Friday, October 2, 2009

"உங்க செல்லமா நான்?" -கடலை கார்னர் (23)

"பிருந்தா! மீட் ஷோபா அண்ட் சங்கர்!"

"ஹாய்!"

"இதுதான் பிருந்தா! பிருந்தா ரொம்ப நல்ல பொண்ணு, ஷோபா! எனக்கு ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்"

"அப்போ நாங்க எல்லாம் கெட்டவங்களா கண்ணன்? உங்க பிருந்தா மட்டும் நல்லவளாக்கும்!" என்றாள் ஷோபா.

"இல்லையே, பிருந்தா என்னை மாதிரி இல்லை னு சொல்ல வந்தேன், ஷோபா"

"ஏதோ என்னை மோசமானவள்னு சொல்ற மாதிரி இருக்கு, கண்ணன்"

"சே சே என் செல்லம் இல்லையா நீ? உன்னைப் போயி அப்படி சொல்வேனா, பிருந்தா?"

"உங்க செல்லமா நான்?"

"இல்லையா?"

"கண்ணன்! ரொம்பத்தான் உங்க பிருந்தாவை கொஞ்சிறீங்க! சங்கர்! கண்ணனிடம் கத்துக்கோங்க" என்றாள் ஷோபா.

"அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை, ஷோபா!"

"கல்யாணம் ஆனா கொஞ்ச மாட்டாங்களா, ஷோபா?"

"பப்ளிக்ல கொஞ்ச மாட்டாங்கனு சொல்ல வர்றாங்க, இல்லையா சங்கர்?"

"LOL"

"கண்ணனனுடைய டயலாக் எல்லாம் நம்பாதீங்க, ஷோபா!"

"எனி வே பிருந்தா, தே ஆர் ஃப்ரம் மில்வாக்கி, விஸ்கான்சின்! இங்கே இண்டியன் கான்சலேட்ல பாஸ்போர்ட் ரினிவ் பண்ண வந்திருக்காங்க! தே ஸ்டே வித் மி நவ்"

"ரியல்லி?"

"இந்தியா விசிட் பண்ணுறோம். பாஸ்போர்ட் உடனே ரினீவ்ப் பண்ணி வாங்கனும். ஷோபா சொன்னாள் அவ ஃப்ரெண்டு கண்ணன் இங்கே இருக்கார்னு. வந்து அவர் உயிரை வாங்குறோம்" என்றார் சங்கர்.

"கண்ணன்! அவங்க உங்க வீட்டில் தங்கினால், நீங்க வேணா என் வீட்டுக்கு வந்திருங்களேன்? பாவம் உங்க தொல்லை இல்லாமல் இருக்கட்டும்"

"அப்படிங்கிறயா? தட் இஸ் எ குட் ஐடியா, பிருந்தா"

"இல்லை இல்லை பிருந்தா! கண்ணன் இல்லாமல் எங்களுக்கு கஷ்டம். நாங்க போன பிறகு கண்ணனை உங்களோடயே கூட்டி வச்சுக்கோங்க"

"சரிங்க ஷோபா, உங்க வசதிபோல செய்யுங்கள்!”

*************************************

"என்ன கண்ணன், உங்க கெஸ்ட்லாம் போயாச்சா? உங்களோட பேசக்கூட முடியலை"

"கொஞ்சம் அவங்களோட பிஸி! விருந்தினரை நல்லா உபசரிக்கனும் இல்லையா? இன்று காலையில்தான் புறப்பட்டாங்க, பிருந்தா!"

"ஆமா ஷோபாவை உங்களுக்கு எப்படித் தெரியும்? உங்க க்ளாஸ்மேட்டா? இல்லை ரிலேடிவா?"

"இல்லை, ஆண்-லைன்ல் தான் மீட் பண்ணினேன்"

"நெஜம்மாவா?"

"ரொம்ப நாளாத் தெரியும், பிருந்தா. திடீர்னு பி எம் ல எழுதினாங்க.. நீங்க சிகாகோலதான இருக்கீங்க? எனக்கு சிகாகோ தெரியாது, உதவி வேணும்னு சொன்னாங்க. சரி வாங்கனு சொன்னேன்"

"சங்கரை உங்களுக்கு சரியாத் தெரியாதா?"

"அவரை இப்போதான் மீட் பண்ணுறேன்"

"எப்படி ஆண்-லைன்ல வர்றவங்ககிட்ட இவ்வளவு க்ளோஸ் ஆனிங்க?'

"க்ளோஸ்லாம் இல்லடா. ரொம்ப நல்ல டைப் ஷோபா. உன்ன மாதிரி ரெளடினா ஒதுங்கி ஓடியிருப்பேன்"

"நான் ரவுடியா? அவங்க இருக்கும்போது என்னைப்பத்தி நல்லா சொல்றது. இப்போ வேற மாதிரி சொல்றது. இப்படியெல்லாம் செய்தால் உங்களோட பேசமாட்டேன்"

"மத்தவங்க முன்னாலேதான் நல்லா சொல்லனும். தனியா இருக்கும்போது இப்படித்தான் ஏதாவது ஏடாகூடமா சொல்லி நீ கோபமா இருக்கும்போது எவ்வளவு அழகா இருக்கேனு பார்க்கனும்"

"கோபமா இருக்கும்போது அழகா இருக்கேனா?"

"ஐயோ நீ எப்படி இருக்க தெரியுமா? அப்படியே உன்னை.."

"நீங்க தேவையில்லாமல் செண்சார் பண்ணுறீங்க, கண்ணன். ஆமா பெட்ல இருக்கும்போது என்ன சொல்லுவீங்க!"

"மொதல்ல நீ குடிக்காமல் இருக்கனும். அப்போத்தான் நான் சொல்றதுக்கு டேர்ன் ஆண் ஆவ'

"நான் என்ன குடிகாரினே முடிவு பண்ணீட்டீங்களா? குடிக்காமல் இருந்தால்தான் ஏதாவது கிடைக்கும்னா நான் எதுக்கு குடிக்கிறேன்? சரி என்னனு சொல்லுங்க!"

"ஏண்டி இப்படி அலையிற?"

"நீங்க ஏன் என்னை இப்படி படுத்துறீங்க? என்னை டி போட்டு பேசினால் ரொம்ப ரொம்ப கிக்கா இருக்கு"

"இதிலே என்ன கிக் இருக்கு?'

“தெரியலை. ஆனா எனக்கு ரொம்ப பிடிக்குதே”

“சரி உன்னை நான் என்ன படுத்தினேன்?"

"அதெல்லாம் உங்களுக்கா புரியனும். உங்களோட சண்டை! ஒரு வாரம் பேச மாட்டேன்"

"எதுக்கு இப்போ சண்டை?"

"சும்மாதான். பை கண்ணன்! ஒரு வாரம் நிம்மதியா இருங்க"

“திடீர்னு என்ன?”

“அப்படித்தான்”

“நான் கால் பண்ணினால்?'

“பிக் அப் பண்ண மாட்டேன்”

“நெறையா மெசேஜ் விடுவேன்”

“ஒரு வாரம் சென்றுதான் ரிட்டேர்ன் பண்ணுவேன்'

"இப்போ என்ன ஆச்சு உனக்கு? எதுவும் ஹார்மோனல் எஃபக்டா?"

"தெரியலை. உங்களோட சண்டை! பேசமாட்டேன்!"

“என்னனு தொலை!”

-தொடரும்

No comments: