Sunday, October 18, 2009

தீபாவளியாவது.. மண்ணாங்கட்டியாவது!

“ஹலோ! ஹல்லோ! அண்ணே! இருக்கீங்களா?”

“என்னப்பா சாமிநாதா! எப்படி இருக்க?”

“அண்ணே! தீபாவளி எல்லாம் விசேஷமா கொண்டாடினீங்களாண்ணே?”

“அமெரிக்காவிலே இருந்துக்கிட்டா?! தீபாவளியாவது மண்ணாங்கட்டியாவது... அட போப்பா நீ வேற!”

“ஏண்ணே நரகாசுரனை கொன்னதை கொண்டாடி பெருசா நீங்க ஜெலபெரேட் பண்ணலையாண்ணே?”

“தீபாவளிக்கு நரகாசுரனை எல்லாம் நெனச்சதில்ல. தீபாவளின்னா புது ட்ரெஸ் போடனும். காலையில் எழுந்து தலைமுழுகிட்டு அம்மா சுட்ட பலகாரங்கள் சாப்பிடனும். அடுத்து நம்ம சூப்பர் ஸ்டார் படம் பார்க்கனும். அடுத்து லட்சுமி வெடியை, திரியிலுள்ள பேப்பரை கொஞ்சம் எடுத்துவிட்டு, கைலபிடிச்சுக்கிட்டே திரியில் நெருப்பு வச்சு மேலே தூக்கி போட்டு வெடிக்கனும், அப்படி வெடிக்கும்போது அந்த பேப்பரெல்லாம் மேலே இருந்து அழகா விழும்! ஒரு 1000 வாலாவை கைலயே பிடிச்சு கொஞ்ச நேரம் வெடிக்கவிட்டுட்டு பாதி வெடிச்சதும் அப்படியே மேலே தூக்கிப்போட்டு வெடிக்னும்! அப்புறம் ராக்கட்டை கைலபிடிச்சு கொளுத்தி மேலே விடனும். இதெல்லாம் அமெரிக்கால எங்கே பண்ண? ஏன்ப்பா நீ வேற ஃபோன் போட்டு கொல்லுற”

“நான் ஆதவன் பாத்தேண்ணே! படம் பரவாயில்லை சுமாரா இருக்குண்ணே. ஏன்ண்ணே! ஆதவன் அங்கேயும் ரிலீஸ் ஆகி இருக்காமுல்லண்ணே?”

“நம்ம ஊர்ல இருந்தால்தான் தீபாவளி, பட்டாசு, படமெல்லாம் பார்க்க அர்த்தமா தெரியும். இங்கே இருந்துக்கிட்டு தீபாவளி கொண்டாடுறதுக்கு சும்மாவே இருக்கலாம்”

“அப்போ என்னதாண்ணே பண்ணுனீங்க?”

“கால் பண்ணி அம்மா அப்பாவிடம் பேசினேன். அவங்க கிட்ட ஊர் நிலவரம், ஊர்ல என்ன படம் ஓடுது, என்ன என்ன சமைச்சீங்கனு கேட்டேன். அம்மா உடனே, "நீ இல்லாமல் என்ன தீவாளி?"னு ஒரு அழுகை.. பேசிவிட்டு, கொஞ்சம் பழைய தீபாவளியை நெனச்சுப்பார்த்து பெருமூச்சு விட்டேன். இப்படித்தான் போச்சு என் தீவாளி”

“சரிண்ணே, அப்புறம் இன்னொரு நாள் பேசுறேன்”

"உனக்கும் உன் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்ப்பா, சாமிநாதா!"

"ரொம்ப டேங்க்ஸ்ண்ணே!"

2 comments:

ராமலக்ஷ்மி said...

//கொஞ்சம் பழைய தீபாவளியை நெனச்சுப்பார்த்து பெருமூச்சு விட்டேன்.//

தீபாவளியை உற்றார் உறவினர் புடைசூழ குழந்தைகள் பட்டாளமே குழுமியிருக்கக் கொண்டாடிய காலங்களை இங்கே சிட்டி லைஃபில் மாட்டிக் கொண்டவர்களும்தான் நினைக்காமலிருக்க முடியவில்லை.

//அடுத்து லட்சுமி வெடியை, திரியிலுள்ள பேப்பரை கொஞ்சம் எடுத்துவிட்டு, கைலபிடிச்சுக்கிட்டே திரியில் நெருப்பு வச்சு மேலே தூக்கி போட்டு வெடிக்கனும், அப்படி வெடிக்கும்போது அந்த பேப்பரெல்லாம் மேலே இருந்து அழகா விழும்! ஒரு 1000 வாலாவை கைலயே பிடிச்சு கொஞ்ச நேரம் வெடிக்கவிட்டுட்டு பாதி வெடிச்சதும் அப்படியே மேலே தூக்கிப்போட்டு வெடிக்னும்! அப்புறம் ராக்கட்டை கைலபிடிச்சு கொளுத்தி மேலே விடனும்//

நல்லாயிருக்கு ஏக்கங்கள்:)!

வருண் said...

**** ராமலக்ஷ்மி said...
//கொஞ்சம் பழைய தீபாவளியை நெனச்சுப்பார்த்து பெருமூச்சு விட்டேன்.//

தீபாவளியை உற்றார் உறவினர் புடைசூழ குழந்தைகள் பட்டாளமே குழுமியிருக்கக் கொண்டாடிய காலங்களை இங்கே சிட்டி லைஃபில் மாட்டிக் கொண்டவர்களும்தான் நினைக்காமலிருக்க முடியவில்லை.***

வாங்க ராமலக்ஷ்மி! :)

சிட்டியில் சிறுவயதிலிருந்து இருந்தவர்களுக்கு ஒண்ணும்தெரியாதுனு நினைக்கிறேன். நம்மைப்போல் பாதியில் சிட்டி வாழ்க்கை ஆரம்பித்தவர்களுக்கு,அந்த சிறுவயதில் (கவலை என்றாலென்னனே தெரியாமல்) கொண்டாடிய தீபாவளியின் போது கிடைத்த மகிழ்ச்சி வேறுதான்!:)

நான் கொஞ்சம் கவனமாக தீபாவளி முடியும்வரை பொறுமையாக இருந்துவிட்டுத்தான் புலம்பினேன். நம்ம பிரச்சினை நமக்கு.எல்லோரும் சந்தோஷமாக் கொண்டாடிக்கட்டும்னு கொஞ்சம்பெரிய மனது பண்ணி :)))

*************

**//அடுத்து லட்சுமி வெடியை, திரியிலுள்ள பேப்பரை கொஞ்சம் எடுத்துவிட்டு, கைலபிடிச்சுக்கிட்டே திரியில் நெருப்பு வச்சு மேலே தூக்கி போட்டு வெடிக்கனும், அப்படி வெடிக்கும்போது அந்த பேப்பரெல்லாம் மேலே இருந்து அழகா விழும்! ஒரு 1000 வாலாவை கைலயே பிடிச்சு கொஞ்ச நேரம் வெடிக்கவிட்டுட்டு பாதி வெடிச்சதும் அப்படியே மேலே தூக்கிப்போட்டு வெடிக்னும்! அப்புறம் ராக்கட்டை கைலபிடிச்சு கொளுத்தி மேலே விடனும்//

நல்லாயிருக்கு ஏக்கங்கள்:)!***

அம்மா, "காசை கரியாக்காதே!" னு சொல்லுவாங்க!

ஆனால்,"கரியாக்குவத்தான்" தீபாவளியில் ரொம்பப் பிடிச்ச பகுதி! :)))