
சிவாஜி - பத்மினி - கே ஆர் விஜயா நடித்த படம். இயக்கம்: எ சி திருலோகசந்தர் இசை: எம் எஸ் விஸ்வநாதன், பாடல்கள்: கண்ணதாசன். மறுபடியும் ஒரு முக்கோணக் காதல்தான். கே ஆர் விஜயா சிவாஜியின் அத்தை மகள். அவருக்கு அப்பா அம்மா கிடையாது, தாய் மாமாதான், சிவாஜியின் தந்தை (நாகையா) அவரை தன் வீட்டில் வளர்ப்பார். சிறுவயதிலிருந்து சிவாஜியுடன் வளர்ந்தவர். கல்லூரியில் சென்று படிக்கவில்லை. அத்தான் அத்தான் என்று சிவாஜி மேல் உயிராக இருப்பார். சிவாஜிக்கு அவள் காதல் புரியாது, அவரால் உணரமுடியாது. அவர் அன்பு புரியும்.
* 1) வெள்ளிமணி ஓசையிலே பாடல் கே ஆர் விஜயாவுக்கு
சிவாஜி, அவருடன் கல்லூரியில் படிக்கும் சகமாணவி பத்மினியை காதலிப்பார். இருவரும் உயிருக்கு உயிராக காதலிப்பார்கள்
* 2) மாதவிப் பொன்மயிலாய்
* 3) மன்னிக்க வேண்டுகிறேன்
இரண்டு பாடல்கள் இவர்களுக்கு வரும்.
ஆனால் இவர்கள் காதல் துரதிஷ்டவசமாக கல்யாணம் வரைக்கும் போகாது. பரீட்சை லீவுக்காக ஊருக்கு செல்கிற பத்மினி, என் அண்ணனிடம் பேசி கல்யாண சம்மதம் பெற்று கடிதம் எழுதுறேன் என்று ஊருக்குப்போவார். திடீர்னு தன் அண்ணனுக்கு நடக்கும் விபத்தால் எல்லாம் மாறிவிடும். அநாதையாகிய அண்ணன் குழந்தைகளை வளர்க்க வேண்டிய ஒரு சூழ்நிலை பத்மினிக்கு உருவாகும். தன் காதலை, காதலனை மறந்து ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து அண்ணன் குழந்தைகளை வளர்க்க வேண்டிய பெரிய பொறுப்பால், சிவாஜியை “டம்ப்” பண்ணியாக வேண்டிய நிலை. தான் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டதாக பொய் சொல்லிக்கடிதம் எழுதிவிடுவார். ஆனால் அவர் கல்யாணமே செய்துகொள்ளாமல் கன்னியாக இருப்பார் அந்தக் குழந்தைகளுக்குத் தாயாக.
கே ஆர் விஜயா, சிவாஜி தன்னை மணக்க விரும்பவில்லை என்று தெரிந்ததும், அவர் மேல் கோபமோ, வெறுப்போ அடையாமல் தொடர்ந்து அவரை அன்போடும் பரிவோடும் இருப்பார்.
காதல் தோல்வியால் சிவாஜி தற்கொலை செய்யுமளவுக்கு போய்விடுவார். மனம் உடைந்து இருப்பார். இதற்கிடையில் கே ஆர் விஜயாவுக்கு சிவாஜியின் தந்தை நாகையா திருமணம் செய்துவைக்கப் பார்ப்பார். ஆனால் ஊர் உலகம் சிவாஜிக்கும் கே ஆர் விஜயாவுக்கும் ஏதோ உறவு இருப்பதுபோல் பேசும். சிவாஜி, கே ஆர் விஜயாவை மணம் முடித்துக்கொள்வார்.
வாழ்க்கைச் சக்கரம் ஓடும், இருவரும் 1 பெண் குழந்தைக்கு பெற்றோர்கள் ஆவார்கள். ஒரு 10 வருடம்போல போய்விடும். காதல் வாழ்க்கை, காதல் தோல்வியை மறந்து குடும்பம், மனைவி, குழந்தைனு சந்தோஷமாக இருப்பார்கள்
* 4) ஒரு மஹராஜா ஒரு மஹா ராணி இந்த இருவருக்கும் ஒரு குட்டிராணி பாடல்
சிவாஜி பத்மினியை மறந்து வாழ்ந்துகொண்டு இருக்கும்போது, மறுபடியும் பத்மினி அதே ஊருக்கு டீச்சராக வருவார். சிவாஜியின் மகளுக்கே டீச்சராக இருப்பார். இருவரும் எதிரும் புதிருமாக சந்திப்பார்கள்.
சிவாஜி, பத்மினி அவருக்கு துரோகம் செய்துவிட்டதாக நம்புவார். பத்மினியை பார்த்த்திலிருந்து சிவாஜி- கே ஆர் விஜயா உறவில் பிரச்சினை வரும்.
கே ஆர் விஜயாவும் பத்மினியும் தோழிகள் போல பழகுவார்கள். ஆனால் கே ஆர் விஜயாவுக்கு பத்மினியின் கடந்த காலம் மற்றும் அவர் சிவாஜியின் பழைய காதலி என்கிற உண்மை தெரியாது. பத்மினியுடன் கே ஆர் விஜயா தோழிபோல பழகுவார். தன் கணவனுக்கும் தனக்கும் பிரச்சினை வருது. என்னனு தெரியலை என்பார். பத்மினிக்கு விபரம் நல்லாப் புரியும்.
ஒருமுறை சிவாஜியும் பத்மினியும் சிவாஜி குழந்தையுடன் சந்திப்பார்கள். அந்த சந்திப்பை சிவாஜி கே ஆர் விஜயாவிடம் மறைப்பார். அதை அறிந்த் குழந்தை அப்பா பொய் சொல்லுகிறார்னு அவர் மேல் பயங்கர கோபமும் எரிச்சலும் கொள்ளும். அதனால் குழப்பத்திற்கு மேல் குழப்பமாகும் .
இந்த சூழ்நிலையில்
“ 5) கடவுள் தந்த இருமலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே (கே ஆர் விஜயா)
ஒன்று பாதை ஓரத்திலே (பத்மினி)
பாடல் வரும்! பத்மினியும் கே ஆர் விஜயாவும் பாடுவார்கள்.
அருமையான பாடல்! பத்மினி நிலைமையை நினைத்தால் அழுகை வந்துவிடும். கடைசியில், சிவாஜிக்கு உண்மை தெரியும். பத்மினி கல்யாணம் செய்யாமல் தன் அண்ணன் குழந்தைகளுக்காகத்தான் இப்படி செய்தார் என்று.
* 6) மன்னிக்க வேண்டுகிறேன் (சோகப் பாடல் வரும்)
அந்த சூழ்நிலையில் சிவாஜியிடம், கே ஆர் விஜயாவுடன் தான் தொடர்ந்து வாழனும்னு சொல்லிவிட்டு அந்த அண்ணன் குழந்தைகளுடன் பத்மினி அந்த ஊரைவிட்டே போய்விடுவார்.
It is really a beautiful movie but very sad movie. It made me cry when I was watching it.
17 comments:
படத்தின் பெயரைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே தல
கிளைமாக்ஸில் எல்லோரும் உருண்டு எழுந்து வசனம் பேசி ஒருவரை ஒருவர் அசத்தப் பார்ப்பார்களே...,
கடவுள் தந்த இருமலர்கள் பாட்டில் அப்பாவியாக பத்மினிக்கு கே.ஆர்.வி. சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் வயிற்றில் புளியை கரைக்குமே தல..
