Thursday, September 17, 2009

திருட்டுப்பயலே ஜீவன் ஒழிந்தானா?


சிலவருடங்கள் முன்பு ஜீவன் னு ஒரு நடிகன் தமிழ் சினிமாவை சாக்கடையாக்க முயற்சி செய்து ஒரளவுக்கு வெற்றியும் அடைந்தார். கெளதம் மேனன் என்கிற ஒரு மலையாளி இந்த நடிகரை சினிமாவுக்கு கொண்டுவந்தார். இந்த சிக்கோ டைரக்டர் இந்த நடிகரை காக்க காக்க ல வில்லனாக அறிமுகப்படுத்தினார். அதுலயே இந்த ஆளை வில்லனாக பார்க்கவே எரிச்சலா இருந்தது. பேசியே கொல்லுவான் படம் முழுவதும்.

ஹீரோவாக நடிப்பதற்கு தேவையான ஒரு முகமோ, தகுதியோ இல்லை இவரிடம். அதனால் "பொறுக்கி ஹீரோ"வாக நடிக்க முயற்சிசெய்தாரோ என்று தோன்றுகிறது.

* 1) திருட்டுப்பயலே படத்தில் ஒரு கல்யாணம் ஆன பெண்ணுக்கு உள்ள "அஃபையரை" வைத்து அவளையும் அவள் "காதலனையும்" மிரட்டி, அவர்களிடம் பணம் பறிக்கும் ஒரு ரோல் இவருக்கு. இந்தப்படம் ஒரு வெற்றிப்படம்!!!

I am not supporting an affair or anything. Nobody is proud of doing such but it does happen in our society. People those who involved like that already have to answer their own conscience and God and whatnot?. They live in hell already by doing such act. It is wrong, no doubt! But threatening such people and making money or taking advantage of it is an ANIMAL behavior! How can one even tolerate or enjoy watching such things in a movie? Younger generations are becoming sadistic or sick people or what? Is that because of domination of porn-world? Young people minds are all becoming SICK?? . Beats me!

என்னைபொருத்தமட்டில், இதுபோல் படங்கள் தமிழ் சினிமாவில் தேவையில்லை. இதனால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை!

* 2) அடுத்து "நான் அவனில்லை" னு ஒரு மட்டமான படம்! இதுல இவர் நெறையப்பேரை காதலிச்சு கை கழுவி விடுவார். இப்படி ஒரு ஹீரோ! இதுவும் பெரிய வெற்றிப்படம்!.

தமிழ் சினிமாவில் இப்படியே குப்பைகூட்டுவது கஷ்டம். ரெண்டு படம் பண்ணலாம். மூனாவது படத்தில் தூக்கி குப்பையில் எறிந்துவிடுவார்கள். அதுதான் இந்த ஜீவனுக்கும், இவர் "மச்சக்காரனில்" நடந்தது.

விக்கிப்பீடியாவில் பார்க்கும்போது, இன்னும் இவருக்கு சில படங்கள் தயாரிப்பில் உள்ளதாக சொல்லப்படுகிறது. I doubt whether he has any future in Tamil cinema! Good bye "jeevan"!

28 comments:

Unknown said...

"அஃபையரை" :D

ஹிஹி...

நே டென்சன் வருண்... பி கூல். :)

நடிக்கிற எல்லாரும் அழகா இருக்காங்களா என்ன? ஜஸ்ட் 150 hr டைம்பாஸ். அவ்வளவுதான்.

வருண் said...

***Mãstän said...

"அஃபையரை" :D

ஹிஹி...

நே டென்சன் வருண்... பி கூல். :)

நடிக்கிற எல்லாரும் அழகா இருக்காங்களா என்ன? ஜஸ்ட் 150 hr டைம்பாஸ். அவ்வளவுதான்.

17 September, 2009 10:13 AM***

தங்கள் கருத்துக்கு நன்றி, Mãstän!

I am cool! Take it easy! :-)))

shabi said...

கிருஷ்ணலீலைன்னு ஒரு புது படம் வருது

Unknown said...

மத்த ரெண்டு படத்தோட கருத்தை ஒப்புக்கிறேன். ஆனா ஜீவன் அப்படிங்கற நடிகனை மட்டும் இங்க குறை சொல்ல முடியாது. காக்க காக்க படத்திலயும், திருட்டுப் பயலே படத்திலயும் (ஏன் நான் அவன் இல்லை படத்திலயும் கூட) அவர் குடுத்த பாத்திரத்துக்கு ஏற்ப நடிச்சிருந்தாரு. நம்ம தமிழ் சினிமாவோட தலையெழுத்து ஒரு நடிகன் ரெண்டு படத்துல ஒரே மாதிரி கேரக்டர் செஞ்சு நடிச்சுட்ட அதே மாதிரியே குடுத்துடுவாங்க.

நம்ம பிரகாஷ் ராஜ் கொஞ்சம் தெளிவாகலைன்னா அவரையும் சைக்கோ கேரக்டர் குடுத்தே ஒழிச்சுக் கட்டியிருப்பாங்க. நல்ல வேளை அவர் விவரமா பொழச்சுக்கிட்டார்.

அப்புறம், திருட்டுப் பயலே சினிமாவப் பத்தி - நல்ல விஷயங்கள மட்டுமே சினிமாவா எடுக்கனும்னா எப்பிடி? இப்படி கெட்டவனா இருக்கக்கூடாது அப்பிடிங்கிறதுக்கும் இந்தப் படம் ஒரு பாடமா இருக்கலாம் இல்லையா? அவர்கூட கடைசியில செத்துதான் போறார் பாருங்க.
அதோட இப்பிடி அன்பான கணவனுக்கு துரோகம் பண்ற பொண்ணுங்களுக்கும் இது ஒரு பாடமா இருக்குமே?

அப்புறம், உங்க டேஸ்ட் ஏன் இப்பிடி இருக்கு? இன்னும் 1960ஸ் படம் மட்டும் தான் திரும்ப திரும்ப எடுக்கணும்னு நினைக்கிறீங்களா?

கமல் சொல்ற மாதிரி - கேள்வி கேக்குறது ஈஸி மாமா, பதில் சொல்லிப் பாருங்க அப்போ தான் தெரியும் கஷ்டம்.

வருண் said...

***அதோட இப்பிடி அன்பான கணவனுக்கு துரோகம் பண்ற பொண்ணுங்களுக்கும் இது ஒரு பாடமா இருக்குமே?***

இப்படி ஒரு பாடம் புகட்டனுமா என்ன?! நல்லவிதமாகவும் பாடம் நடத்தலாம்ங்க. This is the worst possible way to "resolve" the problem.

I don't think this kind of affair are going to stop. It was there, it is there and it will be there as long as men and women and marriage is there.

ரஜினிகாந்த ஆன் ஸ்க்ரீன் சிகரெட் குடிக்கிறதை நிறுத்தியதும் எல்லாரும் சிகஎட் குடிக்கிறதை நிறுத்தப்பாவதில்லைங்க. சிகரெட் குடிக்கிறவன் குடிச்சுக்கிட்டுதான் இருக்கான்.

இந்தப்படத்தை பார்த்து யாரும் திருந்தப் போவதெல்லாம் இல்லை.

வருண் said...

***அப்புறம், உங்க டேஸ்ட் ஏன் இப்பிடி இருக்கு? இன்னும் 1960ஸ் படம் மட்டும் தான் திரும்ப திரும்ப எடுக்கணும்னு நினைக்கிறீங்களா?***

LOL!

***கமல் சொல்ற மாதிரி - கேள்வி கேக்குறது ஈஸி மாமா, பதில் சொல்லிப் பாருங்க அப்போ தான் தெரியும் கஷ்டம்.***

நீங்க மேலே கேட்டிருக்க கேள்வியைத்தான் கமல் சொல்லி இருக்காரு போல! LOL

வருண் said...

***அப்புறம், திருட்டுப் பயலே சினிமாவப் பத்தி - நல்ல விஷயங்கள மட்டுமே சினிமாவா எடுக்கனும்னா எப்பிடி? ***

நான் அப்படி சொல்லவில்லைங்க. எனக்கு இந்த ப்ளாட் பிடிக்கலைனு சொன்னேன். அவ்வளவுதான். என் டேஸ்ட் அப்படியிருக்கு போல! :)))

வருண் said...

***shabi said...
கிருஷ்ணலீலைன்னு ஒரு புது படம் வருது

17 September, 2009 12:51 PM***


அப்படியா shabi ?!

இவர் "லீலைகள்" தான் நமக்குத் தெரியுமே! என்னத்த புதுசா கிழிக்கப்போறாரு?

Bleachingpowder said...

தலைப்பிற்கு கடும் கண்டனம். அதே போல் கௌதம் மேனனை மலையாளி என்று விளித்தற்கு,கலைக்கு ஏது மொழி.

ms.விஸ்வநாதன் கூட மலையாளி தான். ஏன் பிரபாகரனுக்கு பணமும், உதவியும் அழைத்து அவரை வளர்த்தி விட்ட எம்.ஜி.ஆரும் ஒரு மலையாளி தான்.

தமிழ் தமிழ்ன்னு முழங்கிய முட்டா கூ... புகழ் சத்தியாஜும் கூட இங்கே வாய்ப்பு இல்லை என்றவுடன் தெலுங்கு மலையாளம்ன்னு பொழப்பை பார்க்க போயிட்டார்.

திறமை எங்கு இருந்தாலும் அதை வரவேற்க கற்று கொள்ளுங்கள்

வருண் said...

****Bleachingpowder said...
தலைப்பிற்கு கடும் கண்டனம். அதே போல் கௌதம் மேனனை மலையாளி என்று விளித்தற்கு,கலைக்கு ஏது மொழி.

ms.விஸ்வநாதன் கூட மலையாளி தான். ஏன் பிரபாகரனுக்கு பணமும், உதவியும் அழைத்து அவரை வளர்த்தி விட்ட எம்.ஜி.ஆரும் ஒரு மலையாளி தான்.

தமிழ் தமிழ்ன்னு முழங்கிய முட்டா கூ... புகழ் சத்தியாஜும் கூட இங்கே வாய்ப்பு இல்லை என்றவுடன் தெலுங்கு மலையாளம்ன்னு பொழப்பை பார்க்க போயிட்டார்.

திறமை எங்கு இருந்தாலும் அதை வரவேற்க கற்று கொள்ளுங்கள்***

///Menon (Nair subcaste) - Wikipedia, the free encyclopedia Menon is a subdivision of Nair, a Kshatriya caste of Kerala belonging to the Nagavanshi order. Menon was a title of dignity bestowed upon the Nairs of ...////

OK, BP, why is he having his caste as a suffix ????!

If he did not, I would not be knowing whatever origin he is.

Jeyamohan also claims that we should take malayaaLis as our role models. Yeah, we all should take shakeela as role model as well.

MalayaaLis identify themselves as "malayaaLis" whenever they want to. So do I :)

Anyway, thanks for your comment.

BTW, only your recent post reminded me of jeevan. I should give you credit for that . :)))

Your points are well taken otherwise!

குறை ஒன்றும் இல்லை !!! said...

ம்ம்ம்ம்.. எனக்கு பிடிக்கலேங்க.. இவனை விடவும் கேவலமா கமல்,விஜய் எல்லாம் நடிச்சிருக்காங்க.. அதுக்காக இவனை சப்போர்ட் எல்லாம் செய்யல.. எனக்கு எவனையுமே பிடிக்காது..ஆனா நீங்க எழுதரது மலிவு விலை விளம்பரம் போல இருக்கு..

