Thursday, September 17, 2009

அழகா இருக்கிறது வரமா? இல்லை சாபமா?



அந்தக்காலத்து fairy tale ல கூட ஹீரோ, ஹீரோயின் அழகானவங்களாத்தான் இருப்பாங்க. சிந்தரல்லா, ஸ்னோ வைட், ஆலிஸ் (in wonderland) இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சமீபத்தில் வந்த "ஸ்ரெக்" மட்டும் ஒரு எக்ஸப்ஷன்னு சொல்லலாம். அதாவது fairy tale ல எல்லாமே அழகா, பணக்காரரா இருக்கவங்கதான் நல்லவங்களா, இளவரசியா, ஹீரோயினா இருப்பாங்க. கொஞ்சம் கருப்பாவோ, அவலச்சணமாவோ இருந்தால் அவங்களுக்கு உள்ளத்திலும் நல்ல எண்ணமோ, நல்ல குணமோ இருக்காது என்பது போலதான் இருக்கும். பார்க்க நல்லா இல்லாதவங்க ஏதாவது மோசமான செயல்கள்தான் செய்வாங்க! அவர்களுக்கு நல்ல உள்ளமும் இருக்காது!!!

பொதுவா உலகில் ஒருவர் அழகா இருந்தாத்தான் நடிகையாகலாம். நாலு பேர் உங்களைப் பார்ப்பாங்க! உங்களோட பழகத் துடிப்பாங்க. உங்களை காதலிப்பாங்க! அரேஞ்சிட் மேரேஜ் செட்டிங்ஸ்ல அழகா இருந்தால்தான் உங்களைக் கல்யாணமும் ஆசையுடன் பண்ணிக்குவாங்க! Lots of my friends say that their top priority is how beuatiful the girl is. அழகு என்பது ஒரு கிஃப்ட்னு தான் அழகுப்போட்டி நடத்துறவங்களும் பெருமையாக சொல்லிக்கிறாங்க!

இருந்தபோதிலும், அழகா இருக்கிறதிலே பல பிரச்சினைகளும் உண்டு!

* இன்று நடிகையாக இருந்து எல்லோருடைய உள்ளத்தையும் கவர்ந்தவர் ஒரு 10 வருடமான பிறகு (நம்ம 80ஸ்ல இருந்த கதாநாயகிகளைப் பாருங்க), குண்டா, முதுமைதட்டி இருக்கும்போது, டிப்ரெஷன் இவர்களை தொத்திக்கொள்கிறது. இன்று உள்ள இளநடிகைகளைப் பார்த்து பெருமூச்சு விடுறாங்க. அன்று இவர்களைப்பார்த்து ரசித்த ஆடியண்ஸ் இன்று இவர்கள் வரும் சீன் களில் தம் அடிக்க வெளியே போயிடுவாங்க!

* இன்னொரு கொடுமைஎன்னனா உங்கள் தகுதிக்காக, திறமைக்காக கிடைத்த ஒரு வேலையை, அல்லது ப்ரமோஷன் அல்ல்து ரிவார்டைக்கூட நீங்க அழகா இருப்பதால் உங்களுக்கு சும்மா கொடுக்கப்பட்டதாக ஊர் உலகம் பேசும்! நீங்க அழகா இருப்பதால் அந்த ஜொள்ளன் (வாத்தியான்) உங்களுக்கு மார்க்கை அள்ளிப்போட்டுட்டான் னு சொல்லுவாங்க. இதுபோல பொறாமையில் பலர் வ்யிறெரிவதை தவிர்க்க முடியாது. உங்களுக்கே உங்கள் திறமைமேல் சந்தேகம் வைத்து விடுவார்கள்.

* ஒரு சில அழகா உள்ளவுங்க எந்நேரமும் மேக் அப் போடுவது, கண்ணாடி முன்னால் 24 மணி நேரமும் நிற்பது, மற்றவர்கள் அவர்களை வேடிக்கை பார்ப்பதை ரசிப்பது, அடுத்தவர் அட்டென்ஷனுக்காகவே வாழ்வது என்று இதுபோல் வெட்டி விசயங்களில் தன் மனதை செலவழித்து வீணாப் போவதும் உண்டு. They care only about the look most. Nothing else. They forget that there is so much in this world which has nothing to do with beauty.

Let us leave the beauty aside and look at some issues in general. Life would be fair if and only if everyone is born equal. That is not what we see. Some of us are born beautiful or rich or brainy and some of us are not good-looking or poor or dumb. Some of us are having a good mom and dad and some of us are born for a prostitute and pimp as well.Life is not fair, some unfortunate ones will certainly complain. God is not being fair, they will curse the God. Dont you think a son or daughter of a prostitute or a pimp has the right to say God is not fair? However we all should know that NOBODY is superior than ourselves. Somehow when we add and subtract, we all should come up with the same #. We have to dig out deep into ourselves and see what is the best thing we have. We must have something special. We must be good at something. At least we should try, find that and excel in it.

No comments: