Monday, September 7, 2009

படித்தால் மட்டும் போதுமா?


இன்னொரு பீம்சிங் “ப” வரிசைப்படம். இசை: விஸ்வநாதன் -ராமமூர்த்தி. பாடல்கள்: கண்ணதாசன். சிவாஜியை ஹீரோவாக வைத்து. கணவன் - மனைவி உறவு பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு காவியம் இது. குடும்பப்பிரச்சினை இல்லாத வீடு ஏது? பெண், அன்பின் வடிவமாகவும் இருப்பாள், பேயாகவும் அரக்கியாகவும் மாறுவாள். ஒரு ஆணை மனிதனாக்குவதும் பெண்தான், மிருகமாக்குவதும் பெண்தான்! ஒருவனை ஆக்குவதும் பெண்தான், அழிப்பதும் பெண்தான்.

சிவாஜி-ராஜ சுலோசனா, சாவித்திரி-பாலாஜி, ரங்கா ராவ், எம் வி ராஜம்மா, சஹஸ்ரநாமம்-கண்ணாம்பா, நடிகவேள் எம் ஆர் ராதா, முத்துராமன், எ. கருணாநிதி, மனோரமா நடித்த ஒரு குடும்பப்படம்.

சிவாஜி ஒரு இல்லிட்டரேட், ஆனால் பெரிய ஜமீந்தாருடைய ஒரே பையன். ஜமீந்தார் குடும்பமான கண்ணாம்பா-சகஸ்ரநாமமுடைய ஒரே மகன். வேட்டையாடுவது பொழுதுபோக்கு. ஆனால் நல்லவன். படிப்பறிவு இல்லாததால் வீட்டிலும், அப்பாவிடமும் மரியாதை கிடையாது.

1) ஓஹோஹோ மனிதர்களே ஓடுவதெங்கே செல்லுங்கள் பொய்களை விற்று உண்மையை வாங்கி உருப்புட வாருங்கள். பாடலில் சிவாஜி அறிமுகமாவார்.

சிவாஜியின் கசின் பாலாஜி. அதாவது பெரியப்பா மகன். அண்ணா என்றால் தம்பிக்கு உயிர். பெரியப்பா-பெரியம்மா உயிருடன் இல்லை. சிவாஜியின் அம்மா அப்பாதான் இவரையும் பாசத்துடன் வளர்ப்பார்கள். பாலாஜி நல்லா படித்து பட்டம் பெற்றவர். வீட்டில் அவருக்கு மரியாதை அதிகம். நாகரீகம் தெரிந்தவர்.

அண்ணன் - தம்பி இருவரும் ராமன் லக்ஷ்மணன் போலதான் இருப்பாங்க. சிவாஜி, அண்ணனான பாலாஜியின் படிப்புக்கு உதவுவதுடன், அண்ணன் அறிவாளினு பொறாமைப்படாமல் பெருமைப்படுவார். பாலாஜியும் தம்பிமேல் உயிரா இருப்பார். எதுவரை? ஒரு அழகான பெண்ணைப் பார்க்கும் வரை.

நடிகவேள்தான் கல்யாணத் தரகர். தரகரா வந்து கிளப்பி இருப்பார்- அவருக்கே உள்ள தனி பாணியில். அண்ணன், தம்பி ரெண்டுபேருக்கும் பொண்ணு பார்க்கலாம்னு ஜமீந்தாரிடம் சொல்லுவார்.

அண்ணன் படித்தவன், அவனுக்கு படித்த பெண்ணாகவும், படிக்காத தம்பிக்கு படிக்காத ஒரு பெண்ணை பார்க்க ஜமீந்தார் கட்டளைப்படி ஏற்பாடு நடக்கும்.

அண்ணன் பெண்ணைப் பார்க்க தம்பியும், தம்பி பெண்ணைப் பார்க்க அண்ணனும், “பெண் பார்க்க”ப் போவார்கள்.

வித்தியாசமான இந்த முயற்சி விபரீதமாக முடியும்.

இங்கே சிவாஜி பாலாஜிக்காக ராஜ சுலோச்சனாவை பார்க்கப் போகும்போது பாலாஜி, சிவாஜிக்கு சில ஆங்கில வாக்கியங்கள் சொல்லிக் கொடுத்து அனுப்பிவிடுவார். சிவாஜியும் அதை வைத்து மேனேஜ் பண்ணுவார். சிவாஜி, படிக்காதவர்னு ராஜ சுலோச்சனாவுக்கோ, அவர் அப்பா ரங்காராவுக்கோ தெரியாது. சிவாஜி, ராஜ சுலோச்சனாவை அண்ணியாகத்தான் பார்ப்பார்.

ஆனால், சாவித்திரியை சிவாஜிக்காக பார்க்கப்போன பாலாஜிக்கு சாவித்திரியை ரொம்ப பிடித்துவிடும். அவர், தம்பிக்கு போன பெண்ணை காதலிக்க ஆரம்பித்துவிடுவார். அவளை தான் மணக்க ஆசைப்படுவார்.

2) பொன்னொன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா? பாடல் வரும். இருவரும் தான் பார்த்த பெண்ணைப் பற்றி கருத்தை இருவரும் “நண்பர்கள் போல” பரிமாறிக்கொள்வார்கள்

தம்பிக்கு பார்க்கப்போன படிக்காத பெண்ணை தானே மணப்பதற்காக ஒரு சின்ன பித்தலாட்டம் பண்ணுவார், பாலாஜி. அதாவது இவர் மணக்கவேண்டிய, ராஜசுசுலோச்சனாவின் அப்பா ராவ் பகதூர் (ரங்காராவு)க்கு தன்னைத்தானே குறைத்து, தன்னை ஒரு குடிகாரன், காட்டுமிராண்டி நு எழுதி இவரை வெறுக்குமளவுக்கு பொய் சொல்லி ஒரு கடிதம் எழுதிப்போட்டு விடுவார்.

அதேபோல் சிவாஜியைப்பற்றி மோசமாக சாவித்திரி அண்ணன் முத்துராமனுக்கும் எழுதிப்போட்டுவிடுவார். ரெண்டுமே மொட்டை கடிதாசிகள். இதைப்படித்து நம்பிய படித்த ராஜசுலோச்சனா, மேலும் அவர் அப்பாவான வரட்டு கவுரவத்தில் வாழும் ராவ் பகதூர் ரங்காராவ், பாலாஜியை வெறுத்து, சிவாஜியை ராஜ சுலோச்சனாவிற்கு மணம்முடிக்க முடிவு செய்துவிடுவார்கள். சிவாஜி ஒரு படிக்காதவர் என்று இருவருக்கும் தெரியாது. பாலாஜி, சாவித்திரியை ப்ளான் பண்ணியபடி மணந்துகொள்வார்!

இங்கே மிகப்பெரிய மிஸ்-மேட்ச் சிவாஜி- ராஜ சுலோச்சனா ஜோடி!

சிவாஜி, படிக்காதவன் நு தெரிந்ததும், படித்த அவர் மனைவியும் (ராஜ சுலோச்சனா), மாமனாரும் (ராவ பஹதூர் ரங்காராவ்) அவரை அவமானப்படுத்து வதுடன், அவர்தான் இந்த மொட்டைக் கடிதாசி எழுதியதாக குற்றம் சாட்டப்படுவார்.

3) கோமாளி கோமாளி கோமாளினு ஒரு பாட்டு வரும். படித்தவன்போலே நடிப்பவன் கோமாளினு ஒரு வரி வேற! இவர்கள் கல்யாண ரிசப்ஸனில் வரும்!

ராஜ சுலோச்சனா அவரை முழுமனதாக வெறுப்பார். Sivaji's life is completely screwed up because of Balaji's manipulation. சிவாஜி படிக்காதவர் என்பதால் அவர் அப்பாவும் அவரை மதிக்கமாட்டார். அவர் அம்மா, கண்ணாம்பா மட்டும் சிவாஜியை நம்புவார் பிரியமாக இருப்பார்.

அதே சம்யத்தில் சாவித்திரி-பாலாஜி ஜோடி எல்லா வகையிலும் நற்பெயருடன், பெரியவர்கள் ஆசியுடன் அழகா குடும்பம் நடத்துவாங்க. பாலாஜி செய்த துரோகம் தெரியாத சிவாஜி, அண்ணன் அண்ணி மேலே உயிராக இருப்பார். அவர்களாவது சந்தோஷமாக இருக்கிரார்களே என்று சந்தோஷப்படுவார். சாவித்திரியும் சிவாஜி மேல் அன்பாகவே இருப்பார். ஆனால் சிவாஜியின் வாழ்க்கை இப்படி ஆனதுக்கு பாலாஜி மொட்டை கடிதம்தான் காரணம் என்று சிவாஜிக்கோ, சாவித்திரிக்கோ தெரியாது.

குடும்பப்பிரச்சினை நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே இருக்கும். இந்த சமயத்தில் இந்தப் பாடல் வரும்! சிவாஜி தன் நிலையை விளக்கி தன்னை வெறுத்து ஒதுக்கும் மனைவியிடம் பாடும் பாடல்!

4) நான் கவிஞனும் இல்லை!
நல்ல ரசிகனும் இல்லை!
காதலெனும் ஆசை இல்லா பொம்மையும் இல்லை!

இரவு நேரம் பிறரைப்போல என்னையும் கொள்ளு(ல்லு)ம் துனை இருந்தும் இல்லை என்று போனால் ஊரென்ன சொல்லும்?

கூட்டு வாழக்கை, குடும்ப வாழ்க்கை புரியவில்லையே நான் கொண்டுவந்த பெண் மனதில் பெண்மை இல்லையே!

What a song! Written by genius KaNNadAsan!!!

இன்னும் நல்ல பாடல்கள்

5) தன்னிலவு தேனிரைக்க (பி சுஷீலா பாட்டு)

6) நல்லவன் எனக்கு நானே நல்லவன் (டி எம் எஸ், பி பி எஸ்)

7) அண்ணன் காட்டிய வழியம்மா

கடைசியில், உண்மை வெளியே வரும். எல்லா பிரச்சினைக்கும் காரணம் அந்த மொட்டை கடுதாசி. அதை எழுதியது யார் நு பார்த்தால், அது பாலாஜி என்று தெரியவரும்! தன் உயிருக்கு உயிரான அண்ணன்!!!

வெறி பிடித்த சிவாஜி, வேட்டை துப்பாக்கியுடன் உண்மையை விசாரிக்க அண்ணனிடம் போவார். அப்போது சாவித்திரி, தன் கொளுந்தனார் அவர் அண்ணனை (தன் கணவனை) கொல்லப்போகிறாரோ என்று பயந்து துப்பாக்கியை சிவாஜியிடம் இருந்து பறிக்க முயற்சிப்பார். இப்படி இழு பறியில் இருக்கும்போது சாவித்திரி தெரியாமல் ட்ரிகரை அழுத்திவிடுவார். குண்டு பாலாஜிமேல் பாய்ந்து பாலாஜி இறந்து விடுவார்.

கடைசியில் சிவாஜி/சாவித்திரி போராட்டத்தில் ஆக்ஸிடெண்டலாக யாரோ ட்ரிகரை அழுத்தி குண்டு பாய்ந்து இறந்ததாக சாவித்திரி சாட்சி சொல்லி சிவாஜி விடுதலை செய்யப்படுவார்.

தரமான, குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் (பாடம்) இது!

4 comments:

சகாதேவன் said...

"பொன்னொன்று கண்டேன் பெண் அங்கு இல்லை"-பாட்டில், என் விழியில் நீ இருந்தாய் என்பார் சிவாஜி. உன் வடிவில் நான் இருந்தேன் என்பார் பாலாஜி. இருவரின் மனதையும் உணர்த்தும் வரிகள்.
சகாதேவன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தொடராக எடுத்தால் அற்புதமாக இருக்கும்.

வருண் said...

***சகாதேவன் said...
"பொன்னொன்று கண்டேன் பெண் அங்கு இல்லை"-பாட்டில், என் விழியில் நீ இருந்தாய் என்பார் சிவாஜி. உன் வடிவில் நான் இருந்தேன் என்பார் பாலாஜி. இருவரின் மனதையும் உணர்த்தும் வரிகள்.
சகாதேவன்

7 September, 2009 7:01 PM***

பகிர்தலுக்கு நன்றிங்க, சகாதேவன். பாலாஜி "மாறிய மனம்" அவர் பாடும் வரிகளில் தெரியும்!

வருண் said...

***SUREஷ் (பழனியிலிருந்து) said...
தொடராக எடுத்தால் அற்புதமாக இருக்கும்.

7 September, 2009 7:28 PM***

தங்கள் கருத்துக்கு நன்றி, சுரேஷ் :)