குறை ஒன்றும் இல்லை !!! said...

ம்ம்ம்ம்.. எனக்கு பிடிக்கலேங்க.. இவனை விடவும் கேவலமா கமல்,விஜய் எல்லாம் நடிச்சிருக்காங்க.. அதுக்காக இவனை சப்போர்ட் எல்லாம் செய்யல.. எனக்கு எவனையுமே பிடிக்காது..ஆனா நீங்க எழுதரது மலிவு விலை விளம்பரம் போல இருக்கு..

வருண் said...

***குறை ஒன்றும் இல்லை !!! said...
ம்ம்ம்ம்.. எனக்கு பிடிக்கலேங்க.. இவனை விடவும் கேவலமா கமல்,விஜய் எல்லாம் நடிச்சிருக்காங்க..***

பாலச்சந்தர் டைரக்ஷனில் கமல் நடிச்ச மன்மதலீலைலாம் கொஞ்சம் நகைச்சுவையுடன் இருக்கும்ங்க. ஒரு சீரிஸான மெசேஜ் இருக்கும்.

*** அதுக்காக இவனை சப்போர்ட் எல்லாம் செய்யல.. எனக்கு எவனையுமே பிடிக்காது..***

ஒருவரை குறை சொல்லும்போது நமக்கு சப்போர்ட் பண்ண தோனுவது இயல்புங்க. அதில் குறை ஒன்றும் இல்லை :-))))

***ஆனா நீங்க எழுதறது மலிவு விலை விளம்பரம் போல இருக்கு..***

இல்லைங்க, I am very sensitive to such characters and HATE them even in fiction! That is what you see here.

வால்பையன் said...

”காக்க காக்க” படத்துக்கு முன்னாடியே ஜீவன் தமிழுக்கு வந்தாச்சு!

நல்லதந்தி said...

”காக்க காக்க” படத்துக்கு முன்னாடியே ஜீவன் தமிழுக்கு வந்தாச்சு//
”யூனிவ்ர்ஸிட்டி” என்ற படத்தின் மூலம்!

வால்பையன் said...

நல்லதந்தி!

எங்கே போயிட்டிங்க இத்தனை நாளா!?

வருண் said...

தகவலுக்கும் வருகைக்கும் நன்றி, வால்பையன் மற்றும் நல்லதந்தி :)

கிரி said...

மேல படத்தில மாளவிகா முடிய பிடித்து இழுக்குற படத்த போட்ட வருணுக்கு கண்டனம் தெரிவித்து விட்டு தொடங்குகிறேன் ;-)

//இந்த ஆளை வில்லனாக பார்க்கவே எரிச்சலா இருந்தது. பேசியே கொல்லுவான் படம் முழுவதும்.//

இந்த படம் வெற்றி அடைந்ததற்கு சூர்யா மட்டுமே காரணம் அல்ல..ஜீவனின் அருமையான வில்லத்தனமும் ஒரு காரணம். பேச்சிலேயே ஒரு பயத்தை கொண்டு வருவார்..படம் பார்ப்பவர்களுக்கே ஒரு வித பயத்தை தருமளவிற்கு கலக்கி இருப்பார். சூர்யாவை எந்தளவு ரசித்தேனோ அதே போல ஜீவனையும் ரசித்தேன் ..