கல்லூரி மாணவர்களாக சிவாஜி, பத்மினி ஆகியோர் நடித்த படம்
மிக அருனையான படத்தைப் பற்றிய
விமர்சனம் தந்துள்ளீர்கள்.மாதவி
பொன்மயிலாள் என்ற பாடல் மிக
அருமையான பாடல்.பாடல்கள்
தந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்
கும்.அப்பாடல் வான் அலையில்
வந்து பல வருடங்களாகிப்போய்
விட்டன.யாவரும் கேட்க்க ஆவ
லாக இருப்பார்கள்.
வாங்க சுரேஷ்!
"இருமலர்கள்" பற்றியா? ஒரு மலர்தான் வெற்றியடையும்னு சொல்லவா? :)
--------------------
***SUREஷ் (பழனியிலிருந்து) said...
கிளைமாக்ஸில் எல்லோரும் உருண்டு எழுந்து வசனம் பேசி ஒருவரை ஒருவர் அசத்தப் பார்ப்பார்களே...,
30 September, 2009 7:01 PM***
க்ளைமாக்ஸைவிட எனக்கு எல்லா ரோலுமே ஒரு மாதிரி நடைமுறையில் சாத்தியம்போல இருந்தது.
இந்த மூவரையும் நாம் அன்றாட வாழ்வில் பார்க்கிறோம்னு நினைக்கிறேன் :) SUREஷ் (பழனியிலிருந்து) said...
**************
***கடவுள் தந்த இருமலர்கள் பாட்டில் அப்பாவியாக பத்மினிக்கு கே.ஆர்.வி. சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் வயிற்றில் புளியை கரைக்குமே தல..***
உண்மைதான், தல, ரொம்ப ஆக்வேர்ட் சிச்சுவேஷன் :)
*****************
SUREஷ் (பழனியிலிருந்து) said...
கல்லூரி மாணவர்களாக சிவாஜி, பத்மினி ஆகியோர் நடித்த படம்
30 September, 2009 7:03 PM***
பேசும் தெய்வம் னு ஒரு படம் இருக்குங்க. அதிலும் கல்லூரி மாணவர்களா நடிச்சிருப்பாங்கனு நினைக்கிறேன் :)
பகிர்தலுக்கு நன்றி சுரேஷ் :)
***Thevesh said...
மிக அருனையான படத்தைப் பற்றிய
விமர்சனம் தந்துள்ளீர்கள்.மாதவி
பொன்மயிலாள் என்ற பாடல் மிக
அருமையான பாடல்.பாடல்கள்
தந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்
கும்.அப்பாடல் வான் அலையில்
வந்து பல வருடங்களாகிப்போய்
விட்டன.யாவரும் கேட்க்க ஆவ
லாக இருப்பார்கள்.
30 September, 2009 7:09 PM***
பாடல்கள் லிங்க்ஸ் கெடைக்கலைங்க! முடிந்தால் அப்பெண்ட் பண்ணுறேன்.
வருகைக்கு நன்றிங்க :)
மாதவிப் பொன்மயிலாள்..கண்ணதாசன் எழுதியது என பலரும் எண்ணிக்கொண்டிருந்தனர்.ஆனால் உண்மையில் அதை எழுதியது வாலி.அதில் சிவாஜியின் வாயசைப்பும்..பத்மினியின் நடனமும் சொல்ல வார்த்தைகளைத் தேட வேண்டும்.
***T.V.Radhakrishnan said...
மாதவிப் பொன்மயிலாள்..கண்ணதாசன் எழுதியது என பலரும் எண்ணிக்கொண்டிருந்தனர்.ஆனால் உண்மையில் அதை எழுதியது வாலி.அதில் சிவாஜியின் வாயசைப்பும்..பத்மினியின் நடனமும் சொல்ல வார்த்தைகளைத் தேட வேண்டும்.***
பகிர்தலுக்கு நன்றி டி வி ஆர்.
ஆனால் என்னுடைய ஃபேவரைட், மன்னிக்க வேண்டுகிறேன் டூயட்தான்! சிருங்கார ரசத்தை அழகா அள்ளித்தெளித்து இருப்பார் கண்ணதாசன்! :)
அருமையாகப் பாடிய டி.எம்.எஸ்ஸை சொல்ல மறந்துட்டேன்
முதல் பாடல் நினைவுக்கு வரவில்லை. மற்ற அத்தனையுமே (குறிப்பாக இரண்டாவது)அருமையாய் இருக்கும்.
தொடருங்கள் பழைய பட விமர்சனங்களை:), சுவாரஸ்யமாய் உள்ளன!
வாங்க, ராமலக்ஷ்மி! :)
நீங்க கேட்டதில்லைனு சொன்னதும் எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. பி சுசீலா. ஆர்க் ல இருந்து எடுத்து வந்திருக்கேன்! :)
------------
படம் : இரு மலர்கள்
குரல் : சுசீலா நடிகை :
கே.ஆர்.விஜயா
வெள்ளி மணி ஓசையிலே
உள்ளமெனும் கோவிலிலே
வள்ளல் வரும் வேளையிலே
வாழ்வு வரும் பூமகளே
(வெள்ளி)
பிறந்து வந்தேன் நூறு முறை
மன்னவன் கை சேரும் வரை
தவமிருந்தேன் கோடி முறை
தேவன் முகம் காணும் வரை
(வெள்ளி)
மணி விளக்காய் நானிருக்க
மாளிகையாய்த் தானிருக்க
மனது வைத்தான் சேர்ந்திருக்க
கருணை வைத்தான் கை கொடுக்க
(வெள்ளி) நன்றி: சந்த்ரு
-----------------
இது முதல்ப் பாடலானு தெரியவில்லை. The order might change but this is a solo song for KRV :)
பாடலையே தேடித் தந்து விட்டீர்களா? நன்றி. ஒருவேளை இது அத்தனை பிரபலமாகாத பாடலோ தெரியவில்லை. என்னிடமிருக்கும் பழைய பாடல்கள், குறிப்பாக சுசிலாவின் சோலோ கலெக்ஷனில் இது இல்லை. அழகான அவ்வரிகளை வாசித்தபின்னும் நினைவுக்கு வர மாட்டேன்கிறது. பார்க்கிறேன், வொர்ல்ட் ஸ்பேஸ் கே.எல் ரேடியோவின் ‘இரவின் மடியில்’ எப்போதாவது ஒலிபரப்பாகிறதா என:)!
நான் அடிக்கடி பி.சுஷீலா ஆர்க் விசிட் பண்ணுவதுண்டுங்க. The lyrics in this site are flawless. The major contributors, ஜெயந்தி மற்றும் சந்ருவை மனதாற பாராட்டுவதும் உண்டு- அவர்கள் சேவைக்காக!
நீங்க சொல்வது சரிதான், It is sort of a mediocre song and so it might not be listed in popular solo songs of P.S you have :-)))
பத்மினியைச் சிவாஜி தந்தை நாகையா சந்தித்துத் தன் பிள்ளையை விட்டுவிடும்படி கேட்டுக் கொள்ளுவார்.
அதுவும் அவர்கள் பிரிவிற்குக் காரணம்:)
நன்றி நன்றி. இன்றைக்கும் எனக்குப் பிடித்த படம்.
இரு மலர்கள்
வாடியது ஒண்ணு. மலர்ந்தது ஒன்று.
***வல்லிசிம்ஹன் said...
பத்மினியைச் சிவாஜி தந்தை நாகையா சந்தித்துத் தன் பிள்ளையை விட்டுவிடும்படி கேட்டுக் கொள்ளுவார்.
அதுவும் அவர்கள் பிரிவிற்குக் காரணம்:)
நன்றி நன்றி. இன்றைக்கும் எனக்குப் பிடித்த படம்.***
தங்கள் வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி :)
***இரு மலர்கள்
வாடியது ஒண்ணு. மலர்ந்தது ஒன்று.
4 October, 2009 8:46 AM***
நல்லா சொல்லிட்டீங்க, தலைப்புக்கு விளக்கம்! நன்றிங்க வல்லியம்மா! :)
Post a Comment