Tuesday, October 13, 2009

ஓ..அது ஸ்பெல்லிங் மிஸ்டேக்!- கடலை கார்னர் (27)

"ஏய் பிருந்து! நான் தான்! ஃபோனை பிக் அப் பண்ணுடி"

"ஹல்லோ!"

"ஏய்!! எப்படி பிக் அப் பண்ணின!!! நான் மெசேஜ் விடலாம்னுதான் போனேன்"

"சும்மாதான்"

"உன் குரலைக்கேக்க நல்லா இருக்குடா! உனக்கு ரொம்ப பெரிய மனசுதான். வர வர உன் மனசும் பெருசாகிக்கிட்டே வருதுடா!"

"மனசும்மா? வேறென்ன எனக்கு பெருசாகிக்க்கொண்டு இருக்கு?"

"அதெல்லாம் பச்சையா சொல்ல முடியாது"

"ச்சும்மா சொல்லுங்க..."

"உனக்கு நான் அதை சொல்றதை காதுகுளிர கேக்கனுமா? யு ஆர் க்ரேஸி"

"ஆமா" அவள் சிரித்தாள்.

"உன்னை நீ ரெண்டு "மிரர்" வச்சு முன்னால பின்னால எல்லாம் உன் அழகைப் பார்க்கிறதில்லையா?"

"நீங்க ரொம்ப மோசம், கண்ணன். ஆமா என்னப்பத்தி எப்போவுமே ஏன் இப்படி கெட்ட கெட்ட மாதிரியே யோசிக்கிறீங்க?"

"நானா? நீயா?"

"கேள்வியைப் பாருங்க, கேள்வியை!"

"அது ஏன்னு தெரியலை, ஆனால் உன்னிடம் மட்டும் அப்படித்தான் பேச பிடிக்குது"

"என்னிடம் மட்டுமா? பொய்!"

"நெஜம்மாத்தான். அப்படி பேசினால்தான் உன்ட்ட ஏதாவது அர்த்தமா பேசின மாதிரி இருக்கு"

"ஏன் நல்ல பையனா, நல்லவிதமா பேசினால் என்னவாம்?"

"அது ரொம்ப போர் அடிக்குதே.. ஏய்! நல்லவனா நடிக்கிறதெல்லாம் ஊருக்கு! உன்னிடம் இல்லை"

"ஏன் நான் ரொம்ப ஸ்பெஷலா, கண்ணன்?"

"ஆமடா. இதை எத்தனை தர கேப்ப?"

"சும்மா நடிக்காதீங்க, கண்ணன். எப்படி நம்புற மாதிரி கூசாமல் பொய் பேசுறீங்க?"

"ஏய்! பொய்யெல்லாம் இல்லை. எங்கே அடிச்சு சத்தியம் பண்ண?"

"எனக்கு அந்த இடம்தான் ஞாபகம் வருது"

"எந்த இடம்?"

"அதான் நீங்க சொல்லுவீங்கள்ல?"

"மறந்து போச்சு, நீயே சொல்லேன்?"

"நானா? சாண்ஸே இல்லை! என்னிடம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் இல்லை அது"

"ஓ அதுவா?"

"ஆமா, ட்யூப் லைட்! உங்ககிட்ட ஒண்ணு கேக்கனும்னு நெனச்சேன், அதென்ன பிருந்து, பருந்துனு என்னை கூப்பிடுறீங்க?"

"ஓ அது சும்மா ஸ்பெல்லிங் மிஸ்டேக்!"

"ஆஹஹா! பேசும்போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் விடுற ஒரே ஆள் நீங்கதான் கண்ணன்" அவள் சத்தமா சிரித்தாள்.

"ஏன் உனக்குப் பிடிக்கலையா?"

"நல்லாத்தான் இருக்கு ரொம்ப யுனீக்கா"

"அப்புறம் என்ன? பிடிக்குதுனு சொல்றதுக்காக கேட்டியா?"

"ம்ம்"

"ஆமா ஏன் உன் குரல் ஒரு மாதிரியா இருக்கு? ஏதாவது பிரச்சினையா?"

"ஒண்ணுமில்லையே. கண்ணன்! அப்புறம் ஒரு விசயம்!! எனக்கு ஒரு "காப்" டிக்கட் கொடுத்துட்டா இன்னைக்கு"

"லேடியா? அதான். ஜெண்டில்மேன் எல்லாம் உனக்கு டிக்கட் கொடுக்கமாட்டான்"

"அது ஏனாம்?"

"உன் அழகைப்பார்த்து மயங்கி, எதுக்கு உன் காரை நிறுத்தினோம்னு மறந்துடுவான். அப்புறம் அப்பாலஜைஸ் பண்ணிட்டு போகச்சொல்லிடுவான்"

"அவ்வ்வ்வே"

"ஸ்பீடிங் டிக்கட்டா? நிதானமா ஓட்டுறதுதானே? எவ்வளவு 100 டாலரா?"

"ஸ்பீடிங் டிக்கட் இல்லை, கண்ணன். சும்மா ஒரு லைட்ல ஃப்ளாஷிங் ரெட் இருந்தது. நான் நிறுத்திட்டுத்தான் எடுத்தேன்..அவ நிறுத்தலைனு சொல்றா"

"அப்போ நீ வேணா கோர்ட்ல போயி அப்பியர் ஆகுறியா?"

"அப்பியர் ஆனா?"

"ஹண்ட்ரட் டாலர் சேவ் பண்ணலாம்"

"ஏன் ஜட்ஜ் என்னைப்பார்த்து மயங்கிவிடுவாரா?" அவள் சிரித்தாள்.

"இல்லை, அந்த காப் பொதுவா கோர்ட்க்கு வரமாட்டாள். அவளுக்கு ஆயிரம் வேலை இருக்கும். அவ வரலைனா கேஸை டிஸ்மிஸ் பண்ணிடுவாங்க"

"நெஜம்மாவா?"

"ஆமடா. சரி இதைப்பத்தி கவலையை விடு! டிக்கட்டை "பே" பண்ணாதே. கால் பண்ணி, நீ இண்ணொஸண்ட்னு சொல்லு! கோர்ட்ல அப்பியர் ஆகுறேன்னு சொல்லு"

"சரி"

"இதை என்னிடம் சொல்லத்தான் ஃபோனை எடுத்தியா?"

"அதெல்லாம் இல்லை! பேசினதுனால சொன்னேன். சரி இப்போ வச்சிடவா? இன்னும் மூனு நாள் இருக்கு இல்லையா?"

"ஆமா, எதுக்கு இந்த "பேசாவிரதம்" இருக்க?'

"அதுவா.. சும்மாதான். என்னை ஒரு வழிக்கு கொண்டு வரத்தான்"

"உன்னையா? அப்படினா?"

"உங்காளோட பேசாமல் இருந்தால் எப்படி இருக்குனு பார்த்தேன்"

"நிம்மதியா இருந்தியா?"

"எங்கே நிம்மதியா இருக்க விட்டீங்க?"

"ஏன் கனவிலே வந்து உன்னை கிஸ் பண்ணீனேனா?"

"ஆமா"

"எந்த இடத்திலே?"

"அதெல்லாம் சொல்ல மாட்டேன். கனவிலே நீங்க ரொம்ப ரொம்ப மோசம்"

"ஏய் மோசமா கனவுகண்டது நீ! அப்படி மோசமான கனவுதான் உனக்கு வருமா?"

"அப்படி காண வச்சது நீங்கதான்!"

"ஸோ, உனக்கு மோசமா கனவு வந்ததுக்கு நான் காரணம்? அது என் தப்பா?"

"ஆமா, ஆமா, ஆமா, ட்யூப் லைட்"

"ஏய் பிரூந்து, I have got to go with Mike. He will show up any moment"

"இனிமேல் மூனுநாள் சென்றுதான் பேசுவேன்"

"சரி, Thanks for relaxing the rule and talking with me, today"

"கண்ணன்!"

"என்னடா?"

"ஐ ஜஸ்ட் லவ்ட் யுவர் மெசேஜெஸ். பை"

- தொடரும்

No comments: