற்கு நேரடியான பதில் தேவை.//
நேரடியான பதிலையே அளிக்கிறேன்.
1) நிச்சயமாய் தீராது.
2) சோறு கிட்டாது.
3) நேரடி நன்மை என்று எதுவும் இல்லை.***
நன்றி ரிஷி!
இதைச் சொல்லி, அதனால இலக்கியம் தேவையில்லைனு சொல்லிவிட முடியாது என்பதை ( தேவை என்பதற்கான காரணங்களைச் சொல்லி) ஜெயமோகன் தெளிவு படுத்தியிருக்கலாம். அவ்வளவே எதிர்பார்க்கப்பட்டது!
---------
மாறாக, நம்ம சுனுந்தா போல், எய்தப்பட்ட கேள்வியை மதித்து அதற்காக பதிலை கொடுக்காமல், கேள்வி கேட்டவனை முட்டாள் முட்டாள் என்பதால், எல்லாம் தெரிந்த மேதாவி சுனுந்தாவும் முட்டாளாகத்தான் ஆகிறார்!
ஹலோ வருண் நல்லாருக்கிங்களா ...!! நகைசுவையும் தமிழ் சினிமாவும் என ஒரு கட்டுரை . அதில் மலையாளிகள்தான் ரசனையில் சிறந்தவர்கள் என்றும் , தமிழர்கள் முட்டாள்கள் என்றும் ஜெயமோகன் எழுதி இருக்கிறார்..
இவருடைய தாய் மொழி மலையாளமாக இருக்கலாம் அதற்காக தமிழர்களை முட்டாள்கள் என்று சொல்லலாமா?? இவரை செ...ல அடிக்கவேண்டும்..
இவரு எதுவேண்டுமானாலும் எழுதிக்கொள்ளட்டும் ஆனால் தமிழர்களை முட்டாள்கள் னு சொன்னது மிகப் பெரிய தவறு..இதுவே கேரளாவில் நடந்திருந்தால் மலையாளிகள் சும்மா இருப்பார்களா??
சாகோதாரர் நாசர், நான் இது சம்மந்தமாக ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருக்கேன். நேரம் கிடைத்தால் என்னனு பாருங்க! :-)
சாருவுக்கும், ஜெயமோகனுக்கும் மறுபடியும் கருத்து வேறுபாடு?!
Post a Comment