Friday, September 18, 2009

உன்னைப்போல் ஒருவன் ( * * * *)- க்ரிடிக்ஸ் லவ் திஸ் ஒன்!


விகடன், கமல் படங்களுக்கு இப்பொதெல்லாம் சரியான மதிப்பெண்கள் கொடுப்பதில்லை. 50 மதிப்பெண்களுக்கு மேல் விகடனில் பெற்ற கமல் படம் சமீபத்தில் இல்லை. "கமல் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறார். விகடந்தான் கீழே போகிறது" என்று குற்றச்சாட்டுக்கள் விகடன் மேல் உண்டு. அது ஓரளவுக்கு நம்பும்படியாகவும் உள்ளது.

இப்போ விகடன் விமர்சனத்தை "சேலன்ச்" செய்ய கமலின் உன்னைப்போல் ஒருவன் வந்திருக்கிறது.

sify and Rediff விமர்சனங்கள் (****) மேலே கொடுத்துள்ளன. க்ரிடிக்ஸ் இந்தப்படத்தை ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார்கள். கட்டாயம் பார்க்கவேண்டியபடம் என்கிறார்கள்! இதேபோல்தான் அனேகமாக எல்லா விமர்சனங்களும் வரப்போகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த முறை ஆனந்த விகடன் எத்தனை மதிப்பெண்கள் கொடுக்கப்போகிறது? என்பது மில்லியன் டாலர் கேள்வி!

ஆனந்த விகடனுக்கு சரியான விமர்சனம் செய்து தங்கள் உயர்தரத்தை காப்பாற்றிக்கொள்ள அரிய வாய்ப்பு!

இல்லையென்றால் கமல் ரசிகர்களின் குற்றச்சாட்டு மெய்யாகிவிடும்!

விகடன் விமர்சனக்குழு!!! கவனம்! கவனம்!

14 comments:

வந்தியத்தேவன் said...

சன் பிகசர்ஸ் இந்தப் படம் தயாரித்தால் விகடன் 100க்கு 100 அல்ல 500 மார்க்ஸ் போடும் காரணம் இப்போ சன்னும் விகடனும் ஒன்றுதான். பொறுத்திருந்து பாருங்கள் விகடன் வழக்கம் போல் கீழ்த்தரமான விமர்சனம் தான் செய்யும். சில வயிற்றெரிச்சல் பார்ட்டிகள் போல் ஹிந்தியுடன் ஒப்பிடுவார்கள். ஐயா அறிவு ஜீவிகளே குசேலனை மலையாளத்துடன் ஒப்பிட்டீர்களா? இல்லை விஜயின் படங்கள் அனைத்தையும் அதன் ஒரிஜினல்களுடன் ஒப்பிட்டார்களா? கமல் படம் எண்டதும் வந்துவிடுவார்கள் இந்த அறிவுஜீவிகள்.

வருண் said...

திரு வந்தியத்தேவன்:

எனக்கென்னவோ விகடன் இந்த முறை சரியான மதிப்பெண்கள் கொடுக்கும்னு தோனுது.

பார்க்கலாம் :)

வந்தியத்தேவன் said...

பார்ப்போம் கொடுத்தால் விகடன் தங்கள் பாரப்பரியத்தை மீண்டும் நிருபிப்பார்கள் இல்லையென்றால் வியாபாரத்திற்க்குப் பதிலாக இன்னொரு வி செய்பவர்களாக விகடன் மாறிவிட்டார்கள் என்ற பலரின் கருத்தை ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான்.

வருண் said...

கொஞ்சம், ஆப்டிமிஸ்டிக்கா இருங்க, வந்தியத்தேவன் :-))))

கிரி said...

