Sunday, September 13, 2009

எம்ஜிஆர்-கமல் vs எம்ஜிஆர்-ரஜினி விசிறிகள்!


விசிறிகள் பல வகை. ஜாலியாக பொழுது போக்குக்காக படம் பார்ப்பவர்கள் ஒரு வகை. இவர்களுக்கு பொதுவாக அழுகைப் படம் சீரியஸான படம்லாம் பிடிக்காது. சண்டை பிடிக்கும். ஹீரோயிஸம் பிடிக்கும், பாடல்கள் நல்லா இருக்கனும். பொதுவா எம் ஜி ஆர் விசிறிகள் இந்த வகையில் சேருவார்கள்னு சொல்லலாம். எம் ஜி ஆர் ரொம்ப சீரியஸான படம்லாம் ரொம்பப் பண்ணியது கிடையாது!

ரஜினிகாந்த் விசிறிகளும் இதில் சேர்க்கலாமா? ஏன் கூடாது? ரஜினி படங்களும் பொதுவாக பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்கள் தானே?

அப்போ எம் ஜி ஆர் விசிறிகள் எல்லாம் ரஜினிகாந்த் விசிறிகளாக இருப்பார்களா?

அதுதான் இல்லை! ஏன்???? தெரியலை!

ஏன் எம்ஜிஆர் விசிறிகள், கமல் விசிறிகளாக இருக்கிறார்கள்? இது எனக்குப் புரியாத ஒரு புதிர்! எம் ஜி ஆர் பொழுதுபோக்குப் படங்கள் எடுத்தவர். கமல் சீரியஸ் படங்கள் எடுப்பவர்! எம் ஜி ஆர் விசிறி எப்படி கமலை ரசிக்க முடியுது??

ஒருவேளை இவர்களுக்கு நடிகர்கள் வெள்ளையா இருந்தால்தான் பிடிக்குமா? தெரியலை!

No comments: