Monday, September 14, 2009

கருத்துக்களங்களில் கருத்துச்சுதந்திரம் இல்லை!

நீங்கள் நாகரீகமாக விவாதம் செய்பவரா? உண்மையை அடிப்படையாக வைத்து பேசுபவரா? ரொம்ப விசயம் தெரிந்தவரா? நாகரீகம் தெரிந்தவரா? இதெல்லாம் இருந்தும் ஒருசில கருத்துக்களங்களில் உங்களுக்கு கருத்துச்சுதந்திரம் இல்லை போல் இருக்கா?

* நீங்கள் மாடரேட்டர்களுக்கு ஜால்ரா அடிப்பதில்லையா?

அப்போ உங்க கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படும்!

* நீங்கள் ரஜினி ரசிகர் ஆனால் மாடரேட்டர் எல்லாரும் கமல் ரசிகர்களா?

அந்த கருத்துக்களத்தை விட்டு முதலில் வெளியே வாங்கள்!

* நீங்க பெரியார் பக்தரா? இல்லை நாத்தீகவாதியா? அந்தக்களம் ப்ராமின்ஸ் ரன் பண்ணுவதா?

ஏன் சார் உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணி அந்தக் களத்தை வளர்க்குறீங்க?

கருத்துச் சுதந்திரம் என்பது , கருத்துக்களங்களில் எல்லோருக்கும் கிடைப்பதில்லை! அங்கே உள்ள மாடரேட்டர் மற்றும் நிர்வாகிகள் நியாயமாக ஏதோ செய்வதுபோல், தங்கள் சுயநலத்திற்காக பல அயோக்கியத்தனம் பண்ணுவார்கள். அவர்களுக்கு அது நியாயமாகத்தான் தோனும். உங்களுக்கு மட்டும்தான் அவர்கள் செய்வது அநியாயம்னு தெரியும்.


அப்போ கருத்துக்களத்தைவிட்டு வந்து என்னதான் நான் செய்றது? னு கேட்கிறீர்களா??!

உங்கள் கருத்துக்களை, எண்ணங்களையும் உலகுக்குச் சொல்ல ஒரு தமிழ் வலைதளம் ஆரம்பிங்க! மறக்காமல் தமிழ்மணத்தில் இணையுங்கள். உங்கள் கருத்தை நாகரீகமாக வரம்பு மீறாமல், சத்தமாக, தெளிவாகச் சொல்லுங்கள்!


நீங்கதான் உங்க தளத்துக்கு ராஜா/ராணி! உங்கள் சிந்தனைகளை, ஆதங்கத்தை, எண்ணங்களை, ஆக்கங்களை ஒரு நாலு பேர் படித்தால்கூட போதும்ங்க! உங்க பேச்சு, எழுத்து, கருத்துச் சுதந்திரத்தை யாரும் இப்போப் பறிக்க முடியாது! உங்க சுயமரியாதையையும் நீங்க காப்பாற்றிக் கொள்ளலாம்!

6 comments:

பீர் | Peer said...

அப்போ.. மாற்றுத்தரப்பிற்கு தன் கருத்தைச் சொல்வது?

ராமலக்ஷ்மி said...

கருத்துக்களங்களில் கலந்துகொண்ட அனுபவமெல்லாம் இல்லை:)! ஆனாலும் நீங்கள் சொன்னவற்றில்..

//நீங்கதான் உங்க தளத்துக்கு ராஜா/ராணி!//

இது நன்றாக இருக்கிறது!

//உங்கள் சிந்தனைகளை, ஆதங்கத்தை, எண்ணங்களை, ஆக்கங்களை ஒரு நாலு பேர் படித்தால்கூட போதும்ங்க!//

ரொம்பச் சரி:)!

வருண் said...

***பீர் | Peer said...

அப்போ.. மாற்றுத்தரப்பிற்கு தன் கருத்தைச் சொல்வது?

14 September, 2009 9:30 PM***

உங்கள் வலைதளத்தில் சொல்லுங்கள்!

You just have to express your thoughts without any kind of disturbance?

You can do it only in your blog. You don't have to deal with all kinds of idiots who are moderators according to some moron!

வருண் said...

***ராமலக்ஷ்மி said...

கருத்துக்களங்களில் கலந்துகொண்ட அனுபவமெல்லாம் இல்லை:)! ஆனாலும் நீங்கள் சொன்னவற்றில்..

//நீங்கதான் உங்க தளத்துக்கு ராஜா/ராணி!//

இது நன்றாக இருக்கிறது!

//உங்கள் சிந்தனைகளை, ஆதங்கத்தை, எண்ணங்களை, ஆக்கங்களை ஒரு நாலு பேர் படித்தால்கூட போதும்ங்க!//

ரொம்பச் சரி:)!

15 September, 2009 2:06 AM***

வாங்க ராமலக்ஷ்மி! :)))

நல்லவேளை நீங்க கருத்துக்களங்களில் உங்க நேரத்தை வீணடிக்கவில்லை! :-)))

நம் வலைதளம்தான் நம்ம சிந்தனையை தெளிவாகச்சொல்ல வசதியாகவும்,நமக்கு சரியான "க்ரிடிட்டை"யும் கொடுக்கவும் செய்யும்னு தோனுதுங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றாக இருக்கிறது

வருண் said...

***Blogger T.V.Radhakrishnan said...

நன்றாக இருக்கிறது

15 September, 2009 9:26 AM***

நன்றி, டிவிஆர் அவர்களே! :)