Saturday, September 12, 2009

ஆலயமணி- திரை விமர்சனம்

சிவாஜி - சரோஜாதேவி - எஸ் எஸ் ஆர் (முக்கோண காதல்) நடித்த காவியம். அரேஞ்சிட் மேரேஜ் கலாச்சாரத்தில் கற்பு வாழ்க்கையை மேம்படுத்தி, காதல் வாழ்க்கையை அசட்டை செய்து நம் கலாச்சாரத்தை உயர்படுத்தும் ஒரு அழகான உணர்ச்சி மிக்க காவியம் இது.

டைரகஷன்: கே. சங்கர்

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல்கள்: க்ண்ணதாசன்

ஏழை “வானம்பாடி” (சரோஜாதேவி), காதலில் விழுகிறாள். காதலன் எஸ் எஸ் ஆர் (ராஜு) ஒரு படித்த ஏழை பட்டதாரி. இருவருக்கும் ஒரு டூயட்

1) கண்ணான கண்ணனுக்கு அவசரமா? (சீர்காழிக்கு டூயட் பாடல்)

சிவாஜி (தியாகு) ஒரு பெரிய ஜமீந்தார். ஆனால் சிறுவயதில் ஜெயிலுக்கு போய் வந்தவர். “எக்ஸ்ட்ரீம்லி பொசஸிவ்”. ஒரு மாதிரியான மன வியாதி உள்ளவர். தியாகு சிறுவயதில் “மீனா” என்கிற அழகான பொம்மை வைத்திருப்பான். அதை நண்பன் பாபு கேட்பான். கொடுக்க மாட்டான். பாபு அதைப் பறித்துக்கொண்டு ஓடும்போது ஒரு புதை சேறில் விழுந்து விடுவான். தியாகு அவனிடம் இருந்து மீனாவை வாங்கிக்கொண்டு பாபுவை மிருகவெறியுடன் சாகவிடுவான். அதனால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி போய் வருவான். ஆனால் இன்றும் தியாகுவிடம் அந்த மிருக குணம் இருக்கும்.

சிவாஜியும் எஸ் எஸ் ஆரும், ஒரு டென்னிஸ் போட்டியில் மீட் பண்ணுவாங்க. சிவாஜியால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது. எஸ் எஸ் ஆர் சிவாஜியை பீட் பண்ணுவதுபோல ஒரு ட்ரெண்ட் வரும்போது, எஸ் எஸ் ஆர் சிவாஜியின் மனநிலையைப் புரிந்து, விட்டுக்கொடுத்து சிவாஜியை வெற்றியடைய செய்வார். அதை புரிந்துகொண்ட சிவாஜி எஸ் எஸ் ஆரை உயிர் நண்பனாக்கிவிடுவார்.

சிவாஜி குடும்பத்தின் உதவியால்தான் எஸ் எஸ் ஆர் படிக்கவே செய்வார். இப்படி நண்பர்களாக இருக்கும்போது, ஒரு நாள் தன் எஸ்டேட் வேலை சம்மந்தமாக சுற்றிப் பார்க்க சிவாஜி காரில் போவார். அப்போ எதார்த்தமாக சிவாஜி சரோஜாதேவியை சந்திப்பார். சரோஜாதேவியின் காதல், காதலன் பற்றி தெரியாது. அவளை காதலிக்க ஆரம்பித்துவிடுவார்.

2) மானாட்டம் வண்ண மயிலாட்டம் பாடல்

சரோஜாதேவியின் பெயர், “மீனா”. ஆனால், அவள், எஸ் எஸ் ஆரிடன் தன் பெயர் “வானம்பாடி” என்று சொல்லி இருப்பார்.

