Saturday, September 5, 2009

நடிகவேள் vs சத்யராசு!


பகுத்தறிவுவாதிகளில் எம் ஆர் ராதா ஒரு தனித்துவம் வாய்ந்தவர்தான். திராவிட பாரம்பரீகத்தில் வந்த எம் ஜி ஆர் தாய் மூகாம்பிகா பக்தர் மற்றும் இன்றைய முதல்வர் கருணாநிதிகூட சாய்பாபாவிடம் நட்பு பாராட்டுகிறவர் மற்றும் நாத்தீகவாதிகள் ஒதுக்கும் மஞ்சள் கலரை ஏற்றுக்கொண்டு தழுவிக்கொள்பவர் என குற்றச்சாட்டுகளை அடுக்கலாம். ஆனால் நடிகவேள் எம் ஆர் ராதா நாத்தீகவாதிகளில் இதுபோல் எதுவும் குறை சொல்ல முடியாதவர்.

இவர் நடித்த ரத்தக்கண்ணீர் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு! மேலும் தனிப்பட்ட தன் சொந்தப்பிரச்சினையில் எம் ஜி ஆரையே எதிர்த்து சுடுகிற அளவுக்கு ஒரு தைரியமான ஆள். ஊருக்காக வாழ்ந்தவனல்ல எம் ஆர் ராதா. அவருக்கு நிறைய கேர்ள் ஃப்ரெண்டுகளும் இருந்தார்கள் என்பது உலகமறியும். அதை என்றுமே மறுத்ததும் இல்லை!

எம் ஆர் ராதா கடவுள் பக்தராக நடித்த "ஆளவந்தான்" (பாவ மன்னிப்பு) போன்ற ரோல்களிலும் அவர் கடவுளை கேலிபண்ணுவது போல்தான் இருக்கும். கடவுள் பேரைச்சொல்லி ஊரை ஏமாற்றும் ஒரு கேரக்டராகத்தான் நடித்தார். He was always himself- னு சொல்லாம். அவர் கடவுளை வணங்குவது கூட கேலி பண்ணுவதுபோல்தான் இருக்கும்.

நடிகர்களில் இப்போ நம்ம பார்க்கிற பகுத்தறிவுவாதி சத்யராஜ், கமலஹாஷன் எல்லாம் எம் ஆர் ராதா பக்கத்தில்கூட நிற்கமுடியாது! நடிப்பும் சரி, ஒரிஜினாலிட்டியும் சரி, தன் பகுத்தறிவு எண்ணங்களை தைரியமாக சொல்வதிலும் சரி.

நடிகவேளுக்கும் சத்யராஜுக்கும் பெரிய வித்தியாசம் ஒண்ணு இருக்கு. அது என்னனா நடிகவேள், எம் ஜி ஆருக்கு ஒரு நாளும் ஜால்ரா அடித்ததில்லை. சத்யராஜ், எம் ஜி ஆருக்கு ஜால்ரா அடிக்காமல் இருந்த நாளில்லை!

26 comments:

மணிகண்டன் said...

சத்யாரசுக்கு எம் ஜி ஆர் பிடிக்கும். அதுனால அவர் புகழ் பாடறார். நாத்திகவாதி எல்லாம் இறை நம்பிக்கை உள்ளவங்க கிட்ட பேசவே கூடாதா ?

குறை ஒன்றும் இல்லை !!! said...

ம்ம்ம்... ஒணணும் சொல்ரதுக்கு இல்லே..

வருண் said...

மணிகண்டன் said...
சத்யாரசுக்கு எம் ஜி ஆர் பிடிக்கும். அதுனால அவர் புகழ் பாடறார். நாத்திகவாதி எல்லாம் இறை நம்பிக்கை உள்ளவங்க கிட்ட பேசவே கூடாதா ?

5 September, 2009 9:01 AM***

First of all, I am not sure I ever said that Sathyaraj should not like or love MGR.

Nothing wrong in liking someone, but when you want to deliberately say that to the world and public repeatedly or claim yourself "m g r fan" (as if it is HONOR or something) or as "karuppu em jee aar" it reveals that your intention is "rather POLITICAL" or "for self benefit".

Being an actor fan is nothing to be proud of nomatter whoi the actor is.

