Thursday, October 8, 2009

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

நம்ம ஊர் பக்தர்கள் எல்லாம் என்னமோ அவர்களை கீழே கொண்டுவரனும் என்கிற ஒரே காரணத்துக்காக பெரியார்தான் இருக்கிற கடவுளை இல்லைனு சொல்லி, கடவுள் நம்பிக்கையை ஒழிக்க முயன்றதாக நினைக்கிறார்கள். சமீபத்தில் எடுத்த ஒரு “சர்வே” படி ஜப்பான் நாட்டில் 60-65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. வியட்நாமில் 81% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஐரோப்பாவில் உள்ள முன்னேறிய பெரிய நாடுகளில் 40-50% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.

கடவுள் நம்பிக்கை இல்லாத ஜப்பானியர்கள் கடவுள் நம்பிக்கை அதிகமாக உள்ள அமெரிக்காவையோ (அதிசயம்! அமெரிக்காவில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மிகக் குறைந்த விழுக்காடுகள்) அல்லது இந்தியாவையோ விட எந்த வகையிலும் குறையவில்லை. உழைப்பிலும் சரி, டெக்னாஜிலும் சரி, அறிவியலிலும் சரி, தத்துவங்களிலும் ஜப்பானியர்கள் யாருக்கும் என்றும் இளைத்தவர்கள் அல்ல!

கடவுள் பக்தியில்லாமல் மனசாட்சியுடன் நடந்து அறிவியலில் சாதிக்கலாம், சந்தோஷமாக வாழலாம், கடின உழைப்பும் உழைக்கலாம் என்பதை நாம் இதிலிருந்து உணரவேண்டும். ஒருவருடைய மத, கடவுள் நம்பிக்கையும், அவர்களுடைய சாப்பிடும் உணவுவகைகளும் ஒருவருக்கு அறிவையோ, திறமையையோ கொடுப்பதில்லை என்பதை நாம் தெரிந்துகொண்டு கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான் சாதிக்க முடியும் என்கிற மூட நம்பிக்கை யிலிருந்து நாம் விடுபட வேண்டும்.


ஏன் ஜப்பானியர்களை கொண்டுவந்து வாதம் பண்ணுகிறேன் என்றால், அவர்களிடம் சாதி கிடையாது, தாழ்வு மனப்பாங்கு கிடையாது, மேலும் அவர்கள் சாதனைகள் நாமறிவோம்.

No comments: