Wednesday, September 2, 2009

காலம் கடந்த "பசங்க" விமர்சனம்!

இந்தப் படத்தை ரொம்ப நாள் பார்க்க இஷ்டமில்லை. பசங்கனு ஏதாவது அசிங்கமா எடுத்து இருப்பானுக நம்ம ஆளுகனு விட்டுவிட்டேன். கடைசியில் டி வி டி வந்ததும் எடுத்துப் பார்த்தா! ஐய்யோ ரொம்ப நல்ல படமா இருக்கேனு ஒரு திருப்தி! ஒரு கான்வெண்ட்டை காட்டி, பெரிய சாஃப்ட்வேர் இன்ஜினியர்களும், டாக்டர் பிள்ளைகளும், வேதம் சொல்லுறவங்க பிள்ளைகளையும் ஹை ஃபையா காட்டாமல், ஒரு சாதாரண அரசுப்பள்ளியையும் அந்த பசங்க போடும் சண்டைகளையும், அவர்களுக்குள் இருக்கும் போட்டியையும் அழகா படம்பிடிச்சு இருக்காங்க!

அந்த ரெண்டு பசங்க வீட்டில், அவங்க அப்பா-அம்மா வுக்கு இடையில் உள்ள குடும்ப பிரச்சினை, அவர்களுக்குள் ஏற்படும் பூசல்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.

தன் மகன் மேல் அன்புடனும், அதே சம்யத்தில் ஹானஸ்ட்டாகவும் ஒரு வாத்தியாரை காட்டுவது மனதில் சந்தோஷத்தை உண்டு பண்ணுது.

ரெண்டு அப்பாமார்களும், அவர்களுக்குள் நடக்கும் டிஸ்கசனும் ஒரு ஜானகிராமன் சிறுகதை லெவலுக்கு நல்லாவே இருக்கு.

அந்த காதல் ஜோடி பரவாயில்லை. ஆனால் ஏன் இப்படி தலையை தலையை ஹீரோ ஆட்டுராரு! சுப்பிரமணியபுரத்தில் பிடிச்ச வியாதி இங்கேயும் வந்துருச்சா!

விரசமில்லாமல், அசிங்கமில்லாமல், கவர்ச்சியை வைத்து பிழைப்பு நடத்தாமல், சில நல்ல விச்யங்களை அழ்கா சொல்லி இருக்கிற இந்த "பசங்க" குழுவுக்கு பாராட்டு!

ஐயா ராமதாஸே அசந்து இருப்பாரு போங்க இந்த பசங்க படத்தை பார்த்து! நல்ல படம்!

15 comments:

DHANA said...

காலம் கடந்த பதிவு

DHANA said...

காலம் கடந்த பதிவு

DHANA said...

காலம் கடந்த பதிவு

வருண் said...

ஆமாங்க, ஆனா இதைப்பத்தி நான் ஏதும் விமர்சனம் படிக்கலைங்க. என் எண்ணங்களை சொல்லனும்போல இருந்துச்சு. மன்னிச்சுக்கோங்க, தனா :)

kanavugalkalam said...

too late sir...

வருண் said...

Very true, kadavuL! :=))) Sorry about that!

Anonymous said...

இன்னும் கொஞ்சம் விரிவாக இருந்திருக்கலாம்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

பரவா இல்லேங்க..அவனவன் ஒரே கதைய திரும்ப திரும்ப எடுக்குரன்.. நீங்க அதே கதய தான் சொல்லி இருக்கீங்க!!!

வருண் said...

***OpenID thillana said...

இன்னும் கொஞ்சம் விரிவாக இருந்திருக்கலாம்.

2 September, 2009 8:55 AM***

உண்மைதாங்க, தில்லானா! பார்க்காதவங்களுக்கு ஒரு சின்ன "ரெக்கமண்டேஷன்" செய்வதுபோல எழுதினேன் :-))

வருண் said...

***குறை ஒன்றும் இல்லை !!! said...

பரவா இல்லேங்க..அவனவன் ஒரே கதைய திரும்ப திரும்ப எடுக்குரன்.. ***

***நீங்க அதே கதய தான் சொல்லி இருக்கீங்க!!!***

:-)))))

nila said...

just copy paste d questions from my page n type ur answers and post in ur blog. u have to invite 4 ppl. u can just trackback ppl who sent me to know wat exactly u have to do. thr s a link for arangaperumal in my post

வருண் said...

nila: I got it! I am working on it. Thanks for tagging me! :) I need to find 4 people! LOL!

கார்த்திக் பிரபு said...

nicelt written

http://gkpstar.googlepages.com/

வருண் said...

*** tataindiaxenon said...

கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com

2 September, 2009 11:01 AM***

பாரிஸுக்கு இப்போ போக வசதிப் படாதுங்க! வருகைக்கு நன்றி :)

வருண் said...

***கார்த்திக் பிரபு said...

nicelt written

http://gkpstar.googlepages.com/

3 September, 2009 7:41 AM***

வருகைக்கு நன்றி, கார்த்திக் பிரபு :)