Thursday, September 10, 2009

என் மேலே கோபமா, கண்ணன்?- கடலை கார்னர் (18)

"வாங்க பிருந்தா அவர்களே!"

"என் மேலே கோபமா, கண்ணன்?" அவள் குரலில் வருத்தம் தெரிந்தது.

"இல்லையே, பிருந்தா. நான் கொஞ்சம் அதிகமா அப்படி பேசி இருக்கக்கூடாதுதான். ஸ்டெய்ஸி கோபித்துக்கொண்டால் என்ன செய்றது? நான் கவனமாத்தான் பேசனும் இல்லையா?"

"அவளாவது உங்க மேலே கோபித்துக்கொள்றதாவது? அவ எதுவுமே சொல்லல"

"உன்னை மாதிரி அவ வெளியிலே காட்ட மாட்டாள், அவ்வளவுதான்"

"தெரியலை. நான் ஏன் இப்படி ரியாக்ட் பண்ணினேன் னு. Then I felt bad for being rude to you and thought of calling you. அப்புறம் ஃபோன்ல நீங்க ஏதாவது சண்டை போட்டுருவீங்களானு பயம். சரினு கால் பண்ணாமல் விட்டுட்டேன்"

"நல்லா தூங்கினயா? இல்லையா?"

"சரியா தூங்கலை. எல்லாம் உங்களாலதான்"

"என்னை கால் பண்ணி இருக்கலாம் இல்ல? அவளுக்கு சேலை எப்படி இருந்தது? பொம்மை மாதிரி இருந்தாளா?"

"ரொம்ப நல்லா இருந்தாள் சேலையில். நீங்கதான் இல்லாமல் போயிட்டீங்க அவளைப் பார்த்து ரசிக்க"

"நல்லவேளை அவ வந்தாள்"

"வரலைனா? உங்களை நான் கெடுத்து இருப்பேனா என்ன?"

"அப்படி பண்ணினால் பரவாயில்லையே. என்னை கெடுக்க வச்சிருப்ப"

"அதுவும் எங்க தப்பா?"

"அழகா இருக்கிறது தப்புதான்"

"உங் ஸ்டெய்ஸிகூட சேலைல அழகாத்தான் இருந்தாள்"

"உனக்கு "க்ரீன் ஐட் மான்ஸ்டர்" பத்தி தெரியுமா, பிருந்தா?"

"You mean green-eyed monster?"

"ஆமா"

"இப்போ யாரு, நானா green-eyed monster, கண்ணன்?"

"நீ மாண்ஸ்டெர்லாம் இல்லை, நீ க்ரீன் - ஐட்- ஏஞ்சல்"

"குறை சொல்வதில்கூட ஒரு மாதிரி ஐஸா?! உங்களால மட்டும்தான் முடியும்!"-

"ஏய் மக்கு! உன்னைப்போயி யாராவது மாண்ஸ்டர்னு சொல்லுவாங்களா?"

"இப்போ எதுக்கு இந்த மான்ஸ்டரை பிடிச்சு வந்தீங்க?"

"ஷேக்ஸ்பியர் இருக்கார் இல்லை? அவர் "பொறாமையை" இப்படி சொல்லியிருப்பாராம்"

"என்ன லிட்டெரேச்சர்லாம் படிச்சிருக்கீங்களா என்ன? சேக்ஸ்பியர் அது இதுனு பயமுருத்துறீங்க?"

"நீ வேற! நானாவது லிட்டெரேச்சர் படிக்கிறதாவது? யாரோ சொன்ன ஞாபகம்"

"யார் அது?"

"யாருனு ஞாபகமில்லையே"

"சரி என்ன சொல்ல வர்றீங்கனு, சுத்தி வளைக்காமல் சொல்லுங்க"

"நீ என்னோட ரொம்ப க்ளோஸ், இல்லையா? நீ ஏதாவது கோபத்தில் சொன்னல் உன்னிடம் எனக்கு கோபமோ, எரிச்சலோ வராது, நீ என்னை என்ன சொன்னாலும். அதனால் இப்படி எதுவும் நெனச்சு கவலைப்படாதே"

"நெஜம்மா?"

"எங்க அடிச்சு சத்தியம் பண்ண?. அதுக்காக பொறுக்கி அது இதுனு திட்ட ஆரம்பிச்சுறாதே"

"இந்த டயலாக் க்கு மட்டும் உங்ககிட்ட குறைச்சலே இல்லை"

"ஆமா நான் சிவாஜி, நீ வாணிஸ்ரீ உன்னிடம் நான் வசந்த மாளிகை டயலாக் பேசுறேன்"

'அது யாரு வாணிஸ்ரீ?"

"பழைய நடிகை. ரொம்ப செக்ஸியா இருப்பாள்"

"அந்தக்காலத்து ஆண்ட்டியைக் கூட விடமாட்டீங்களா, கண்ணன்?"

'அதுக்காக நான் மற்ற பெண்களை பத்தியே பேசவே கூடாதா?'

"எதுக்காக? நீங்க ரொம்ப இண்ட்டிமேட் மாதிரி ஸ்டெய்ஸிட்ட பேசுறீங்க தெரியுமா?"

"அவ எதுக்கும் கோவிச்சுக்க மாட்டேன்கிறாடா. அதனால் சும்மா அப்படி பேசுவேன். அவ்வளவுதான்"

"என்னை வாடா போடானு சொல்லி ரொம்ப ஏமாத்துறீங்க, கண்ணன்"

"ஏன் அப்படி கூப்பிடுவது பிடிக்கலையா?"

"பிடிக்காத மாதிரியா தெரியுது?"

"தெரியலை. நீயே சொல்லு"

"என்னை நீங்க ரொம்ப ஏமாத்துறீங்க"

"நான் ஏமாத்தவெல்லாம் இல்லை! உன்னை அப்படி கூப்பிடத் தோனுது கூப்பிடுறேன். பிடிக்கலைனா சொல்லு "வாடி போடி" னு கூப்பிடுறேன்"

"நானா ஏமாறுகிறேன்னு சொல்றீங்களா? "வாடி போடி" ரொம்ப நல்லாயிருக்கு"

"இப்போ என்ன வேணும் உனக்கு?"

"ஏதாவது தர்றீங்களா?"

"பசிக்குதா?"

"எப்படி ரொம்ப இண்ணொசண்ட் மாதிரி அப்பப்போ நடிக்கிறீங்களே, அதெப்படி?'

"ட்யூப் லைட் சான்றிதழை அப்பப்போ யூஸ் பண்ணிக்கனும். இது காண்டீன், இங்கேலாம் எல்லாம் தரமுடியாது"

"இட் இஸ் ஓ கே வித் மி. எனக்கு பப்ளிக அட்டென்ஷன் பிடிக்கும்"

"நீ அந்த கேஸா?"

"ஆமா. சரி, ஏதாவது படத்துக்கு கூட்டிப்போறீங்களா, இந்த வீக் எண்ட்?"

"ஏன் உன் ஃப்ரெண்ஸ்லாம் எங்கே? லூசு மாதிரி ஒர் ரெண்டு மூனு திரியுமே உன்னோட"

"அவளுக இருக்காளுக. லூசுனு நீங்க சொன்னதை சொன்னா, உங்களை நானே காப்பாத்த முடியாது"

"எங்கே பிடிச்ச அதுகளை?"

"அவங்களை விடுங்க. உங்களோட போய் படம் பர்ர்த்தால் எப்படி இருக்கும்னு ஒரு சின்ன க்யூரியாஸிட்டி"

"என்ன படம் போகனும்?"

"எதாவது படம்"

"படம் பார்க்கத்தானே?"

"LOL"

"நீ ரொம்ப மோசம், பிருந்தா"

"நல்லா என்னை காப்பி அடிக்கிறீங்க", அவள் சத்தமாக சிரித்தாள்

"சரி, நான் முடியுமானு பார்க்கிறேன்"

"ஏன் வேற எவளோடையும் டேட் இருக்கா?"

"ஆமா, வந்து லைன்ல நிக்கிறாங்க. நீ வேற!"

-தொடரும்

2 comments:

மணிகண்டன் said...

Nice narration.

வருண் said...

நன்றி, மணிகண்டன் :)