Tuesday, September 22, 2009
பாக்ஸ் ஆஃபிஸில் உன்னைப்போல் ஒருவன் நிலவரம்!
சந்தேகமே இல்லாமல் பத்திரிக்கைகளில் க்ரிடிக்ஸ் இந்தப் படத்தை மேலே தூக்கி உள்ளனர். தமிழ் வலையுலகம் எல்லாம் கமல் புகழ்பாடுவது ஆச்சர்யம் அல்ல. ஆனால் இந்தப் படத்திற்கு நல்ல விமர்சனம் எழுதினாலும், இஸ்லாமியர்களை பயங்கரவாதியாக காட்டி இருப்பது பலருக்கு எரிச்சலை கிளப்பியுள்ளது. கமலைத் தவிர வேறு யாரும் இதைச் செய்து இருந்தால் இதை வைத்தே பொழைப்பை ஓட்டியிருப்பார்கள். கமலென்பதால் அதையும் பூசி மொழுகி மற்ற நல்ல விசயங்களை பாராட்டி இருக்கிறார்கள் வலையுலக கமல் பக்தர்கள். சரி, இப்போ உன்னைப்போல் ஒருவன் பாக்ஸ் ஆஃபிஸில் எப்படி போகிறது என்று பார்ப்போம்.
இன்றுவரை ஓவெர் சீஸ்ல படம் சுமாராகத்தான் போகிறது. அமெரிக்கா, யு கே யிலெல்லாம் பெரிய அளவில் போகவில்லை! எதோட கம்பேர் பண்ணினால்? தசாவதாரத்துடன் கம்ப்பேர் பண்ணினால் மட்டுமல்ல பொதுவாகவே எல்லா வெளிநாடுகளிலும் இந்தப் படம் பெரியவிதமாகப் போகவில்லை.
சென்னையில் 11 திரையரங்குகளில் நல்லவிதமாக வெற்றிகரமாகப் போய்க்கொண்டிருக்கிறது. இன்னும் 3 வாரங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் தெளிவாகத் தெரியும். மற்றபடி B and C செண்டர்களில் படத்தை பெரிய தொகைக்கும் விற்கவில்லை. படமும் ஓரளவுக்குத்தான் நல்லாப் போகிறது. பாடல்கள், சண்டைகள் இல்லாததால் லாங் ரன்னில் பி அண்ட் சி செண்டர்களில் பெரிய அளவில் போகாதுனு அடித்துச் சொல்கிறார்கள். இப்போதே டிக்கட்டும் ஈஸியாக கிடைப்பதாக சொல்கிறார்கள்.
பாக்ஸ் ஆஃபிஸை பொறுத்தவரையில்
தசாவதாரம்>>>வேட்டையாடு விளையாடு >>உன்னைப்போல் ஒருவன் unless the trend changes drastically because of the word of mouth being too good. Let us see!
Labels:
திரை விமர்சனம்,
திரைப்படம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment