Saturday, October 10, 2009

குங்குமம்- நான் மிகவும் ரசித்த படம்!சிவாஜி, எஸ் எஸ் ஆர், “ஊர்வசி” சாரதா, விஜயகுமாரி நடித்த படம்தான் இந்த குங்குமம். நிறையப்பேர் பார்த்திராத ரொம்ப பாப்புளர் ஆகாத ஒரு படம்னு நான் நம்புறேன். அந்தக்காலத்தில் இது ஒரு வெற்றிபடம்கூட இல்லை என்கிறார்கள். ஆனால் எனக்கு ரொம்ப பிடிச்ச படம். மறுபடியும் இன்னும் ஒரு முக்கோணக் காதல்!

இயக்கம்: கிருஷ்ணன் - பஞ்சு, இசை: கே வி மஹாதேவன், பாடல்கள்: கண்ணதாசன்

* பாடல் (1) குங்குமம் மங்கள மங்கையர் குங்குமம் (டைட்டில் பாடல்)

சிவாஜி, விஜயகுமாரிக்கு முறைப்பையன். இருவருக்கும் ஒரு பாடல் வரும். ஆனால் சிவாஜி விஜயகுமாரியை காதலிப்பதாக காட்டமாட்டார்கள்.

* பாடல் (2) பூந்தோட்டக்காவல்க்காரா பூப்பறிக்க இத்தனை நாளா? (விஜயகுமாரிக்கும் சிவாஜிக்கும் இந்தப்பாடல்).

இந்தப்பாடல்மூலம் சிவாஜியை சீக்கிரம் தன்னை மணந்து கொள்ள சொல்லுவார் விஜயகுமாரி. :)

இந்த சூழ்நிலையில் திடீர்னு ஒரு நாள் ஒரு கொலை நடக்கும். அங்கே போய் பார்த்தால் எஸ் வி ரங்காராவ் கொலை செய்ததாக காட்டப்படும். அங்கே எதார்த்தமாகப் போகும் சிவாஜி “நீங்களா!!!” என்று ஆச்சர்யப்பட்டு, ரங்காராவை அங்கிருந்து அனுப்பிவிட்டு தான் கொலைப்பழியை ஏற்றுக்கொண்டு கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க மாறுவேடம் பூண்டு திரிவார். படத்தில் க்ளைமேக்ஸ் வரைக்கும் மாறுவேடத்தில் சிவாஜி இருப்பதுதான். உண்மையான கொலையாளி யார் என்பதும் முடிவில் சொல்லப்படும்.

சிவாஜி பல வேஷங்கள் போடுவார்- போலிஸை ஏமாற்ற. ஒரு முறை பெண் வேடத்திலும் வருவார். இவரை தேடி கண்டுபிடிக்க அமர்த்திய போலிஸ் அதிகாரி நம்ம எஸ் எஸ் ஆர். சிவாஜியை வலை வீசித்தேடுவார்.

இதிலே சிவாஜி போடும் ஒரு வேடம்தான் சிவாஜி ஒரு வாத்தியாராக வருவது. சாரதாவின் தம்பிக்கு வாத்தியாராக வந்து வீட்டுடன் தங்கி இருப்பார். இது சாரதாவின் முதல் தமிழ்ப்படம் என்று சொல்கிறார்கள். ஸ்லிம்மா ரொம்ப அழகாவே இருப்பார் சாரதா. இவருடைய தந்தையாக சகஸ்ரநாமம் நடித்து இருப்பார். இவர் ஒரு நீதிபதி. சாரதாவுக்கு கல்யாணம் நிச்சயப்பட்டிருக்கும், அவருடைய ஃபியாண்ஸே எஸ் எஸ் ஆர்.

தன் மகள் சாரதாவுக்கு சகஸ்ரநாமம் நல்ல ஃப்ரீடம் கொடுப்பார். இப்படி கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கும் சூழ்நிலையில், சிவாஜி, வாத்தியார் வேடத்தில் சாரதா தம்பிக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வருவார். சிவாஜி- சாரதா இண்டெராக்ஷன் ஜாலியா இருக்கும்.

கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட Sharadha will fall in love with Shivaji. She can't control herself in falling in love with shivaji knowing that she is engaged to SSR. ஆனால் சிவாஜி ஒரு குற்றவாளி, அதுவும் கொலைக்குற்றவாளினு தெரியாது.

உண்மை நிலவரம் தெரிந்த சிவாஜி, சாரதாவை புறக்கணிக்கவும் முடியாது, தன்னை கொலைக் குற்றவாளினு சொல்லவும் முடியாது. இந்த சூழ்நிலையில் எஸ் எஸ் ஆரும் அவர் வருங்கால மனைவியைப் பார்க்க, ஜொள்ளுவிட அடிக்கடி வருவார். மாறுவேடத்தில் இருக்கும் கொலைக்குற்றவாளி சிவாஜியிடம் இவருக்கும் பரிச்சயம் ஏற்படும். சிவாஜிக்கும் எஸ் எஸ் ஆருக்கும் ஒரு சின்ன விவாதம் நடக்கும். இருவருக்கும் இடையில் சும்மா தமிழ் விளையாடும். ரெண்டு பேரும் இலக்கியத்தமிழ் பேச்சிலும், வாதத்திலும், தமிழ் உச்சரிப்பில் கிளப்பிவிடுவார்கள்.

நிச்சயிக்கப்பட்ட சாரதா சிவாஜியை விரும்புவது, சிவாஜி அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அதேசமயத்தில் அவரை காதலிக்காமல் இருக்க முடியாது என்கிற நிலைமை இந்த இரண்டு பாடல்களில் அழகா தெரியும்.

பாடல் 3) (சாரதா சிவாஜியை காதலிப்பதை சொல்லுவார். சிவாஜி அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தயங்குவார்)

படம் : குங்குமம்
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : கே.வி.எம்.
நடிகர்கள் : சிவாஜி, சாரதா

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு (தூங்காத)

முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச
உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவையென்று ஒன்று (தூங்காத)

யார் என்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டுத் தடுத்தாலும் நில்லாது
தீராத விளையாட்டுத் திரை போட்டு விளையாடி
நாம் காணும் உலகென்று ஒன்று (தூங்காத)

வெகுதூரம் நீ சென்று நின்றாலும் - உன்
விழி மட்டும் தனியாக வந்தாலும்
வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று (தூங்காத)

நன்றி: சந்த்ரு
-----

பாடல் 4) சிவாஜி, சாரதாவுக்கு தன்னிலைமை விளக்க முயன்று, அவர் காதலை ஏற்றுக்கொள்ள தன்னால் முடியாது என்பதுபோல பாடுவது.

மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம்

பகலில் தோன்றும் நிலவு
கண் பார்வைக்கு மறைந்த அழகு
திரை மூடிய சிலை நான்
துன்பச் சிறையில் மலைந்த மலர் நான்

நானே எனக்குப் பகையானேன் - என்
நாடகத்தில் தான் திரை ஆனேன்
தேனே உனக்குப் புரியாது
அந்த தெய்வம் வராமல் விளங்காது

விதியும் மதியும் வேறம்மா - அதன்
விளக்கம் நான் தான் பாரம்மா
மதியில் வந்தவள் நீயம்மா - என்
வழி மறைத்தாள் விதியம்மா

-------------

கடைசியில் சிவாஜிதான் குற்றவாளி, மாறுவேடத்தில் இருக்கிறார், மற்றும் தன் ஃபியாண்ஸியும் அவரைக் காதலிக்கிறார் என்று அறிந்த எஸ் எஸ் ஆர் சிவாஜியை அரெஸ்ட் செய்ய வருவார்.

இந்த சூழ்நிலையில், சாரதா ஒரு பாட்டுக்கச்சேரியில் பெர்ஃபார்ம் பண்ணுவார். சிவாஜியை தன் பெர்ஃபாமெண்ஸ்க்கு அழைத்து இருப்பார் சாரதா. சிவாஜி, சாரதாவின் அழைப்பை ஏற்று அவர் பெர்ஃபார்ம் செய்யும் பாட்டுக்கச்சேரியில் வந்து சிறப்பு பார்வையாளராக அமர்ந்திருப்பார். சாரதா ஒரே குழப்பத்துடனும் பதஸ்தத்துடனும் இந்தப் பாடலை பாடுவார் (எஸ் எஸ் ஆருக்கு சிவாஜி யாருனு தெரிந்துவிட்டது என்பதால்)

பாடல் 5) * சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தை சொல்லுதம்மா என்கிற அருமையான பாடல் பாடுவார்.

சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா

உலகம் தெரியவில்லை... உலகம் தெரியவில்லை
ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை
உலகம் தெரியவில்லை
ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை
உலகம் தெரியவில்லை... உலகம் தெரியவில்லை

மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி... ஆ..ஆ..
மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி
அந்த மயக்கத்திலே பாடுதே ஊஞ்சல் ஆடி.
சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா
சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தை சொல்லுதம்மா

வாசல் ஒன்றிருக்கும்.... வாசல் ஒன்றிருக்கும்
ஆசை கொண்ட நெஞ்சம் தனில் வழி இரண்டிருக்கும்
வாசல் ஒன்றிருக்கும்.... வாசல் ஒன்றிருக்கும்
ஆசை கொண்ட நெஞ்சம் தனில் வழி இரண்டிருக்கும்
வாசல் ஒன்றிருக்கும்

கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி
அந்த கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி..
சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா
சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
---------------

மேடையில் இசைக்குழுவினருடன் பாதிப்பாடல் பாடும்போதே தன் குழப்ப மனநிலையில் இவர் பாடமுடியாமல் ஸ்டக் ஆகிவிடுவார். “உலகம் தெரியவில்லை.. ஒன்றும் புரியவில்லை”னு கீறிய ரெக்கார்ட் மாதிரி பாடுவார். இவர் சோலோவாக பாடவேண்டிய பாடல் இது. ஆனால் குழப்பத்தில் ஸ்டக் ஆகி விடுவார். பார்வையாளராக இருந்த சிவாஜி, நிலைமையை சமாளிக்க “மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி” என்று இவருக்கு பாடல்வரி எடுத்துக்கொடுத்து பாட ஆரம்பித்து பாடிக்கொண்டே மேடையில் போய் அமர்ந்து சாரதாவுக்கு உதவுவார். இருவரும் சேர்ந்து தொடர்ந்து இந்தப்பாட்டைப் பாடுவார்கள். I just loved that scene!

அப்புறம், எஸ் எஸ் ஆர் அங்கே வந்தவுடன், சாரதா மேடை விளக்கை அணைத்துவிடுவார். சிவாஜி தப்பி ஓடிவிடுவார். எஸ் எஸ் ஆர் சாரதாவை கொலைகுற்றவாளிக்கு உதவியது தப்பு என்று கடிந்துகொள்வார்.

கடைசியில், ரங்காராவ் சிவாஜியின் தந்தை என்பது சொல்லப்படும். ரங்காராவ் கொலைக்குற்றத்தில் தூக்குக்குப் போனால் தன் தாயின் குங்குமம் போக நேரிடும் என்கிற செண்டிமெண்ட் தான் படத்தின் “டைட்டில்”.

உண்மையில் ரங்காராவும் கொலை செய்து இருக்க மாட்டார். அதனால் கடைசியில் உண்மையான குற்றவாளியை பிடித்து விட்டு, சிவாஜியையும், ரங்காராவையும் விடுதலை செய்வார்கள். சிவாஜி-சாரதா திருமணம் முடியும் (?) நு நினைக்கிறேன்.

The best part in this movie is, Sharadha-Shivaji love scenes. Songs! :))

8 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

ஓட்டுப் போட்டாச்சு

காளவாசல் said...

When was it released?

வருண் said...

***SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஓட்டுப் போட்டாச்சு

10 October, 2009 10:49 PM***

வாங்க தல! உங்கள் வாக்குக்கு நன்றி.

நீங்க கட்டாயம் பார்க்க வேண்டிய படம். விடாதீங்க! எப்படியாவது பார்த்திருங்க! :)

வருண் said...

***காளவாசல் said...
When was it released?

10 October, 2009 11:23 PM****

நடிகர்திலகம்.காம் ல இருந்துதான் இந்தப் ஃபோட்டோ எடுத்தேன். அதில், ஆகஸ்ட் 1963 யில் ரிலீஸ் ஆனதாக போட்டிருக்கிறது.

ராஜாமணி பிக்ச்சர்ஸ் (சிவாஜி சொந்தப்படம்(?) னு நினைக்கிறேன்.

நான் இந்தப்படம் ஒரு பழைய காப்பி ஒரு டூரிங் டாக்கீஸ்ல பார்த்தேன். இந்தப்படத்தை கேள்விப்பட்டதே இல்லாததால் சாரதா-சிவாஜி-எஸ் எஸ் ஆர் வரும் காட்சிகளை மிகவும் ரசித்தேன். :)))

ராமலக்ஷ்மி said...

