ஷங்கர் தயாரித்த படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவை உலக சினிமாவா ஆக்கியிருச்சா என்ன? ஆமா உலக சினிமா பத்தி யாருக்குத் தெரியும்? ஒரே ஒரு ஆளைத் தவிர?
கலைஞர்கள் ஒவ்வொரும் விதம். பாலசந்தர் ஒருவிதம், ஷங்கர் ஒரு விதம், கமல் ஒரு விதம். ஒருவர் போல ஒருவர் செய்து இருக்கனும், படம் எடுக்கனும்னு சொல்றதெல்லாம் தேவையே இல்லாதது.
கமலுக்கு நேர் எதிர் உதாரணமாக, இயக்குநர் ஷங்கரை எடுத்துக் கொள்வோம். இவருடைய ஒரு படத்தைக் கூட நான் ரசித்ததில்லை. இவரது இயக்கத்தில் வந்த பாய்ஸ், அந்நியன், சிவாஜி போன்ற படங்களை நார்நாராய்க் கிழித்துத் தோரணமே கட்டியிருக்கிறேன். ஆனால் இதே ஷங்கர் வேறோர் விஷயத்திலும் ஈடுபட்டார். புதிய இயக்குனர்களை வைத்து குறைந்த பட்ஜெட் படங்களைத் தயாரித்தார். அந்தப் படங்கள்தான் தமிழ் சினிமாவுக்கு இதுவரை இருந்த அடையாளத்தை முற்றிலுமாக மாற்றியமைத்தது.
இது நடந்தது ஐம்பது ஆண்டுகளில் அல்ல; வெறும் ஆறே ஆண்டுகளில் ஆறே படங்களின் மூலம் இந்த மாற்றம் நடந்தது. இப்போது ஷங்கர் என்ற இயக்குனரையே பிடிக்காத நான் அவருடைய தயாரிப்பில் வரும் படங்களை ஓடிப் போய் பார்க்கிறேன். சமீபத்தில் கூட ஈரம் என்ற படத்தை முதல் நாள் முதல் காட்சியில் சென்று பார்த்தேன். தமிழில் அப்படி ஒரு படத்தை இதுவரை பார்த்ததில்லை. அந்த அளவுக்குப் புதிதாக இருந்தது ஈரம்.
-இந்தியா டுடே
இந்த எழுத்தாளர்கள் தொந்தரவு இருக்கே! யப்பா! இளையராஜாக்கு இசை தெரியாது, ஜெயமோஹனுக்கு கதை எழுதத்தெரியாது, கமல் ஒண்ணும் சாதிக்கலை இத்யாதி இத்யாதி!
ஆமா நீங்க என்னத்தை கிழிச்சீங்கனு கேட்டால் என்ன சொல்லுவீங்க? தமிழ் இலக்கியத்தை காம இலக்கியமா மாற்றி நாலு அரைவேக்காடுகளை சம்பாரிச்சு இருக்கேன்னு வேணா பெருமையா சொல்லலாம்!
ஷங்கருக்கு இப்படித்தான் டைரக்ட் பண்ணத்தெரியும். இப்படித்தான் படம் தயாரிக்கத்தெரியும்! ஏன்னா சங்கர் அப்படி! இப்படி நான் குப்பைகளை இயக்குவதால், இப்படி நல்ல படங்களை தயாரிச்சு என் பாவத்தை கழுவிக்கிறேன்னு ஷங்கர் சொல்லவில்லை!
நம்ம பாலசந்தர், தரமான படங்கள் இயக்கி எடுத்து வெளியிட்டார். ஆனால் அவர் தயாரிப்பைப் பொருத்தமட்டில் என்ன செய்தா? தரத்தைவிட வியாபார நோக்கம்தான் இருந்தது. ரஜினியை வைத்து எஸ் பி முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, கே எஸ் ரவிக்குமார், வாசு போன்றவர்களை வைத்து வியாபார நோக்கில்தான் படம் எடுத்தார். ஏன்னா பணம் இல்லைனா மனுஷன் பொணம்தான்! மற்றபடி தமிழ் சினிமாவை குப்பையாக்கனும்னா அவர் செய்தார்??
இப்போ ஷங்கரும் அதையேதான் சிறிய அளவில் செய்கிறார். புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். ஆனால் ஷங்கர், தமிழ் சினிமாவை நான் வளைக்கிறேன், உலக சினிமாவா ஆக்குறேன் என்றெல்லாம் கதை விடல! இதுபோல் லோ-பட்ஜெட் படம் எடுத்து சம்பாரிக்கிறார்.
ஆமா கமலைப்பாராட்ட விசயமா இல்லை??? இவர் நடித்த
* களத்தூர் கண்ணம்மா
* 16 வய்தினிலே
* நாயகன்
* இந்தியன்
* உன்னைப் போல் ஒருவன்
போன்றவற்றில் அவர் நடிப்பை புகழ்ந்து அதிலுள்ள நல்லவிசயங்களை சொல்லிவிட்டு இருக்கலாம். கமல், உ போ ஒ வனில் மோகன்லாலை ஹீரோவாக்கி தன்னை பின் இருக்கையில் அமர்த்தியதே ஒரு பெரிய விசயம்தான்.
கமல், ஷங்கரைப்போல படம் எடுத்து இருக்கனும். கமல், விஜய் காந்த், ரஜினி காந்த் போல இருக்கக்கூடாது. ஆனா நான் மட்டும் தமிழ் இலக்கியத்தில் போர்னை கலந்து எல்லா அரைவேக்காடையும் முழுலூசா ஆக்குவேன்னு பேசுறதெல்லாம் நல்லாவா இருக்கு?
No comments:
Post a Comment