
சில வேற்றுமைகளை முதலிலும், ஒற்றுமைகளைப் பிறகும் பார்க்கலாம்!
* தசா, மிகப்பெரிய பட்ஜெட். கமல் படங்களிலேயே #1 பட்ஜெட்! ஆனால் உன்னைப்போல் ஒருவன், சமீபத்திய கமல் படங்களிலேயே, மிக குறைந்த பட்ஜெட்! ஒரு மாதிரி சங்கர் ஸ்டெயில்ல கமல் ஃபாளோ பண்ணுறாரு. பெரிய பொருட்செலவு, ஆஸ்கர் ரவி படம்! மிகச்சிறிய பட்ஜெட், கமல் சொந்தப்படம்!
* தசா, வில், கமல், பத்து வேடங்களில் நடிச்சு ஃப்ரேமுக்கு ஃப்ரேம் அவர்தான். இந்த கான்செப்ட் புரியாமல் ஜாக்கிச்சானே குழம்பிட்டாராம்! மாறாக, உன்னைப்போல் ஒருவனில், கமல் பேக் சீட்ல உட்கார்ந்து, மோகன்லாலுக்கு கதானாயகன் ரோலை கொடுத்துவிட்டார்.
* தசா, மிகப்பெரிய அளவில் அட்வர்டைஸ் செய்யப்பட்டது! ஜாக்கிச்சான் வந்தார். மற்றும் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி, ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் உன்னைப்போல் ஒருவன் எந்த ஒரு சத்தமே இல்லாமல் வெளியே வந்த படம்.
* தசா, வின் டி வி ரைட்ஸ் கலைஞர் டி வி, மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியது. அந்த அளவுக்கு எந்தப்படத்துக்கும் ஒரு விலை கொடுக்கலைனு சொல்றாங்க. உன்னைப் போல் ஒருவன் டி வி ரைட்ஸ் பத்தி எனக்கு எதுவும் தெரியலை. அப்படி ஒண்ணு ம் பெரியவிலைக்கு போகலைனு நினைக்கிறேன்.
* தசா, வை திராவிட மற்றும் திராவிட கழக மக்கள் அவ்வளவு ரசிக்கவில்லை. பலர் அதை வெறுத்தார்கள். உன்னைப்போல் ஒருவனை தி க மக்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களும் ரசிக்கவில்லை!
* தசா, இயக்கம் கே எஸ் ரவிக்குமார் மற்றும் இசை Himesh Reshamiyya. ரெண்டுபேருமே பாப்புளர் ஆனவங்க. ஆனால் உன்னைப்போல் ஒருவன் இயக்கம், Chakri Toleti (அறிமுகம்), இசை, ஸ்ருதி ஹாசன் (அறிமுகம்).
* தசாவில் கமலுக்கு ஹீரோயின் உண்டு. ஆனால் உன்னைப்போல் ஒருவனில் இல்லை.
ஒற்றுமைகள்:
* ரெண்டுமே ஓரளவுக்கு, க்ரிட்டிக்களை கவர்ந்தது. ஆனந்த விகடனில் பெரிய அளவுக்கு மார்க் வாங்கவில்லை!
* ரெண்டுலயுமே ஆங்கில வசனங்கள் ரொம்ப ரொம்ப அதிகம்
* ரெண்டுமே வியாபாரரீதியில் வெற்றிப்படங்கள்தான். தசா, எ செண்டர்களில் ரொம்ப நல்லா போச்சு! இதுவும் ஓரளவுக்கு நல்லாத்தான் போகிறது.
* நான் ரெண்டையுமே தியேட்டரில் பார்க்காமல் டி வி டி லதான் பார்த்தேன் :)))
*ரெண்டுமெ கமலை ஒரு மாதிரி இந்துத்தவானு "பொய்குற்றச்சாட்டு" செய்ய வைத்த படங்கள்!
6 comments:
சரித்திரத்தை புரட்டிய புரட்டுப் படங்கள்
***SUREஷ் (பழனியிலிருந்து) said...
சரித்திரத்தை புரட்டிய புரட்டுப் படங்கள்
20 October, 2009 11:53 AM***
வாங்க சுரேஷ்! :-)))
இன்னொரு ஒற்றுமை சொல்லீட்டீங்க! :-))
present varun
வாங்க டி வி ஆர் :)
நல்ல வியாபாரி
** DHANA said...
நல்ல வியாபாரி
20 October, 2009 11:43 PM***
வாங்க தனா! ஆமாம் நடிப்பு, திறமை மட்டும் இருந்தால் போதாது. கொஞ்சம் வியாபாரத் திறமையும் இருக்கனும் இல்லையா? :)
Post a Comment