ஒருவர் தன்னை ஒரு விசிலடிஞ்சான் குஞ்சினு சொல்வதில் என்ன பெருமை வேண்டிக்கெடக்கு?!

வருண் said...

***குறை ஒன்றும் இல்லை !!! said...
ம்ம்ம்... ஒணணும் சொல்ரதுக்கு இல்லே..***

freeA விடுங்க! :-)))

மணிகண்டன் said...

**
Being an actor fan is nothing to be proud of nomatter whoi the actor is.
**

but the actor was also CM of our state !

வருண் said...

What difference it makes?! One become a fan watching his movies. Seeing him in the silver screen.

So, according to you,

MGR and JJ fans and NTR fans are superior than Sivaji or Kh fans?! Becasue the former ones were CMs of TN and AP???

I dont think so! Neither do I think Arnold Schwarzenegger fans are superior than AlPacino or Robert De Niro or Clint Eastwood fans.

Fans are all same!

raja said...

மிக பிரமாதமான கட்டுரை வாழ்த்துக்கள் இந்த சத்யராஜ் கமலகாசன் ஐயோ வேணாம் பேசவே வேணாம் ....எம்.ஆர்.ராதா ஒரு நவீன சிந்தனையாளன் ஒரு நாள் கூட இந்த கமலகாசன், ராதா பத்தி பேசினதில்ல (என் சிறிய அறிவுக்கு எட்டியவரையில்) இன்னும் நூறு ஆண்டுக்கு ராதா உயிரோட இருப்பாரு தயவு செஞ்சு ராதா வோட பெற யாரோடவும் சேக்காதீங்க (பெரியார் கூட ) ...

T.V.Radhakrishnan said...

//தயவு செஞ்சு ராதா வோட பெற யாரோடவும் சேக்காதீங்க //

Repeateyyy

முகிலன் said...

ராதா பகுத்தறிவாளர் மட்டுமல்ல. ஒரு தலை சிறந்த நடிகர். "ராதா அண்ணனப் பாத்துத்தான் நானெல்லாம் நடிக்கவே வந்தேன்" இது யாரோ சொல்லியதல்ல, இந்த நூற்றாண்டின் சிறந்த நடிகர் என்று கமல் மூச்சுக்கு முந்நூறு முறை கூறும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனே கூறியது. அவரை சத்யராஜோடு ஒப்பிடுவது என்பது அவருக்கு செய்யும் அவமானமாக நான் கருதுகிறேன். மற்றபடி உங்கள் கட்டுரை சூப்பர்.

ஜோ/Joe said...
This comment has been removed by a blog administrator.
வருண் said...

***raja said...
மிக பிரமாதமான கட்டுரை வாழ்த்துக்கள் இந்த சத்யராஜ் கமலகாசன் ஐயோ வேணாம் பேசவே வேணாம் ....எம்.ஆர்.ராதா ஒரு நவீன சிந்தனையாளன் ஒரு நாள் கூட இந்த கமலகாசன், ராதா பத்தி பேசினதில்ல (என் சிறிய அறிவுக்கு எட்டியவரையில்) இன்னும் நூறு ஆண்டுக்கு ராதா உயிரோட இருப்பாரு தயவு செஞ்சு ராதா வோட பெற யாரோடவும் சேக்காதீங்க (பெரியார் கூட ) ...

6 September, 2009 12:30 AM***

ராதாவைப்போல இவர்களும் நாத்தீகவாதிகள் என்பதால் இவர்களை "தொட" வேண்டியதாயிற்று!

வருண் said...

***T.V.Radhakrishnan said...
//தயவு செஞ்சு ராதா வோட பெற யாரோடவும் சேக்காதீங்க //

Repeateyyy

6 September, 2009 3:40 AM ***

தங்கள் கருத்துக்கு நன்றி, டி வி ஆர்!

வருண் said...

^^^முகிலன் said...
ராதா பகுத்தறிவாளர் மட்டுமல்ல. ஒரு தலை சிறந்த நடிகர். "ராதா அண்ணனப் பாத்துத்தான் நானெல்லாம் நடிக்கவே வந்தேன்" இது யாரோ சொல்லியதல்ல, இந்த நூற்றாண்டின் சிறந்த நடிகர் என்று கமல் மூச்சுக்கு முந்நூறு முறை கூறும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனே கூறியது. அவரை சத்யராஜோடு ஒப்பிடுவது என்பது அவருக்கு செய்யும் அவமானமாக நான் கருதுகிறேன். மற்றபடி உங்கள் கட்டுரை சூப்பர்.***

தங்கள் கருத்துக்கு நன்றி முகிலன் :-)))

ஜோ/Joe said...

//This post has been removed by a blog administrator.//

சபாஷ்!

ஜோ/Joe said...

"சம்பந்தம் சம்பந்தம் இல்லாத கருத்துக்கள்" என்ற என் பின்னூட்டத்தை ஓடி வந்து அழிக்கும் இவர் எம்.ஆர்.ராதா , கருத்துரிமை பற்றி பேசுகிறார். :)

வருண் said...

Dear Joe:

This is not your "mayyam" to run as you wish and say anything you want. Your "general comment" was useless to this blog and it was irritating andprovoking me to digress. So I was forced to remove it. You may rate your comment highly but it was worthless to this blog. I hope you understand.

வருண் said...

***ஜோ/Joe said...
"சம்பந்தம் சம்பந்தம் இல்லாத கருத்துக்கள்" என்ற என் பின்னூட்டத்தை ஓடி வந்து அழிக்கும் இவர் எம்.ஆர்.ராதா , கருத்துரிமை பற்றி பேசுகிறார். :)***

தமிழ்லயே சொல்றேன், உங்க பின்னூட்டம் ஏதோ நீங்க ஒரு பெரிய மேதாவிபோல காட்டுது. இங்கே மேதாவியோட எரிச்சல் தரும் பின்னூட்டமெல்லாம் தேவை இல்லை.
இந்த திரிக்கு அது எந்த வகையிலும் உபயோகம் இல்லை. அதனால் அதை எடுக்க வேண்டிய நிர்பந்தம். மன்னிக்கவும்!

ஜோ/Joe said...

//மன்னிக்கவும்!//
சரி :))

DHANA said...

மிகவும் நல்ல பதிவு

Gnani said...
This comment has been removed by the author.
மணிகண்டன் said...

***
MGR and JJ fans and NTR fans are superior than Sivaji or Kh fans?! Becasue the former ones were CMs of TN and AP???
***

I was just pointing out to the fact that MGR was our CM. And so, if someone is fan of him, it is tough to differentiate whether he likes him as a CM or a actor or both or just as a person !

And my personal opinion is that MGR fans are superior than sivaji fans. And fans of pandiyarajan are superior to MGR fans.

the previous comment was deleted by me coz the display name was gnani and there is a famous writer by that name !

வருண் said...

***And my personal opinion is that MGR fans are superior than sivaji fans. ***

LOL!

OK, the discussion ends here. I dont think I am inferior to an MGR fan! It is my personal opinion too!

மதிபாலா said...

சற்றும் பொருத்தமான ஒப்பீடாகத் தான் தோன்றவில்லை...

நடிகவேள் இமயம்...!

கிருஷ்குமார் said...

Ndiga velodu oppida mudiyaadhu daan ,,Aaanal indraya nadigargalil pettigalin podhu nermaiyagavum ,iyalbaagavum pesuvadhu sathyaraj oruvar dhan yendru ninaikiren..

வருண் said...

***மதிபாலா said...
சற்றும் பொருத்தமான ஒப்பீடாகத் தான் தோன்றவில்லை...

நடிகவேள் இமயம்...!

7 September, 2009 7:03 AM***

உண்மைதான் மதிபாலா. நடிகவேள், இவர்கள் எல்லோருக்கும் எட்டாத ரொம்ப உயரத்தில்தான் இருக்கிறார். :))

வருண் said...

***கிருஷ்குமார் said...
Ndiga velodu oppida mudiyaadhu daan ,,Aaanal indraya nadigargalil pettigalin podhu nermaiyagavum ,iyalbaagavum pesuvadhu sathyaraj oruvar dhan yendru ninaikiren..

7 September, 2009 7:32 AM***

தங்கள் கருத்துக்கு நன்றி, கிருஷ்குமார் :)