Tuesday, September 29, 2009

பின்னூட்டங்களா? இல்லை ஹிட்ஸா?!

ஒரு பதிவு போட்டதும், அதற்கு நெறைய ஹிட்ஸ் கிடைத்தால் அதிகமான பேர் அதை வாசித்ததாக சொல்லலாம். அல்லது என்னனு வந்து பார்த்தாங்கனு சொல்லலாம்.

ஆனால் ஒரு பதிவுக்கு அதிகமான பின்னூட்டம் வந்தால், ஒண்ணு அதில் பிரச்சினை அதிகமாக இருக்கனும். இல்லைனா நல்ல தரமான பதிவா இருக்கனும்.

ஹிட்ஸ் அதிகமாவருவதால் உங்க சைட்க்கு ட்ராஃபிக் அதிகமாக ஆகிறது.

பின்னூட்டம் அதிகமாக வந்தால் உங்களுக்கு ட்ராஃபிக்கிம் அதிகம் வரும், அதே சமயத்தில் கொஞ்சம் வேலையும் அதிகம்!

வேலை அதிகமா??? அதாவது ஒரு சில பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வது ரொம்ப சேலஞ்சிங்கா இருக்கும். பதில் சொல்லவே முடியாத அளவுக்குக்கூட இருக்கும். அதனால்தானோ என்னவோ ஒரு சில பெரிய் எழுத்தாளர்கள் பின்னூட்டங்கலெல்லாம் அனுமதிப்பதில்லை!

உங்களுக்கு எது வேணும்?

ரெண்டும்னு சொல்லாதீங்க, ப்ளீஸ்!!!

* அதிக ஹிட்ஸா?

இல்லைனா

* அதிக பின்னூட்டங்களா?

10 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ரெண்டும்னு சொல்லாதீங்க, ப்ளீஸ்!!!//

ஹி..ஹி..ஹி...

பீர் | Peer said...

ரெண்டும் வேணாம்னு சொல்லலாமா? ;))

வருண் said...

***T.V.Radhakrishnan said...

//ரெண்டும்னு சொல்லாதீங்க, ப்ளீஸ்!!!//

ஹி..ஹி..ஹி...

29 September, 2009 11:32 AM***

ரெண்டு கண்ணுல எந்தக்கண்ணு வேணும்னு கேக்கிறமாதிரி இருக்கா? :)))

வருண் said...

***பீர் | Peer said...

ரெண்டும் வேணாம்னு சொல்லலாமா? ;))

29 September, 2009 12:24 PM**

பொய் எல்லாம் சொல்லக்கூடாது பீர் சார் :)))

பீர் | Peer said...

பாஸ், உண்மையும் சொல்லக்கூடாது.. பொய்யும் சொல்லக்கூடாதுன்னா.. என்ன செய்றது?

வருண் said...

***பீர் | Peer said...

பாஸ், உண்மையும் சொல்லக்கூடாது.. பொய்யும் சொல்லக்கூடாதுன்னா.. என்ன செய்றது?

29 September, 2009 1:17 PM***

கஷ்டம்தான் :)))

ரெண்டும் வேணும்னு நீங்க சொன்னால் தப்பு இல்லை!

சொல்லகூடாதுனு சொல்றதை சொல்லத்தூண்டுவதுதான் மனிதமனம்!
:)))

ராமலக்ஷ்மி said...

பார்த்து விட்டுப் போக வேண்டுமா
அல்லது
வாசித்து விட்டுப் போக வேண்டுமா
என்றால்
வாசிக்க வேண்டும் என்பதில்தான்
எனக்கு விருப்பம்:)!

ஹிட்ஸ் சும்மா கணக்குக்கு
பின்னூட்டம் என்றைக்கும் ஊக்கத்துக்கு!

You agree?

ராமலக்ஷ்மி said...

//அதாவது ஒரு சில பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வது ரொம்ப சேலஞ்சிங்கா இருக்கும்.//

உங்களதைப் போல, இண்ட்ரெஸ்டிங்கா.. சிலநேரம் சேலஞ்சிங்கா:)!

வருண் said...

****ராமலக்ஷ்மி said...
பார்த்து விட்டுப் போக வேண்டுமா
அல்லது
வாசித்து விட்டுப் போக வேண்டுமா
என்றால்
வாசிக்க வேண்டும் என்பதில்தான்
எனக்கு விருப்பம்:)!

ஹிட்ஸ் சும்மா கணக்குக்கு
பின்னூட்டம் என்றைக்கும் ஊக்கத்துக்கு!

You agree?***

வாங்க ராமலக்ஷ்மி!

பதிவில் இண்வால்வ் ஆகி இடுகிற பின்னூட்டங்கள் (க்ரிடிசிஸமாக இருந்தால் கூட) நிச்சயம் ஊக்கமளிப்பதுதாங்க! Yes, I agree :)))

நீங்கள் இங்கே இட்டிருக்கிற பின்னூட்டம் ஒரு உதாரணமா எடுத்துக்கலாம் ங்க! :)

வருண் said...

***ராமலக்ஷ்மி said...
//அதாவது ஒரு சில பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வது ரொம்ப சேலஞ்சிங்கா இருக்கும்.//

உங்களதைப் போல, இண்ட்ரெஸ்டிங்கா.. சிலநேரம் சேலஞ்சிங்கா:)!***

பதிவுலகில் ஒரு சில நல்ல பதிவர்களையும், பதிவுகளையும் ஊக்குவிப்பதும் நம்ம கடமைங்க!

சிரத்தையுடனும் பொது நோக்குடன் எழுதும் பதிவிற்கு அர்த்தமாக பின்னூட்டமிட நான் முயல்வதுண்டு!

உங்கள் பகிர்தலுக்கு நன்றிங்க, ராமலக்ஷ்மி :)