"ஏய்! சுவேதா! ஆமா என்ன ஆச்சு? உன் நண்பர் "சுரேஷ்"க்கு ஒரு ஹாய் கூட சொல்ல மாட்டேன்கிற?"
"அந்த கருத்துக்களத்திலேயா?"
"ஆமா. முன்னால் எல்லாம் ரொம்ப நல்லா பேச்சிக்குவ. இப்போ என்ன ஆச்சு? ஒரு ஹாய்கூட சொல்ல மாட்டேன்கிற?"
"நீங்க எப்போதாவது பொண்ணா இருந்து இருக்கீங்களா, ராஜ்?"
"ஏன் இப்படி ஒரு கேள்வி?"
"ஒரு பொண்ணா இருந்தீங்கன்னாத்தான் கீழ்த்தரமான ஆம்பளைங்க பத்திப் புரியும்"
"ஏய்! ட்ரை மி ப்ளீஸ்!"
"இந்த ஆளூ ஒழுங்கா பேசுறார். கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தை இருக்கு. இவரும் ஐ டி ல தான் இருக்கார்னு என் ஃபோன் # கொடுத்தேன்"
"கால் பண்ணி பேசினாரா?"
"மொதல்ல ஒழுங்காத்தான் பேசினார். ஏதோ ஜோக் அடிப்பார், எனக்கு சிரிப்பு வராது. இருந்தாலும் சிரிச்சு வைப்பேன்"
"ஏய் இழுக்காமல் சொல்லேன்?"
"ரொம்ப
"inappropriate"டா நடந்துக்கிட்டார், ராஜ். ஒரு நாள் கேவலமா ஏதேதோ
பேசிட்டார். ஏதோ ஜோக் அடிக்கிறது போலே. ஐ நோ ஹி மெண்ட் இட்"
"என்னதான் சொன்னார்?"
"அதை உங்ககிட்ட சொல்லவே கஷ்டமா இருக்கு.. ராஜ் !"
"சும்மா எனக்கு மட்டும் கேக்கிறார்போல சொல்லு! ப்ளீஸ்?"
அவள் அதை சொன்னாள்
"வாட் எ ச்சீப் பாஸ்டட் ஹி இஸ்! எப்படி இப்படி எல்லாம் கேக்கலாம் உன்னிடம்?"
"என்னை கேட்டால்? நீங்களும் ஆம்பளைதான் உங்களுக்குத்தான் தெரியனும்"
"ஏய்! நான் எல்லாம் நான் யார்ட்டயும் அப்படி நடந்ததே இல்லைப்பா"
"ரொம்ப அருவருப்பா இருக்கு, ராஜ். அந்த ஆளைப் பத்தி நெனைக்கவே! என்ன மட்டமா நடந்துக்கிறான்!"
"நாடுவிட்டு
நாடு வந்திருக்கோம். இவரும் ஒரு தமிழர்தானே? கல்யாணம் ஆனவர்னு நம்பி நீ
ஃபோன் # கொடுத்த! இவ்வளவு கீழ்தரமான ஆளா இருப்பான்னு நான் கனவு கூட காணலை"
"நானும்தான். என்னால நம்பவே முடியலை. ஒரு நிமிஷம் நான் பேசவே இல்லை. அப்புறம் எப்படியோ ஹாங் அப் பண்ணினேன்"
"ஏன்
இப்படி நம்ம தமிழர்களே இன்னொரு தமிழ் பொண்ணுட்ட மட்டமா நடந்துக்கிறாங்க?
அதுவும் கல்யாணம் ஆனவன்! பொறுக்கியைவிட கேவலமா நடந்து இருக்கான்"
" தமிழன்னா என்ன? அவனும் ஆம்பளைதான், ராஜ்!"
"என்ன சொல்ற?"
"அடுத்த ஜென்மத்தில் பொண்ணாப் பிறந்து பாருங்க! இந்த ஜென்மங்களின் உண்மை சுரூபம் அப்போத்தான் தெரியும், ராஜ்!"
*****
இது ஒரு மீள் பதிவு!
4 comments:
உண்மை தான்... நல்ல பகிர்வு.
***Ayesha Farook said...
உண்மை தான்... நல்ல பகிர்வு.***
வாங்க, ஆயிஸா!
தங்கள் கருத்துக்கு நன்றிங்க!
//" தமிழன்னா என்ன? அவனும் ஆம்பளைதான், ராஜ்!"//
கரெக்ட். எவ்வளவுதான் உத்தமனாக இருந்தாலும் சில நேரங்களில் தானும் ஒரு ஆண்தான் என்று சபலப்படும் போக்கு அனைவரிடமும் இருக்கும்.
சகோதரன் சுவனப் பிரியன்!
சில கசப்பான அனுபவங்களால், ஒரு சில ஆண்கள் மேல் ஏற்படும் வெறுப்பால், "எந்த ஆம்பளையையும் நம்பமுடியாது போல?" என்கிற கேள்வியை தொடுக்கிறாள்.
ஆனால் எல்லா ஆண்களும் பெண்களிடம் தவறாக நடப்பதில்லை! தங்கள் உணர்வுகளை கட்டுக்கோப்புக்கு கொண்டுவந்து நாகரிகமாக நடப்பவர்கள் இருக்கத்தான் செய்றாங்க! :)
Post a Comment