Sunday, September 27, 2009

கமலஹாசன் ஒரு இந்துமதப் பற்றாளரா?!!!

இந்தத் தலைப்புக் கேள்வியை வாசித்தாலே சிரிப்புத்தான் வருது. கமலஹாசனைப் பற்றி சமீபகாலமாக ஒரு தவறான கண்ணோட்டம் உருவாகியுள்ளது என்பதால் இந்தப்பதிவு. நான் கமல் ரசிகன் அல்ல.

விமர்சகர்கள் பலர் இத்தனை நாள் கண்டுக்காமல்விட்ட கமலை இன்று ரசிக்க ஆரம்பித்து உள்ளார்கள். விமர்சகர்கள், மற்றும் பத்திரிக்கை நடத்துபவர்கள் பொதுவாக இந்துமதத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் எடுக்கப்படும் படங்களை மேலே உயர்த்திவிடுவதை நீங்கள் பார்க்கலாம். நடிகர் கமலஹாசன், நாத்தீகக் கொள்கையுடன் இருப்ப(ந்த)தால், அவரை கொஞ்சம் இறக்கிக்கொண்டே வந்த இவர்கள் இப்போது இவர் நடித்து வெளிவந்த தசாவதாரம் மற்றும் உன்னைப்போல் ஒருவனை மேலே தூக்கிக் கொண்டாடுவதை கண்கூடாகக் காணலாம்.

தசாவதாரத்தால் நாத்தீகவாதிகள் மற்றும் பார்ப்பீனியத்தை பிடிக்காத பலர் இப்போது தாங்கள் பூஜித்துவந்த கமஹாசனுக்கு எதிராக கொடிபிடிக்க ஆரம்பித்து உள்ளார்கள். இதுபோதாதென்று உன்னைப்போல் ஒருவனை எந்த ஒரு இஸ்லாமியரும் ரசித்ததாகத் தோனவில்லை. உ போ ஒ க்கு அப்புறம் நாத்தீகர் மட்டுமல்லாமல், இஸ்லாமியர்களும் கமலுக்கு எதிராக கொடிபிடிக்கிறார்கள்.

பொதுவாக சாதி அடிப்படையில் ரசிகர்கள் இருப்பதில்லை. அப்படி இருந்திருந்தால் எம் ஜி ஆர், ரஜினி போன்றவர்க்கு தமிழ்நாட்டில் பெரிய ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் போயிருக்கும். பொதுவாக ரசிகர்கள் ஜாதி மதத்திற்கு அப்பார்பட்டவர்கள். ஆனால் ஒரு மதத்தைச் சார்ந்தவர்களை இழிவு படுத்துவதுபோல் ஒரு படம் எடுக்கும்போது அந்த மதம் சார்ந்த நம் மக்களிடம் பெரிய வெறுப்பு உண்டாவதை பார்க்கலாம். அதற்கு ஒரு பெரிய விளைவு அந்த மத மக்களிடம் இருக்கத்தான் செய்கிறது.

கமலஹாசன், உன்னைப்போல் ஒருவனில் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. இதனால், அவரை பார்ப்பணர் என்றும் இஸ்லாமிய எதிரி என்றும் பலரும் இன்று அவரைக் குற்றம் சாட்டுகிறார்கள். நிச்சயம் இது இவர்களுடைய தவறான கண்ணோட்டம்தான்.

என்னைப்பொறுத்தவரையில், கமலஹாசன், இந்துமதப் பற்றாளரோ அல்லது கொள்கைகளால் அவர் பார்ப்பணரோ அல்லவே அல்ல! அவர் நிச்சயமாக ஒருபோதும் இஸ்லாமியர்களுக்கு எதிரி அல்ல. அவரிடம் பல குறைகள் இருக்கலாம், ஆனால் அவர் எந்த மதத்தவருக்கும் நிச்சயம் எதிரி அல்ல! நாத்தீகன், காலம் செல்லச் செல்ல ஆத்திகத்தில் நம்பிக்கை உள்ளவராக மாறலாம். ஆனால் முன்னால் நாத்திகன் என்றுமே ஒரு மதவாதியாக மாறமுடியாது என்று நம்புபவன் நான்.

கமலில் படங்களின் மூலம் அவருக்கு தேவையில்லாமல் வரும் அவதூறுகள் அவருடைய வியாபார நோக்கால் அல்லது கலை வெறியால் ஏற்பட்ட கவனக்குறைவால் வந்தவையேயொழிய அவரின் மதசார்புள்ள கொள்கை அல்ல என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

8 comments:

ராஜ நடராஜன் said...

இடம் காலியா இருக்குது:)

மொத சீட்டு எனக்கு!

ராஜ நடராஜன் said...

கமல் காற்று மாதிரி ஒரு உணர்வு.நினச்ச பாத்திரத்துக்குள்ள புடிச்சு வச்சுக்க வேண்டியதுதான்!

SUREஷ் (பழனியிலிருந்து) said...

கமல் சாதிக்காரர்கள் அவருக்கு ரசிகர் மன்றம் வைத்திருக்கிறார்களா.., என்ன?

வருண் said...

***SUREஷ் (பழனியிலிருந்து) said...
கமல் சாதிக்காரர்கள் அவருக்கு ரசிகர் மன்றம் வைத்திருக்கிறார்களா.., என்ன?

27 September, 2009 8:04 AM ***

அவர்களும் ரசிகன் என்கிற வட்டத்தில் உள்ளவர்கள்தான். அதனால் ஜாதி அடிப்படையில் அவர்களும் யாரையும் வழிபடுவதில்லை என்றுதான் சொல்கிறேன், சுரேஷ்!

உங்களைத் தவறாக புரியவைத்ததற்கு மன்னிக்கவும்!

DHANA said...

100% உண்மை

வருண் said...

பகிர்தலுக்கு நன்றி, ந்டராஜன் & தனா :)))

Mãstän said...

வெல் வருண், கமலை நடுநிலைவாதின்னு நான் சொல்லலை, ஆனா எல்லாரும் நினைச்சா அது தப்பு கிடையது. கமலை சில பேரு நினைக்கிறதுதான் அது தப்பா படுது. கமலை நடுநிலைவாதியா இருந்துருந்தா நல்லாருக்கும்தான் சொல்லவாறேன். :)


(கமல் போல பேச ஆசைப்பட்டு, இப்படி வந்துருக்கு, ஹிஹி)

வருண் said...

****Mãstän said...
வெல் வருண், கமலை நடுநிலைவாதின்னு நான் சொல்லலை, ஆனா எல்லாரும் நினைச்சா அது தப்பு கிடையது. கமலை சில பேரு நினைக்கிறதுதான் அது தப்பா படுது. கமலை நடுநிலைவாதியா இருந்துருந்தா நல்லாருக்கும்தான் சொல்லவாறேன். :)


(கமல் போல பேச ஆசைப்பட்டு, இப்படி வந்துருக்கு, ஹிஹி)***

Dear Mastan:

Kamalahasan is trying to bring best cinema- what he believes as the best. While doing that he must have overlooked some people's perspectives. Certainly there are some politically incorrect issues in this movie which bother some of us. However I strongly believe that those have nothing to do with Kh or his beliefs. Accusing him of as fanatic or anything of that sort based on the story or plot or dialogs of this movie, UPO, is unfair.