
சிவாஜி படத்தை எந்த ஒரு தி மு க தொண்டரும், தி மு க வுக்கு கொடிபிடிக்கும் வலையுலக சிங்கங்களும் பாராட்டவில்லை! சிவாஜி போல் ஒரு படம் வருவதால் தமிழர் சமுதாயமே சீரழிவதாக வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் இன்று, தி மு க ஆட்சியில் நடக்கும் தமிழக அரசு சிவாஜிக்கு விருது வழங்கி அந்தப்படத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
* கருமை நிறத்தில் உள்ள அழகிகளை இழிவு படுத்திய படம் சிவாஜி
* இன்றைய அரசில் உள்ள ப்யூராக்ரஸியை ஏளனம் செய்த படம் சிவாஜி
இருந்தபோதிலும், அதை நல்ல முறையில் எடுத்துக்கொண்டு, திறந்தமனதுடன் தமிழக அரசு அதை தேர்ந்தெடுத்துள்ளதுனு அரசை பாராட்டவேண்டியதுதானா???
நம்ம அண்ணே அமீர், மாமு ஞாநி எல்லாம் சிவாஜியை கிழித்தறிந்ததெல்லாம் இப்போ ஞாபகம் வருது. ஆமா, மொழிக்கு ஏன்ப்பா முதல் விருது தரலை???
ஆனால் ஒண்ணு சிவாஜில தமிழர் முறைப்படி திருமணம் நடத்தி தமிழர்களுக்கு பெருமை சேர்த்தார்கள். அந்த ஒரே காரணத்திற்காகத்தான் இந்த விருதா? என்னவோ போங்கப்பா!
2 comments:
என்னவோ போங்கப்பா!
வாங்க, டி வி ஆர் :-))))
Post a Comment