சிவாஜி, தன் எஸ்டேட் வேலையாள் நாகையாவைப் பார்க்கப்போவார். அப்பொழுது நாகையா பெரும் பிரச்சினையில் இருப்பார். நாகையாவுக்கு 2 மகள்கள். மூத்தவள் புஷ்பலதா, இளையவள் சரோஜாதேவி (மீனா). புஷ்பலதா, நடிகவேள் மகன் மேல் காதலில் விழுந்து கற்பிணியாகிவிடுவாள். நாகையா ஏழை என்பதால் புஷ்பலதாவை மருமகளாக ஏற்றுக்கொள்ள நல்ல நடிகவேள் மறுத்துவிடுவார். புஷ்பலதா ஜோடி, எ வி எம் ராஜன்னு நினைக்கிறேன், சரியா தெரியலை. இந்த ஒரு சூழ்நிலையில், சிவாஜி நாகையா குழம்பி, அழுதுகொண்டு இருக்கும் நிலையில் நாகையாவுவுக்கு உதவி செய்து (பண்மதானே பிரச்சினை), நடிகவேள் கேட்கும் வரதட்சணை மற்றும் தேவையான பணம் கொடுத்து கல்யாணத்தை ஏற்பாடு செய்வார். இந்த பேருதவியை செய்துவிட்டு, சரோஜாதேவியை தான் மணம் முடிக்க ஆசை என்பதையும் சொல்லிடுவார். அவளை யோசித்து பதில் சொல்ல சொல்லுவார்.

சரோஜாதேவி தன் காதலை (எஸ் எஸ் ஆர்) தன் தந்தையிடம் சொல்ல முடியாது. அக்கா கெட்டுப்போயிட்டாள், தன் நிலையும் அதே என்று சொல்ல முடியாத நிலையாகிவிடும். மேலும் அக்கா திருமணம் சிவாஜியால் நடக்கப் போவதால், சிவாஜிக்கு நன்றிக்கடன் செய்வது அவர் ஆசைப்பட்ட தன் சின்ன மகளை தன் எஜமானுக்கு திருமணம் செய்துவைப்பது என்று நாகையா நினைப்பார்.

இதற்கிடையில், சிவாஜியும் எஸ் எஸ் ஆரும், தான் விரும்பும், காதலிக்கும் பெண்ணைப்பற்றி வர்ணிப்பார்கள். ரெண்டு பேரும் காதலிப்பது ஒரே பெண் என்று தெரியாது. இவர், வானம்பாடி என்பார், அவர் மீனா என்பார். இருவரும் தன் காதலிதான் பெஸ்ட் என்பார்கள். இவரும் ஒரே அதே சரோஜாதேவிதான். இது பின்னாலதான் தெரியும்

சிவாஜியின் விருப்பப்படி எஸ் எஸ் ஆரே சிவாஜிக்கு பெண் பார்க்கப்போவார். அங்கே போனதும்தான் தெரியும், சிவாஜி விரும்புவதுதன் ஆருயிர் காதலியை என்று! இந்த சூழ்நிலையில் வீட்டு நிலைமை ரொம்ப மோசமாக இருப்பதால் (அப்பா தற்கொலை செய்துகொள்வார். அக்கா மானம் போயிடும் போன்ற பிரச்சினைகள்)சரோஜாதேவிக்கு எஸ் எஸ் ஆரை டம்ப் பண்ணுவதைத்தவிர வேறு நல்ல வழி தெரியாது. They will show as if it is an infatuation rather than love. எஸ் எஸ் ஆரிடம், தன் அக்கா நிலைமையை சொல்லி சரோஜாதேவி விளக்குவார். எஸ் எஸ் ஆருக்கு என்ன செய்வதென்று தெரியாது.

இந்த நிலையில் எஸ் எஸ் ஆரை விஜயகுமாரி காதலிப்பார். அதுவும் ஒருதலைக் காதல்தான்.

3) தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே
அநத தூக்கமும் அமைதியும் நான் ஆனால்
உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணை இருப்பேன்

என்கிற அருமையான ஜானகி பாடல் இந்த ஜோடிக்கு!

சிவாஜிக்கு, எஸ் எஸ் ஆருக்கும் சரோஜாதேவிக்கும் இருந்த ரிலேஷன்ஷிப் தெரியாது. அது நன்மையைக் கருதி இவர்களால் சிவாஜியிடமிருந்து மறைக்கப்படும். சிவாஜிக்கு சரோஜா தேவியை நிச்சயம் செய்துவிடுவார்கள். எஸ் எஸ் ஆரால் இதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது, ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு வழியும் இல்லைனு ஆகிவிடும்.

கல்யாணத்திற்கு முன்பே சரோஜா தேவி சிவாஜி மாளிகையிலேயே தங்குவார். சிவாஜி, சரோஜாதேவிக்கு ட்ரைவிங் சொல்லிக்கொடுப்பார். நம்ம வில்லன் நடிகவேள், நாகையா மேல் உள்ள பொறாமையில் காரில் ட்ரைவிங் பழகும் காரில் ப்ரேக்கை கழட்டிவிட்டு விடுவார். அன்று சரோஜா தேவிமட்டும் தனியாக காரில் ட்ரைவ் பண்ணுவார். சிவாஜியும் எஸ் எஸ் ஆரும் ஃபாளோ பண்ணுவாங்க இன்னொரு காரில். சரோஜாதேவி காரில் ப்ரேக் பிடிக்க்கவில்லை என்று தெரிந்ததும். சிவாஜி அவரை காப்பாற்ற கார் விட்டு கார் தாவி, காரை மரத்தில் மோதி நிறுத்துவார்.

விபத்துக்குப் பிறகு சரோஜா தேவிக்கு சின்ன காயம். அவரை காப்பாத்தப் போன சிவாஜிக்கு கால் ஊனமாகிவிடும். He wont lose his legs but he will lose the feelings in them.

உடனே சிவாஜி சரோஜா தேவிவை வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ என்பதுபோல சொல்லுவார். ஆனால், சரோஜா தேவி, என்னாலதான் உங்க கால் போனது என்று சொல்லி அவரையே மணம் முடிக்கப் போவதாக சொல்லுவார். Now Saroja devi will start loving Sivaji but wedding will be postponed.

4) கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?


5) பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே

பாடல்கள் வரும்.

எஸ் எஸ் ஆரால் விஜயகுமாரியை காதலிக்க முடியாது. சரோஜா தேவியை மறக்கவும் முடியாது. சரோஜா தேவி ஓரளவுக்கு எஸ் எஸ் ஆரை மறந்து சிவாஜியை காதலிக்க ஆரம்பித்துவிடுவார்.

இந்த நேரத்தில், ஒரு கல்யாணப் பத்திரிக்கை வரும். அந்த கல்யாணத்திற்கு சிவாஜி உடல் நிலை கோளாரால் போகமுடியாது என்பதால், தன் உயிர் நண்பனையும், தன் வருங்கால மனைவியையும் சேர்த்து போய் வரச் சொல்லுவார். எஸ் எஸ் ஆரால் சரோஜா தேவியை காதலிக்காமல் இருக்க முடியாது. அவன் மனது அவளிடம் இன்றும் சஞ்சலப்படும்.

இந்த நேரத்தில் நம்ம நடிகவேள் சிவாஜியிடம் “சாவி" போட்டு விடுவார்.

“என்ன இருந்தாலும் நீங்க நண்பரோட அனுப்பக்கூடாது. ஊர் உலகம் ரெண்டு பேருக்கும் ஏதோ தொடர்புனு பேசும்” என்பார்.

“சுத்த லோ-க்ளாஸ்யா நீ!” என்று நடிகவேளை திட்டுவார் சிவாஜி.

“லோ-க்ளாஸ்ல இது மாதிரி நடந்தா வெட்டிப்புடுவாங்க. ஹை-க்ளாஸ்தான் ஊருக்கெல்லாம் தெரிந்த பிறகு நமக்குத்தெரியும்” என்பார் விடாமல்.

அவரை திட்டி அனுப்பிவிடுவார் சிவாஜி.

ஆனால்...இங்கே உளமனதில் சிவாஜிக்கு ஆரம்பிக்கும் சந்தேகம்.

