Tuesday, October 6, 2009

அவன் என் அம்மாவைப் பத்தி தப்பா பேசினான்!

அந்தப் பையன் பேர் முனியசாமி. வயசு ஒரு 16 இருக்கும். நாலாவதிலேயே படிப்பை நிறுத்திவிட்டார் அவன் அப்பா, கருப்பையா. அவர் வச்சிருக்க மூங்கில் மரம் போன்றவை விற்கும் கடையில் அவந்தான் எல்லாம். யாரோடையும் சரியாக்கூட பேசமாட்டான். எல்லாரும் அவனை “மெண்டலு” நுதான் பின்னால பேசுவானுக. அவனுக்கு அவன் “அம்மாவை” பத்தி என்ன சொன்னாலும் பயங்கர கோபம் வரும்.

கருப்பையா கடைக்கு அநியாய வட்டிக்கடை “சண்டியர் சந்திரன்” கருப்பையாவைத் தேடி வந்தார்.

“வாங்க சந்திரன்! அடுத்த மாதம் தர்றேங்க பணம்!” என்றார் கருப்பையா.

“இல்லங்க, இப்போ பணம் வேணும்” என்றார் சந்திரன்.

சந்திரன் அந்ததெருவிலே பெரிய சண்டியர். அவர்ட்ட வட்டிக்கு வாங்கிவிட்டு அது இதுனு ஏமாத்த முடியாது. யாரையும் துண்டைப்போட்டு தெருவில் இழுத்து வட்டிப்பணத்தை வாங்கிக் கொண்டு போய்விடுவார். ஆள் வாட்ட சாட்டமா இருப்பார். கருப்பையா, இவரைவிடவயதில் மூத்தவர் ஆனா ரொம்ப சின்ன தேகம் அவருக்கு.

“சொல்றேன் இல்லை சந்திரன், இப்போ பணம் இல்லப்பா! வேணும்னா கல்லாவ வந்து பாரு! வச்சுக்கிட்டா இல்லனு சொல்றேன்”

“நீங்க என்ன பண்ணுவீங்கனு தெரியாது அண்ணே. எனக்கு இப்போ பணம் வேணும்!”

“சொல்றேன் இல்லப்பா!”

“யோவ்! நானும் சொல்றேன்ல? சோத்துக்கு உப்புப் போட்டுதானே சாப்பிடுற?”

“என்னப்பா சந்திரா மனுஷனுக்கு மனுஷன் இதுகூட!”

“என்னயா மனுஷன் நீ! இந்த பொழைப்புக்கு...”

************************************

2 மணி நேரம் சென்று அந்த ஊர் போலிஸ் ஸ்டேஷன்ல

“உன் பேரு?”

“முனியசாமி சார்”

“அப்பா பேரு?”

“கருப்பையா”

“ஏண்டா இப்படி செய்த?”

“என் அம்மாவைப் பத்தி தப்பா பேசினான் அந்த ஆளு. கையில் இருந்த கத்தியை வச்சு சொருகினேன்! இனிமேல் பேசுவானா, அவன்?”

“அதுக்காக? அவர் ஆஸ்பத்திரியில் இருக்கார்டா. பொழப்பாருனு தெரியலை. இப்படியா செய்வாக?”

“சாகட்டும்! என் அம்மாவைப்பத்தி தப்பாப் பேசினால் அப்படித்தான் குத்துவேன்!'

“இவனை உள்ளே போடுங்கப்பா!

*****************************

“என்னடா ஆச்சு, ராமா?”

“அந்த மெண்டலுப்பய “முனி” குத்திப்புட்டான்ப்பா நம்ம சந்திரன் அண்ணனை!”

“நம்ம சண்டியர் சந்திரனையா! அந்த ஆளு 4 பேரை வெட்டுவானே”

“உண்மைதான். திடீருனு கத்தியை எடுத்துப்போய் சொருகிட்டான் அந்த மெண்டலு. வயித்துல குத்திப்புட்டான்ப்பா. உள்ளே ஈரக்கொலைய காலிபண்ணிட்டான் போலே. அண்ணே போய் சேர்ந்துட்டாரு!”

“என்னதாண்டா அப்படிச் சொல்லிப்புட்டாரு சந்திரன்?”

“வட்டிப்பணம் வாங்கப் போகும்போது அவர்தான் தாறுமாறா பேசுவார் இல்ல?”

“அந்த மெண்டலு குத்துற அளவுக்கு என்ன எழவைச்சொன்னான் மனுஷன்?”

“கருப்பையா அண்ணன் ட்ட “இதுக்கு உன் பொண்டாட்டியை கூட்டிக்கொடுக்கலாம்” னு சொல்லி இருக்காரு! அந்த மெண்டல் உள்ளே இருந்து ஓடி வந்து “என்னடா சொன்ன என் அம்மாவைனு” சொருகிட்டான்”

“நாசமா போச்சு போ! இனி மேல் அவனைக் கொன்னாத்தான் என்ன? அண்ணன் சந்திரன் திரும்பி வரமாட்டாரு!”

2 comments:

sriram said...

என்ன வருண் இது? என்ன தான் சொல்ல வரீங்க? Head no understand, tail no understand ;-)

வருண் said...

***sriram said...
என்ன வருண் இது? என்ன தான் சொல்ல வரீங்க? Head no understand, tail no understand ;-)***

Sriram :-)))

I dont know, I think what I tried to tell was for some people, someone saying swear words about his mom is intolerable.