//திருட்டுப்பயலே படத்தில் ஒரு கல்யாணம் ஆன பெண்ணுக்கு உள்ள "அஃபையரை" வைத்து அவளையும் அவள் "காதலனையும்" மிரட்டி, அவர்களிடம் பணம் பறிக்கும் ஒரு ரோல் இவருக்கு. இந்தப்படம் ஒரு வெற்றிப்படம்!!!//

திருட்டு பயலே அருமையான திரைக்கதையை கொண்ட படம்...இதிலும் ஜீவன் பட்டைய கிளப்பி இருப்பார்..மாளவிகாவும் கலக்கி இருப்பார்..மாளவிகாவிற்கு அவரது திரை வாழ்க்கையிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்த ஒரே படம் என்று நினைக்கிறேன்

//என்னைபொருத்தமட்டில், இதுபோல் படங்கள் தமிழ் சினிமாவில் தேவையில்லை. இதனால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை!//

வருண் நல்லவங்களையே பார்த்துட்டு இருந்தே உலகமே போர் ஆக இருக்கும்..அனைத்துமே கலந்து இருந்தா தான் ஒரு சுவாராசியம் இருக்கும்.

//அதுதான் இந்த ஜீவனுக்கும், இவர் "மச்சக்காரனில்" நடந்தது.//

மச்சக்காரன் ஒன்றும் தமிழ் திரை உலகை தூக்கி விடும் படம் அல்ல.. சாதாரண மசாலா படம் அவ்வளவே..நீங்க அதில் அதற்க்கு மேல் எதிர்பார்க்க முடியாது ..கூடாது.

எனக்கு இந்த படம் பிடித்து இருந்தது..எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தேன். படத்துல ஒரு வெங்காயமும் இல்லை..ஆனாலும் ஓகே

//doubt whether he has any future in Tamil cinema! Good bye "jeevan"//

ஜீவன் ஒரு திறமையான நடிகர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை ..கண்டிப்பாக சரியான இயக்குனரிடம் படம் செய்தால் சிறப்பாக வருவார். அதற்க்கு காக்க காக்க மற்றும் திருட்டு பயலே படங்களே சாட்சி

வருண் நீங்க எப்போதும் கூறுவீங்களே! just express my thoughts என்று அதே மாதிரி நானும் இங்கே கூறி இருக்கிறேன் அவ்வளவே

அப்புறம் உங்களுக்கு பிடிக்கலை என்பதற்காக இப்படி பொதுவில் அவன் இவன் என்று கூறுவது நாகரீகமாக இல்லை.

ஸ்ஸ்ஸ்ஸ் வருண் பதிவை விட என் பின்னூட்டம் பெருசா போச்சு :-))

நல்லதந்தி said...

//வால்பையன் said...
நல்லதந்தி!

எங்கே போயிட்டிங்க இத்தனை நாளா!?//

நான் எங்கே வால்! போகப்போறேன்.எல்லாக் கூத்தையும் பாத்துக்கிட்டுதான் இருக்கிறேன்!. :)

வருண் said...

***வருண் நீங்க எப்போதும் கூறுவீங்களே! just express my thoughts என்று அதே மாதிரி நானும் இங்கே கூறி இருக்கிறேன் அவ்வளவே

அப்புறம் உங்களுக்கு பிடிக்கலை என்பதற்காக இப்படி பொதுவில் அவன் இவன் என்று கூறுவது நாகரீகமாக இல்லை.

ஸ்ஸ்ஸ்ஸ் வருண் பதிவை விட என் பின்னூட்டம் பெருசா போச்சு :-))***

கிரி:

உங்க எண்ணங்களை தெளிவாக சொன்னதற்கு நன்றி. உங்கள் ரசனையை மதிக்கிறேன். நான் அதை சரியாகத்தான் எடுத்துக்கொண்டேன் :)))

ஆனால் எனக்கு இதுபோல் மிருகத்தனமான கேரக்டர்களை சினிமாலகூட பிடிக்காது.

ரேப், கொலைகூட டெய்லி நடக்கத்தான் செய்யுது. அவைகளை பார்த்து ரசிக்க முடியாது என்னால்.

