"எங்கே உங்களை ஆளையே காணோம்? எங்கே போனீங்க, கண்ணன்"
"கண்ணை மூடுனா சொன்னபடி அப்படியே கேக்கிறயே. ரொம்ப நல்ல பொண்ணு நீ!" அவன் குரல் அவள் முதுகுப்புறமிருந்து வந்தது.
"உங்க மேலே ஒண்ணும் பெரிய நம்பிக்கைலாம் இல்லை! ஒரு ஹிடன் கேமரா ஆண் பண்ணி வச்சிருக்கேன். நான் கண்னை மூடி இருக்கும்போது நீங்க ஏதாவது திருட்டுத்தனம் பண்ணினால் அதிலே தெரியும். ஜாக்கிரதை"
"உன் வீட்டில் இருந்து எதையாவது திருடினாலா?"
"அந்தத் திருட்டுத்தனம் இல்லை! இவதான் கண்ணை மூடி இருக்காளேனு உங்க ஆராய்ச்சியை என் மேலே பாய்ச்சினால்"
"நீ திருட்டுத்தனமா மனசுல கற்பனை பண்ணுவதை எல்லாம் நான் எப்படி படம் பிடிப்பது?"
"என்ன கற்பனை பண்ணினேன்?"
"நீ ரொம்ப கெட்ட கற்பனைலாம் பண்ணுறனு என் சிக்ஸ்த் செண்ஸ் சொல்லுது. உண்மையா பிருந்தா?"
"என் மனசுலகூட எனக்கு ப்ரைவஸி கிடையாதா? இதெல்லாம் அநியாயம், கண்ணன்"
"என்ன கற்பனை பண்ணின, பிருந்தா?"
"அதெல்லாம் சொல்ல முடியாது!"
"இப்படியெல்லாம் கெட்ட கெட்ட கற்பனைபண்ணினால் எப்படி தூக்கம் வரும்?"
"அது எனக்கு கெட்ட கற்பனையா தோனலையே. அதான் உங்களை இங்கே இருந்து என்னைத் தூங்க வைக்க சொல்றேன்"
"நீ நல்லாத் தூங்கிடுவ, சரி. என் கதி?"
"ஆமா, என் பின்னால போய் நின்னு என்ன ஆராய்ச்சி பண்ணுறீங்க, கண்ணன்?"
"ஒண்ணும் பண்ணல" அவள் காதருகில் அவன் குரல் கேட்டது.
"கண்ணை மூடி இருக்கும்போது அங்கே இங்கே ஆராய்ச்சி பண்ணுறீங்களா?"
"நீ பேசுறதைப் பார்த்தால் உன்னை திருட்டுத்தனமா நான் பார்த்து ரசிப்பதை ரெக்கார்ட் பண்ணி டேப்ல பார்த்து ரசிப்ப போல இருக்கு"
"கண்ணன்! நீங்க ரொம்ப மோசம் தெரியுமா?'
"சரி, வேலையிலிருந்து வந்ததும் இப்போ குளிச்சியா?"
"ஆமா. எப்படித் தெரியும்?"
"பார்த்தா தெரியுது. ஏய்! உன் கழுத்திலே ஏதோ நறுமணம் வருது, பிருந்தா. உங்க அம்மா சொன்னது என்னவோ சரிதான்"
"அம்மாவா? என்ன சொன்னாங்க?"
"அதான்.. நான் உன் அழகில் மயங்கி உன்னை ஏதாவது செஞ்சிருவேன்.. நீ கவனமா இரு.. அது இதுனு சொன்னாங்க இல்ல?"
"உங்களை ரொம்ப நல்லவர்னு நெனச்சேன். நான் மோசம் போயிட்டேனா?"
"ஏன் நான் கொஞ்சம் கெட்டவரா இருந்தால் பிடிக்கலையா?'
"இல்ல.."
"பிடிக்குமா?'
