Tuesday, October 6, 2009

இருவர் உள்ளம்- திரை விமர்சனம்


சிவாஜி - சரோஜாதேவி நடித்த ஒரு க்ளாசிக். திரைக்கதை வசனம்: கலைஞர் கருணாநிதி. பெண் மனம் என்கிற லக்‌ஷ்மியுடைய கதையை திரைப்படமாக எடுத்த படம்தான் இது. கதை. படத்தைவிட நல்லாயிருக்கும். ஆனால் முத்தான கண்ணதாசன் எழுதிய பாடல்கள் கதையில் இல்லை. இயக்கம்: எல் வி ப்ரசாத் இசை: கே வி மஹாதேவன், பாடல் வரிகள்: கண்ணதாசன்.

இந்தக் கதையைத் தழுவி நெறையப்படம் இப்போ வந்திருக்கிறன. ஒண்ஸ் மோர் நு ஒரு விஜய் படம் இந்தக்கதையை சேர்த்து வந்ததால் இந்தப்படம் யங்கர் ஜெனெரேஷனுக்கும் ஓரளவுக்குத் தெரியும். மெளனராகம் கதைகூட ஒரு மாதிரி இந்தக்கதை மாதிரித்தான்னு சொல்லலாம். இன்னும் நெறையப் படங்கள் இந்தக் கதையைத் தழுவி வந்து இருக்கின்றன.

கதை என்னனா, சிவாஜி ஒரு ப்ளே பாய். பணக்காரன், ஊர் சுற்றிக்கொண்டு பல பெண்களுடன் பழகிக்கொண்டு, உறவு வைத்துக்கொண்டும் இருப்பவர்.

* 1) பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

என்கிற பாடல்மூலம் இவர் லீலைகள் சொல்லப்படும். இவருடைய நண்பன் பாலாஜியும் இதே ரகம்தான். ரெண்டு பேரும் அழகான எந்தப்பெண்னையும் விடுவதில்லை. சும்மா சுத்த வேண்டியது கழட்டி விடவேண்டியது.

இந்த மாதிரியான ஜாலியான் சிவாஜி வாழ்க்கையில் திடீர்னு ஒரு பெண் வந்துவிடுவாள் சிவாஜி, ஒரு ஏழை டீச்சர், சரோஜாதேவியை எதேச்சையாக சந்திப்பார். எந்தப்பெண்ணையும் விடாத சிவாஜி இவரையும் காதலிக்க ஆரம்பித்துவிடுவார். திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவார். தான் பணக்காரன், அழகா இருப்பவன், தன்னை ஆசையுடன் சரோஜாதேவி மணந்துகொள்வார் என்று அவர் போடும் கணக்கு தப்புக்கணக்காகிவிடும்.
சரோஜாதேவிக்கு அவரையும் அவர் நடத்தையும் சுத்தமாக பிடிக்காது. சரோஜாதேவின் அப்பா, ”அய்யா தெரியாதையா” ராமாராவ். அவர் ரெண்டாந்தாரம் ஒரு இளம் மனைவியை கல்யாணம் செய்துகொண்டு மகள் சரோஜாதேவியிடமும் அக்கறையுடன் இருப்பார்.

சிவாஜியின் ஆசையை சரோஜாதேவியிடம் சொல்லிப் பார்ப்பார். சரோஜாதேவி, சிவாஜியை மணப்பது முடியவே முடியாது என்று உறுதியாக சொல்லிவிடுவார். சிவாஜி, எப்படியாவது அவரை மணந்தே ஆகனும்னு நிப்பார்.

ஒரு நாள் சிவாஜி தன் தங்கைக்கு ட்யூசன் சொல்லிக்கொடுக்க என்று பொய்சொல்லி சரோஜாதேவியை வீட்டில் யாரும் இல்லாத நேரம் அழைத்துவருவார். வீட்டில் யாரும் இருக்கமாட்டாங்க என்பதால் தன் விருப்த்தை, சரோஜாதேவியை மணம்முடிக்க ஆசை என்று மறுபடியும் நாகரீகமாகத்தான் சொல்லுவார். சரோஜாதேவி அவரை கண்ணா பின்னானு திட்டி அனுப்பிவிடுவார். ஆனால் எதார்த்தமாக வீட்டிற்கு திரும்பிவந்த சிவாஜி லிலேடிவ்ஸ் அவர்கள் சூழ்நிலையை தவறாக பலர் புரிந்துகொள்வார்கள். சரோஜாதேவியும் சிவாஜியும் விரும்பிப் பழகுவதுபோல் நினைத்து இவர்கள் உறவு ஊருக்குத்தெரியும். பிரச்சினை வேறு கோணத்தில் மாறும்.

சிவாஜி அப்பாவாக ரங்காராவ். ஒரு ஜட்ஜ். அம்மா வா நடிச்சது யார்? கண்ணாம்பாவா? எம் வி ராஜம்மாவா? இல்லை ஜெ ஜெ அம்மா சந்தியாவா? தெரியலை . சிவாஜி ஒரு வழியா தன் அம்மாவை கண்வின்ஸ் பண்ணி, அப்பாவுடைய "அர்ச்சனை" களுடன், அண்ணன் (நடிகவேள்) ஆசியுடன் சரோஜாதேவியை மணம் முடித்த்துக்கொள்வார்.

ஆனால், கல்யாணம் ஆன பிறகும் சரோஜாதேவி அவரை அடியோடு வெறுப்பார். இருவருடைய தாம்பத்ய வாழ்க்கையும் நரகமாகப் போகும். சிவாஜி, நல்லவராக திருந்தினாலும் அவரை நம்பமாட்டார் சரோஜாதேவி.

என் நண்பர் ஒருவர் சொன்னார், அவர் அப்பாவுடன் கல்யாணம் ஆன கொஞ்ச நாள் அவரோட அம்மா பேசவே இல்லையாம். அழுதுகொண்டே இருந்தாங்களாம். ஏன் னா அவங்க அப்பா "கருப்பா" இருக்கிறார் என்பதால்! ஆனால், Later, his mom learned to appreciate his dad. We see this in our culture, then, now and in the future too. இதுபோல் நெறைய கேஸ் நம்ம கலாச்சாரத்தில் பார்க்கிறோம். We learn to appreciate what we got and grow up!


சிவாஜி, முதலிரவில் பாடும் பாடல்

* 2) கண்ணெதிரே தோன்றினாள், கனிமுகத்தைக் காட்டினாள். நேர் வழியில் மாற்றினாள்.

இந்தப்பாடல் முடிந்தவுடன், சரோஜாதேவி அழுவார். சிவாஜி தன்னை ஃபோர்ஸ் பண்ணி மணந்துகொண்டார் என்று குற்றம் சாட்டுவார். சிவாஜிக்கு தன் கணக்கு தப்பு என்பது இப்ப்போத்தான் புரியும். ஹி வில் ஃபீல் கில்ட்டி.

அடுத்து வீட்டில் ஒரு விசேஷத்தில் எல்லாரும் இருக்கும்போது, சரோஜாதேவியை ஒரு பாட்டுப் பாடச்சொல்வார்கள்.

* 3) இதயவீணை தூங்கும்போது பாடமுடியுமா?

அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே!
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே! ( படத்திலேயே பெஸ்ட் சாங் இதுதான்!) பாடலை அழுதுகொண்டே பாடுவார்.

இந்த பாடலின் வரிகளில் இருந்து (கண்ணதாசன்) சிவாஜி-சரோஜாதேவி உறவில் உள்ள பிரச்சினை, அப்போது அங்கே இருந்த சிவாஜியின் கண்டிப்பான அப்பா ரங்காராவுக்கு, மற்றும் எல்லோருக்கும் தெரிந்துவிடும். சிவாஜிமேல் எந்தவிதமான நல்லெண்ணமும் இருக்காது அவர் அப்பா ரங்காராவுக்கு. தன் மகன் பொறுக்கி என்று அவர் மேலெப்போதுமே வெறுப்பாத்தான் இருப்பார் ரங்காராவ்.

சரோஜாதேவி அப்பப்போ சிவாஜி மேல் கொஞ்ச நம்பிக்கை வந்து ஒவ்வொரு சமயம் நல்லா நடந்துகொள்வார். அந்த சூழ்நிலையில் இந்த இரண்டு டூயட் பாடல்கள் வரும்.

* 4) நதியெங்கே போகிறது கடலைத்தேடி

* 5) அழகு சிரிக்கிறது ஆசை துடிக்கிறது

ஒருமுறை சரோஜாதேவிக்கு ஜுரம் வந்து அவர் கஷ்டப்படும்போது சிவாஜியின் பணிவிடைகளைப் பார்த்து சரோஜாதேவி நெகிழ்ந்து அழுவார். அதையும் சிவாஜி தவறாகப் புரிந்துகொண்டு பாடும் பாடல்

* 6) ஏன் அழுதாய் ஏன் அழுதாய் என்னுயிரே ஏன் அழுதாய்?

மரணம் வந்தால் தெரிந்துவிடும்
நான் மனிதன் என்று புரிந்துவிடும்
ஊர் சுமந்து போகும்போது உனக்கும்கூட விளங்கிவிடும் (கண்ணதாசன் வரிகள்)

இந்தப்படத்தில் இன்னொரு சிறப்பு என்னனா, நடிகவேள், வித்தியாசமான ஒரு ரோல் ல நடித்து இருப்பார். சிவாஜியின் அண்ணன், நடிகவேள். ஒரு "வீணாப்போன" லாயராக நடித்து இருப்பார். இவருக்கு ஜோடி டி பி முத்துலச்சுமி. இவர்களுக்கு நெறைய குழந்தைகள் இருக்கும்.

* 7) ஆராரோ ஆராரோ இந்த அசட்டுப் பயபுள்ள ஆராரோ (ஏ எல் ராகவன்) என்கிற காமெடிப் பாட்டு இவர்களுக்கு.

கடைசியில் டிப்பிகல் நம்ம கல்ச்சரில் நடப்பதுபோல் திருமணம் முடிந்த பிறகு சிவாஜி திருந்திவிட்டார் என்று தெரிந்தவுடன், அவரை ஏற்றுக்கொள்ள ரெடியாவார் சரோஜாதேவி. ஆனால் ஒரு கொலைக்கேஸில் மாட்டிக்குவார்.
சிவாஜி, ஒரு தான் செய்யாத கொலையில் மாட்டிக்குவார். கொலை செய்தது டி ஆர் ராமச்சந்திரன். அதாவது சிவாஜியுடைய பழைய கேர்ள் ஃப்ரெண்டு (மணமானபிறகும்), மறுபடியும் அவரை உறவுக்கு அழைப்பார். சிவாஜி முடியாதுனு சொல்லியபிறகும் விடமாட்டார். தன் மனைவி நடத்தைமேல் கோபம் கொண்ட கணவர் டி ஆர் ராமச்சந்திரன் இவரை கொலை செய்துவிடுவார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையை வைத்து சிவாஜியை இதில் ஃப்ரேம் பண்ணிவிடுவார்கள். சரோஜாதேவி சிவாஜியை ஏற்றுக்கொள்ளும் நேரத்தில் கொலைக்கேஸில் மாட்டிக்குவார்.

சிவாஜியின் தந்தை ரங்காராவ், நீதிபதி, சிவாஜிதான் கொலை செய்து இருப்பார் என நம்புவார். சிவாஜியின் அண்ணன், நடிகவேள்தான் கடைசியில் சிவாஜிக்காக வாதாடுவார்.

கடைசியில் கொஞ்சம் சினிமாட்டிக்கா, சிவாஜிமேல் முழு நம்பிக்கை கொண்டுவிட்ட சரோஜாதேவி போய் கொலையாளியை கண்டுபிடித்து கொண்டுவந்து அவருக்கு தண்டனை வாங்கிக்கொடுத்து சிவாஜியை கொலைத்தண்டனையிலிருந்து காப்பாற்றுவார்.
சுபம்

15 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டுப் போட்டாச்சு தல.., ஆனா நான் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கலயே..,

Prathap Kumar S. said...

நல்லாருக்கு விமர்சனம்... இது என்னைக்கு ரிலீஸ்...?
இன்னா தல உலகம் எவ்ளோ வேகமாக போயிட்டிருக்கு... நீங்க பின்னாடி போயிட்டிருக்கீங்க???

வருண் said...

*** SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஓட்டுப் போட்டாச்சு தல.., ஆனா நான் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கலயே..,

6 October, 2009 6:38 PM***

Thnaks :)

Suresh, for some reason this dvd is not easily available.

வருண் said...

***நாஞ்சில் பிரதாப் said...
நல்லாருக்கு விமர்சனம்... இது என்னைக்கு ரிலீஸ்...?
இன்னா தல உலகம் எவ்ளோ வேகமாக போயிட்டிருக்கு... நீங்க பின்னாடி போயிட்டிருக்கீங்க???

6 October, 2009 9:42 PM***

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

இப்படத்திற்கு கலைஞர் திரைக்கதை வசனம் என்பதையும் எழுதியிருக்கலாம்

வல்லிசிம்ஹன் said...

பாடல்கள் எல்லாமே அருமை.

நதியெங்கெ போகிறது கனவுக் காட்சி,

அழகு சிரிக்கிறது உண்மையான காதல் காட்சி.

கண்ணேகண்ணே உறங்காதே சுசீலாம்மா பாட்டு. ம்ம்ம் அழகு.
புத்திசிகாமனி பெற்ற பிள்ளையை விட்டு விட்டீர்களே:)

இதயவீணை பாட்டுதான் கொஞ்சம் ஓவர் ட்ரமாடிக்கா இருக்கும்:)

வருண் said...

டி வி ஆர்: அதை எழுதி இருக்கேன். 2 வது வரி :)

ஷாகுல் said...

என்னது காந்தி செத்து போயிட்டாரா?

ராமலக்ஷ்மி said...

நானும் இந்தப் படம் பார்த்ததில்லை ஆனாலும், அத்தனை ஹிட் பாடல்களுக்குமான சூழல்களின் விவரிப்பு சுவாரஸ்யம்.

வருண் said...

***வல்லிசிம்ஹன் said...

பாடல்கள் எல்லாமே அருமை.

நதியெங்கெ போகிறது கனவுக் காட்சி,

அழகு சிரிக்கிறது உண்மையான காதல் காட்சி.

கண்ணேகண்ணே உறங்காதே சுசீலாம்மா பாட்டு. ம்ம்ம் அழகு.
புத்திசிகாமனி பெற்ற பிள்ளையை விட்டு விட்டீர்களே:)

இதயவீணை பாட்டுதான் கொஞ்சம் ஓவர் ட்ரமாடிக்கா இருக்கும்:)

7 October, 2009 8:14 AM***

வாங்க வல்லிம்மா!

1) கண்ணே கண்ணே கலங்காதேயே சுத்தமாக விட்டுவிட்டேன்! நீங்க சொல்லலைனா ரியலைஸ் பண்ணியிருக்க மாட்டேன். நன்றி.

2) புத்திசிகாமணி பெற்ற பிள்ளையை சொல்லி இருக்கேன் (பாட்டு 7). ஆனால் பாடலின் முதல் வரி நீங்க சொன்னதும் ஞாபகம் வருது. நன்றி

3) நதியெங்கே போகிறது கனவுப்பாட்டுனு நீங்க சொன்னதும்தான் ஞாபகம் வருது.

இதயவீணை தூங்கும்போது பாடமுடியுமா கொஞ்சம் அண்கண்வென்ஷனல் சூழ்நிலைதான். ஆனாலும் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.

கண்னெதிரே தோன்றினாலும் ரொம்பப்பிடிக்கும்.

இந்த இரண்டிலும் கண்ணதாசனின் வரிகள் ரொம்ப ஆழமாக இருக்கும்!

தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி :)))

வருண் said...

***ஷாகுல் said...

என்னது காந்தி செத்து போயிட்டாரா?

7 October, 2009 8:41 AM***

வாங்க சாஹுல் :)))

வருண் said...

***ராமலக்ஷ்மி said...

நானும் இந்தப் படம் பார்த்ததில்லை ஆனாலும், அத்தனை ஹிட் பாடல்களுக்குமான சூழல்களின் விவரிப்பு சுவாரஸ்யம்.

7 October, 2009 8:51 AM***

படத்தைவிட, பெண்மனம் (லக்ஷ்மி) நாவல் நல்லாயிருக்கும்ஙக!

ஆல்மோஸ்ட் எல்லா ரமணிச்சந்திரன் கதைகளும் இந்தப் பெண்மனத்தை தழுவியவைபோல இருக்கும் :)

நீங்க கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படம். நிச்சயம் ஏதாவது டி வி ல ஒளிபரப்புவாங்க, அப்போ பாருங்க! :)

வருண் said...

***வருண் எழுதியது...

"கண்னெதிரே தோன்றினாலும் ரொம்பப்பிடிக்கும்.***

ஏன் அழுதாய் பாடலை ரொம்பப் பிடிக்கும்னு சொல்வதற்கு பதிலா தவறாக எழுதிவிட்டேன்! :)

ராமலக்ஷ்மி said...

//ஆல்மோஸ்ட் எல்லா ரமணிச்சந்திரன் கதைகளும் இந்தப் பெண்மனத்தை தழுவியவைபோல இருக்கும் :)//

உண்மைதான், ரமணிச் சந்திரனின் பெரும்பாலான கதைகளில் கதாநாயகி கதாநாயகனைப் புரிந்து கொள்வதில்லை. இருவரும் நல்லவர்களாயும் இருப்பார்கள். மனஸ்தாபம் கடைசி அத்தியாயம் வரை தொடர்ந்து பின் ஒன்று சேருவார்கள்:)! [ர.ச கதைகள் யாவும் மில்ஸ் அன்ட் பூனை தழுவியிருக்கும் என்றும் ஒரு பேச்சு உண்டு, நமக்கேன் வம்பு:)!]

//நிச்சயம் ஏதாவது டி வி ல ஒளிபரப்புவாங்க, அப்போ பாருங்க! :)//

கண்டிப்பா:)!

வருண் said...

***ராமலக்ஷ்மி said...
கதைகள் யாவும் மில்ஸ் அன்ட் பூனை தழுவியிருக்கும் என்றும் ஒரு பேச்சு உண்டு, நமக்கேன் வம்பு:)!***

இதேபோல் பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேங்க. அது ஓரளவுக்கு உண்மைனுதான் நினைக்கிறேன். :)

தங்கள் பகிர்வுக்கு நன்றி, ராமலக்ஷ்மி :)