Wednesday, September 23, 2009

ஆண்டவன் கட்டளை- திரை விமர்சனம்
சிவாஜி, கே சங்கர் இயக்கத்தில் நடித்த இன்னொரு படம் இது. பி எஸ் வீரப்பாவின் பி எஸ் வி பிக்ச்சர்ஸ், ஆலயமணி யின் வெற்றிக்குப் பிறகு அதே குழுவுடன் எடுத்த இரண்டாவது படம்.

இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி, பாடல்கள்: கண்ணதாசன்.

சிவாஜி, தேவிகா, அசோகன், எ வி எம் ராஜன், புஷ்பலதா, சந்திரபாபு மற்றும் பலர் நடித்த படம்.

சிவாஜி, இந்தப்படத்தில் ஒரு ப்ரஃபெஸர்! பெயர், கிருஷ்ணன். மாணவர்களுக்கு ஒரு ரோல் மாடல். கட்டை பிரம்மச்சாரி. காதலால் வாழ்ந்தவர்கள் யாரும் இல்லை. காதலை அகற்றி வாழ வேண்டும் என்று வாழ்ந்துகொண்டு தன் மாணவர்களையும் வலியுறுத்தி வாழ்பவர். He is well known for his punctuality, honesty and he is an excellent teacher. எதுவரைக்கும்? ஒரு பெண் மேல் காதலில் விழும்வரை!

எ வி எம் ராஜன் ஒரு ஏழை புத்திசாலி மாணவன். சிவாஜி, அவர் நிலைமை தெரிந்து அவருக்கு தன் செலவில் எல்லா உதவிகளும் செய்வார். எல்லாம் ஒழுங்காகப்போகும்.

எ வி எம் ராஜன் - புஷ்பலதா ஜோடிக்கு ஒரு பாடல் உண்டு

* 1) கண்ணிரண்டும் மின்ன மின்ன - என்கிற பாடல்

சந்திர பாபுவும் சிட்டிபாபு என்கிற மாணவனாக நடித்து இருப்பார்,

* 2) சிரிப்பு வருது சிரிப்பு வருது சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பார்த்து சிரிப்பு வருது- என்கிற கண்ணதாசன் எழுதி இவர் பாடிய பாடலும் இதில் தான்

தேவிகா, சிவாஜியுடைய மாணவி. அழகானவள், கவர்ச்சியானவள். ஒரு நாள் லேடீஸ் ஹாஸ்டலில் எதையோ மாணவர்கள் பிரச்சினையை விசாரிக்கப் போவார். அப்போது தேவிகா ஒரு நாடக ஒத்திகை செய்து கொண்டு இருப்பார், தன் தோழியுடன். பேராசிரியர் போகும் நேரத்தில் பவர் போய்விடும். கவர்ச்சியும் அழகும் நிறைந்த தேவிகா இவரை கட்டி அணைத்து காதல் வசனம் பேசுவார். அதோட பேராசிரியர் கிருஷ்ணனுடைய பிரம்மச்சரியம் காலி!!

சிவாஜி காதலில் விழுவார். யாருடன்? தன்னைவிட வயதில் மிகவும் குறைந்த ஒரு மாணவி மேல்! தேவிகா இவரை ஒரு மாதிரி செட்யூஸ் பண்ணிவிடுவார்!

* 3) அழகே வா அருகே வா - பாடல் வரும்.

He will get involved with Devika (இவர் பெயர் ராதா னு நினைக்கிறேன்) very seriously. He cant live without her!

ஒருமுறை, எ வி எம் ராஜன் புஷ்பலதாவுடன் சுற்றுவதைப் பார்த்து, "நீ படிப்பில் கவனம் செலுத்தனும், இப்படி சுற்றலாமா?" என்பார் பேராசிரியர் கிருஷ்ணன். ஆனால், பின்னால் அதைவிட மோசமான நிலையாகிவிடும் பேராசிரியர் நிலைமை, தேவிகாவை காதலிக்க ஆரம்பித்தவுடன்.

* 4) அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்-

பாடலின் போது நீர்ச்சுழலில் மாட்டி தேவிகா காணாமல் போய்விடுவார். அவரை பேராசிரியர் கொன்றுவிட்டதாக கொலை குற்றம் சாட்டப்படுவார். தலை நிமிர்ந்து நடந்த பேராசிரியர் தலைகுனியும் நிலைமை வந்துவிடும்! எப்படியோ விடுதலையாவார். ஆனால் அவர் மீது இருந்த மதிப்பு, மரியாதை எல்லாம் போய்விடும்.

* 5) ஆறு மனமே ஆறுனு பாடலை பண்டாரம் மாதிரி பாடிக்கொண்டு திரிவார் பேராசிரியர்.

கடைசியில் தேவிகா திரும்ப வருவார். சிவாஜி, அவளை மணம் செய்துகொண்டு மறுபடியும் அவர் பேராசிரியர் பணியை தொடர்வார்! சுபமாக முடியும்!

5 comments:

ராமலக்ஷ்மி said...

அத்தனை பாடல்களுமே அருமையாய் இருக்கும்.

நாஞ்சில் பிரதாப் said...

என்ன மகாத்மா காந்தியை சுட்டுட்டாங்களா

நாஞ்சில் பிரதாப் said...

எப்படிங்க ...புதுபட விமர்சனம்லாம் பட வரதுக்கு முன்னாடியே போடுறீங்க...

வருண் said...

***ராமலக்ஷ்மி said...
அத்தனை பாடல்களுமே அருமையாய் இருக்கும்.

23 September, 2009 7:09 PM***

ஆமாங்க ராமலக்ஷ்மி, அமைதியான நதியினிலே ஓடும் ஓடமும், ஆறு மனமே ஆறும் எவர்க்ரீன் க்ளாசிக்ஸ்தான்!

சந்திரபாபு பாட்டு "பெரிய மனிதர்களை"யும் மிரட்டுமளவுக்கு தத்துவம் நிறைந்த ஒன்று

தங்கள் பகிர்தலுக்கு நன்நி :)

வருண் said...

வாங்க ப்ரதாப்!

புதுப்படம் ஒண்ணு இதே பேரில் வருதுபோல!

புதுப்படம் பற்றி எழுதத்தான் எல்லோரும் இருக்காங்களே! அதனால்தான் பழமையில் இறங்கிவிட்டேன் :)))