அவருடைய பொஸஸிவ்னெஸ். மிருக வெறி தலைதூக்கும்! சிவாஜிக்கு நண்பனை சந்தேகப்படுகிறோமே என்று அவமானமாக இருக்கும் அதே நேரம், நண்பன் நடத்தைமேல் சந்தேகம் தீராது! அவர் வெறி ஒருபுறம் நண்பனை பழிவாங்க தூண்டும்.

அவர்களிடம் (நண்பன் மற்றும் மனைவியாகப்போகிறவள்) தன் நிலைமையை சொல்லுவார். அதாவது தான் ரொம்ப கேவலமான ஒருவன். சுயநலக்காரன். சிறுவயதில் ஜெயிலுக்குப்போனவன். கொலைகாரன்! இன்றும் அதே போல் உங்களை சந்தேகப்படுகிறேன் என்று. நீங்கள் அப்படி இல்லை என்பார். ஆனால் எஸ் எஸ் ஆர் மனது சஞ்சலப்படுவதால் சிவாஜி நிலைமை ரொம்ப மோசமாகும். இருவரும் தங்கள் பழைய காதலை மறைத்ததால் கில்ட்டியாக ஃபீல் பண்ணுவார்கள். இங்கேதான் படம் சூடு பிடிக்கும்.

பிறகு பல திருப்பங்களுக்குப் பிறகு சிவாஜி, தன் நண்பனுடைய காதலியை தான் பறித்துக்கொண்ட அவமானத்தில் தான் தற்கொலை செய்ய மலை உச்சியில் இருந்து கீழே விழுவார். நண்பனையும் அவர் காதலியையும் சேர்ந்து வாழ சொல்லி வலியுறுத்திவிட்டு. அவரை அவர் வேலை ஆள் ஒருவர் காப்பாற்றி விடுவார்.

6) சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா பாடல்!

அப்புறம் க்ளைமாக்ஸ்! :))

8 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சிவாஜி சந்தேகப் படுவதற்கான காட்சிகள் மிக வலுவாக இருக்கும்.அந்த மாதிரி சூழ்நிலையில் யாருமே சந்தேகப் படத்தான் செய்வார்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அவர் நடக்க ஆரம்பிப்பதுதான் கொஞ்சம் நகைச்சுவையாக இருக்கும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஃபிரண்ட்ஸ் அப்படின்னும் ஒருபடம். அது கூட இதன் தழுவல்மாதிரி இருக்கும்

வருண் said...

***SUREஷ் (பழனியிலிருந்து) said...
சிவாஜி சந்தேகப் படுவதற்கான காட்சிகள் மிக வலுவாக இருக்கும்.அந்த மாதிரி சூழ்நிலையில் யாருமே சந்தேகப் படத்தான் செய்வார்கள்.

12 September, 2009 10:08 PM***

உண்மை உண்மை!

மனிதர்கள் (பெரிய மனிதர்கள்கூட) ரொம்ப சாதரணமானவர்கள்தான், சுரேஷ்! :(

வருண் said...

*** SUREஷ் (பழனியிலிருந்து) said...
அவர் நடக்க ஆரம்பிப்பதுதான் கொஞ்சம் நகைச்சுவையாக இருக்கும்.

12 September, 2009 10:08 PM***

அது சினிமாட்டிக்காத்தான் இருக்கும்! :)

வருண் said...

** SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஃபிரண்ட்ஸ் அப்படின்னும் ஒருபடம். அது கூட இதன் தழுவல்மாதிரி இருக்கும்

12 September, 2009 10:09 PM***

விஜய் படங்களில், அது நல்ல படம் சுரேஷ். கதையோட அர்த்தமாக இருக்கும்!

Unknown said...

கதை குழப்பமான கதையா இல்லை நீங்கள் எழுதிய விதம் குழப்பாமாக இருக்கிறதா என்று தெரியவில்லை.. ஆனால் அந்தக் காலத்து படம் பார்த்தால் மூன்று மணிநேரமும் உங்களை படத்திலேயே ஆழ்த்தி விடுவார்கள் போல.

வருண் said...

ரெண்டுமே ஓரளவுக்கு உண்மை, முகிலன்.:-)))