//ஐயா அறிவு ஜீவிகளே குசேலனை மலையாளத்துடன் ஒப்பிட்டீர்களா//

வந்தியதேவன், ஒப்பிட்டு கிழித்து நார் நாராக தொங்க விட்டு விட்டார்கள் :-)

அறிவு ஜீவிகளே என்று கமல் ரசிகர்களை தான் கூறுவார்கள்..நீங்கள் மாற்றி கூறுகிறீர்கள் :-)

//வருண் said...
திரு வந்தியத்தேவன்:

எனக்கென்னவோ விகடன் இந்த முறை சரியான மதிப்பெண்கள் கொடுக்கும்னு தோனுது.//


விகடன் எப்போது படம் தயாரிக்க ஆரம்பித்தார்களோ அப்போதே அவர்கள் நடுநிலைமை காணாமல் போய் போய் விட்டது (அதற்க்கு முன்பே என்று கூறுபவர்களும் உண்டு) அப்படி இருக்கும் போது..எதற்கு இதற்க்கெல்லாம் டென்ஷன் ஆகிட்டு லூஸ்ல விடுங்க ;-) Relax கவுண்டர் சொல்ற மாதிரி less tension more work ;-)

வருண் ஜீவனுக்கும் மாளவிகாவிற்கும் ஆதரவா பின்னூட்டம் போட வந்து சும்மா இல்லாம இங்கேயும் பின்னூட்டம் போட்டுட்டேன்.. ;-) இனி என்ன ரணகளமாக போகிறதோ! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இது ரத்த பூமி ஆச்சே! :-)

வருண் said...

கிரி:

விகடனும் சன் டி வியும் கொஞ்சம் வேற வேறதான்னு நான் நம்புறேன். எனக்கு இப்போ யார் ஓனர் என்னனு சரியாத் தெரியலை.

மும்பை எக்ஸ்ப்ரெஸ், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம் மூன்றயுமே இந்த அளவுக்கு எல்லா விமர்சகர்களும் ஏகமனதா புகழவில்லை.
மிக்ஸட் ரிவியூஸ்தான் வந்தது.

பார்க்கலாம். எனக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது.

I will certainly revisit here after vikatan gives their rating (marks) :)))

வந்தியத்தேவன் said...

//வருண் said...
கொஞ்சம், ஆப்டிமிஸ்டிக்கா இருங்க, வந்தியத்தேவன் :-))))//

இருக்க முயற்சிக்கின்றேன்.

//கிரி said...

வந்தியதேவன், ஒப்பிட்டு கிழித்து நார் நாராக தொங்க விட்டு விட்டார்கள் :‍)//

ரஜனி ரசிகர்கள் ஒப்பிடவில்லை கிரி சிலவேளைகளில் உங்களைப்போன்ற சில ரஜனி ரசிகர்கள் ஒப்பிட்டிருக்கலாம்.

//அறிவு ஜீவிகளே என்று கமல் ரசிகர்களை தான் கூறுவார்கள்..நீங்கள் மாற்றி கூறுகிறீர்கள் :‍) //

நேற்று வலையில் ஒரு ரஜனி ரசிகனின் வயிற்றெரிச்சல் விமர்சனம் படித்ததால் வந்த வினை ஏனென்றால் அவர் தன்னை அறிவுஜீவி எனக் காட்டிக்கொள்வதில் மகிழ்ச்சியடைபவர்.

//விகடன் எப்போது படம் தயாரிக்க ஆரம்பித்தார்களோ அப்போதே அவர்கள் நடுநிலைமை காணாமல் போய் போய் விட்டது (அதற்க்கு முன்பே என்று கூறுபவர்களும் உண்டு) அப்படி இருக்கும் போது..எதற்கு இதற்க்கெல்லாம் டென்ஷன் ஆகிட்டு லூஸ்ல விடுங்க ;-) Relax கவுண்டர் சொல்ற மாதிரி less tension more work ;‍) //

எப்படி கிரி நீங்கள் மட்டும் இப்படி ரிலாக்ஸாக இருக்கின்றார்கள். விகடனின் நடுநிலைமை சன்னுடன் இணைந்தபின்னர் போய்விட்டது. அவர்கள் இப்போ சன்னைப்போல் வியாபாரம் மட்டும் செய்கின்றார்கள். உங்கள் சன் டிவி பதிவுபோல் விகடன் பற்றிய பதிவையும் எதிர்பார்க்கின்றேன்.

என்னுடைய கணிப்பு இந்தப் படத்திற்கு விகடன் 42 - 45 இற்குள் மார்க் போடுவார்கள்.

கிரி said...

// உங்களைப்போன்ற சில ரஜனி ரசிகர்கள் ஒப்பிட்டிருக்கலாம்//

வாய்ப்பே இல்லை..நான் அந்த படமும் பார்க்கவில்லை..

எப்படி இருந்தாலும் ரஜினி படம் அதே போல இருக்காது என்பது எனக்கு தெரியும்

//நேற்று வலையில் ஒரு ரஜனி ரசிகனின் வயிற்றெரிச்சல் விமர்சனம் படித்ததால் வந்த வினை ஏனென்றால் அவர் தன்னை அறிவுஜீவி எனக் காட்டிக்கொள்வதில் மகிழ்ச்சியடைபவர்//

ஆரம்பிச்சுட்டாங்களா! :-))))

//எப்படி கிரி நீங்கள் மட்டும் இப்படி ரிலாக்ஸாக இருக்கின்றார்கள்//

அட! என்னங்க வந்தியதேவன் ..இப்படி தான் இருக்கும் என்று நமக்கு தெரிந்து விட்டால் அப்புறம் நாம் அதற்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்..அப்புறம் எதுக்கு டென்ஷன்.

நல்ல படம் நல்ல படம் தான் அது ஒருவர் மாற்றி கூறுவதால் கெட்ட படம் ஆகி விடாது ..அவங்க வேணா திருப்தி பட்டுக்கலாம். இது அனைவர் படத்திற்கும் பொருந்தும்.

//இப்போ சன்னைப்போல் வியாபாரம் மட்டும் செய்கின்றார்கள்.//

செய்கின்றார்கள் என்பதை விட ..அவர்களுக்கு வேறு வழி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். படத்தயாரிப்பில் இறங்கி விட்டாலே அவர்களால் இனி நடு நிலையாக எழுத முடியாது...அப்படி எழுத வேண்டும் என்றால் அவர்கள் கமர்சியல் படம் தயாரிக்க முடியாது,,இதெல்லாம் நடக்கிற காரணமா!

அப்புறம் எதுக்குங்க டென்ஷன்! ;-)

//உங்கள் சன் டிவி பதிவுபோல் விகடன் பற்றிய பதிவையும் எதிர்பார்க்கின்றேன்//

விகடன் பற்றி எழுதி இருக்கிறேன் ஆனால் பட விமர்சனம் பற்றி அல்ல..ரஜினி பற்றி அவர்கள் தாறுமாறாக விமர்சித்த போது என் கோபத்தை இப்படி வெளிப்படுத்தினேன்

//என்னுடைய கணிப்பு இந்தப் படத்திற்கு விகடன் 42 - 45 இற்குள் மார்க் போடுவார்கள்//

வந்தியதேவன் இதற்க்கெல்லாம் நீங்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே இல்லை..அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது..காரணம் அவர்கள் நிலை அப்படி :-)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

தசாவதாரத்திற்கு 44 கொடுத்து குருவிக்கு 39 கொடுப்பதால் நமக்கு இந்தக் கேள்வி வருகிறது :)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//ஐயா அறிவு ஜீவிகளே குசேலனை மலையாளத்துடன் ஒப்பிட்டீர்களா? இல்லை விஜயின் படங்கள் அனைத்தையும் அதன் ஒரிஜினல்களுடன் ஒப்பிட்டார்களா? கமல் படம் எண்டதும் வந்துவிடுவார்கள் இந்த அறிவுஜீவிகள்.
//

வந்தியத்தேவன்.. சரியா சொன்னீங்க. எனக்கும் ரொம்ப நாளா இதே கேள்வி தாங்க.

மதன்செந்தில் said...

அநேகமா 42 இல்லனா 44 போடுவாங்க.. அவங்களால அதுக்கு மேல போட முடியாது.. :)

வந்தியத்தேவன் said...

எனக்கு வெற்றி வருண் விகடன் 42 மார்க் போட்டிருக்கின்றார்கள் ஐயோ ஐயோ

வருண் said...

***வந்தியத்தேவன் said...
எனக்கு வெற்றி வருண் விகடன் 42 மார்க் போட்டிருக்கின்றார்கள் ஐயோ ஐயோ

23 September, 2009 10:10 PM***

விகடன் விமர்சனக்குழு சரியான லூசுப்பசங்க போல! :( :(

What a bunch of monkies acting as reviewers!!!

Now I agree that அரைலூசு VIKATAN SUCKS BIG TIME!

------------

வாழ்த்துக்கள் திரு வந்தியத்தேவன்! :)

வெற்றி said...

avargal dasavatharathai vimarciththa bothe avargalin mugathirai kilinthu vittathu enalam...