"---"
"நீ ரொம்ப பொல்லாதவள் தெரியுமா?" அவள் பின்புறமிருந்து தோள்களை இரண்டு கைகளாலும் மெல்ல பிடித்து அவள் கன்னத்தில் லேசாக முத்தமிட்டான். அவன் நாடி அவள் வலது தோளின் மேல் இருந்தது.
அவன் உதடு அவள் கன்னத்தில் பட்டதால் அவள் உடம்பில் என்னென்னவோ நடந்தது. அவள் பதிலேதும் சொல்லவில்லை.
"---"
"இல்லையா?"
"---"
"ஏய்!"
"இப்போ எதுக்கு இந்த முத்தம்?"
"சும்மா அன்பா. கன்னத்திலேதானே கொடுத்தேன்? அதில் தப்பில்லை"
"யார் சொன்னா? அதோட விளைவுகளை அனுபவிப்பது நான். எனக்குத்தான் தெரியும்"
"நெஜம்மாத்தான் கன்னத்தில் முத்தம் கொடுப்பது சும்மா அன்பு முத்தம். வேணும்னா உங்கம்மாவை கால் பண்ணி கேளேன்?'
"என்ன கேக்க?'
"அம்மா! உதட்டில் முத்தம் கொடுத்தாத்தான் தப்பு, கன்னத்தில் கொடுத்தா தப்பில்லைனு ஒருத்தர் சொல்றாரு. அது உண்மையானு" கேளு!"
"சரியாப் போச்சு! உங்க அகராதிப்படி வேறெங்கே முத்தம் கொடுத்தா ரொம்ப தப்பு?'"
"உன் காதில் சொல்லுறேன். சரியா?"
"சொல்லுங்க'"
அவன் அவள் காதில் முனுமுனுத்தான்.
"நீங்க ரொம்ப ரொம்ப மோசம், கண்ணன்"
"ஏன் உன் முகம் இப்படி செவக்குது?"
"இப்படி ஒரு அசட்டுக்கேள்வி வேறயா? உங்களை என்ன செய்யலாம்"
யாரோ டோரை நாக் பண்ணினார்கள்
"யாரோ கதவை தட்டுறாங்க"
"சரி போய் யாருனு பாரு!"
பிருந்தா டோர் ஹோல் வெளியாகப்பார்த்தாள். கதவைத் திறந்தாள்.
-தொடரும்
4 comments:
கைரேகை எப்படி ஒவ்வொருத்தருக்கும் தனித்துவமா இருக்குமோ அதே போல எழுத்து நடையும் இருக்கும் என்பதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க? அதாவது எழுதுறது இன்னார்னு கொஞ்சம் விவரமானவங்களால கண்டுபிடிச்சிர முடியும். சரியா?
ரொமான்ஸா எழுதறீங்க...
லதானந்த் said...
***கைரேகை எப்படி ஒவ்வொருத்தருக்கும் தனித்துவமா இருக்குமோ அதே போல எழுத்து நடையும் இருக்கும் என்பதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?***
உண்மைதான், ஆனால் கற்பு சீரீஸ்க்கும், கதைகளுக்கும் வேற வேற எழுத்து நடை இருக்கும். நான் எழுத்துப்பிழை அதிகம் விடுவேன். நம்ம டீம் மெம்பெர் எழுத்துப்பிழை விடமாட்டாங்க. நீங்க கவனிச்சு பார்த்தால் தெரியும் :)
***அதாவது எழுதுறது இன்னார்னு கொஞ்சம் விவரமானவங்களால கண்டுபிடிச்சிர முடியும். சரியா?
6 September, 2009 7:25 AM***
ஒரு நாள் உங்களுக்கும் புரியும்னு நம்புறேன் :-)))
***குறை ஒன்றும் இல்லை !!! said...
ரொமான்ஸா எழுதறீங்க...
6 September, 2009 9:45 AM***
ஆமாங்க ரொமாண்ஸையும் கடந்திடுமானு பயம்மா இருக்கு :))))
Post a Comment