அதிகம் அறியப் படாத படம்தான் போலிருக்கிறது. ஆனால் டைட்டில் பாடலும், பாடல்கள் மூன்றும் நான்கும் மிகப் பிரபலமே. எப்போதும் பாடல் எந்த சூழலுக்கு எழுதப் பட்டது எனத் தெரிந்திருக்கையில் இன்னும் ஆழமாக ரசிக்க இயலும். கதை தெரியாமல் ரசித்த பல பாடல்களின் சூழல்களை உங்கள் பதிவுகள் அறியத் தருகின்றன, நன்றி.

’தூங்காத கண்ணென்று ஒன்று’ எனக்கு மிகவும் பிடித்த மெலடி.

T.V.Radhakrishnan said...

பாசமலர் எடுத்தவர்கள் ராஜாமணி பிக்சர்ஸ்..அடுத்து இந்த படம்..எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.ராஜாமணி பிக்சர்ஸ் தயாரிப்பாளர் மோகன் ஆர்ட்ஸ் என்று அந்த நாட்களில் பிரபலமாயிருந்த விளம்பர நிறுவனம்.மற்றும் எம்.ஆர்.சந்தானம் என்னும் சிவாஜியின் குடும்ப நண்பர் ..நடிகர்.(சந்தானபாரதியின் தந்தை).ராஜாமணி பிக்சர்ஸ் என்பதால் சிவாஜியின் சொந்த படம் என்றும் எண்ணலாம்.1963ல் வந்த படம்.அருமையான பாடல்கள்.கிட்டத்தட்ட அன்னை இல்லம் என்ற பின்னர் வந்த படமும் இதே கதைதான்

வருண் said...

***ராமலக்ஷ்மி said...
அதிகம் அறியப் படாத படம்தான் போலிருக்கிறது. ஆனால் டைட்டில் பாடலும், பாடல்கள் மூன்றும் நான்கும் மிகப் பிரபலமே. எப்போதும் பாடல் எந்த சூழலுக்கு எழுதப் பட்டது எனத் தெரிந்திருக்கையில் இன்னும் ஆழமாக ரசிக்க இயலும். கதை தெரியாமல் ரசித்த பல பாடல்களின் சூழல்களை உங்கள் பதிவுகள் அறியத் தருகின்றன, நன்றி.

’தூங்காத கண்ணென்று ஒன்று’ எனக்கு மிகவும் பிடித்த மெலடி.

11 October, 2009 9:31 AM***

ஆமாங்க, பெரிய பெரிய சிவாஜி விசிறிகளே இந்தப்படம் பார்த்ததில்லை.

பாடல்கள் எல்லோரும் கேட்டிருப்பாங்க.

"தூங்காத கண்ணென்று ஒன்று' தான் இந்தப்படத்தில் பெஸ்ட் சாங் :)

கிருஷ்ணன் - பஞ்சு கொஞ்சம் பாப்புலரான இயக்குனர்கள் . பராசக்தி,, மற்றும் ராமு போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர்கள்.

தங்கள் பகிர்தலுக்கு நன்றிங்க, ராமலக்ஷ்மி :)

வருண் said...

*** T.V.Radhakrishnan said...
பாசமலர் எடுத்தவர்கள் ராஜாமணி பிக்சர்ஸ்..அடுத்து இந்த படம்..எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.ராஜாமணி பிக்சர்ஸ் தயாரிப்பாளர் மோகன் ஆர்ட்ஸ் என்று அந்த நாட்களில் பிரபலமாயிருந்த விளம்பர நிறுவனம்.மற்றும் எம்.ஆர்.சந்தானம் என்னும் சிவாஜியின் குடும்ப நண்பர் ..நடிகர்.(சந்தானபாரதியின் தந்தை).ராஜாமணி பிக்சர்ஸ் என்பதால் சிவாஜியின் சொந்த படம் என்றும் எண்ணலாம்.1963ல் வந்த படம்.அருமையான பாடல்கள்.கிட்டத்தட்ட அன்னை இல்லம் என்ற பின்னர் வந்த படமும் இதே கதைதான்

11 October, 2009 10:11 AM***

வாங்க டி வி ஆர்! :)

நான் சிவாஜியின் தாய் பெயர் ராஜாமணி என்பதால் அவர் சொந்தப்படமோ என்று நினைத்துவிட்டேன். தெளிவு படுத்தியதற்கு நன்றிங்க! :)

தங்கள் பகிர்தலுக்கும், வருகைக்கும் நன்றி :)