Thursday, October 15, 2009
ரஜினியின் பெருந்தன்மை! கமலின் நெகிழ்ச்சி!
“தமிழ் சரியாப் பேசத்தெரியாவிட்டாலும் நம்ம சூப்பர் ஸ்டார் பேச்சுதான், கமல்-50 யில் # 1 ஸ்பீச்னு நான் சொல்றேன். அண்ணே நீங்க என்ன சொல்றாப்ல?”
“நான் இல்லைனு சொல்லலடா தம்பி. கமல்-50 லயே ரஜினி பேச்சு பிரம்மாதமாத்தான் இருந்தது. கமல் சொன்னதுபோல “எவன்யா இப்படி ஒரு சகநடிகனை மனதாற உயர்த்திப் பேசுவான்?”
“அண்ணே! ஒண்ணு மட்டும் உண்மை, சிவாஜி, எம் ஜி ஆரையோ அல்லது எம் ஜி ஆர் சிவாஜியையோ இப்படி புகழ்ந்து பேசியதில்லைனு பெருசுகளெல்லாம் சொல்றாப்பில. ரஜினி-கமல் போல அவர்கள் நெறைய படங்களில் இணைந்தும் நடிக்கவில்லை. இல்லையா அண்ணே?”
“ரஜினி-கமல் வேறு! சிவாஜி-எம்ஜியார் வேறு! அவர்கள் காலமும் சரி. அவர்கள் சூழ்நிலையும் சரி”
“ரஜினியால எப்படிண்ணே இப்படி முடியுது? கமல் மட்டும்தான் கலைத்தாயின் செல்லக்குழந்தைனு மனதாற சொல்ல முடியுது?”
“இது கமலோட ஃபங்சன். இதில், கமலை மேல்தூக்கித்தான் பேசனும்னு நல்லா உணர்ந்து இருக்கிறார் ரஜினி. நாகரீகம் தெரிந்தவர் ரஜினி. அப்படி கமலை புகழ்ந்து சொன்னதால, ரஜினி கீழே போகல! இன்னும் கொஞ்சம் மேலேதான் போயிருக்காரு. அதான் இதில் உள்ள தனித்துவம் அல்லது ரஜினித்துவம்”
“அப்போ கமல் ரசிகர்களிடமே ரஜினி நல்ல பெயர் வாங்கிட்டாருனு சொல்ல வர்றீங்களா, அண்ணே?”
“நிச்சயமாக! கமல் ரசிகர்களே அசந்து போய்விட்டார்கள் நு சொல்லலாம்”
"கமல் ரசிகர்களிடமும் பெரிய கைதட்டல் பெற்றுவிட்டாருனா, அது ரஜினியின் பெரிய சாதனைதாண்ணே!"
“மற்றவர்களை புகழ்ந்தும் ரஜினி புகழின் உச்சிக்கு மேலே போயிடுறாரு!”
“அண்ணே! அதான் ரஜினி!”
Labels:
சமூகம்,
திரைப்படம்
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
விழாக் கூட்டத்தில் இரண்டு பேர் பேசுகிற மாதிரியான இந்த உரையாடல் அழகு:)!
ஆஸ்கார் ஒன்றும் ஒலிம்பிக் இல்லை என்று சொன்ன கமல் எங்கே. கமல்தான் கலைத்தாயின் செல்லக்குழந்தை என்று சொன்ன ரஜினி எங்கே..
ரஜினி என்ற மனிதர் எங்கேயோ போய்விட்டார்..
அக இருள் நீங்க
இனிய தீபாவளி
நல்வாழ்த்துக்கள்
இதையும் கொஞ்சம் படிங்க..
***ராமலக்ஷ்மி said...
விழாக் கூட்டத்தில் இரண்டு பேர் பேசுகிற மாதிரியான இந்த உரையாடல் அழகு:)!
15 October, 2009 6:58 PM ***
நன்றிங்க, ராமலக்ஷ்மி :)
முகிலன் said...
*** ஆஸ்கார் ஒன்றும் ஒலிம்பிக் இல்லை என்று சொன்ன கமல் எங்கே. கமல்தான் கலைத்தாயின் செல்லக்குழந்தை என்று சொன்ன ரஜினி எங்கே..
ரஜினி என்ற மனிதர் எங்கேயோ போய்விட்டார்..
15 October, 2009 7:37 PM***
கமலும் ரஜினியின் பெர்ந்தன்மையை மனதாற பாராட்டி உணர்ச்சிவசப்பட்டார், முகிலன் :))
***DHANA said...
அக இருள் நீங்க
இனிய தீபாவளி
நல்வாழ்த்துக்கள்
15 October, 2009 8:09 PM**
நன்றி, தனா :)
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள் :)
***Gokul said...
இதையும் கொஞ்சம் படிங்க..
15 October, 2009 10:48 PM***
வருகைக்கும், பகிர்தலுக்கும் நன்றி, கோகுல்! :)
பார்த்தேன், ரொம்ப ந்ல்லா இருக்கு! :))
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
Thanks, TVR :)
Post a Comment