Monday, October 26, 2009

காலத்தால் “அழியும்” இயக்குனர்கள்!


நடிகைனா அவர்களுக்கு தமிழ் சினிமாவில் பாப்புளாரிட்டி இருப்பது மிஞ்சி மிஞ்சிப்போனால் ஒரு பத்து வருடகாலம்தான். இது எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் சரி. எந்தக்காலமாக இருந்தாலும் சரி.

இசையமைப்பாளர்னா? அவர்களும் ஒரு 10-15 வருடகாலம்தான் ஒரு கம்மாண்டிங் பொசிஷன்ல இருக்காங்க. இதில் கே.வி மஹாதேவன், எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஏன் ரகுமான் கூட விதிவிலக்கல்ல!

சரி அடுத்து இயக்குனர்களை எடுத்துக்குவோம். பெரிய பெரிய ஆட்களெல்லாம், பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், டி ராஜேந்தர், மணிரத்னம், எஸ் பி முத்துராமன், சந்தான பாரதி, மணிவண்ணன், ஆர் சுந்தர் ராஜன், சுரேஷ் கிருஷ்ணா, வாசு எல்லோருக்குமே ஒரு 10-15 வருடகாலம்தான். அதன்பிறகு இவர்களை யாருமே சீண்டுவதுகூட இல்லை. அதாவது மரியாதையா இவர்கள் ஒதுங்கிக்கொள்வது நல்லது. பாலச்சந்தர் எல்லாம் இன்னைக்கு படம் இயக்கினால் எ-க்ளாஸ் மக்கள்கூட பார்க்கத் தயங்குகிறார்கள். பாரதிராஜா எல்லாம் இப்போ படம் எடுத்தால் நாங்க பார்க்க மாட்டோம் என்கிறார்கள். பாக்யராஜா?, ஆளை விடுங்க சார் நு ஒதுங்கி ஓடுறாங்க. மணிரத்னமா? அவர் ஹிந்திலயே இருக்கட்டும், அவருக்கு தமிழ் படம் எடுக்கிற சரக்கு இல்லை என்று பலரும் நம்புறாங்க. சங்கர், ஒரு எக்ஸப்ஷனா என்பதை காலம்தான் பதில் சொல்லனும். ஆனால் சங்கர் ஒரு கன்வண்ஷ்னல் இயக்குனர் அல்ல! அவர் இதுவரை இயக்கியவையை விரல்விட்டு எண்ணிடலாம்.

ஆனால், நடிகர்கள்.. சிவாஜி - எம் ஜி ஆர் 30 வருடம் கொடிகட்டிப்பறந்தார்கள். எம் ஜி ஆர், அரசியலால்தான் ஒதுங்கினார். சிவாஜி கடைசிக்காலம் வரை என்ன நடித்தாலும் பார்க்க ரசிகர்கள் இருந்தாங்க. அதேபோல்தான் நம்ம ரஜினி - கமல். கடந்த 35 வருடங்களாக கொடிகட்டிப் பறக்கிறார்கள். இவர்களை உருவாக்கிய இயக்குனர்கள் எல்லாம் இவர்களைப்பார்த்து மலைத்து நிற்கிற பரிதாப நிலை வந்துவிடுகிறது. என்னைக்கேட்டால் இது ரொம்ப ரொம்ப ரொம்ப அநியாயம். ஏன் இயக்குனர்கள் அனைவருமே காலத்தால் அழிந்துவிடுகிறார்கள் என்பது என்னால் புரிந்துகொள்ள முடியாத ஒரு புதிர்.

12 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

ராஜ ராஜ சோழன் கூட காலத்தால் அழிந்தவர்தான். இன்றும்கூட 1960ல் தமிழ்நாட்டை ஆண்டவர் பற்றி நிறையப் பேர் மறந்துவிட்டார்கள்..,

அவர்களது சாதனைகள் மட்டுமே பெயர் சொல்லும். புதிய விஷயங்கள்????

வருண் said...

வாங்க சுரேஷ்!

என்னைக்கேட்டால், அனுபவம் அதிகமாக ஆக, இவர்கள் கொடுக்கும்படத்தின் தரமும், இவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இவர்கள் கொடுக்கும் படத்தின் மதிப்பும் அதிகமாகனும்.

ஏன் இயக்குனர்களால் அப்படி ஆக முடியலை என்பதே கேள்வி!

என்னைக்கேட்டால்,

ரஜினி இன்று பாலசந்தரைவிட பெரிய ஆள்போல தோன்றுகிறார்.

கமல், பாரதிராஜாவை விட பெரிய ஆள்போல் தோன்றுகிறார்.

அதெப்படி நியாயம்? ஒரு நடிகனால் வளரமுடிந்தால், இயக்குனரால் அதைவிட பலமடங்கு வளரமுடியனும். ஆனால் அதை நான் பார்க்கவில்லை என்பதே நான் சொல்லவந்தது :-))

SUREஷ் (பழனியிலிருந்து) said...

தமிழ் படங்கள் உள்ளதை உள்ளபடி சொல்லும்படங்களும், கற்பனை கலந்து மக்களின் உள்ளத்தில் இருக்கும் ஆசைகளின் படியுமே கதைகள் அமைகின்றன.

தமிழ் இயக்குநர்கள் மக்களை கவனிப்பதை ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டு முழுக்க கற்பனையில் குதிப்பதாகத் தோன்றுகிறது.

பாரதிராஜா துவக்கத்தில் எடுத்த கிராமத்திற்கும், தாஜ்மகால் கிராமத்திற்கும் உள்ள வித்தியாசம் போல..,

பாலசந்தர், பாக்கியராஜ் ஆகியோர் எடுக்கும் குடும்ப பிரச்சனைகள் போல...

அவர்கள் உள்ளே வந்த போது பார்த்த பிரச்சனைகள் ஓரளவு மக்களால் புரிந்து கொள்ளக்கூடியவை. இப்போது முழுக்க முழுக்க கற்பனை...,

வருண் said...

சுரேஷ்:

நீங்க ஹாலிவுட் டைரக்டர்லாம் எடுத்தீங்கனா, நம்ம ஆட்கள் போலில்லை.

* Martin Scorsese

* George Lucas

* Steven Speilberg

* Clint Eastwood

இவர்களெல்லாம் வயதான பிறகு பல வெற்றியடைந்தவர்கள்!

நம்ம டைரக்டர்கள் மட்டும்தான் இப்படி :(

Devendran said...

நீங்கள் குறிப்பிட்ட இயக்குனர்கள் வரிசையில் திரு. விசு அவர்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

raja said...

when they get older they are creatively impotent..because they saturate their life style..more than they love fame and money only.. den how can observe the present life..

குறை ஒன்றும் இல்லை !!! said...

Director and Actor is like a prof and the Student..

Hope U may understand why the Actors become fame and rich than the Directors
:)))))

குறை ஒன்றும் இல்லை !!! said...

The Directors they have their own narrow thought and they cant come out. For an Example what will happen if PKP direct a Action Movie as like Shankar?

வருண் said...

*** Devendran said...

நீங்கள் குறிப்பிட்ட இயக்குனர்கள் வரிசையில் திரு. விசு அவர்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

26 October, 2009 8:45 PM***

உண்மைதாங்க தேவேந்திரன், மணல் கய்று, க் ஒ கதம்பம்னு ஆரம்பிச்சு அவரும் கொடிகட்டிப்பறக்கத்தான் செய்தார் :)

வருண் said...

*** raja said...

when they get older they are creatively impotent..because they saturate their life style..more than they love fame and money only.. den how can observe the present life..

26 October, 2009 10:26 PM***

Somehow they run out of ideas which can be appreciated by audience in 10 years. Not only that the actors dump them too if they give one failure! :(

வருண் said...

***குறை ஒன்றும் இல்லை !!! said...

Director and Actor is like a prof and the Student..

Hope U may understand why the Actors become fame and rich than the Directors
:)))))

27 October, 2009 4:19 AM***

:-))))

I wish there is at least one exceptional "professor"! :(

வருண் said...

***குறை ஒன்றும் இல்லை !!! said...

The Directors they have their own narrow thought and they cant come out. For an Example what will happen if PKP direct a Action Movie as like Shankar?

27 October, 2009 4:22 AM***

Shankar is so different and unique in his way. I dont think anybody can make a movie like he does!