Monday, December 21, 2009

யோகியால் பெயரைக் கெடுத்துக் கொண்டாரா அமீர்?


அமீரின் யோகி, விமர்சகர்களிடமும் சரி, வியாபார ரீதியிலும் சரி, பெரிய அளவில் வெற்றியடையவில்லை. அதேசமயம் படுதோல்வி என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால், இந்தப்படத்தால் பருத்திவீரன், ராம், மெளனம் பேசியதே போன்ற படங்களின்மூலம் இயக்குனராக இவர் சம்பாரித்த மரியாதையை காற்றில் பறக்கவிட்டுவிட்டார் என்று சொல்கிறார்கள் பலர்.

இந்த திருட்டுப்பட்டத்திற்கு, அமீர் பொறுப்பல்ல, இந்தப் படத்திற்கு இயக்குனரல்ல, வெறும் நடிகர் மட்டுமே, அதனால் அவரை குறை சொல்ல ஒன்றுமில்லை என்கிறார்கள் அமீரின் அபிமானிகள். ஆனால் அவர் இயக்குனரில்லை என்றாலும் அவரே தயாரித்து உள்ளார் என்பதாலும், கமல் பாணியில் அவர் அந்த திரைக்கதை திருடப்பட்டதல்ல என்று அவரே வாதாடுகிறார் என்பதாலும் அவர் மேல் தவறில்லை என்று சொல்லமுடியாது என்கிறார்கள் அமீரைப்பிடிக்காதவர்கள்.

அமீர், ரொம்பவே நேர்மையானவர் போல தெரிந்தார். அவருடைய திறமையில் யாருக்கும் கடகுகளவுகூட சந்தேகமில்லை.. ஆனால்

* பருத்திவீரனின் மூலம் சிவக்குமார் ஃபேமிலியுடன் சண்டைபோட்டு பேரைக்கெடுத்தார். சிவகுமாருக்கு நெறையவே மரியாதை உண்டு. அதனால் இதில் யார் மேலே தப்பு இருந்தாலும், அமீர்தான் "லூசர்".

* பிறகு, சிவாஜி படத்துக்காக, மொழி விழாவில் ஞாநியுடன் வாதாடியதை மறந்து சிவாஜிக்கு அவார்ட் கொடுத்தது தவறு என்று சொல்லி ரஜினி ரசிகர்களின் கெட்ட புத்தகத்தில் நுழைந்தார்.

* கஜினி, தெனாலி போல இப்போ, ஒரு திருடிய கதையில் நடித்து பேரைக்கெடுத்துக்கொண்டார். கஜினி, தெனாலி வெற்றி பெற்ற படங்கள்! ஆனால் யோகி??

அவர்போல் ஒரு இயக்குனர் தமிழ் சினிமாவுக்கு மிகமிக அவசியம். நடிகர்கள் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்போல் ஒரு இயக்குனருக்குத்தான் தமிழ் சினிமாவில் பஞ்சம்! ஆகையால், அமீர், அவருக்கு நன்றாகத் தெரிந்த இயக்குனர் தொழிலை திறம்படச் செய்து தமிழ் சினிமாவை மேலே கொண்டு சென்று, தமிழ் சினிமா தரத்தை உயர்த்தவேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

2 comments:

Unknown said...

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க தமிழ்10 திரட்டியுடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

வருண் said...

நன்றி,தமிழினி :) என்னனு பார்க்கிறேன் :)