Tuesday, October 13, 2009

பத்திரிக்கைத் தொழிலில் விபச்சாரம் இல்லையா?

நடிகைனா ரொம்ப இளக்காரம்தான். தினமலர் பத்திரிக்கைக்காரர்களுக்கு சப்போர்ட்டா மேதாவி என் ராம் முதல்க்கொண்டு எல்லா பத்திரிக்கைகாரனும் இந்த "புனிதன்" லெனினை கைது செய்ததுக்கு வரிந்துகட்டிக்கொண்டு தான் போயிருக்கிறார்கள்!

நடிகர்கள், தன் சக நடிகையை விட்டுக்கொடுக்காதற்கு காரணம் அவர்களுக்கு பெரிய அவமானத்தை தேடிக்கொடுத்துள்ளது, தினமலர். பெரிய "சூப்பர் ஸ்டார் நடிகை"யா இருந்த நடிகைகள் பிழைப்பே ஒரு 5 வருசம்தான். அதுக்கப்புறம் எவனும் சீண்டமாட்டான். நாய்மாதிரி இன்னொரு இளம் நடிகை பின்னால போயிடுவான் எல்லா ஆம்பளையும். அப்படியிருக்க, இதில் இதுபோல் தொழிலில் இறங்கும் லெவெல்ல இருக்கிற நடிகைகள்னா, பொழைப்பு எத்தனை நாளைக்கோ? தவறாமல் எயிட்ஸும் வாங்கிவிடுவார்கள்னு நினைக்கிறேன் படுக்கிற பெரியமனிதர்களிடம் இருந்து. அதுக்காக விபச்சாரம் சரினு சொல்லல நான்.

என்னைக்கேட்டால் விபச்சாரம் நடிகைகள்மட்டும் செய்யலை, பத்திரிக்கைக்காரன் மட்டும் என்ன செய்றான்? பொய்யும் புரட்டுமே, இதயமே இல்லாமல், பேச்சுச் சுதந்திரத்தை வைத்து பலவிதமான பத்திரிக்கை விபச்சாரங்கள் செய்கிறார்கள்ங்கிறதை தினமும் பார்க்கத்தானே செய்றோம்?

அட் லீஸ்ட் விபச்சாரி தன் உடலை விற்று பிழைக்கிறாள். பத்திரிக்கைக்காரர்கள் இன்னொருவர் வாழ்க்கையை அவமானப்படுத்தி தன் வயித்தை கழுவிறான். சரி இவர்கள் சொல்வதுபோல விபச்சாரத்தில் கலந்துகொண்ட நடிகைகள் படத்தை போட்டு இவங்க பத்திரிக்கை தர்மத்தை காப்பாத்துறாங்கனு வச்சுக்குவோம்.

அபப்டிப்பார்த்தால் அந்த நடிகை விபச்சாரிட்ட போயி படுக்கிற ஆம்பளைங்க எல்லாம் குற்றவாளிகள் தானே? ஒரு பொம்பளைட்ட 100 ஆம்பளை படுத்து எந்திரிக்கிறான்!

பத்திர்க்கைக்காரர்கள் புனிதர் லெனின், வாய்கிழியப்பேசும் என் ராம் எல்லோருக்கும் என் கேள்வி இதுதான்!

* இவர்கள் குற்றம்சாட்டுகிற அந்த நடிகைகள்ட்ட படுத்தெழுந்த ஆம்பளைங்க ஃபோட்டொகளை எல்லாம் அந்த நடிகைகள் கொடுத்தால் அதையும் போடுவாங்களா?

* விபச்சாரிட்ட போறவன் இவர்களை மாதிரி பத்திரிக்கைக்காரன், அரசியல்வாதி எல்லா விதமான ஆம்பளையும்தான் இருப்பான் இதில். யாரா இருந்தாலும் அவன் ஃபோட்டோவை போடுவீங்களா?

* தினமலர் லெனின் அந்த வேலையை அடுத்து செய்யனும். அந்த மாதிரி விபச்சாரத்தில் கலந்துக்கிற ஆம்பளைங்க படங்கள் போட்டால் பத்திரிக்கையில் போட இடம் பத்தாது அது இதுனு சொல்லக்கூடாது.

*அந்த நடிகைகள்ட்ட படுக்கிறவனுக படத்தைப்போடுவதும் பத்திரிக்கை தர்மம்தான், மாமா வேலை இல்லை!

5 comments:

பீர் | Peer said...

//அந்த நடிகை விபச்சாரிட்ட போயி படுக்கிற ஆம்பளைங்க எல்லாம் குற்றவாளிகள் தானே? ஒரு பொம்பளைட்ட 100 ஆம்பளை படுத்து எந்திரிக்கிறான்!//

வருண், பாலியல் தொழில் தவறு / குற்றம் என்று ஏற்றுக்கொள்கிறீர்கள். பாலியல் தொழிலாளியிடம் செல்லும் 100 பேரை (போட்டோ போட்டு, அவமானப்படுத்தி) திருத்துவதை விட, பாலியல் தொழில் செய்யும் ஒருத்தியை (அல்லது ஒருவனை) திருத்த நினைப்பது சரிதானே?

நடிகைகள் பிரபலமாக இருப்பதுதான், அவர்களுடைய அதிக சந்தை விலைக்கும், போட்டோ பத்திரிக்கைகளில் வருவதற்கும் காரணம்.

தனக்கு கோயில் கட்டப்படும், பால் அபிஷேகம் செய்யப்படும் போட்டோ பத்திரிக்கைகளில் வருவதை ஏற்றுக்கொள்ளும் இவர்கள், இத்தகைய விழைவுகளையும் சந்தித்தே ஆக வேண்டும்.

ILA (a) இளா said...

//நடிகைகள் பிரபலமாக இருப்பதுதான், அவர்களுடைய அதிக சந்தை விலைக்கும், போட்டோ பத்திரிக்கைகளில் வருவதற்கும் காரணம்.//
இது உண்மைதானே?

BTW,சினிமா நடிக/நடிகைகள் படம் இல்லாம ஒரு Issue வரட்டுமே பார்க்கலாம்

ரவி said...

இதில் எல்லாரும் தழையத்தழைய எழுதுவது சரி. பேரன் பேத்தி எடுத்துவிட்ட, தலைக்குமேல் வளர்ந்த ஆண் மகன் இருக்கும் மஞ்சுளாவின் படத்தை போட்டு செய்யப்பட்ட கேரக்டர் அஸாசினேஷன் கொலைக்கு எந்த விதத்தில் பதில் சொல்லப்போகிறார் லெனின் ?

அல்லது உண்மையில் லெனின் பார்வைக்கு வராமலேயே அவை அச்சாகியிருக்க வாய்ப்புண்டா ?

இதில் ஒரு உச்சகட்ட காமெடி என்னவென்றால்,அந்த செய்தி பத்திரிக்கையாளருக்கு வேலை போய்விட்டதென்றும், அவர் எவ்வளவு நாள் சென்னையில் வேலை இல்லாமல் காலம் தள்ளுவதென்று ஊரை பார்த்து போய்விட்டதாகவும் பாலா அண்ணன் எழுதியது. ரெண்டு நாள் கூட கடன் சொல்லி இட்லி சாப்பிடமுடியாதா என்ன ?

கீழே இளா சொன்னபடி எந்த சினிமா நியூசும் இல்லாமல் ஒரு இஷ்யூவை பத்திரிக்கை போடமுடியுமா ?

சினிக்கூத்து என்று சினிமாவுக்கே இதழ் நடத்தும் நக்கீரன், முந்தைய பதிவை சூர்யாவின் ஆடியோ வெளியீடு என்று படத்தோடு போட்டுவிட்டு, அடுத்தது சூர்யாவின் ஆபாசம் என்று அடுத்தது வெளியிடுகிறதே ? இதில் செய்தியை சொல்லவேண்டும் என்ற நோக்கத்தை தவிர, வேறு உள்நோக்கம் இருப்பதாகவே படுகிறது...

வழிமொழிகிறேன் வருண்.

வருண் said...

*** பீர் | Peer said...
//அந்த நடிகை விபச்சாரிட்ட போயி படுக்கிற ஆம்பளைங்க எல்லாம் குற்றவாளிகள் தானே? ஒரு பொம்பளைட்ட 100 ஆம்பளை படுத்து எந்திரிக்கிறான்!//

வருண், பாலியல் தொழில் தவறு / குற்றம் என்று ஏற்றுக்கொள்கிறீர்கள். பாலியல் தொழிலாளியிடம் செல்லும் 100 பேரை (போட்டோ போட்டு, அவமானப்படுத்தி) திருத்துவதை விட, பாலியல் தொழில் செய்யும் ஒருத்தியை (அல்லது ஒருவனை) திருத்த நினைப்பது சரிதானே? ***

பீர்: இவங்களை திருத்துவதற்காக லெனின் மற்றும் தினமலர் இப்படி செய்கிறார்கள்னு சொல்றீங்களா?

ஃபோட்டோவைப் போடாமலே, சட்டப்படி அவங்க மேலே (சரியான எவிடண்ஸுடன்) ஆக்ஷன் எடுத்திருக்கலாம்.

ஃபோட்டோ போடுவது கேவலப்படுத்த,பீர்! திருத்த அல்ல!


***நடிகைகள் பிரபலமாக இருப்பதுதான், அவர்களுடைய அதிக சந்தை விலைக்கும், போட்டோ பத்திரிக்கைகளில் வருவதற்கும் காரணம்.

தனக்கு கோயில் கட்டப்படும், பால் அபிஷேகம் செய்யப்படும் போட்டோ பத்திரிக்கைகளில் வருவதை ஏற்றுக்கொள்ளும் இவர்கள், இத்தகைய விழைவுகளையும் சந்தித்தே ஆக வேண்டும்.****

பிரபல நடிகைகள், பாலாபிஷேகம் செய்யப்படுகிறவர்களெல்லாம் இதில் மாட்டுவதில்லை. ஏதாவது ஏப்ப சாப்பதான் மாட்டுவது! :(

வருண் said...

@இளா & @ ரவி:

தங்கள் வருகைக்கும், பகிர்தலுக்கும் நன்றி :)