ஒரு நடிகரை அவன் இவன் னு சொல்லுவது தப்புதான். பொலிட்டிக்கல்லி இன்கரெக்ட் தான். உங்க கண்டனம் வரவேற்கத்தக்கது. ஆனால் பிடிக்காத ஒரு நடிகரை (அவர் நடித்த கேரக்டர்களால் நாம் சீரழியுறோம் என்பதால்) வெறுப்பை காட்ட பயன்படுத்திய வார்த்தைதான் அது. மற்றபடி தனிப்பட்டமுறையில் திரு. ஜீவன் தான். நம் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த ஒரு சில நேரம் அநாகரீகமான வார்த்தைகள் பயன்படுத்த வேண்டியதாகிவிடுகிறது.

It is not personal :))) I get disturbed when I watch such characters and I tend to hate them. என்னுடைய உண்மையான உணர்வுகள்தான் அப்படி வெளிவருது. நம்புங்க!

Even Rajni is not that bad in 3mudichchu or in avarkaL or 16 vayahtinilee. Blakmailing someone using their weakness is somewhat unacceptable to me. It is a worst torture. I can never tolerate such even in movies or stories. Sorry if I am being childish but that is just my true feelings.

உங்கள் வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி :)

கிரி said...

அய்! வருண் மாட்டிக்கிட்டாரு

//வருண் said...
ரஜினிகாந்த ஆன் ஸ்க்ரீன் சிகரெட் குடிக்கிறதை நிறுத்தியதும் எல்லாரும் சிகஎட் குடிக்கிறதை நிறுத்தப்பாவதில்லைங்க. சிகரெட் குடிக்கிறவன் குடிச்சுக்கிட்டுதான் இருக்கான்//

//ஆனால் பிடிக்காத ஒரு நடிகரை (அவர் நடித்த கேரக்டர்களால் நாம் சீரழியுறோம் என்பதால்) வெறுப்பை காட்ட பயன்படுத்திய வார்த்தைதான் அது.///

பாருங்க ஒண்ணுல கெட்டு போக மாட்டீங்கன்னு கூறி இருக்கீங்க இன்னுல கெட்டு போய்டுவீங்கன்னு கூறி இருக்கீங்க ..முரண்பாடா இருக்கே! ;-)

//It is not personal :))) I get disturbed when I watch such characters and I tend to hate them. என்னுடைய உண்மையான உணர்வுகள்தான் அப்படி வெளிவருது. நம்புங்க!//

வருண் யார் நம்புறாங்களோ இல்லையோ நான் நம்புறேன் :-)

கிரி said...

//நல்லதந்தி said...
//வால்பையன் said...
நல்லதந்தி!

எங்கே போயிட்டிங்க இத்தனை நாளா!?//

நான் எங்கே வால்! போகப்போறேன்.எல்லாக் கூத்தையும் பாத்துக்கிட்டுதான் இருக்கிறேன்!. :)//

நல்ல தந்தி வாங்கோ! வாங்கோ! அருண் கேட்ட கேள்வியவே நானும் கேட்கிறேன்..எங்க போய்ட்டீங்க இத்தனை ஆளா.. ;-)

கிரி said...

இத்தனை ஆளா.. ;-)

ஹி ஹி நாளா

வருண் said...

கிரி: இங்கே பாருங்க சிகரெட் குடிப்பது சட்ட விரோதமல்ல.

ஒருவருடைய அந்தரங்கத்தைப் படம்பிடித்து அதை வைத்து மிரட்டுவது சட்டவிரோதம் மட்டுமல்ல. மிருகத்தனம். இதுவரை எந்த ஒரு படத்திலும் இதுபோல் பயங்கரமாக வந்ததில்லை.

கிரி said...

:-)

நல்லதந்தி said...

// கிரி said...
இத்தனை ஆளா.. ;-)

ஹி ஹி நாளா//

:)) ரொம்ப நன்றி கிரி! :))

சும்மா said...

what do you think about Nambiyaar, Aanandraj, Senthaamaraikkannan, etc? :)

வருண் said...

***சும்மா said...
what do you think about Nambiyaar, Aanandraj, Senthaamaraikkannan, etc? :)**

I love them all, சும்மா :-))))